Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டைப் பிரிக்க வேண்டாம்: உரிமைகளை பெற்றுத் தாருங்கள்

Featured Replies

thxx.jpg

இலங்கையில் நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டிய தேவை அரசிற்கு இருக்கின்றது. அதில் சர்வதேசம் மிகவும் உறுதியாக இருக்கின்றது.

நீதியை நியாயத்தை உருவாக்காமல் அரசு அதைத் தட்டிக்கழிக்க முடியாது. நாம் ஒரு தனித் தேசிய இனம். எமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது. நாம் சரித்திர ரீதியாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்திருக்கின்றோம். எம்முடன் இஸ்லாமிய சகோதரர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இன்றும் நாம் பெரும்பான்மையுடன்தான் இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் நடைபெற்றது.

அங்கு சம்பந்தன் சிறப்புரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்நிகழ்வை நான் கருதுகின்றேன். இம்முறை நடைபெற்ற கிழக்கும மாகாணசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டோம். நாங்கள் மாகாணசபையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவறானவர்களின் கையில் மாகாணசபை நிர்வாகம் இருக்கக்கூடாது.

கடந்தமுறை மாதிரி தமிழ் மக்களுக்கு இம்முறையும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இம்முறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டோம். ஆட்சி அமைக்கக்கூடிய அதிகாரம் கிடைக்கவில்லை என்றாலும் மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருப்பதென்பது சாதாரண விடயமோ அல்லது இலகுவான விடயமாமோ அல்ல.

இது எதைக் காட்டுகிறதென்றால் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றார்கள். கொள்கை ரீதியாக தமிழ் மக்கள் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு இன்னும் 6 ஆயிரம் வாக்குகளே தேவைப்பட்டன. அதை 3 மாவட்டத்திலிருந்தும் பெற்றிருக்கலாம். ஆனால், மக்கள் முழுமையான பங்களிப்பைச் செய்தார்கள். எமது மக்களுடைய ஜனநாயக தீர்ப்பை அரசும், உலக நாடுகளும் மதிப்பளிக்க வேண்டியிருக்கின்றது.

எமது மக்களுடைய தீர்ப்பைப் புறந்தள்ள முடியாது. தெரிவு செய்யப்பட்ட 11 பேரும் நிதானமாகச் செயற்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு அரசு பல முயற்சிகள் செய்தது. ஆனால், அதை அவர்களால் செய்யமுடியவில்லை. ஏனைய அரசியல் கட்சிகளை அவர்கள் உடைத்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவராலும் உடைக்கமுடியாது. நாங்கள் ஒற்றுமையாக எமது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டில் சர்வதேசம் எங்களை அங்கீகரித்துள்ளது. தமிழ் மக்களின் நம்பிக்கையின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களால் எமது இனப் பரம்பல் சிதைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிப்பரம்பலை இனப் பரம்பலை செய்யக்கூடாது என்று கேட்கின்றோம். இந்நிலையால்தான் எங்களது கலாச்சாரம் சிதைக்கப்படுகின்றது. எமது பிரதிநிதித்துவம் குறைவடைகின்றது. நாம் அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றோம்.

நாடு பிரிக்கப்படவேண்டும் என்று கேட்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுதந்திரமாக நிம்மதியாக சொந்த இடத்தில் உரிமையுடன் வாழவேண்டும் என்ற உறுதியான முடிவை எமது மக்கள் கூறியிருக்கின்றார்கள். அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருக்கின்றோம். எமது மக்களுடைய உரிமைகள் தட்டிப் பறிக்கப்படுமாயின், சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிக்க நாம் ஒரு போதும் பின்நிற்க மாட்டோம் என்றார்.

http://akkinikkunchu...-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.