Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பரேஷன் சக்ஸஸ்! ஆள் அவுட்!! கூட்டமைப்பின் இந்திய விஜயம் பற்றிய ஒரு பார்வை

Featured Replies

[size=4]"ஒப்பரேஷன் சக்ஸஸ்! ஆள் அவுட்!!" என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் அமைந்திருக்கின்றது. இந்தியப் பயணம் வெற்றிகரமாக அமைந்திருந்தது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.யும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள். பயணம் வெற்றி சரி தமிழ் மக்களுக்கு இதன் மூலம் என்ன பலன் கிடைத்தது எனக் கேட்டடால் சம்பந்தனும் சரி மற்றவர்களும் சரி பதிலளிக்கக்கூடியவர்களாக இல்லை.[/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது 3 நாள் புதுடில்லி விஜயத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக் கிழமை கொழும்பு திரும்பியுள்ள நிலையில், அவர்களுடைய விஜயத்தின் பலாபலன்களை ஆராயும் போது இந்தப் பதில்தான் கிடைக்கின்றது. வழமைபோலவே அரசியல் தீர்வு முயற்சிகளில் ஏற்பட்ட தோல்விகள், இராணுவ மயமாக்கல், சிங்களக் குடியேற்றம், மீள்குடியேற்றத்தில் காணப்படும் குளறுபடிகள் என வழமைபோலவே கூட்டமைப்பினர் பட்டியல் போட்டுக் காட்டியிருக்கின்றார்கள். [/size]

[size=4]இந்தியத் தரப்பினரும் கூட்டமைப்பினரின் இந்தத் தகவல்களை செவிமடுத்துள்ளார்கள். தேவையான தகவல்களைக் குறித்துக்கொண்டும் உள்ளார்கள். ஆனால், கூட்டமைப்பினரின் இந்த விஜயம் கள நிலைமையில் மாற்றம் எதனையும் உடனடியாக ஏற்படுத்தப்போவதில்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்வதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே கூட்டமைப்பினர் கொழும்பு திரும்புவதால் பேச்சுக்கள் உடனடியாக ஆரம்பமாகப்போவதில்லை. [/size]

[size=4]ஆனால், இலங்கை தொடர்பான தமது வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் ஒன்று அவசியம் என்பதை கூட்டமைப்பின் இந்த விஜயம் மீண்டும் ஒரு தடவை டில்லிக்கு தெளிவாக உணர்த்தியிருக்கின்றது. இது பல தடவை இந்தியாவுக்கு உணர்த்தப்பட்டுவிட்டது. [/size]

[size=4]இலங்கை அரசின் மீது இந்தியா கடும் வெறுப்படைந்திருக்கின்றது என்பதை டில்லி சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினருடன் இந்தியத் தலைவர்கள் மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சு அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சுக்களின்போது அறிந்துகொள்ள முடிந்தது. இலங்கை அரசாங்கத்தின் கடந்த காலச் செயற்பாடுகளே இந்த அதிருப்திக்கக் காரணமாக உள்ளது. அதற்காக இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் உடனடியாக மாற்றம் ஒன்று ஏற்பட்டுவிடும் என எதிர்பார்க்க முடியாது. இந்தியா சில மாற்றங்களை வேண்டிநிற்கின்றது என்பதை இது தெளிவாக்கியிருக்கின்றது. [/size]

[size=4]இலங்கை மீது தாம் பெரும் அதிருப்தியடைந்திருப்பதை இந்தியத் தரப்பினர் வெளிப்படையாகவே தெரியப்படுத்தியிருப்பது இதுதான் முதல் முறை. இந்தியாவை அவமதிக்கும் வகையில் கொழும்பின் பல்வேறு செயற்பாடுகளும் கடந்த காலங்களில் அமைந்திருந்த போதிலும்கூட, டில்லி பெருமளவுக்கு ளெனமாகவே இருந்தது. கொழும்பை வழிக்குக் கொண்டுவர முனைவது அது மேலும் சீனாவின் பக்கத்துக்குச் சென்றுவிடுவதற்கு வழவகுத்துவிடும் என டில்லி அஞ்சியமைதான் இதற்கக் காரணம். [/size]

[size=4]இருந்தபோதிலும், "பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது" என இந்திய வெளிவிவகார அமைச்சரின் வாயிலிருந்து வந்திருக்கும் வார்த்தைகள் கவனிக்கப்படவேண்டியவை! [/size]

[size=4]இந்தியப் பிரதமரும் "இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கென்று தனித்துவம் உண்டு. அதை இந்தியாவும் மதிக்கிறது. அவர்களுடைய வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்க வேண்டும். அதனைத் தான் நாமும் விரும்புகிறோம். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்திய அரசும் இணைந்து செயற்படவேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரியப்படுத்தியிருக்கின்றார். [/size]

[size=4]கூட்டமைப்பினரின் இந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு கூட்டமைப்பினருக்கு புதுடில்லி அழுத்தம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புக்கு இரண்டு காரணங்கள் காணப்பட்டன. [/size]

[size=4]ஒன்று - கடந்த மாதம் புதுடில்லி சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்கான பேச்சுவார்த்தைச் செயன்முறையைக் கொண்டு செல்வதற்காக இன்றுள்ள ஒரேயொரு பொறிமுறை பாராளுமன்றத் தெரிவுக்குழுதான் எனக் கூறியிருந்தார். அதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறியிருந்தார். அதனால், கூட்டமைப்பு அதில் பங்குகொள்வதன் மூலமாகவே சமாதான செயன்முறையை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் இந்தியாவுக்கு சுட்டிக்காட்டியிருந்தார். [/size]

[size=4]இதனைவிட பேச்சுவார்த்தை செயன்முறை ஒன்றில் கூட்டமைப்பு சம்பந்தப்பட்டிக்க வேண்டும் எனவும் இந்தியா எதிர்பார்த்தது. அதன் மூலமாகவே சமாதான முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்குள்ள ஒரே வழி பாராளுமன்றத் தெரிவுக்குழுதான். இதனால்தான் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவக்குழுவுக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.[/size]

[size=4]இதனை கூட்டமைப்பும் எதிர்பார்த்தே சென்றிருந்தது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் செல்வதால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் தொடர்பாக கூட்டமைப்பு இந்தியத் தரப்பினருக்குத் தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருந்தது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அதிகாரப் பரவலாக்கலை வழங்கும் விருப்பம் கொஞ்சம் கூட அதனிடம் இல்லை என்பதை இந்தியத் தரப்பக்குத் தெளிவுபடுத்திய கூட்டமைப்பினர், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரைக் கருத்திற்கொண்டு சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சிதான் இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பதையும் விளக்கியதாகத் தெரிகின்றது. [/size]

[size=4]அதேவேளையில் பாராளுமன்றத் தெரிவக்குழுவில் அரச தரப்பினரே பெரும்பான்மையாக உள்ளனர். கூட்டமைப்புக்கு இரண்டு இடங்கள்தான் கிடைக்கலாம். இதில் பெரும்பான்மையாக இடம்பெற்றுள்ள சிங்கள தேசியவாதக் கட்சிகள் நியாயமான தீர்வொன்றுக்கு வழிவகுக்ப்போவதில்லை என்பதையும் கூட்டமைப்பினர் விளக்கியுள்ளார்கள். இதனால் இது காலத்தைக் கடத்துவதற்கான ஒரு உபாயமாக மட்டுமே மகிந்த அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படும் என்பதையும் கூட்டமைப்பினர் விளக்கினார்கள். [/size]

[size=4]இந்தப் பின்னணியில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்லவேண்டும் என்பதற்கான அழுத்தங்கள் எதுவும் இந்தியத் தரப்பிலிருந்து வரவில்லை. இந்த கார்ட்டை இந்தியத் தரப்பு தயாராக வைத்திருந்த போதிலும், கூட்டமைப்பினரின் முன்ஜாக்கிரதையான நடவடிக்கையால் இந்தச் சீட்டை இந்தியத் தரப்பு பயன்படுத்தவில்லை.[/size]

[size=4]அதேவேளையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரை இலக்காக வைத்து இந்தியா காய்நகர்த்தல்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிகின்றது. கடந்த மார்ச் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிர்ப்பந்தங்களே இந்தியாவின் இந்த முடிவுக்குக் காரணமாக இருந்தது. இருந்தபோதிலும் பிரேரணையின் வீரியத்தைக் குறைக்கும் வகையிலேயே தாம் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டதாக புதுடில்லி கொடுத்த விளக்கத்தை கொழும்பு ஏற்றுக்கொள்ளளத் தயாராகவிருக்கவில்லை. [/size]

[size=4]அடுத்த ஜெனீவா கூட்டத் தொடர் பற்றி கூட்டமைப்பினர் பிரஸ்தாபித்த போது காலம் வரும் போது இந்தியா உரிய நடவடிக்கையை எடுக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாகத் தெரிகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மகிந்த மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இன்று அதற்குள்ள ஒரே வழி ஜெனீவாதான். [/size]

[size=4]சமாதான முயற்சிகள், மீள்குடியேற்றம் போன்றவை தொடர்பாகவும் இந்தியாவுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகள் எதனையும் காப்பாற்ற வேண்டும் என்று கொழும்பு கருதிச்செயற்படவில்லை. இதற்கு மேலாக சீனா பாக்கிஸ்தான் என்பன இலங்கையில் பெற்றுவரும் முக்கியத்துவமும் இந்தியாவுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனைவிட தமிழகத்தில் காணப்படும் கொந்தளிப்பான நிலைமையும் கடுமையான நிலைப்பாடு ஒன்றை வெளிப்படுத்த வேண்டிய தேவையை டில்லிக்கு ஏற்படுத்தியிருக்கலாம். [/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டப்பினருடனான பேச்சுக்களின் போது இந்தியத் தரப்பினர் இலங்கை தொடர்பாக வெளிப்படுத்திய வெறுப்புணர்வுக்கு இவைதான் காரணம். தமது கடந்தகால அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை புதுடில்லி உணரத் தொடங்கியிருப்பதை "பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு" என்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவின் கூற்று உணர்த்துகின்றது. இதன்மூலம் கொழும்புக்கு ஒரு செய்தியைக் கொடுப்பதற்கு கிருஷ்ணா முற்பட்டிருக்கின்றார். [/size]

[size=4]இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைக் கொடுக்கலாம் என்பது யதார்த்தமாக இருந்தாலும், இந்தியா தமது நலன்களைத்தான் முன்னிலைப்படுத்தும்! தமிழர்களின் நலன்கள் இந்தியாவுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் பட்சம்தான். சீனா விவகாரத்தில் இந்தியாவுக்கு சில விட்டுக்கொடுப்புக்களை மகிந்த செய்தால் இந்தியாவின் சீற்றம் பெருமளவுக்குத் தணிந்துவிடும். எதனைக்கொடுத்து எதனைப் பெற வேண்டும் என்பது மகிந்தவுக்குத் தெரிந்ததுதான். [/size]

[size=4]மகிந்த மீது இந்தியா சீற்றமடைந்திருக்கின்றது என்பதற்காக அது தமிழர்களுக்கு உரிமைகளைக் கொடுக்காமையால்தான் என நாம் கருதிவிட முடியாது. பிராந்திய ரீதியாக இந்தியாவுக்கு வேறு பல பிரச்சினைகளும் உள்ளன. அது மகிந்தவுக்கு நன்கு தெரியும்![/size]

[size=4]கூட்டமைப்பினர் தமது டில்லி விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளனர். கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் கள நிலைமையில் மாற்றம் ஒன்றை உடனடியாக ஏற்படுத்தப்போவதில்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்வதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே கூட்டமைப்பினர் கொழும்பு திரும்புவதால் பேச்சுக்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவும்போவதில்லை. [/size]

[size=4]இந்த விஜயம் பெரும் வெற்றி என கூட்டமைப்பினர் ஆர்ப்பரிப்பதைக் காண முடிகின்றது. இது பெரும் வெற்றி என்றால் இதன் மூலம் அவல வாழ்வு வாழும் தமிழ் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகின்றது. தமிழர்களுக்கு எந்தப் பலனையும் தராத விஜயத்தை பெரும் வெற்றி என கூட்டமைப்பினர் சொல்லிக்கொள்வதன் அர்த்தம் என்ன?[/size]

[size=4]- தமிழ் லீடருக்காக கொழும்பிலிருந்து பார்த்தீபன்.[/size]

http://tamilleader.com/prathanaalias/6820-2012-10-14-07-51-00.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.