Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளுக்கு அளிக்கப்படுவது புனர்வாழ்வா?(ஆசிரியப்பார்வை)

Featured Replies

[size=4]முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்படுகின்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றன. அதற்கான நிகழ்வுகளும் விருந்துபசாரங்களும் பெருமளவில் நடந்தேறியிருக்கின்றன. ஆனாலும் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு என்பது எந்த அளவிற்கு உண்மையானதாக இருகின்றது என்ற கேள்விக்கான பதிலைத் தேடித்தான் பார்க்கவேண்டும்.[/size]

[size=4]வன்னியின் இறுதிப் போரின் போது சரணைந்து போரின் பின்னர் காட்டிக்கொடுக்கப்பட்டு கைதான முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுவருன்றனர். அவர்களில் குடும்பத்தலைவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விடுதலைகள் இடம்பெற்றிருந்தன. முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர்கள் தொழில்த்துறைகளில் முன்னேற்றம் அடைவதற்கான எந்தவிதமான உதவியினையும் இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை. மாறாக சர்வதேச தொண்டு நிறுவனமான ஐ ஓ எம் எனப்படுகின்ற நிறுவனம் மட்டும் ஒவ்வொருவருக்கும் தலா 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தொழில் முயற்சிக்கான பொருட்கொள்வனவிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.[/size]

[size=4]அதனைவிடவும் விடுதலையை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டை ஒன்றையும் வழங்கியிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்த அடையாள அட்டைகள் அண்மையில் இராணுவத்தினரால் முன்னாள் போராளிகளிடம் இருந்து பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. சினிமாப் பாணியில் விடுதலை செய்யப்பட்டதற்கான அத்தாட்சிகள் இராணுவத் தரப்பின் கைகளில் இருக்கின்ற போது மீளவும் முன்னாள் போராளிகள் கடத்தப்பட்டாலோ? அல்லது காணாமல் போனாலோ அதற்கு யார் பதில் வழங்குவார்கள் என்ற சந்தேகம் முன்னாள் போராளிகளிடம் தலைதூக்கியிருக்கிறது.[/size]

[size=4]விடுதலை செய்யப்படுகின்ற நிகழ்வுகள் பிரமாண்டமாக நடத்தப்பட்டிருந்தாலும் தமிழர் தாயகத்தில் வாழ்கின்ற முன்னாள் போராளிகள் ஒவ்வொருவரும் இன்னமும் சிறைகளிலேயே வாழ்கின்றோம் என்ற மன நிலையிலேயே வாழ்ந்துவருகின்றார்கள். காரணம் அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது மாதாந்தம் ஒருதடவையாவது இராணுவப் புலனாய்வாளர்களை சந்தித்தே ஆகவேண்டும். அதனைவிடவும் ஒவ்வொரு சந்திப்புக்களின் போதும் முடிந்த அளவிற்கு தமக்குத் தகவல்கள் வழங்கவேண்டும் என்று அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். முரண்படுபவர்கள் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். முன்னாள் போராளிகளிடம் இருந்து தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக்கொள்கின்ற புலனாய்வாளர்கள் அடிக்கடி அவர்களைத் தொடர்பு கொண்டு தம்முடன் தொடர்பில் இருக்குமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதே நடவடிக்கைகளால் முன்னாள் பெண் போராளிகளுக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டுவருவதாக தெரியவருகின்றது.[/size]

[size=4]முன்னாள் போராளிகள் யாராவது தமது பகுதிகளில் இருந்து வேறிடங்களுக்குச் செல்வதாக இருந்தால் முற்கூட்டியே தமக்குத்தகவல் வழங்கப்படவேண்டும் என்று புலனாய்வளர்களால் மிரட்டப்படுகின்றனர். மீறி அவர்கள் வெளிமாவட்டங்களுக்குச் சென்று சில நாட்கள் தொடர்பின்றி இருந்தாலோ, வெளிநாடுகளுக்குச் சென்றாலோ அவர்களின் குடும்பத்தவர்கள் மிகுந்த நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டிய நிலை உணரப்பட்டுவருகின்றது. அச்சம் காரணமாக இவ்வாறான சம்பவங்களை வெளிச் சொல்வதற்கு மக்கள் தயக்கம்காட்டிவருகின்றனர்.[/size]

[size=4]இதேவேளை சமூகத்தினை எதிர்கொள்வதிலும் போராளிகளுக்கு நெருக்கடி நிலை காணப்படுகின்றது. சமூகத்தில் நன்கு மதிக்கத்தகவர்களாக சமூகத்தினை வழிநடத்துபவர்களாக இருந்த அவர்கள் புனர்வாழ்வின் பின்னர் தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக தொழில் தேடி அலைகின்ற நிலை ஏற்படுகின்றது. அதேபோல பெருமளவான போராளிகள் கூலித்தொழில் நாடிச் செல்கின்ற நிலையும் காணப்படுகின்றது. அவ்வாறு செல்பவர்களது நிலையினைப் புரிந்து கொள்ளாத சில நிறுவனங்கள் தொழில் வழங்குபவர்கள் அவர்களைச் சுரண்டி தமது வருவாயை ஈட்டுவதற்கு முற்படுகின்றனர். அதேபோல வேலைத்தளங்களில் தாம் நடத்தப்படுகின்ற விதம் அவர்கள் மத்தியில் ஒருவித விரக்தி நிலையினையும் தோற்றுவித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தாம் போராளிகளாக இருந்தையும் தற்போது வேலையற்ற நிலையில் வாடுவதையும் எண்ணி அவர்கள் உளவியல் ரீதியான நெருக்கடிகளையும் எதிர்கொண்டுவருகின்றனர்.[/size]

[size=4]இதேவேளை விடுதலைப்போர் நடைபெற்றபோது போரில் பங்கேற்று விழுப்புண் சுமந்தவர்கள் உரியவசதிகளோடு பராமரிக்கப்பட்டிருந்தனர். பாரிய விழுப்புண்கள் சுமந்தவர்களுக்க நவம் அறிவுக்கூடம் உட்பட்ட பல்வேறு கட்டுமாணங்கள் ஊடாக உதவிகள் வழங்கப்பட்டுவந்ததுடன் அவர்கள் சிறப்பாகக் கண்காணிக்கப்பட்டும் வந்திருந்தனர். போரின் பின்னர் அவ்வாறான எந்த வசதிகளும் இல்லாத நிலையில் சமூகத்துடன் வாழத் தலைப்பட்ட விழுப்புண் சுமந்த போராளிகள் பல்வேறு நெருக்கடிகளின் விளைவாக தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் கூட நிகழ்ந்தேறியிருக்கின்றன. உதாரணமாக யாழ்.வடமராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடுப்பிற்கு கீழ் இயக்கம் இல்லாத முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்திருந்தமை நினைவிருக்கலாம்.[/size]

[size=4]மன நிலை பாதிக்கப்பட்ட பல போராளிகள் உரிய பராமரிப்பின்றி வீதிகளில் அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து அவர்களது உளவியல் மேம்பாட்டினை முன்னெடுப்பதற்கான எந்தச் சூழ்நிலையும் தமிழர் தாயகத்தில் எங்கும் இல்லை. போரின் தாக்கம் அதன் மூலமான இழப்புக்கள் என்பன தமிழர்தாயகத்தில் உளத் தாக்கங்களை துரிதமாக ஏற்படுத்திவருகின்றன. இவற்றில் இருந்து மீள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கான மாற்று நடவடிக்கை என்ன என்பதை பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகின்றது.[/size]

[size=4]முன்னாள் போராளிகள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது அவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதாகத் தெரிவித்து அவர்களின் உழைப்பினைச் சுரண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொழில் பயிற்சிகள் வெளியே வந்த எந்தப் போராளிகளுக்கும் கைகொடுத்ததாக அறிய முடியவில்லை. அதேகாலப்பகுதியில் பல நூற்றுக்கணக்கான போராளிகள் ஈவிரக்கமற்ற முறையில் வேலைவாங்கப்பட்டிருக்கின்றார்கள். குறிப்பாக வெலிக்கந்த தடுப்பு முகாமில் இருந்த ஐநூறுக்கும் அதிகமான போராளிகள் தோட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தில் அவர்கள் விவசாயச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி முதல் அடிமைகள் போல இடைவிடாது வேலைக்கமர்த்தப்பட்ட அந்தப் போராளிகள் ஓய்வெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. சோர்வாக இருந்தவர்கள் முட்டிபோடப்பட்டு வெயிலில் நிறுத்தப்பட்டு வதைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு உற்பத்தி செய்யப்பட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டப்பட்ட பல இலட்சம் ரூபாய்கள் இராணுவத்தினால் ஏப்பமிடப்பட்டிருக்கின்றது.[/size]

[size=4]இதனைவிடவும் போரின் போது கைதான போராளிகளின் தொகை என்ற ஒரு எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் விடுதலை செய்யப்படுகின்ற போராளிகளின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படுகின்றது. அதேபோல உறவினர்கள் முன்னிலையில் சரணடைந்து இன்றுவரையில் அவர்கள் தொடர்பிலான எந்தத் தகவல்களும் இல்லாத நிலையும் உள்ளது. இருப்பினும் உண்மையான சரியான தகவல்கள் உள்ளனவா? என்ற கேள்விக்கு அரசாங்கத்திடம் பதிலில்லை. சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்கிறோம்.. விடுதலை செய்கிறோம் என்று தெரிவித்துவருவதுடன் மட்டும் எல்லாம் முடிந்துவிட்டதா? என்பதை சிங்கள அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முட்கம்பி வேலிகளுக்கால் விடுவித்து திறந்தவெளிச்சிறைச்சாலைக்குள் மாற்றப்பட்டிருக்கின்ற முன்னாள் போராளிகளின் விடுதலை எப்போது?[/size]

[size=4]-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்[/size]

http://tamilleader.com/mukiaya/6809-2012-10-13-20-04-41.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.