Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது உத்தரவின்றி இலங்கைக் கடற்படை துப்பாக்கிகள் ஒரு குண்டு கூட வெளியேறாது; வடக்கு பிராந்திய கடற்படைத் தளபதி .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவதாக வெளியாகும் தகவலில் எதவிதமான உண்மையிமில்லை. எனது உத்தரவின்றி இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேறாது என வடக்கு பிராந்திய கடற்படைத் தளபதி ரவி விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார்.

போர் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகள் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது அதனை இந்திய ஊடகவியலாளர்கள் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

அவர்களைச் சந்தித்த கடற்படைத் தளபதி ரவி விஜயகுணரத்ன மேற்கண்டவாறு அவர்னகளிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்துவதாகத் தமிழகத்தில் பரவலாக பேசப்படுவதை நாங்கள் அறிகிறோம்.

ஆனால், அதில் எவ்விதமும் உண்மை இல்லை. பொதுவாக, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது பகுதியில் இருந்து பகலில் புறப்பட்டு நடுக்கடலில் தங்குகின்றனர். நள்ளிரவில் அவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி காங்கேசன்துறை, கச்சத்தீவு அருகே மீன்பிடியினை மேற்கொள்கின்றனர். மீண்டும் அதிகாலை வருவதற்குள் இந்திய கடல் எல்லைக்குள் சென்று விடுகின்றனர்.

அத்துடன் றோளர் மூலம் அவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் உள்ள மீன் வளத்தைச் அழிக்கின்றனர். சுரண்டுகின்றனர்.

இதனால் தங்களது வாழ்வாதாரத்துக்கு உரிய மீன் வளத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எடுத்துச் செல்வதை இலங்கை மீனவர்கள் எதிர்க்கின்றனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் பேசி சமரசத்துக்கு வர வேண்டும்.

யுத்தம் முடிந்து தற்போது தான் இலங்கை மீனவர்கள் தமது வாழ்வாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழக மீனவர்களது செயற்பாடு தவறானது.

எனினும் எனது தனிப்பட்ட தலையீடு, உத்தரவின்றி இலங்கை கடற்படை வீரரின் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டுகூட வெளியேற வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு எங்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அவர் மேலம் தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/News_More.php?id=815681487104588816

  • கருத்துக்கள உறவுகள்

சொல்றதிலயே தெரியுது இவன்கள்தான் சுடுறான்கள் எண்டு..

தான் சுட உத்தரவு போடவில்லை என்று சொல்லவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.