Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவம் தீவிர முயற்சி மனிக்பாமை ஆக்கிரமிக்க; 6,000 ஏக்கரில் பெருமளவை விழுங்குகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரானுவம் தீவிர முயற்சி மனிக்பாமை ஆக்கிரமிக்க; 6,000 ஏக்கரில் பெருமளவை விழுங்குகிறது

manikbam.jpg

இறுதிப் போரின்போது இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட "மனிக் பாம்' எனப்படும் மாணிக்கம் பண்ணை, மூடப்பட்டதைத் தொடர்ந்து அதன் பெருமளவு நிலப் பகுதியையும் தம் வசப்படுத்த படையினர் முயன்று வருகின்றனர்.

எஞ்சிய பகுதியில் அரச திணைக்களங்களும் தனியார் நிறுவனங்களும் பங்கு கேட்டு வருகின்றன. செட்டிகுளம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள 6,000 ஏக்கர் நிலப் பகுதியில் இடம்பெயர்ந்தோருக்கான தடை முகாம்கள் அமைக்கப்பட்டன.

படிப்படியாக அங்கிருந்து மக்கள் வெளியேறி மீளக் குடியமர்ந்ததை அடுத்து அதன் பெரும் பகுதியைத் தன் கைவசப்படுத்தும் பணிகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது.

"செட்டிகுளத்தில் காணிகள் தருமாறு கேட்டு பல தரப்பினரிடம் இருந்தும் எமக்கு விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை நாம் கவனமாகப் பரிசீலித்து வருகின்றோம்.

தீர ஆராய்ந்த பின்னர் அது பற்றி முடிவெடுப்போம்'' என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக பண்டார தென்னக் கோன் தெரிவித்தார். மனிக் பாம் தடுப்பு முகாமின் வலயம் 3 அமைந்திருந்த பகுதியில் ஏற்கனவே இராணுவத்தினர் 200 ஏக்கர் நிலப்பகுதியைத் தம் வசப்படுத்தி விவசாயப் பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர். 3 கோடி ரூபாய்க்கு மேல் அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினரால் பண்ணை அமைக்கப்பட்ட பகுதியினுள் 35 முஸ்லிம் குடும்பங்களினுடைய காணிகள் அகப்பட்டுக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. அவற்றைத் தங்களிடம் திரும்பி ஒப்படைக்குமாறு அந்தக் குடும்பங்கள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று அண்மையில் வவுனியா செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் தமக்கு 40 ஏக்கர் காணி தேவை என தொல்பொருள் திணைக்களமும் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றும் தொழிற்சாலை அமைப்பதற்காக அந்தப் பகுதியில் காணி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இவை தவிர்ந்த ஏனைய பெருமளவு நிலப்பகுதிகளைத் தன்வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் படைத்தரப்பு மேற்கொண்டு வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றனர்.

http://onlineuthayan.com/News_More.php?id=601781472830565439

  • 1 month later...

[size=5]மனிக்பாமில் மரம் நடும் இராணுவம்[/size]

[size=4]இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த, வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் முகாம் பகுதியில், தேசத்திற்கு நிழல் என்னும் தேசிய மட்டத்திலான மரநடுகை திட்டத்தின் கீழ், இராணுவத்தினர் பழமரச் செய்கையில் ஈடுபட்டிருப்பது குறித்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, கவலை வெளியிட்டிருக்கின்றது.[/size]

[size=3]

[size=4]இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து மீள்குடியேற்றத்திற்காகவும், வேறிடங்களில் குடியேற்றப்படுவதற்காகவும் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, மனிக்பாம் முகாமை இராணுவம் தனது பொறுப்பிலேயே வைத்திருக்கின்றது. இந்தக் காணிகளில் இராணுவத்தினர் காய்கறி செய்கையிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் ஆயிரம் பழக்கன்றுகள் வெள்ளியன்று நாட்டப்பட்டிருக்கின்றன.[/size][/size]

[size=3]

[size=4]இதுபற்றி தமிழோசைக்குக் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தேசத்திற்கு நிழல் தரும் திட்டத்தின் கீழ் மரநடுகை மேற்கொள்வதையோ, பழமரத் தோட்டங்கள் உருவாக்கப்படுவதையோ தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், பொதுமக்கள் பயன்படுத்தத்தக்க காணிகளில் இராணுவத்தினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே தாங்கள் கண்டிப்பதாகவும் கூறினார்.[/size][/size]

[size=3]

[size=4]அவசர அவசரமாக மனிக்பாம் முகாமில் இருந்த மக்களை வெளியேற்றிய அரசாங்கம், சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதாகத் தெரிவித்து, அவர்களில் பலரை காட்டுப்பகுதிகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் குடியேற்றியிருக்கின்றது. அவ்வாறு செய்துவிட்டு மனிக்பாம் முகாமை இராணுவம் தனது விவசாயச் செய்கைக்காகப் பயன்படுத்துகின்றது.[/size][/size]

[size=3]

[size=4]இது மனிக்பாம் முகாம் பிரதேசத்தின் ஆறாயிரத்து இருநூறு ஏக்கர் காணிகளையும் இராணுவம் கைப்பற்றுவதற்கான உள்நோக்கம் கொண்ட செயலாகவே தாங்கள் கருதுவுதாகவும், அதனைக் கண்டிப்பதாகவும் அவர் குற்பிட்டார்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121118_manikplant.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.