Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாடு தொழில் வர்த்தகக் குழு இலங்கை பயணம். அதிர்ச்சியில் தமிழர்கள்!

Featured Replies

இலங்கையில் மிக கொடூரமான முறையில் தமிழ்கள் படுகொலை செய்யப்பட்ட பின் போர் முடிவடைந்தது. இந்த இனப்படு கொலைக்கான நீதி இன்னும் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை . ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் , இலங்கையில் நடந்த இனப் படுகொலையை கண்டிக்கும் விதமாக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதாவது இந்திய அரசு இலங்கையின் மேல் பொருளாதார தடை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார். அப்போது தமிழக அரசு இலங்கையின் மீதான பொருளாதார தடையை ஆமோதிக்கிறது என்பது இதன் மூலன் தெளிவாகிறது. தமிழர்களும் இந்த தீர்மானத்தை வரவேற்றார்கள்.

இந்நிலையில் தமிழர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது இலங்கையோடு வர்த்தக உறவு கொள்வதற்கு தமிழ்நாடு சேம்பர் ஒப் காமர்ஸ் என்று சொல்லக்கூடிய தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கம் 45 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது. இந்தக் குழு வரும் வியாழக் கிழமை இலங்கை சென்றடைகிறது. நான்கு நாட்கள் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அங்குள்ள இலங்கை தொழில் வர்த்தகக் கூட்டமைப்போடு தமிழக குழு பேச்சு வார்த்தை நடத்த உள்ளது . இலங்கையில் வர்த்தக செய்வதற்கும் , இலங்கையில் தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கும் இந்த முயற்சியை தமிழ் நாடு தொழில் வர்த்தகக் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சங்கம் தான் மதுரை கொழும்பு இடையேயான விமானப் போக்குவரத்தை தொடங்க தேவையான வேலைகளை செய்து முடித்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த விமான சேவை வரும் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் இயற்றிய பின்பும், இந்த வர்த்தக சங்கம் இலங்கையோடு வியாபாரம் செய்ய முயற்சி செய்வது தமிழர் நலனுக்கு எதிரானது, வெட்கக்கேடானது , கண்டனத்திற்குரியது என்று தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர். இது அரசு சாரா வர்த்தகக் தொழில் கூட்டமைப்பு தான் என்றாலும் இது தமிழர்களின், தமிழ்நாட்டின் வணிக சங்கம் . இவர்களுக்கு இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றி நன்கு தெரியும் . தெரிந்திருந்தும் இவர்கள் தங்களுடைய உறவுகளை கொன்றொளித்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய விருப்பது தமிழினத்தை அவமானப் படுத்துவதற்கு ஒப்பாகும். தமிழக மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிகின்றனர்.இந்த தமிழகக் குழுவின் இலங்கை பயணத்திற்கு ஆதரவு அளிப்பது இந்திய அரசு என்று தெரிகிறது.

http://thaaitamil.com/?p=32608

271073_282177358552850_636635421_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.