Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெனிம் சில கசப்பான உண்மைகள்

Featured Replies

நீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans Diesel Levi's Seven Jeans Apple Bottoms Von Dutchஎன பல பிராண்ட் களில் வருகிறது இது இரண்டு நூற்றண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்து விட்டது ஸான்ஃப்ரான்சிஸ்கோவில் வாழ்ந்த ஜெர்மனியாரான levistrauss என்னும் வணிகரால் 1850 களில் அடிமைத் தொழிலாளிகளான சுரங்கத்தொழிலாளிகளின் பாவனைக்காகத்தான் இந்த கரடு முரடன துணி முதலில் உருவாக்கப்பட்டது ...

double-denim-no-2.jpg

denim இது பிரெஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது பிரான்ஸ்சில் nimes நகரத்தில் பட்டு நூலையும் கம்பளியையும் கலந்து நெய்து serge-de-nimes என்ற பெயரில் தடித்த துணியை தயார் செய்தனர் de -nimes என்றால் நிம்சில் இருந்து என்று பொருள் பின்பு ஐரோப்பாவில் இதன் பெயர் டெனிமாக மாறிவிட்டது

கலிபோர்னிய சுரங்கத்தொளிலளர்கள் அணிந்திருந்த டெனிம் 1930 ஹோலிவூட் கௌ பாய்சின் கண்களில் பட்டது உடனே அவர்கள் டெனிம்ஐ ஹோலி வூட்டுக்கு எடுத்து சென்று பிரபலமக்கினர்கள் ...ஹோலி வூட்டால் டெனிம் அசுர வேகத்தில் பிரபலமானது டிவி களில் நிகழ்சிகளில் இளசுகளின் அடையாளமாக டெனிம் காட்டப்பட்டது...இளைஞர்கள் டேனிமை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் ...இந்தக்கலாச்சாரம் அமெரிக்காவில் வெகு வேகமாக பரவியபோது அமெரிக்க பழமை வாதிகளால் டெனிம் கீழ்தரமானோர் அணியும் ஆடையாக நோக்கப்பட்டது ...சில பாடசாலைகள் டெனிம் அணிவதற்கு தடை விதித்தன

44d68_denim-on-denim-580a-040410.jpg

ஆனால் டெனிம்முக்கு ஆதரவு கொடுத்தது யார் தெரியுமா ? ஹோலி வூட் அதற்கு முன் யார் என்ன செய்துவிட முடியும் ..இதனால் எதிர்ப்புக்கள் எல்லாம் தூசாகி விட்டன (இன்றும் ஹோலி வூட் நவீனம்/கலாச்சாரம் என்று எதை அறிமுகப்படுத்தினாலும் இன்றைய உலகம் எதிர்ப்புக்காட்டமல் ..அத்தனையும் ஏற்றுக்கொள்ளும் )

ஹோலி வூட்டின் ஆதரவால் அமெரிக்காவை தாண்டி டெனிம் ஏனைய நாடுகளுக்குள் சர்வ சாதாரணமாக பரவியது முதன் முதலில் டெனிம் அறிமுகமாகிய ஹோலி வூட் திரைப்படம் Rebel Without a Cause

venkkay.JPG

இதை பிரபலமாக்கியதில் அமெரிக்க இராணுவத்தினருக்கும் முக்கிய பங்குண்டு இரண்டாம் உலகப்போரின்போது வீரர்கள் தமது உடைகளுடன் டெனிம்மையும் எடுத்து சென்றார்கள் அங்கு இவர்கள் சாதாரண நேரங்களில் இவற்றையே அணிந்து சென்றார்கள் இவற்றை பார்த்ததும் உள்ளூர் வாசிகள் ஆடிப்போய் விட்டார்கள் பலர் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தார்கள் (காஞ்சமாடு கம்பில பிறது மாதிரி )

1950 இல் அமெரிக்காவில் வெற்றிகரமாக தனது கால்தடத்தை பதித்துக்கொண்டது டெனிம் பாடசாலைகள் இதை அணிவதற்கு அனுமதிக்க வேண்டியதாயிற்று ...

1960 -70 களில் வேறு வேறு நிறங்களில் டெனிம் வெளி வந்தது ..கீழைத்தேய நாடுகளில் உள்ளோர் தாம் மேற்கத்தேய கலாச்சாரத்தை பின் பற்றுகிறோம் என்பதைக்காட்டுவதற்கு இவற்றை அணிய ஆரம்பித்தார்கள் 1990 இல் டெனிம் மற்று உருவம் பெற தொடங்கியது வயது வேறுபாடு இல்லாமல் பெற்றோர் பிள்ளைகள் என அனைவரும் இதை அணிந்தார்கள் டைம்ஸ் பத்திரிக்கை டேனிமை பற்றி பிவருமாறு செய்தி வெளியிட்டது "single most potent symbol of american"

denim.JPG

ஆண்டு தோறும் உலகம் முழுவதுமாக 4000 மில்லியன் M துணி விற்பனையாகின்றது ஜீன்ஸ் விற்பனையில் அமெரிக்காவின் levis நிறுவனம் தொடர்ந்தும் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது இதன் உரிமையாளர் Levi Strauss இவர்தான் நீல நிற டெனிமை உரிமத்துடன் விற்பனை செய்பவர் ... 1996 இல் இந்நிறுவனம் 7 .1 பில்லியன் டாலர்களை சம்பாதித்தது இந்நிறுவனத்தின் வருடாந்த குறைந்த விற்பனை 2008 இல் 4400 மில்லியன் டாலர்கள் . டெனிம்மிற்கு பாரம்பரிய உடைகளை தகர்த்தெறிய எதிர்ப்புக்கள் இருக்கவில்லை மக்கள் தாமாகவே வலிந்து சென்று வாங்கி அணிந்து கொண்டார்கள் .

உலகில் அதிகம் டெனிம் ஜீன்ஸ் அணிபவர்கள் அமெரிக்கர்கள்தான் அதிகம் இதை விற்பனை செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று வருடத்திற்கு 25 மில்லியன் ஜீன்ஸ்கள்

டெனிம் விளம்பரங்களுக்காக நிறுவனங்கள் பணத்தை வாரி இரைத்துக்கொண்டிருக்கின்றன இவ்விளம்பரங்கள் 18 -24 வயதனோரை குறி வைத்தே விளம்பரமாக்கப் படுகின்றன ...

சில பழமையான விளம்பரங்கள் :

dittos+fit.jpg

chic%20fit.jpg

jesus%20fit.jpg

landlubber.jpg

levi%27s%20fit.jpg

levis%20for%20feet.jpg

musk%20is%20love.jpg

t%20shirtery.jpg

west%20dee%20cee.jpg

west%20gap.jpg

west%20rl.jpg

டெனிம் ஜீன்சின் முக்கிய மூலப்பொருள் பருத்திப்பஞ்சு உலகம் முழுவதுமாக 34 மில்லியன் ஹெக்டயர்கள் பரப்பளவில் பருத்தி பயிரிடப்படுகின்றது மிக அதிக அளவில் ஜீன்சை பயன்படுத்தும் நாடு அமெரிக்க ஆனால் மிக உயர்ந்தளவில் இதற்கான பருத்தியை உற்பத்தி செய்பவை இந்தியாவும் சீனாவும் தான் ...இந்தியாவில் 2009 இல் 9 மில்லியன் ஹெக்டயர் பரப்பளவில் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது ..

இது வெறுமனே உற்பத்தி சார்ந்த விடயங்கள் அல்ல மேற்கு நாடுகள் தாம் இவற்றை உற்பத்தி செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் இடர்பாடுகளை முன் கூடியே திட்டமிட்டு விட்டு இவற்றை மூன்றாம் நாடுகளின் மீது சுமத்தி விடுகின்றன ...

இதனால் அதிகம் பாதிப்புற்ற நாடுகளில் உஸ்பெகிஸ்தான் முக்கியமானது ..

பருத்தி உற்பத்தியில் ஆறாம் இடத்தில் உள்ளது ..இதற்கு நல்ல வெகுமதியையும் இந்நாடு கொடுத்துள்ளது ...

இதன் ஏறல் கடல் இதனால் பாதிப்படைந்தது கடலுக்கு செல்லும் ஆறுகளை பருத்திக்கு பயன்படுத்தியதால் கடல் படிப்படியாக சுருங்கி 100 km வரை உள் வாங்கிவிட்டது கரையோர மீனவர்கள் 100 km சென்றுதான் மீன் பிடிக்க வேண்டிய நிலை ...30 வகையான மீனினங்கள் இருந்த இடத்தில் இன்று இரண்டு வகையான மீனினங்கள் தான் எஞ்சி உள்ளன கடல் வற்றியதால் இன்று 36 000 சதுர கிலோமீட்டர்களுக்கு உப்புக்கள் படிந்து கிடக்கின்றன . அவற்றை காற்று அள்ளி சென்று விவசாய நிலங்களை தாக்குகின்றதால் அவற்றிற்கும் அழிவு ஏற்பட்டு வருகின்றது . மோசமான குடி நீர் காரணமாக மக்களுக்கு சிறுநீரக நோகள் பல ஏற்படுகின்றன . குழந்தைகளின் மரணம் அதிகமுள்ள நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது .

இதை விட பருத்திக்கு பயன் படுத்தும் பூச்சிநாசினிகள் மருந்துகள் போன்றவற்றால் சூழல் மாசடைவதுடன் பாதுகாப்பாக கையாளும் அறிவு விவசாயிகளுக்கு இல்லாததால் நோய்களும் மரணங்களும் சர்வ சாதாரணமாகி விட்டன ....

vennnn.JPG

இதற்கு நீல நிறமேற்ற இண்டிகோ சாயம் பயன்படுத்தப்படிகின்றது ...சாயமூட்டிய ஜீன்சை கற்சலவை செய்ய பியூமைஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளில் பெறப்படும் கற்கள் பயன்படுகின்றன ..ஒரு ஜீன்சை சலவை செய்ய இவ்வாறான ஒரு கிலோ கல் தேவைப்படுகின்றது

இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர் ...இந்தியாவில் மட்டும் ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள நான்கரை லட்சம் பெண்கள் இவ்வாறு பருத்தி வயல்களில் வேலை செய்கின்றார்கள் ..இவர்களுக்கு மிகக்குறைந்த ஊழியமும் போனஸ்சாக பாலியல் கொடுமைகளும் வழங்கப்படுகின்றன ...தாய்லாந்தில் இப்படியான ஆடைத்தயரிப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் தமக்கென சங்கம் அமைக்க முயற்சித்தபொழுது உடனடியாக 300 தொழிலாளர்கள் சுடப்பட்டனர் இவ்வாறான இன்னல்களை முன்கூட்டியே யோசித்துத்தான் மேற்குலக நாடுகள் இவற்றை மூன்றாம் நாடுகளின் மீது திணித்துள்ளன அத்துடன் தமது நிறுவனங்களை எம்மை போன்ற நாடுகளில் நிறுவவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன .

http://venkayamvalai.blogspot.fr/2012/10/blog-post_10.html

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]டெனிம் இன் சரித்திர பகிர்வுக்கு நன்றி [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அழகின் பின்னால் ஆபத்தும் அழிவும் இருப்பது இயற்க்கை தானே. தெரிந்தும் நாம் அதை அணிந்து விற்பனையைக் கூட்டி பல ஏழைகளை இன்னும் உருவாக்கத்தான் போகிறோம்.எத்தனை விடயங்களைத்தான் தொடுகிறீர்கள் கோமகன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் ஜெர்மனியில் இந்த டெனிம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.நிறம் கலப்பது அவர் வேலை.இரண்டு வருடங்களில் அவர் இல்லாது ஒருவரும் நிறம் கலப்பது இல்லை.மற்றவர் கலப்பது நன்றாக இல்லை என்றும் இவர் கலந்தால்த்தான் வேலை எண்ணுமளவு அங்கெ நிலைமை வந்துவிட்டது. அவருக்கு பதவி உயர்வு கொடுத்து அமெரிக்கா உலகம் முழுதும் உள்ள தமது கிளைகளுக்கு இவரை அனுப்பியது.இத்தனைக்கும் அங்கு கிட்டத்தட்ட ஆயிரம்பேர் வேலை செய்தார்கள். அவர்களில் உருவருக்குக் கூடவா நிறம் கலக்கும் சூட்சுமம் புரியவில்லை என நினைத்திருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.