Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

சலசலப்புச்செய்தியோ தெரியவில்லை..

ஐபிஸி வானொலியில் சொல்லத்தொடங்கிய நேரத்திலிருந்து எல்லாத்தளங்களும் தேடியும் எந்தத்தடயமும் கிடைக்கவில்லை.. சிறிதுநேரத்துக்கு முன்னம்தான் இணைத்திருக்கிறார்கள்.. உறவுப்பாலச்செய்தியில் பெயர்கூட ஏதோ சொன்னார்கள்.. எதுவாயினும் ஆதாரபூர்வமான செய்தி வெளிவரும்வரை பொறுத்துப்பார்ப்போம்..

:lol: :P :D

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply

என்ன வீரகேசரி இப்பிடிப் பொய் சொல்லுது ஜீ.ஜீ க்குப் பிறகு ஒருத்தரும் அதிகாரத்தையும் கையிலை எடுக்கேலை அபிவிருத்தியும் செய்யேலை எண்டு

இலங்கையின் சர்வ வல்லமை பொருந்திய சனாதிபதிக்கு அடுத்தபடியான பதவி வடக்குக் கிழக்கு புனர் வாழ்வு புனரமைச்சுத் தானே அது உவன் தம்பி டக்ளஸிட்டை வரேல்லையோ

அவன் வந்து யாழ்ப்பாணத்திலை எத்தினை அபிவிருத்தியை பண்ணினவன்

தன்ரை கட்சியின்ர பிரதேச சபைக்குள்ளை வந்த குச்சொழுங்கை எல்லாத்தையும் தார் ரோட்டாக்கினான் சனம் போர வற வயல் வரம்புகளிலை இருந்த கானுக்கெல்லாம் மதகு கட்டிக் குடுத்தான்

அவன் மட்டும் இல்லையெண்டா மாநகர பிரதேச சபையெல்லம் இருந்த இடம் புல்லு முளைத்துப் போயிருக்கும் என்ன சுதியான கட்டிடங்கள் கட்டினவன் அனியாயமாய் இத்துப் போய் இருந்த சிறீதர் தியேட்டரை வெளிநாட்டுத் தூதுவர் வந்து போற ரேஞ்சுக்கு மாத்தினவனெல்லோ

முந்தித் தாங்கள் தங்கம் தேடி இடித்த கோயிலெல்லாத்தையும் திருப்பிக் கட்டுறதுக்கு காசு குடுத்த தங்கப்பவுண் தீவு மக்களை யாழ்ப் பாணத்தர் அடிமைப் படுத்துறதா ஒரு பேருண்மையைக் கண்டுபிடிச்ச ஐன்ஸ்டீன்

இவனை கணக்கிலை எடுக்கேலை வீரகேசரி வர வர வீரகேசரியிலையும் மாத்துக் கருத்தெண்டது இல்லாமல் போச்சுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சலசலப்புச்செய்தியோ தெரியவில்லை..

ஐபிஸி வானொலியில் சொல்லத்தொடங்கிய நேரத்திலிருந்து எல்லாத்தளங்களும் தேடியும் எந்தத்தடயமும் கிடைக்கவில்லை.. சிறிதுநேரத்துக்கு முன்னம்தான் இணைத்திருக்கிறார்கள்.. உறவுப்பாலச்செய்தியில் பெயர்கூட ஏதோ சொன்னார்கள்.. எதுவாயினும் ஆதாரபூர்வமான செய்தி வெளிவரும்வரை பொறுத்துப்பார்ப்போம்..

:lol: :P :D

ம்ம் இது சலசலப்புச் செய்தி போலத் தெரியவில்லை புதினத்தில் போரளி பெயர் செஞ்சுடர் என்றும் வந்திருக்கிறது

அவன் சொன்னான் ஊடகங்கள் சொல்லினம் என்று அனாமதேய செய்திகளை வெளியிடும் தாத்தா

இப்படியான செய்திகள் வரும் போது மட்டும் ஆதாரத்துடனான செய்தி வரட்டும் என்பதன் காரணம் என்னவோ

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தொடரும்: மதிமுக தேர்தல் அறிக்கை

ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு மதிமுகவின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும். இதற்கு எந்தத் தடை வந்தாலும் அதைக் கண்டு பயப்பட மாட்டோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அக் கட்சியின் அறிக்கையை கோவையில் வைகோ வெளியிட அதை திருப்பூர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய பகுதிகள்:

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல, தெற்காசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான தனது நிலையை இந்தியா மாற்றிக் கொள்ளவேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியாவும் முக்கியப் பங்களிக்க வேண்டும்.

இலங்கைக்கு சம்பந்தமே இல்லாத பல நாடுகள் இலங்கையில் காலூன்ற நினைக்கின்றன. எனவே தனது சொந்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டாவது, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.

சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற இலங்கை முட்டுக் கட்டை போட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்ற மதிமுக பாடுபடும்.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களால் மீன் பிடிக்க முடியாத நிலை உள்ளது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர். எனவே கச்சத்தீவை மீண்டும் இந்தியாவே கைவசப்படுத்த மத்திய அரசை வற்புறுத்துவோம்.

மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை நீக்க வேண்டும், தமிழை மத்தியில் ஆட்சி மொழியாகவும், செம்மொழியாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

பாஜகஅதிமுக சதி: வைகோ

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், திராவிட இயக்கங்களை அழிக்க பாரதீய ஜனதாக் கட்சி திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதற்கு அதிமுக உதவுகிறது.

தமிழகத்தில் பலமாக காலூன்றும் வகையில் பா.ஜ.கவினர் செயல்படுகிறார்கள். பலம் பெற்ற பின்னர் திராவிட இயக்கங்கள் அத்தனையையும் வேரோடு அழிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அதிமுகவும் உடந்தை. இவர்களை ஒருங்கிணைக்கும் சக்தி எது என்பது மக்களுக்கே தெரியும். (காஞ்சி மடத்தை வைகோ மறைமுகமாகக் குறிப்பிட்டார்)

அதிமுக அரசு மதமாற்றத்தைத் தடை செய்துள்ளது. அதேபோல ஆடு, கோழி பலியிட தடை விதித்தது. பின்னர் தேர்தலுக்காக அதை நீக்கியுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அதை அமல்படுத்துவார்கள்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் நாட்டையே அது பிளவுபடுத்தி விடும். தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியாவில் சிறுபான்மையினராக வாழும் இந்தியர்களுக்கு அது பெரும் ஆபத்தாக முடியும்.

1947ம் ஆண்டுக்கு முன்பு இருந்த முக்கிய கட்டடங்களை தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவிப்பது ஒன்றுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்றார் வைகோ.

thatstamil.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில விடயங்களுக்கு மறதி தான் மருந்து பல விடயங்களில் அது உதவாது ம்ம் ஏற்றுக் கொள்கிறேன்

  • தொடங்கியவர்

இதைபற்றி வேறு ஏதாவது செய்திகள் கிடைத்தால் தாருங்கள்.

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

:D :P :D

சில விடயங்களுக்கு மறதி தான் மருந்து பல விடயங்களில் அது உதவாது ம்ம் ஏற்றுக் கொள்கிறேன்

இந்த செய்தி வந்து இவ்வள்வு நேரமாகியும் புலிகளின் ஊடகங்களிலோ அல்லது மற்ற ஊடகங்களிலோ ஒன்றுமே சொல்லப்படவில்லை. அதுதான் ஏன் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையிலேயே அவரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோ அல்லது போட்டுத் தள்ளிவிட்டு கட்டிய கதையோ யாரறிவார்?

இந்த செய்தி வந்து இவ்வள்வு நேரமாகியும் புலிகளின் ஊடகங்களிலோ அல்லது மற்ற ஊடகங்களிலோ ஒன்றுமே சொல்லப்படவில்லை. அதுதான் ஏன் என்று தெரியவில்லை.

இதைத்தான் Mind Games என ஆங்கிலத்தில் அழகாக சொல்லுவார்கள்.. இவர்களை மேற்கோள் காட்டி அவர்கள் செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

:?: :idea: :arrow:

  • தொடங்கியவர்

இதைத்தான் Mind Games என ஆங்கிலத்தில் அழகாக சொல்லுவார்கள்.. இவர்களை மேற்கோள் காட்டி அவர்கள் செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

:?: :idea: :arrow:

ஓ அப்படியா. புதினத்தை மேற்கோள் காட்டித்தான் தமிழ் நாதத்தில் வந்துள்ளதை பார்த்தேன்.

  • தொடங்கியவர்

இது உண்மையிலேயே அவரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியோ அல்லது போட்டுத் தள்ளிவிட்டு கட்டிய கதையோ யாரறிவார்?

யார் கட்டிய கதை எங்கின்றீர்கள் கருணா தரப்பா? அப்படி என்றால் ஐபிசியில் எப்படி வந்தது?

யார் கட்டிய கதை எங்கின்றீர்கள் கருணா தரப்பா? அப்படி என்றால் ஐபிசியில் எப்படி வந்தது?

எவரும் எவரையும் போட்டதாக தெரியவில்லை..

இனியென்ன இவரை அவரை மேற்கோள்காட்டி எல்லா தளங்களிலும் செய்தி வரும்.. சிங்கள ஆங்கில இந்தியப்பத்திரிகைகள்தான் பாக்கி..

இவர்களை மேற்கோள்காட்டி அவர்கள் செய்தி வெளியிட ..

இதுதான் நம்ம உலகம்.

:lol: :P :D

ஒண்டு மட்டும் விளங்குது துப்பாக்கிகள் வெடிக்கத் தொடங்கிட்டதெண்டது....எங்கை போய் முடியப் போகுதோ.....!

:evil: :twisted: :?: :!:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் கட்டிய கதை எங்கின்றீர்கள் கருணா தரப்பா? அப்படி என்றால் ஐபிசியில் எப்படி வந்தது?

எனக்கும் தெரியாது அப்பிடியும் இருக்கலாம் என்றொரு கோணத்தில் யோசித்ததை சொன்னேன்

கருணா பிடிக்காதவரை சுட்டுவிட்டு தன்னை தாக்க முயற்சித்தார் சுட்டேன் என்று சொல்லியிருக்கலாம் அதனை ஐ.பி.சி வெளியிட்டிருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவரும் எவரையும் போட்டதாக தெரியவில்லை..

இனியென்ன இவரை அவரை மேற்கோள்காட்டி எல்லா தளங்களிலும் செய்தி வரும்.. சிங்கள ஆங்கில இந்தியப்பத்திரிகைகள்தான் பாக்கி..

இவர்களை மேற்கோள்காட்டி அவர்கள் செய்தி வெளியிட ..

இதுதான் நம்ம உலகம்.

:lol: :P :D

என்ன தாத்தா சக்தி தொலைக்காட்சியையும் தமிழலையையும் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு வந்த நீங்களே இப்படி அலுத்துக் கொண்டால்

12 வயதுச் சிறுமி ஈ.பி.டி.பி உறுப்பினரால் பாலியல் வல்லுறவு

நேற்று மதியம் கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைச் சேர்ந்த பன்னிரண்டு வயதுச் சிறுமியான அலிஸ்ரன் ரேமன் அஐந்தினி, கரம்பொன் சிறிய புஷ்பம் மகளிர் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் வழியில் அருகிலிருந்த பற்றைக்காட்டிற்குள் இழுத்துச் செல்லப்பட்டு ஊர்காவற்துறை முகாமைச் சேர்ந்த ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என்பவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த ஊரவரும், உறவினர்களும் ஊர்காவற்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அஐந்தினியின் தந்தை ரேமனை காவல்துறையில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறும்படியும் அல்லது பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்றும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி முக்கியஸ்தருமான மதனராஐனால் சிறுமியின் பெற்றோர் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இச்சம்பவம் இப்பகுதி மக்களின் மனவுணர்வுகளில் பெரும் பாதிப்பையும் கோபாவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அட அங்கையும் பிரேமானந்தாக்களா...இரண்டும் 'ஆனந்தா' கும்பல் ஆச்சே....! :roll:

பெண்ணியமே.... எனும் மாயையே நீ எங்கே...உன் கூச்சல் என்னவாச்சு...மேடையோடும் காஞ்சிபுரத்தோடும் மகளிர் அமைப்பு அறிக்கைகளோடும் புகழ்தேடலோடும் அடங்கிப் போயாச்சா....????! அந்தப் பிஞ்சுக்கு நடந்ததை நீ கண்டுகொள்ள மாட்டாயே...ரூபவாகினியில் பேட்டி கொடுத்த போது மூஞ்சியே சொன்னது தாடியவன் வால்பிடிக்கும் செல்வியின் குணம்...! :P

மூலச் செய்தி...நன்றி புதினம்...!

கருத்தின் ஏளத்தன்மை காரணமாக கருத்து நீக்கப்பட்டள்ளது - மோகன்

  • தொடங்கியவர்

எனக்கும் தெரியாது அப்பிடியும் இருக்கலாம் என்றொரு கோணத்தில் யோசித்ததை சொன்னேன்

கருணா பிடிக்காதவரை சுட்டுவிட்டு தன்னை தாக்க முயற்சித்தார் சுட்டேன் என்று சொல்லியிருக்கலாம் அதனை ஐ.பி.சி வெளியிட்டிருக்கலாம்

இருக்கலாம் ஆனால் அந்த செய்தி கருணா ஆதரவுதளங்கள் ஒன்றிலும் வெளிடப்படவில்லை. ஐபிசிதான் வெளியிட்டிருக்கின்றது. அப்படியானால் ஐபிசிக்கு கருணாதரப்புடன் தகவல் தொடர்பு இருக்கின்றதா?

  • தொடங்கியவர்

12 வயதுச் சிறுமி ஈ.பி.டி.பி உறுப்பினரால் பாலியல் வல்லுறவு

நேற்று மதியம் கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைச் சேர்ந்த பன்னிரண்டு வயதுச் சிறுமியான அலிஸ்ரன் ரேமன் அஐந்தினி, கரம்பொன் சிறிய புஷ்பம் மகளிர் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் வழியில் அருகிலிருந்த பற்றைக்காட்டிற்குள் இழுத்துச் செல்லப்பட்டு ஊர்காவற்துறை முகாமைச் சேர்ந்த ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என்பவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த ஊரவரும், உறவினர்களும் ஊர்காவற்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அஐந்தினியின் தந்தை ரேமனை காவல்துறையில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறும்படியும் அல்லது பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என்றும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி முக்கியஸ்தருமான மதனராஐனால் சிறுமியின் பெற்றோர் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இச்சம்பவம் இப்பகுதி மக்களின் மனவுணர்வுகளில் பெரும் பாதிப்பையும் கோபாவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அட அங்கையும் பிரேமானந்தாக்களா...இரண்டும் 'ஆனந்தா' கும்பல் ஆச்சே....! :roll:

பெண்ணியமே.... எனும் மாயையே நீ எங்கே...உன் கூச்சல் என்னவாச்சு...மேடையோடும் காஞ்சிபுரத்தோடும் மகளிர் அமைப்பு அறிக்கைகளோடும் புகழ்தேடலோடும் அடங்கிப் போயாச்சா....????! அந்தப் பிஞ்சுக்கு நடந்ததை நீ கண்டுகொள்ள மாட்டாயே...ரூபவாகினியில் பேட்டி கொடுத்த போது மூஞ்சியே சொன்னது தாடியவன் வால்பிடிக்கும் செல்வியின் குணம்...! :P

மூலச் செய்தி...நன்றி புதினம்...!

செய்தி உண்மையானால் நிச்சயமாக கிருமா கண்டிக்கப்படவேண்டிய தண்டிக்கப்படவேண்டிய ஒருவர்.

மற்றும் ஒரு செல்வி ஆதரிக்கின்றார் என்பதற்காக எல்லோரையு, குற்றம் சொல்ல முடியாது. ஆண்களையோ பெண்களையோ எதற்கும் ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்ல முடியாது.

செய்தியில் பெயர்விபரங்கள் உள்ளடங்களாக அனைத்தும் இருந்தும் செய்தியை நம்பத் தயங்குபவர்கள்...எப்படி அநாமதேயத் தளம்/தளங்களில் இருந்து பெறப்படும் தமிழ்தேசியத்துக்கு எதிரான செய்திகளை நம்பி எடுத்து வந்து இங்கே போடுகிறார்கள்....???! :roll:

அதுபோக ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்....! இங்கு கண்டனமோ அறிக்கையோ தண்டனையோ அந்தச் சிறுமியின் எதிர்காலத்தைச் செழிப்பாக்குமா...இவர்களை ஒழித்துக்கட்டுவதே மீண்டும் இவ்வாறான குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்க உதவும்.... அதைச் செய்வது யார்...மக்கள் தாம் செய்ய வேண்டும்...!

:twisted: :evil: :idea: :!:

  • தொடங்கியவர்

செய்தியில் பெயர்விபரங்கள் உள்ளடங்களாக அனைத்தும் இருந்தும் செய்தியை நம்பத் தயக்குபவர்கள்...எப்படி அநாமதேயத் தளம்/தளங்களில் இருந்து பெறப்படும் தமிழ்தேசியத்துக்கு எதிரான செய்திகளை நம்பி எடுத்து வந்து இங்கே போடுகிறார்கள்....???! :roll:

அந்த செய்தி வெளிவந்து இவ்வளவு நேரமாகியும் அது புலிகள் சார்பு ஊடகங்களிலோ, கருணா சார்பு ஊடகங்களிலோ, அரசாங்க ஊடகங்களிலோ இல்லை சர்வதேச ஊடகங்களிலோ வெளிவரவில்லை. அதனாலேயே கேட்டேன். மற்றும் நான் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளையே இங்கே போட்டேன். அவற்றை 100% உறுதிப்படுத்த என்னால் முடியாது, நாம் இரண்டு பக்க செய்திகளையும் படித்து புரிந்து கொள்ளவேண்டியது தான். இப்போது செய்தி நிறுவனங்கள் அவர்களுக்கு சார்பான செய்திகளையே தருவதால் இரண்டு பக்க செய்திகளையும் படிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

அதுபோக ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம்....! இங்கு கண்டனமோ அறிக்கையோ தண்டனையோ அந்தச் சிறுமியின் எதிர்காலத்தைச் செழிப்பாக்குமா...இவர்களை ஒழித்துக்கட்டுவதே மீண்டும் இவ்வாறான குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்க உதவும்.... அதைச் செய்வது யார்...மக்கள் தாம் செய்ய வேண்டும்...!

:twisted: :evil: :idea: :!:

கண்டனமோ அறிக்கையோ தண்டனையோ அந்தச் சிறுமியின் எதிர்காலத்தைச் செழிப்பாக்காது என்பது உண்மைதான். ஆனால் நம்மால் முடிந்தது அது தான். கருணா விடயத்தில் கூட கண்டனம், அறிக்கை எதற்காக வெளியிடப்படுகின்றது? மக்களுக்கு நிலைமையை புரியவைப்பதற்காக, அதேபோல்தான் அந்த சிறுமியின் விடயத்தில் நமது கருத்துக்களைதான் வெளியிட முடியும் படிக்கும் மக்கள் சரியானதை அலசி ஆராய்ந்து நீங்கள் சொன்ன மாதிரி தேவையற்றவர்களை புறக்கணிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

தன்னைச் சுடமுயன்ற போராளியை கருணா அம்மான் சுட்டுக் கொன்று விட்டார்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை போராளியொருவர் சுட்டுக் கொல்ல முற்பட்டதாகவும் எனினும் அவரை கருணா சுட்டுக் கொன்று விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் மட்டக்களப்பில் காட்டுப் பகுதியொன்றில், மேற்படிý துப்பாக்கிச் சூýட்டுச் சம்பவம் நடைபெற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாவின் நடவடிýக்கைகளால் ஆத்திரமடைந்த, அவரது சக உறுப்பினரான செஞ்சுடர் என்பவர் இவர் மீது துப்பாக்கிச் சூýட்டை நடத்தியதாகவும் எனினும் குறி தவறவே, கருணா அவரை சுட்டுக் கொன்று விட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவம் கருணா குழுவின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து கருணாவின் பாதுகாப்பு பல மடங்காக்கப்பட்டுள்ளதாகவும் கருணாவை எவருமே நெருங்க அனுமதிக்கப்படமாட்டார்களெனவ

  • தொடங்கியவர்

கருணா குழுவின் எச்சரிக்கையை அடுத்து ஜோசப்தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் எச்சரிக்கையை அடுத்து, தமிழ்த் தேசியக் கூ ட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கம் நேற்று வெள்ளிக்கிழமையுடன் தனது, தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தமிழினத்தின் தலைவர் எனவும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனவும் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்திற்காகவே தாங்கள் குரல் கொடுப்பதாகவும் குறுகிய பிரதேச வாதத்திற்கு எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜோசப் பரராஜசிங்கம் வலியுறுத்தி வந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா நீக்கப்பட்ட பின்னரும் அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததால், கருணா குழுவினர் ஜோசப் பரராஜசிங்கத்தை இது தொடர்பாக பல தடவைகள் எச்சரித்திருந்தனர்.

ஆனாலும், தனது மேற்படி, கோரிக்கைகளிலிருந்து தான் விலகப் போவதில்லை எனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டி யிடும் பெருமளவு வேட்பாளர்கள் தனது இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்கி வருவதையும் கருணா குழுவிடம் சுட்டிக் காட்டி யிருந்தார்.

இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஜோசப் பரராஜசிங்கத்துடன் தொடர்பு கொண்ட கருணா குழுவைச் சேர்ந்த துரை உடனடியாக தேர்தலிலிருந்து ஒதுங்க வேண்டுமெனவும், தேர்தல், பிரசாரத்தில் ஈடுபடக் கூ டாதெனவும் தங்கள் எச்சரிக்கையையும் மீறிச் செயற்பட முனைந்தால் மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்திருந்தார்.

ஆனாலும், தேர்தலிலிருந்து தான் ஒதுங்கப் போவதில்லை எனவும், தனது கோரிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவித்துள்ள ஜோசப் பரராஜசிங்கம் தற்போதைய நிலைமையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்காக தனது தேர்தல் பிரசாரங்களை உடனடி யாக நிறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜோசப் பரராஜசிங்கத்தை தேர்தலிலிருந்து ஒதுங்குமாறு கருணா குழுவினர், மிரட்டியதைக் கேள்வியுற்று நேற்று மாலை ஜோசப் பரராஜசிங்கத்தின் வீட்டில் திரண்ட நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் அவருக்கு தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்ததுடன், இந்தத் தேர்தலில் அவரை அதிகப் படியான வாக்குகளால் வெற்றி பெறச் செய்து மட்டக்களப்பில் பிரதேச வாதத்திற்கு இடமில்லையென்பதையும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், பிரபாகரனே தங்கள் தலைவன் என்பதையும் முழு உலகத்திற்கும் நிரூபிக்கப் போவதாகவும் கூ றியுள்ளனர்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

~ஆனந்தசங்கரி நீ அரசியல் வாதியா, அரசியல் வியாதியா?|

தந்தை செல்வாவுடன் சங்கரி கற்பனைச் சந்திப்பு

வாசகன் இரட்ணதுரை - கனடா

வீடியோவில் பாட்டுக் கசட்டைப் போட்டுப் பார்த்தபடி இருக்கிறார் ஆனந்தசங்கரி.. ரிவியில்; எம்.ஐpஆரின் படப்பாடல்கள். அதில் எம்.ஐp.ஆர் ~புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே| என்று பாடுகின்றார்.

சங்கரி: இதென்ன உதய சூரியன், புதிய சூரியனாய் மாறிப்போச்சு. எனக்கேதும் பிரமையோ?

செல்வா: நீ எத்தனை முறை உந்த விடியோக் கசட்டைப் போட்டுப் பார்த்தாலும் அதிலை ~புதிய சூரியனின் பார்வையிலே| என்றுதான் இருக்கும்.

சங்கரி: யாரது? எங்கையோ கேட்டகுரல், எங்கையோ பார்த்த ஞாபகமாய் இருக்கு!

செல்வா: தம்பி சங்கரி! அது நான்தான் செல்வநாயகம்.. தந்தை செல்வா!

சங்கரி: ஐயா! செல்வநாயகமய்யா நீங்களே..! மறந்துபோனன்.

செல்வா: நீ, உன்னைக் கூட்டணியின் தலைவராக்கினவையே மறந்துபோனாய். கட்சியை உருவாக்கிய என்னை மறக்கிறது பெரிய காரியமே? உதென்ன தேர்தல் நேரத்திலை படம் போட்டுப் பாத்துக்கொண்டிருக்கிறாய்?

சங்கரி: இது எம்.ஐp.ஆரின் பாட்டுக் கசட். முந்தி இந்தப் பாட்டைத்தானே நாங்கள் உதய சூரியனுக்குப் போட்டு வாக்குக் கேட்டனாங்கள். கனடாவிலை இருக்கிற கேம்றிஞ் கல்விமான் ப10டகக்காரர் இதை அனுப்பினவர், புலிகளுக்கு எதிராய் தேர்தலுக்குப் பயன்படுத்தச் சொல்லி. இப்ப இந்தப் பாட்டு மாறிப்போய் கிடக்கு. அதுதான் எப்படி மாறினது என்று தெரியல்லை.

செல்வா: நீ எத்தனை முறை உந்த விடியோக் கசற்றைப் போட்டுப் பார்த்தாலும் அதிலை ~புதிய சூரியனின் பார்வையிலே| என்றுதான் இருக்கும்.. உதய சூரியனின் பார்வையிலே என்று வராது.

சங்கரி: ஏன் ஐயா?

செல்வா: எட சங்கரி! எம்.ஐp,ஆர் எப்ப தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவை ஆரம்பித்தாரோ அன்றே தன்னுடைய பழைய படங்களில் இருந்த ~உதய சூரியன்| என்ற சொல்லை வெட்டி அவற்றில் ~புதிய சூரியன்| என்று மாத்திப்போட்டார். பழைய ஓடியோக் கசற்றில் அல்லது கிராமப்போன் தட்டில்தான் மாறாமல் இருக்கும். இதுகூட தெரியாதே!

சங்கரி: (மெதுவாக) எல்லாரும் எனக்கெதிராச் சதி செய்துபோட்டாங்கள். ஏன் இதற்கு கருணாநிதி நீதிமன்றில் இடைக்காலத் தடையுத்தரவு வாங்கேல்லையே?

செல்வா: (மெதுவாக) உன்னாலை நீதிமன்றில் இடைக்காலத் தடையைத்தான் வாங்க முடியும். இடைக்கால சபையை வாங்கமுடியுமே?

சங்கரி: புரியேல்;லை ஐயா?

செல்வா: தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளால் மட்டும்தான் இடைக்கால சபையை வாங்கமுடியும். மற்றவையாலை இடைக்காலத் தடையைத்தான் வாங்க முடியும்.

சங்கரி: ஏன் நாங்களும் மக்களின் பிரதிநிதிகள் இல்லையே? ஏன் ஐயா! என்னையும், டக்ளசையும் நாலு பேர் கூப்பிட்டுக் கதைக்கினம்தானே?

செல்வா: முட்டாள். அப்படிக் கூப்பிடுகிறவங்கள் யார்?

சங்கரி: இந்தியா, சந்திரிகா, ரணில், த ஐலண்ட் பத்திரிகை, ம்..ம்.. பிபிசி

செல்வா: இவையெல்லாம் தமிழர்களுக்கு எதிரான ஆட்கள். தமிழருக்குப் பிரதிநிதியாக உங்களைக் கூப்பிடேலை. தமிழருக்குப் பிரச்சினை குடுக்கக் கூம்பிடுகினம். உங்களை தமி;ழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகினமே தவிர உங்களைப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டல்ல.

சங்கரி: அப்ப என்ன, என்னைப் புலிக்கு வாலாயிருக்கச் சொல்லுறியலே? என்ரை ஐம்பது வருட அரசியல் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?

செல்வா: முட்டாள், ப10னைக்கு மீசையாக இருப்பதைவிட, புலிக்கு வாலாயிருப்பது மேல்.

சங்கரி: போட்டியென்று வந்துவிட்டால் புலியென்ன ப10னையென்ன?

செல்வா: சங்கரி! நீ இன்று போட்டி போடுறது புலியோடையோ, ப10னையோடோ, தமிழ்க் கூட்டமைப்போடையோ அல்ல.

சங்கரி: அப்ப?

செல்வா: உனக்கும் டக்ளசுக்கும் தான் இம்முறை நேரடிப் போட்டி என்று சொல்லுகினம்.

சங்கரி: ஓ! மகேஸ்வரனும் அங்கையில்லை. ஐக்கிய தேசிய கட்சியும், Nஐ.வி.பியும் இல்லை. புலிகளுக்கு எதிரான வாக்குகளை வாங்குறதிலை எங்கள் இருவருக்கும்தான் யாழ்ப்பாணத்தில் நேரடிப் போட்டி.

செல்வா: நான் நேரடிப் போட்டியென்று சொன்னது - யாழ்ப்பாணத்திலை தேர்தல் வாக்குகளைப் பெறுவதையல்ல.

சங்கரி: அப்ப ஐயா?

செல்வா: இந்தியாவையும், சந்திரிகாவையும் பந்தம் பிடிக்கிறதிலை உனக்கும் டக்களசுக்கும் தான் போட்டியென்று கதைக்கினம்.

சங்கரி: அப்படியில்லை ஐயா! இந்தியா என்னைத்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று ஏற்றுக்கொண்டிருக்கையா!

செல்வா: எதிலை துரோகம் செய்யிறதிலையோ, காட்டிக் கொடுகிறதிலையோ?

சங்கரி: ஐயா?

செல்வா: எட சங்கரி, என்னத்துக்கெல்லாம் ஏக பிரதிநிதி என்று சொல்லுறதென்டு ஒரு விவஸ்தையே இல்லையே? பிரதிநிதித்துவம் என்றால் என்னென்று நினைக்கிறாய்?

சங்கரி: நாலுபேர் நாலு வாக்குப் போட்டால் அவரும் ஒரு பிரதிநிதி. அவரும் ஒரு அரசியல்வாதி

செல்வா: நடக்கிறது உடம்புக்கு நல்லது. அதற்காக நித்திரையில் நடக்கிறது நல்லதே?

சங்கரி: அதெப்படி? அது வியாதியல்லோ!

செல்வா: அப்படித்தான் நீயும் - அரசியல்வியாதி. அரசியல்வாதியல்ல. எட கடவுளே நாலு சின்ன வீடிருந்தால், நாலுக்கு நாலு வாக்குகள் விழும்தானே! அதுக்காக நாலு சின்ன வீடுகள் வைத்திருக்கிறவர் எல்லாம் நாங்களும் அரசியல்வாதிகள், நாங்களும் தமிழ் மக்களின் பிரநிதிகள் என்று சொல்லுறதே?

சங்கரி: ஐயா நீங்கள் என்ன சொல்லுறியள்!

செல்வா: மக்களின் பிரதிநிதித்துவம் என்றது வாக்குப் போட்டு வாரேல்லை? அப்படியென்றால் ஏன் உங்களைக் கூப்பிட்டு சந்திரிகாவோ, ரணிலோ தமிழற்றை பிரச்சினை குறித்துக் கதைக்கேலை.

சங்கரி: அதுதானே?

செல்வா: மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லுறது - அந்த மக்களுக்காகச் செய்யிற தியாகத்தாலை வாறது. அரசாங்கத்துடன் போராடுகின்ற பலத்தால் வாறது. யாருக்கும் அடிபணியாத நெஞ்சுரத்தாலை வாறது. பேரம் பேசுற சக்தியாலை வாறது. மக்களுக்காக எதிரியோடை போராடிச் சாகுறதிற்கு அந்த மக்களின் பிரதிநிதியாக எவன் போறானோ அவன்தான் அந்த மக்களின் பிரதிநிதி.

சங்கரி: அப்ப நான் மக்களின் பிரதிநிதி அல்லவே!

செல்வா: நீ தமிழர்களுக்குப் பிரதிநிதி அல்ல பிடிச்ச சனி. இன்று தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினைகள் சொல்லு பார்ப்பம்?

சங்கரி: ம்..ம்.. பாதுகாப்பு, மற்றது.

செல்வா: பொறு பொறு. நீ இன்று யாரிட்டை இருந்து யாரை பாதுகாக்க வேணும்?

சங்கரி: இலங்கை அரச இராணுவத்திட்டை இருந்து தமிழரைப் பாதுகாக்க வேணும்.

செல்வா: நீயும் தமிழ்க் குழுக்களும் இன்று யாருடைய பாதுகாப்புலை யாழ்ப்பாணம் வந்திருக்கிறியள்?

சங்கரி: ஸ்ரீலங்கா இராணுவத்தினுடைய பாதுகாப்பிலை. வீட்டுக்கு வெளியிலை பாருங்கோ அவைதான் காவல் நிற்கினம்.

செல்வா: பார்த்தியே சங்கரி? ஸ்ரீலங்கா இராணுவத்தின் பாதுகாப்பில் உள்ள நீங்கள், எப்படி ஸ்ரீலங்கா இராணுவத்திடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பியள்? முதலிலை உங்களை நீங்கள் பாதுகாக்கத் தெரியவேணும். முதலிலை உன்னைப் பாதுகாக்கவே ஒரு பிரதிநிதி தேவைப்படுகுது. அதுக்குள்ள நீ தமிழரின் பிரதிநிதியென்று நினைக்கிறாய்!

சங்கரி: விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் பாதுகாப்பிலைதானே வெளிநாடுகளுக்கு அரசின் உலங்குவானு}ர்தியில் n;சல்லுகினம்.

செல்வா: முட்டாள் கள்ளனைப் பிடித்தாலும், சுற்றிப் பொலிஸ் காவலுடன் தான் கொண்டுபோவாங்கள். கவர்னர் போனாலும் சுற்றிப், பொலிஸ் காவலுடன்தான் போவார். இரண்டுபேரும் சமனே! இன்டைக்கு உனக்கு ஒண்டு நடந்தால் யாருக்குக் கெட்ட பெயர்.

சங்கரி: விடுதலைப் புலிகளுக்கு.

செல்வா: அப்ப உன்னை யார் இன்று பாதுகாக்க வேண்டும்?

சங்கரி: புலிகள். ஓ! சர்வதேச அரசியல் வாழ்க!

செல்வா: இப்படித்தான் ஸ்ரீலங்கா அரசுக்கும் - தங்களுக்கு எதிராக வெளிநாடு போய்க் கதைக்கிற புலிகளைப் பத்திரமாகக் கொண்டுபோய் பத்திரமாய்க் கொண்டுவந்து சேர்க்கவேண்டிய கஷ்டகாலம்.

சங்கரி: அதுக்காக நான் யாழ்ப்பாணம் போகாமல் நிற்கேலுமே?

செல்வா: நீ கடைசியாய் எப்ப யாழ். மாவட்டச் சனத்தைப் போய் பார்த்தாய் சங்கரி?

சங்கரி: போன எலக்சனுக்குப் போனனான். பிறகு யாழ் பொது நு}ல் நிலையம் திறக்கப் போறதென்டவுடனை போகப்பார்த்தன். ஆனால் திறக்கேல்லை. நான் போகேல்லை.

செல்வா: பார்த்தியே! அந்த மக்கள் உயர் பாதுகாப்பு வலயம், மீன்பிடித்தடை, நிவாரணவெட்டு, அகதிப்பிரச்சினை, பொங்குதமிழ், பசி பட்டினி என்றெல்லாம் போராடினபோது நீ அங்கை போகேல்லை. ஆனால், இப்ப யாழ் மாவட்டத்திலை தேர்தலிலை கூட்டமைப்பின் சார்பில் நிற்கிறவங்கள் யார்?

சங்கரி: இரண்டு பேர்தான் கூட்ணிக்காரர் மிச்சமெல்லாம் யாரோ?

செல்வா: இந்தப் போராட்ட காலத்தில் மக்களோடை கூட நின்றவை. நின்ற அமைப்புகள். அதிலும் அந்தப் பல்கலைக்கழகப் பெடியன் போர்நிறுத்த ;காலத்தில் - நீ உலாத்தித்திரிய - பேராட்டம் நடத்தி, பொலிசாராலை பிடிபட்டு அடிபட்ட பையன்;. இப்ப சொல்லு யார் அரசியல்வாதி, யார் அரசியல் வியாதி?

சங்கரி: ஐயா இது ரவிராஐ_ம் சம்பந்தரும் செய்த சதி, என்னை அவங்கள்தான் தனியா நிற்க வைச்சுட்டாங்கள்.

செல்வா: நீ இந்தியத் து}துவரையும், சந்திரிகாவையும் போய் சந்திக்கேக்கை அவங்களைக் கூட்டிக்கொண்டே போனனீ. தனியத்தானே போனனீ. அப்ப தனியாய்த்தான் நிற்கவேணும்.

சங்கரி: ஐயா நான் கூட்டணியின் தலைவராகத் தானே போனேன்?

செல்வா: உன்னை கூட்டணியின் தலைவராகத் தெரிவு செய்தது யார்? மக்களே?

சங்கரி: இல்லை. கூட்டணியின் செயற்குழு.

செல்வா: அந்தச் செயற்குழு உன் மீது நம்பிக்கையில்லையென்றால் நீ விலகவேண்டியதுதானே?

சங்கரி: ஐயா நீங்கள் தானே ஆயுட்கால தலைவர் என்று பதவியை எழுதிப்போட்டுப் போனீங்கள்.

செல்வா: வயதான காலத்திலை எனக்கிருந்த ஆயுள் கொஞ்சம். அதாலை எனக்குப் பிறகு, தான் பதவியை அனுபவிக்க அமிர்தலிங்கம் செய்த வேலையது. நான் விட்ட மிகப்பெரிய தவறு அது.

சங்கரி: அப்ப பார்த்தியலே? (இறுமாப்புடன்) எனது ஆயுள் இருக்கும்வரை நான் தான் கூட்டணியின் தலைவன்.

செல்வா: உண்மைதான் ஆயுள் இருக்கும்வரைதான். உனக்கு அமிர் போயும்.. சீ இவ்வளவு மயிர் போயும் மூளை வேலைசெய்யேல்லை.

சங்கரி: ஐயா நீங்கள் அப்ப சொன்னியள்தானே ~தமிழரை கடவுளாலையும் காப்பாற்ற முடியாது| என்று - அது இப்ப உண்மை ஐயா? என்னையே என்னால் காப்பாற்ற முடியவில்லை.

செல்வா: தமிழனை கடவுள் காப்பாற்ற முடியாது என்று நான் சொன்னது சிங்களவரிடமிருந்தல்ல. அதை மானமுள்ள ரோசமுள்ள தமிழன் பார்த்துக்கொள்வான். நான் கடவுளாலையும் தமிழனைக் காப்பாற்ற முடியாது என்று சொன்னது - உன்னை மாதிரி எட்டப்பர்களிடமிருந்து. நீ செய்யுற வேலை யாருக்கு லாபம்? தமிழருக்கோ, சிங்களவருக்கோ?

சங்கரி: ஐயா அது என்னுடைய மூளை. அரசியல் சாணக்கியம்.

செல்வா: எது இடைக்காலத் தடை உத்தரவு வாங்கியதோ?

சங்கரி: ஓமய்யா! எனக்கில்லாதது எவருக்கும் இல்லை. இதைவிட்டால் எனக்கு வாழ்க்கையே இல்லை!

செல்வா: எட உன்னிட்டை இருக்கிற பெரிய ஆயுதம் - சட்டம் - இடைக்காலத் தடை உத்தரவு. அதை நீ இந்தமுறை தேர்தலிலை கூட்டமைப்புக்கு எதிராய் பயன்படுத்திறாய். சரி. போன தேர்தலிலை டக்ளசிட்டை இருந்த பெரிய ஆயுதம் துவக்கும், பொல்லும். அதை அவன் பொடி, நெடுந்தீவிலை உங்களுக்கு எதிராய்த் தேர்தலிலை பயன்படுத்தியது மட்டும் - அப்ப என்ன தவறு. அதுவும் தேர்தல் சாணக்கியம்தானே?

சங்கரி: ஐயா! உதய சூரியன் கிடைக்காமல் செய்தது கெட்டித்தனமில்லையோ?

செல்வா: தமிழருக்கு உதய சூரியன் இல்லாமல் பண்ணலாம். அது அரசியல். மன்னிக்கலாம், ஆனால் நீங்கள் தமிழருக்கு விடியலே இல்லாமல் பண்ணப்பாக்கிறியள் அதுதான் தவறு.

சங்கரி: ஐயா! அப்ப நான் மீண்டும் தலையெடுக்கேலாதே?

செல்வா: எட சங்கரி! நீ தலையெடுக்க வேணும் என்று நினைக்கிறவங்கள் இப்ப உன்னுடைய தலையெடுக்க வேணும் என்றும் நினைக்கலாம்.

சங்கரி: என்னய்யா சொல்லுறியள். விளங்கேலை.

செல்வா: நீ தலையெடுத்து, அதாலை புலிகளுக்கு வாற நட்டத்தைவிட, உன் தலையெடுத்து, அதாலை புலிகளுக்குக் கெட்டபெயர் உண்டாக்கிறது அவங்களுக்கு லாபம். எதற்கும் கவனமாய் இரு.

சங்கரி: ஐயா அப்ப எனக்குப் பிரச்சினையோ?

செல்வா: தேர்தலையும், பிரச்சினையையும் வைத்தே சீவிக்கிறவங்கள் இருக்கிறாங்கள். பிரச்சினையிக்கை பிரச்சினையாய் சில பிரச்சினைகளை பிரச்சினையி;ல்லாமல் முடித்துப் போடுவாங்கள். (ஆலாலசுந்தரத்துடன் சேர்ந்து எனக்கும் அடுக்குமொழி வருகுது.)

சங்கரி: ஐயா என்ன சொல்லுறியள்? எனக்குப் பயமாயிருக்கு.

செல்வா: எதிரியின் எதிரி நண்பன் என்று நினைக்கிறது அந்தக்கால உள்ளுர் அரசியல், இப்ப எதிரியின் எதிரியைக் கொலைசெய்து எதிரிக்கு சர்வதேச மட்டத்திலை கெட்ட பெயரைக் கொண்டுவாறது இந்தக்கால சர்வதேச அரசியல். இப்ப தமிழரற்றை பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாய் போச்சு. புரிஞ்சால் சரி.

சங்கரி: ஐயா நான் இப்ப என்ன செய்யிறது? நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேணும்.

செல்வா: நீ அரசியல்வாதியாய் இருந்தால் காப்பாற்றலாம். ஆனால் நீ அரசியல் வியாதி. புலிகள் மூலம் தமிழ் மக்களைக் காக்கிற ஆண்டவன்தான் உன்னையும் காப்பாற்றவேண்டும்.

நன்றி: ஈழமுரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Batticaloa GA shot, wounded

[TamilNet, March 27, 2004 13:07 GMT]

Batticaloa government agent, Mr. Ratnam Mounagurusamy, was shot and wounded by unidentified gunmen near the eastern town Saturday evening around 6 p.m. Police said.

He was travelling in a car when the gunmen opened fire at Pillaiyaradi on the northern outskirts of Batticaloa town.

He was rushed to the intensive care unit of the Batticaloa hospital.

இனி கருணாவே நினைத்தாலும் இவற்றையெல்லாம் தடுக்க முடியாது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி என்பதை தவறாகப் புரிந்து கொண்டார்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.