Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே செல்கிறோம்? எமக்கே தெரியாது

Featured Replies

[size=4]செட்டிகுளம் நலன்புரி முகாமில் இருந்து நேற்று அழைத்துவரப்பட்ட கேப்பாபிலவு, மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் திண்டாடினார்கள்.[/size]

[size=4]" நாம் அவர்களுடன் பேசிய போது அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்? எங்கே குடியமர்வு செய்யப்பட உள் ளார்கள்? என்பது குறித்த எந்தத் தகவலும் அவர்களுக்குப் முழுதுமாகத் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பலர் தாம் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பது தெரியாமல் கண்ணீர் விட்டவாறு இருந்தனர் என்று எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்திருந்தனர்.[/size]

[size=4]"எங்க கொண்டு போறாங்களோ எங்களுக்குத் தெரியாது. பஸ்ஸில ஏத்தினாங்கள். இஞ்ச கொண்டு வந்து விட்டிருக்கிறாங்கள். இனி எங்க கொண்டு போயினமோ தெரியேல. இந்த நிலமேல நீங்கள் எங்கள வந்து கேக்கிறியள் எங்க போறியள் எண்டு.'' என்று எமது செய்தியாளரிடம் தனது கவலையைக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார் குடும்பப் பெண் ஒருவர்.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=702391458625311398

  • தொடங்கியவர்

D30883326.jpg

  • தொடங்கியவர்

[size=4]ஆயுதமுனையில் அழைத்துவரப்பட்ட மக்கள் மரங்களின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளனர்"

மீழ்குடியேற்றம் முடிவடைந்துவிட்டதாக சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக முகாமில் இருந்த மக்களை ஆயுத முனையில் மிரட்டி அழைத்து வந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மரங்களின் கீழ் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி தவிக்க விட்டுள்ளனர். நலன்புரி முகாமில் தங்கியிருந்த கேப்பாபிலவு, மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 361 குடும்பங்களே நேற்றுத் திங்கட்கிழமை இராணுவத்தினரால் வற்றாப்பளைக்கு கொண்டுவரப்பட்டன.பலவந்தமாக இந்தக் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி மற்றும் வற்றாப்பளை மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றித் தங்கவைக்கப்பட்டுள்ளன.[/size]

[size=4]நேற்றுக்காலை செட்டி குளம் நலன்புரி நிலையத்துக்குச் சென்ற இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் அங்கிருந்த மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அங்கிருந்த மக்கள் பஸ்களில் ஏற்றப்பட்டார்கள். அவர்களுடைய பொருள்கள் அனைத்தும் லொறிகளில் ஏற்றப்பட்டன.[/size]

[size=4]முதலில் மந்துவில் கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்கள் அங்கிருந்து பிற்பகல் ஒரு மணியளவில் முல்லைத்தீவு நோக்கிக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தக் குடும்பங்கள் புதுக்குடியிருப்பு கைவேலி என்ற இடத்தில் மர நிழல்களின் கீழ் நேற்று மாலை 5 மணியளவில் இறக்கிவிடப்பட்டன.

அந்தக் குடும்பங்கள் தொடர்ந்து நேற்று இரவு முழுவதும் மர நிழல்களிலேயே தமது பொழுதைக் கழித்தனர். இந்த மக்களுக்கான உணவு வசதிகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஏனைய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமையால் அந்தக் குடும்பங்கள் பெரும் நிர்க்கதியான நிலையில் அவலப்பட்டுக் கொண்டிருந்தன.

இதன்பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் கேப்பாபுலவு கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்கள் செட்டிகுளம் முகாமில் இருந்து ஏற்றிவரப்பட்டனர். இந்த மக்கள் வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கும் உணவு வசதி மாத்திரமே ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஏனைய அடிப்படை வசதிகள் இல்லாமையால் அங்கு பெண்களும், சிறுவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது[/size]

[size=4]தம்மை சொந்த இடங்களான கேப்பாபுலவு, மந்துவில் பகுதிகளில் இன்று குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினர் தம்மிடம் கூறியதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.[/size]

[size=4]செட்டிகுளம் அகதி முகாமில் இருந்து மக்களை வெளியேற்றிய பின்னர் அங்கிருந்த அனைத்துக் கட்டடங்களையும் படையினர் தகர்த்து நிர்மூலமாக்கியதாக மக்கள் தெரிவித்தனர்[/size][size=2]

[size=4]282235_284881781615741_1975832900_n.jpg[/size][/size]

சிங்களப் பயங்கரவாதிகளும் இந்தியக் காட்டுமிராண்டிகளும் சேர்ந்து தமிழரை மீள்குடியேற்றும் இலட்சணம் இதுதான்!

  • தொடங்கியவர்

[size=5]தண்ணீரில்லா நடுக் காட்டுக்குள் கேப்பாபிலவு மக்கள் பரிதவிப்பு; என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விடுகின்றனர்[/size]

[size=4]இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர் அங்கிருந்த இந்த மக்களை அப்புறப்படுத்தினர். இங்கிருந்த 360 குடும்பங்களில் கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றுமுன்தினம் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு உணவு மட்டும் வழங்கப்பட்டது.

ஆயினும் அந்த இடத்தில் இருந்து நேற்று மீண்டும் ஏற்றிச் செல்லப்பட்ட மக்கள் நேற்று மாலை நந்திக் கடலேரிக் கரையோரத்தில் உள்ள சூரியபுரம் காட்டுப்பகுதியில் எவ்வித வசதிகளோ, பாதுகாப்போ எதுவுமின்றி இறக்கிவிடப்பட்டுள்ளதாக அந்த மக்கள் உதயனிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள ஒருவர் தெரிவிக்கையில் நாங்கள் இங்கு தங்குவதற்கு கூடாரமோ அல்லது மழைக்கு ஒதுங்குவதற்கு கட்டடமோ இல்லை காட்டுக்குள் எந்தப் பகுதியால் யானைகள், கொடிய மிருகங்கள் வரும் என்று உயிரைக் கையில் பிடித்தவாறு இரவைக்கழிக்கின்றோம் என்று கூறினார்.

இந்த மக்களுக்கு நேற்று இரவுவரை உடனடி உணவுப் பொருள்கள் எதுவும் வழங்காததால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=702991461126885732

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]282235_284881781615741_1975832900_n.jpg[/size][/size]

ஐ.நா. இலங்கை வந்ததால் தமிழருக்கு கிடைத்த பரிசு. :(

சிங்களம் திருந்தாது

இதுவே கடைசிச்சாட்சி. :( :(

  • தொடங்கியவர்

[size=5]"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்"[/size]

183571_285198454917407_259328737_n.jpg

302104_285198571584062_1356319176_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.