Jump to content

கறிவேப்பிலை சாதம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறிவேப்பிலை மரம் புலம்பெயர் நாடுகளிலும் இலகுவாக உண்டாக்கமுடியும். இது நான் முயன்று வெற்றி கண்ட விடயம் .கடையில் வாங்கும் கறிவேப்பிலையில் குருத்து உள்ள தடிகளாக எடுத்து சிறிய சாடி ஒன்றில் நல்ல பசலை மண்ணாகப் போட்டு தடிகளின் அடியை சாய்வாக வெட்டி மண்ணுள் ஊன்றிவிடவும். தாராளமாகத் தண்ணீர் விட்டபின் தடிகளிலும் உயரமான வெள்ளைப் போத்தல் ஒன்றினால் காற்றுப் புகாதபடி மூடிவிட வேண்டும். மூன்று நாட்களின் பின் போத்தலை கவனமாகத் திறந்து அளவாக நீர் விட்டு மீண்டும் மூடிவிடவேண்டும்.ஒன்று இரண்டு வாரங்களில் குருத்து வளரத் தொடங்கும் அல்லது புதிய குருத்து வரும்.

இந்த முறையில் வைத்த கறிவேப்பிலை என்வீட்டில் ஒரு அடி உயரத்தில் இலைபரப்பி நிற்கிறது. கறிவேப்பிலை மட்டுமல்ல எல்லா மரங்களும் இம்முறையில் பதி வைக்கலாம். இப்படிப் பதியமிட்ட தூதுவளை,மாதுளை,முருங்கை மரங்கள் என்வீட்டில் உள்ளன.

நல்லதொரு தகவலை... தந்துள்ளீர்கள், மெசொபொத்தேமியா சுமேரியர். :)

Link to comment
Share on other sites

சுமேரியர் சொன்ன முறையில் கறிவேப்பிலை மரம் வளர்த்துப் பார்க்கலாம்.. தமிழ்கடையில் வாங்கி வைக்கலாம்தான்.. ஆனால் அது காட்டு கறிவேப்பிலை தடியாக இருந்தால்? :huh:

வெரி சிம்பிள்.

கோடலியை... கடையில், வாங்கி... அடியோடை மரத்தை.... தறிக்க வேண்டியது தான்.... :D

Link to comment
Share on other sites

வெரி சிம்பிள்.

கோடலியை... கடையில், வாங்கி... அடியோடை மரத்தை.... தறிக்க வேண்டியது தான்.... :D

ஏம்பா.. உருப்படியா நல்ல கறிவேப்பிலையை எப்பிடி கண்டுபிடிக்கிறது எண்டு சொல்லுறதை விட்டிட்டு.. :D

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை மரம் புலம்பெயர் நாடுகளிலும் இலகுவாக உண்டாக்கமுடியும். இது நான் முயன்று வெற்றி கண்ட விடயம் .கடையில் வாங்கும் கறிவேப்பிலையில் குருத்து உள்ள தடிகளாக எடுத்து சிறிய சாடி ஒன்றில் நல்ல பசலை மண்ணாகப் போட்டு தடிகளின் அடியை சாய்வாக வெட்டி மண்ணுள் ஊன்றிவிடவும். தாராளமாகத் தண்ணீர் விட்டபின் தடிகளிலும் உயரமான வெள்ளைப் போத்தல் ஒன்றினால் காற்றுப் புகாதபடி மூடிவிட வேண்டும். மூன்று நாட்களின் பின் போத்தலை கவனமாகத் திறந்து அளவாக நீர் விட்டு மீண்டும் மூடிவிடவேண்டும்.ஒன்று இரண்டு வாரங்களில் குருத்து வளரத் தொடங்கும் அல்லது புதிய குருத்து வரும்.

இந்த முறையில் வைத்த கறிவேப்பிலை என்வீட்டில் ஒரு அடி உயரத்தில் இலைபரப்பி நிற்கிறது. கறிவேப்பிலை மட்டுமல்ல எல்லா மரங்களும் இம்முறையில் பதி வைக்கலாம். இப்படிப் பதியமிட்ட தூதுவளை,மாதுளை,முருங்கை மரங்கள் என்வீட்டில் உள்ளன.

ஒரு வீட்டில் நான் இப்படி வேப்ப மரமே பார்த்துள்ளேன்.

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்,... இதனை யாராவது கனடாவில் வளர்த்து வெற்றி கண்டுள்ளீர்களா என. நான் இரு தடவை முயன்றும் பட்டுப் போயிட்டுது. அப்படி வளர்த்து நிழலிக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று பேசாமல் இருந்து பின்னர் நான் வீட்டுக்கு விசிட் பண்ணும் போது பிடிபட்டால், கட்டாயம் மரத்தை புடுங்கி விட்டு விடுவேன்..இப்பவே சொல்லிட்டன் :icon_mrgreen:

நிழலி, விதையை ஊரிலிருந்து தருவித்துச் செய்து பாருங்கள். ஸ்பிரிங், சம்மர் காலங்களில் வெளியில் வைத்துவிட்டு, வின்ரரில் கிழக்குப் பக்கம் உள்ள ஜன்னல் அருகில் வைக்கலாம். ஆனால், சிறிய கன்றாகவே தொடர்ந்தும் வைத்திருப்பது நல்லது. இதற்கு வீடுதான் சிறந்தது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடனே பதில் எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். நான் கூறிய முறை உண்மைதான்.வீடுக்கு வெளியே குளிர் நாடுகளில் வளராது.பெரும்பாலும் சமையலறையே சிறந்தது.ஏனெனில் அங்கு நாம் சமைக்கும் நேரம் சாப்பிடும் நேரம் தேநீர் ஊற்றும் நேரம் என மற்றைய அறைகளிலும் பார்க்க வெப்பநிலை அதிகமாக இருக்கும். வெயில் இல்லாவிட்டாலும்கூட வெளிச்சம் வெப்பம் இரண்டும் இருந்தாலே போதும்.தடியில் வேர் பிடித்துவிடும். முக்கியமாக கறிவேப்பிலை வளரும் என்று நம்பிக்கொண்டு அளவான நீரை ஆசையுடன் விடவேண்டும். முளைக்குமா முளைக்குமா என்ற சந்தேகத்துடன் நீங்கள் வேருடன் இருக்கும் கன்றை நட்டாலும் அது வாடிவிடும். ஐரோப்பாவில் என் வீட்டில் பதியம் வாய்த்த கன்றுகளைக் காட்டுவோம் என்று பார்த்தால் படங்கள் டௌன்லோட் பண்ண முடியவில்லை.ஐம்பது பென்சுக்கு வாங்கலாம்தான்.நாமே நட்டு நம்வீட்டில் வளர்த்த செடியில் பறித்துக் கறியில் போட்டாலே மனமும் உருசியும் தனிதானே தமிழரசு. அந்த சுவையை நீங்கள் அனுபவித்ததில்லை என்று தெரிகிறது. போகட்டும் நிழலி இருமுறை முயன்ற நீங்கள் ஏன் இன்னும் ஒருமுறை முயன்று பாருங்கள். கட்டாயம் முளைக்கும். நீங்கள் எல்லோரும் அழுவதைப் பாத்தால் நானே கன்று பதியம் வைத்து அனுப்பிவிடுகிறேன். விலாசத்தை கீழே எழுதிவிடுங்கள்.

இன்னுமொன்று டேலிஆஸ் எனப்படும் அழகிய பூவும் கிழங்கிலிருந்துதான் புதிய கன்று வரும் என்று இத்தனை நாட்கள் நினைத்திருப்பீர்கள். குருத்துள்ள ஐந்து ஆறு அங்குலத் கெட்டை வெட்டி மண்ணில் ஊன்றி நீர் விட்டு மேலே போத்தலால் மூடிவிட தலை கவிழ்ந்து நிற்கும். ஒரு வாரத்தின் பின் தலை நிமிர்ந்து செடி நின்றால் வேர் பிடித்துவிட்டது என்று அர்த்தம். பின் போத்தலை எடுத்துவிடலாம். அதன் தனி ஒரு இலை கூட இப்படி வேர் பிடித்து வளரும். இது வெளித் தோட்டத்தில் தான் வளர்ப்பது நன்று. புதிய கன்றை குளிரில் விட முடியாது. மேலே போலிதீனால் மூடிவிட்டால் வைகாசியில் மீண்டும் துளிர்க்கும்.

கடந்தவருடம் பொங்கலுக்கு வாங்கிய கரும்பை வெளியே ஊன்றிவிட்டேன்.முளைக்கவுமில்லை படவுமில்லை. எழு மாதங்களாக அப்படியே நின்றது. போனமாதம் மேலே போத்தலால் மூடிப் பார்த்தேன் ஒரு வாரத்தில் குருத்து வந்துவிட்டது. குளிர் தொடங்கிவிட்டபடியால் உள்ளே கொண்டுவந்து வைத்தேன்.தொடர்ந்து வளர்கிறது.

சரி கனக்க அறுக்கிறேன் என்று எனக்கே தெரிகிறது. படங்களை எப்படி இலகுவாக இதில் போடுவது என்று சொல்லுங்கோ உடன போட்டுவிடுகிறேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.