Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனனேடியத் தமிழர் உதயகரனுக்கு பொறியியல் துறையில் சிறப்பு விருது வழங்கிக் கொளரவம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

uthayan-150canada.jpg

[size=4]றயர்சன் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பொறியியலாளரும் விஞ்ஞானியுமான கவிஞருமான உதயகரன் துரைராஐாவிறகு அர்ப்பணிப்பிற்கும் மிதமிஞ்சிய கொடைக்குமான பாராட்டு விருது (Dedication and Outstanding Contribution Appreciation Award) ஒன்று புளோறிடாவில் நடந்த சர்வதேச நகராட்சி சம்மந்தமான சமிக்கைச் சங்கத்தின் (International Municipal Signal Association - IMSA) 117வது ஆண்டு மாநாட்டில் வைத்து வழங்கிக் கொளரவிக்கப்பட்டது.[/size]

[size=4]புளோறிடாவில் உள்ள ஓம்னி றிசோட்டில் (Omni Resort, Orlando, FL) நடைபெற்ற மேற்படி மாநாட்டில் உலகின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பழமையான இச் சங்கத்தில் மின்விளக்கை முதலில் கண்டுபித்தவரும் மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்த தொமச் அல்வா எடிசனும் (Thomas Alva Edition) அவருடைய நிறுவனமும் 1901 ஆம் ஆண்டில் இச் சங்கத்தில் அங்கத்தவம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]மேற்படி சங்கத்தின் அழைப்பை ஏற்று புளோறிடா சென்ற உதயகரன் திடநிலை வெளிச்சம் (Solid State Lighting � Light Emitting Diode (LED) � Future Lighting will never be the same) சம்மந்தமான குழு விவாதத்தை (Panel Discussion) ஆரம்பித்து வைத்ததோடு அதில் கலந்துகொண்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இரண்டு ஆராட்சி விரிவுரைகளையும் (Seminars) நிகழ்த்திவிட்டு கனடா திரும்பியுள்ளார். உதயகரனுக்கு சிறந்த பொறியியல் சேவைக்கான ரொரன்றோ நகரபிதா விருதும் அண்மையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.[/size]

[size=4]தனது முதலாவது ஆராட்சி விரிவுரையில் தேக ஆரோக்கித்தில் வீதி ஒளியின் பங்கு என்ற தலைப்பில் (The Role of Roadway Lighting in Health) தனக்கே உரிய பாங்கில் உலகின் நடைமுறையில் உள்ள வழிமுறைகளை விளக்கி அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கியதோடு புதிய வழிமுறைகளையும் கண்டுபிடிப்புகளையும் விளக்கினார். அதைத் தொடர்ந்து தனது இரண்டாவது ஆராட்சி விரிவுரையில் அதிசிறந்த வீதி வெளிச்சத் திட்டம் என்ற தலைப்பில் (Holistic Roadway Lighting Design) தனது ஆய்வின் முடிவையும் நடைமுறைச் சாத்திய பிரயோகத்தையும் விளக்கினார்.[/size]

[size=4]அவருடைய கண்டுபிடிப்பான அறிவுடைநிலை விளக்கு (An Awareness Luminaire) ஜேர்மனி மற்றும் சுவீடனில் காட்சிக்காக வைக்கப்பட்தோடு சுவீடன் பல்கலைக்கழக (The Royal Institute of Technology, Sweden) தபால் மட்டையிலும் இடம்பிடித்துக் கொண்டது. அவருடைய ஆய்வுக் கட்டுரை (A Systematic Method to Deal With Light Pollution and Safety in Lighting Design) றயர்சன் பல்கலைக்கழகத்தினால் ரோரன்றோ சு10ழல் மாசுபடல் சங்கத்திடம் (The City of Toronto Light Pollution Committee) கையளிக்கப்பட்டது. அவருடைய மற்றோரு ஆய்வுக் கட்டுரை (Light and Health � Integrate Science into the Noctonal Lighting Design) சுவீடன் பல்கலைக்கழகத்தினால் ஐரோப்பிய விஞ்ஞானக் குழுவிடம் (The Scientific Committee on Emerging and Newly identified Health Risk (SCENIHR) of the European Commission) கையளிக்கப்பட்டது. இதன் ஒருபகுதி ஆய்வுக் கட்டுரை (The Illumination Engineering Society of North America) மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.[/size]

[size=4]மின்பொறியியல் மற்றும் ஒளியியலில் முதுமானி கலாநிதி பட்டங்களை பெற்ற உதயகரன் துரைராஐh ரொரொன்ரொ றயர்சன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகும். கனடாவின் முன்னணி பொறியியல் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் (MMM Group Limited) பங்காளியாக இருப்பதோடு முதிர்ந்த மின் பொறியியல் மற்றும் ஒளியியல் வல்லுனராக இருக்கும் உதயகரன் துரைராஐா பல நூல்களையும் ஒளிப்பதிவு தட்டுக்களையும் தமிழில் தந்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை � கீதங்களில் தமிழர் கீதம். விண்ணைத் தொடுவோம். மாமனிதம் போன்ற நூல்களும் திருவாசகத் தேன் என்ற ஒளித்தட்டுமாகும். அவரை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் 647-988-6171 என்ன தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.[/size]

[size=4](ரொரொன்ரொவிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்)[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.