Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் முழுதும் பிள்ளையார் சிலை ஊர்வலத்தை 'நாம் தமிழர் சீமான்' கொண்டாட வேண்டும் ..! ஏன் ..? எதற்கு ..? ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

[size=3]தமிழகம் முழுதும் பிள்ளையார் சிலை ஊர்வலத்தை 'நாம் தமிழர் சீமான்' கொண்டாட வேண்டும் ..! [/size]

[size=3]ஏன் ..? எதற்கு ..? ஈழதேசம் பார்வையில்..! [/size]

[size=3]

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம், காஞ்சிபுரத்தில் கலவரம், கடலூரில் கலவரம், தமிழ் நாடு முழுதும் விநாயகர் ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அணைத்து ஊர்களிலும் கிராமங்களில் கூட இந்த விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் காவி கும்பல் ' பாரத் மாதாகி ஜெ' என்று அடித்தட்டு மக்களை வைத்து கூச்சல் போடுகிறார்கள். இஸ்லாமிய மசூதிகள் மற்றும் மசூதி இல்லாத இடங்களில் கிறித்துவ ஆலயங்கள் குறி வைக்கப்படுகின்றன. மத துவேசத்தை அள்ளித் தெளிக்கிறார்கள். பாரத் மாதாகி ஜெ என்று இன்னும் எவ்வளவு ஆட்டையை போடலாம் என்று எண்ணுகிறார்கள். இந்த ஊர்வலம் மூலம் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை கோபத்தை சிறுபான்மையினர் மீது குறிப்பாக இஸ்லாமியர் மீது ஏற்கனவே இருக்கும் கோபத்தை மேலும் அதிகரித்து ஒரு பெரும் மதக் கலவரத்திற்கு தயார் படுத்துகிறார்கள்.[/size]

[size=3]

பெருமளவில் நிதி திரட்டுகிறார்கள் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள். இதில் வசூலிக்கப்படும் ஏராளமான தொகைகளுக்கு கணக்கு வழக்கு கிடையாது, யார் யாரெல்லாம் இந்த சிலை ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் குழுவில் இருக்கிறார்களோ அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்ற நிலையில், இந்த தமிழகம் [/size][size=3]

முழுதும் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்தில் அடித்தட்டு இளைஞர்களே பங்கு பெறுகின்றனர். முன்பெல்லாம் தலைக்கு இவ்வளவு என்று பணம், காசு கொடுத்தார்கள் சங்க்பரிவார் கும்பல். தற்பொழுது இந்த அடித்தட்டு இளைஞர்கள் அவர்களே காசு கொடுத்து பங்குபெறும் திருவிழாவாக மாற்றிவிட்டார்கள். நேரடியாக பார்ப்பனிய சக்திகளும் அமைப்புகளும் பங்குபெற, மத்திய அரசு மறைமுகமாக பெரும் ஆதரவு வழங்கிட சீரும் சிறப்புமாக நடைபெறாமல், கலவர பீதியும் வன்முறையுமாக ஆண்டு தோறும் இந்த விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று வருகின்றன என்பதை அனைவரும் அறிவோம். [/size]

[size=3]

தூத்துக்குடியில் மீனவர்கள் தங்களது படகுகளை கொண்டு முற்றுகை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில், மீனவர்கள் அனைவரும் கடலில் மனித சங்கிலி என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில், சென்னை மற்றும் பிற கடலோர பகுதிகளில் விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் கரைக்கிறார்கள் என்ன ஒரு முரண்..? [/size]

[size=3]

தமிழ்நாடே பறிபோய் கொண்டிருக்கையில், அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல், கவலை அடைந்து விடக்கூடாது என்று பார்ப்பனிய அரசும், பார்ப்பனிய அமைப்புகளும் தமிழக இளைஞர்களை வன்முறையாளர்களாக, மத அடிப்படைவாத அமைப்பாக மாற்றி வருகிறது. இந்த மத ஊர்வலத்திற்கு திராவிடக் கட்சிகள் மட்டுமின்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் வரை ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். பல பெரும் பெரும் நிதி நிறுவனங்கள், பார்ப்பனர்களால் நடத்தப்படும் தொழிற்சாலைகள், கார்ப்பரேட் கம்பனிகள் தாராளமாக நிதி அளிக்கிறார்கள். இந்த சிலை ஊர்வலம் மூலமாக இந்தியன் என்ற கருத்தாக்கத்தை திணிக்கிறார்கள். அதாவது காவிரி கிடையாது, முல்லைப் பெரியாறு வேண்டாம், மின்சாரம் கிடையாது என்று தலை மூழ்கும் அளவிற்கு பிரச்சனைகள் இருக்கும் பொழுது, இவ்வளவு ஏன் தமிழர்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் இனமாக, தமிழர்களையே மாற்றி உள்ளது இந்த பிள்ளையார் சிலை ஊர்வலம். [/size]

[size=3]

எனவே, செந்தமிழ் சீமான் அவர்கள் இனி வரும் காலங்களில் இந்த சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டும். நாம் தமிழர் கட்சியின் இளைஞர்கள் இந்த சிலை ஊர்வலத்தை சீரும் சிறப்புமாக நடத்த வேண்டும், ஊர்வலத்தில் மத நல்லிணக்கம் வலியுறுத்தப்பட வேண்டும். தமிழ் வாழ்க, தமிழர் வாழ்க என்றும் தமிழ் இனம் காக்கப்பட வேண்டும், தமிழா இன உணர்வு கொள் என்று முழக்கங்களை எழுப்பிட வேண்டும். இந்த பிள்ளையார் சிலை ஊர்வலத்தில் உள்ள காவி கும்பலின் உறுப்பினர்கள் துரத்தி அடிக்க வேண்டும் தமிழகத்தில் இருந்து. [/size]

[size=3]

தமிழர்கள் உரிமைகள் பெற்றாக வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு..? என்கிறார்கள் அரிசயல் நோக்கர்கள்.[/size]

[size=3]

சங்கிலிக்கருப்பு [/size]

"ஈழதேசம் பார்வையில்", "சங்கிலிக் கருப்பு" என்ற போர்வையில் ஊர்புதினத்துக்கு பொருத்தம் இல்லாத குப்பைகளை இங்கு தொடர்ந்து இணைத்துவரும் நோக்கம் தான் என்னவோ மீள்சிறகு?

மனநலக் கோளாறு உடையவர்களால் நடாத்தப்படும் "வினாவு"க்கும் மேற்குறிய தலைப்புக்களில் பதியப்படும் "செய்திகளுக்கும்" பெரிய வித்தியாசத்தைக் காணமுடியவில்லை.

இந்துக்களின் விநாயக சதுர்த்தி விழாவைப் பார்த்து பொறாமைப்படுவது, வயிறு எரிவது மிகத் தெளிவாக தெரிகிறது.

ஏன் மக்களை ஏமாற்றி மதம் மாற்றும் வேட்டையில் இவை தடைகளாக உள்ளனவோ????

இப்படியும் பிழைப்பு நடாத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

<strong><span style="font-family: arial, sans-serif"><span style='font-size: 12px;'>[size=3]

தமிழர்கள் உரிமைகள் பெற்றாக வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு..? என்கிறார்கள் அரிசயல் நோக்கர்கள்.[/size]

[size=3]

சங்கிலிக்கருப்பு [/size]

ஆமாம் சாருக்கு அரிசி கஷ்டம் போல.யாரும் இவருக்கு நன்கொடை கொடுக்க வில்லை போல அதான் இங்க வந்து இந்து மத வெறுப்பை உமிழ்கிறார்.( இந்த விமர்சனம் கொஞ்சம் கீழ் தரமானது தான் . கீழ்த்தரமான கருத்துகளுக்கு இப்படித்தான் எழுத முடியும் . அப்புறம் நிழலி வந்து விதிமுறைகள் மற்றும் வெண்டைக்காய் செய்முறைகள் கற்று தர போகிறார் )

"ஈழதேசம் பார்வையில்", "சங்கிலிக் கருப்பு" என்ற போர்வையில் ஊர்புதினத்துக்கு பொருத்தம் இல்லாத குப்பைகளை இங்கு தொடர்ந்து இணைத்துவரும் நோக்கம் தான் என்னவோ மீள்சிறகு?

மனநலக் கோளாறு உடையவர்களால் நடாத்தப்படும் "வினாவு"க்கும் மேற்குறிய தலைப்புக்களில் பதியப்படும் "செய்திகளுக்கும்" பெரிய வித்தியாசத்தைக் காணமுடியவில்லை.

இந்துக்களின் விநாயக சதுர்த்தி விழாவைப் பார்த்து பொறாமைப்படுவது, வயிறு எரிவது மிகத் தெளிவாக தெரிகிறது.

ஏன் மக்களை ஏமாற்றி மதம் மாற்றும் வேட்டையில் இவை தடைகளாக உள்ளனவோ????

இப்படியும் பிழைப்பு நடாத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

சார் இது பார்ட் டைம் மன நல கோளாறு ( ஈழ தேச கட்டுரைகள் )அது புல் டைம் மன நல கோளாறு ( வினவு )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.