Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தான் பெற்ற பிள்ளைகளை கொலை செய்தமைக்காக 18 வருட கடூழியச் சிறை; நான்கு வருடங்களின் பின்னர் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றம் குறைக்கப்பட்டு தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவனின் நடத்தை காரணமாக குடும்ப வாழ்வில் வெறுப்படைந்து, விரக்தி கொண்ட நான்கு பிள்ளைகளின் தாய் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்குக் வந்தாள்.

தானில்லா விட்டால் தன் பிள்ளைகள் கஷ்டப்படுமே என்ற கவலைகொண்ட அத்தாய் தன் நான்கு பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளி உயிரை மாய்த்துக்கொள்ளச் செய்யவும் முனைந்தாள்.

கிணற்றினுள் தாயால் தள்ளிவிடப்பட்ட இருபிள்ளைகள் உயிரிழந்த நிலையில் மற்றைய இரு பிள்ளைகளில் ஒரு பையன் தப்பியோடி தகவல் கொடுத்ததன் பேரில் அந்த இரு பிள்ளைகளும் தெய்வாதீனமாக உயிர்தப்பினர்.

வவுனியா சின்னசிட்டிகுளம், நேரியகுளம் எனுமிடத்தைச் சேர்ந்த றிஸ்வான் நபீசா எனும் மேற்படி நான்கு பிள்ளைகளின் தாய் மீது வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்கில் மொத்தமாக 18 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 70 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.குறித்த தாயான றிஸ்வான் நபீசா தனது பிள்ளைகளான றிஸ்வான் அனீஸா (வயது 6), றிஸ்வான் பாத்திமா நலீலா (11 மாதங்கள்) ஆகியோரை கொலை செய்ததாக இரு கொலைக் குற்றச்சாட்டுகளுக்கும், ஏனை இரு பிள்ளைகளான ஆசிக்முஹம்மட் (வயது 10), ஆசிக்கா (வயது 14) ஆகியோரை கொலை செய்ய முயற்சித்ததாக இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழங்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் எதிரியான றிஸ்வான் நபீசா, தான் கணவனின் நடத்தையால் மனமுடைந்து மன விரக்தியால் இவ்வாறு நடந்துகொண்டதாகவும், குற்றத்தைக் குறைத்துத் தரும்பட்சத்தில் அதனை ஒப்புக்கொள்ளத் தயாரெனவும் சட்டமா அதிபருக்கு கருணை மனு ஒன்றைச் செய்திருந்தார்.

இதன்படி கொலைக் குற்றச்சாட்டுக்குப் பதிலாக, கொலையாகாத மரணத்தை உண்டுபண்ணிய குற்றமாக சட்டமா அதிபரால் திருத்திய குற்றச்சாட்டுப் பத்திரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமது கருணை மனுவின் பிரகாரம் குறைக்கப்பட்ட குற்றச்சாட்டினை (நான்கு குற்றச்சாட்டுக்கள்) றிஸ்வான் நபீசா மேல் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மரணமான இரு பிள்ளைகள் தொடர்பில் கொலையாகாத மரணத்தை ஏற்படுத்திய இரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 7 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் 50 ஆயிரம் ரூபா தண்டமும், தண்டப் பணம் கட்டத் தவறினால் மேலும் இரு வருடங்ங்கள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன் ஏனைய இரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளுக்கும் தலா இருவருட கடூழியச் சிறைத் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டதோடு தண்டப் பணம் செலுத்தத் தவறினால் ஆறுமாத கடூழிய சிறைத் தண்டனை மேலதிகமா அனுபவிக்க வேண்டுமெனவும் அவர் தீர்ப்பு வழங்கினார்.

குறித்த கடூழியச் சிறைத் தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சிகளாக குறித்த பெண்ணின் கணவனும், மகன்,மகளுமே முன்னிலையாகியமையும் குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/News_More.php?id=837381459425769589

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.