Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதி தமிழ் மக்களை மீண்டும் பிரிவினைவாதத்துக்குள் தள்ளிவிடும் அனைத்து நடவடிக்கை: - ஜே.வி.பி - ரில்வின் சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tilvin_silva_150.jpg

[size=4]வடபகுதி தமிழ் மக்களை மீண்டும் பிரிவினைவாதத்துக்குள் தள்ளிவிடும் அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, சர்வதேசத்தின் அழுத்தங்களிலிருந்து தப்பிக் கொள்வதற்கு அகதி முகாம்களை மூடியுள்ள அரசாங்கம் தமிழ் மக்களைக் காடுகளிலும் நடுத்தெருவிலும் கைவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.[/size]

[size=4]இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முப்பது வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் அகதி முகாம்களில் வாழ்ந்த தமிழ் மக்களை அரசாங்கம் முறையாக மீள் குடியேற்றவில்லை.[/size]

[size=4]சர்வதேச நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு, நல்லிணக்க ஆணைக்குழு போன்றவற்றின் கடும் அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் அவசர அவசரமாக அகதி முகாம்களை மூடி விட்டு அகதி முகாம்களே இனி இல்லையென்ற செய்தியை சர்வதேசத்துக்கு வழங்கியுள்ளது. ஆனால் உண்மையில் அரசாங்கம் தமிழ் மக்களை மீள் குடியேற்றவில்லை. ஆரம்பத்தில் முகாம்களிலிருந்து மக்களை வெளியேற்றி நான்கு காரணங்கள் மட்டுமே வழங்கி மீள்குடியேற்றி விட்டோம் ௭ன்றது அரசாங்கம்.[/size]

[size=4]இன்று கடைசி முகாமும் மூடப்பட்டு மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம் மக்களுக்கு வீடுகள் அமைத்து அடிப்படை வசதிகளை வழங்கி மீளக் குடியேற்றப்படவில்லை. மாறாக அம்மக்களை காடுகளில் மற்றும் நடுத்தெருவில் ௭துவிதமான வசதிகளையும் வழங்காது அரசாங்கம் கைவிட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் வெளிநாடுகளுக்கு தலையீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும்.[/size]

[size=4]அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே டெசோ மாநாடு மற்றும் ஐ.நா.வில் இலங்கையில் தனிநாடு உருவாவதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் ௭ழுந்துள்ளன. வடபகுதி தமிழ் மக்களை அந்நியப்படுத்தி வசதிகளை வழங்கி மீள்குடியேற்றாமை காரணமாக இம்மக்களை மீண்டும் அரசாங்கம் பிரிவினைவாதத்துக்குள் தள்ளி விடுகின்றது. இது மட்டுமல்லாது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும் ஊக்கம் வழங்குகின்றது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.