Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருக்கிறது: சுரேஷ் எம்.பி

Featured Replies

[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொண்ட அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அதன் செயற்பாடுகளை இந்த பிரச்சினை பாதிக்காது என்றும் கூறினார்.

கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருக்கத்தான் செய்கின்றது. இதை தீர்ப்பதற்கான கருத்தாடல்கள் நடந்து கொண்டுள்ளன';. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வது பற்றிய பிரச்சினையே இருக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்ற கருத்து இருந்தே வந்துள்ளது. ஆனால், இதிலுள்ள அங்கத்துவ கட்சிகள் சில தயக்கம் காட்டுகின்றன' எது எப்படியிருந்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தமிழ் மக்களை ஒரே குரலில் பிரதிநிதித்துவம் செய்யும். இது எமது நோக்கத்திற்கு தடையாக இருக்காது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்கும் எமது இலக்கு மாறாது' என்றார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/51342-2012-10-26-12-16-20.html

  • தொடங்கியவர்

[size=6]கலந்துரையாடல் இணக்கபாடின்றி முடிவு[/size]

[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் நோக்குடன் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடல் இணக்கமின்றி நிறைவடைந்துள்ளது.[/size]

[size=4]கூட்டமைப்பு பதிவு தொடர்பில் தொடர்ந்தும் பேசலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர் சம்பந்தன் கலந்துரையாடலின் இறுதியில் தெரிவித்தார்.[/size]

[size=4]எனினும், அதற்கான உறுதியான திகதி அறிவிக்கப்படவில்லை.[/size]

[size=4]அதேநேரம், தமிழரசு கட்சியை தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளும் இதற்கு எவ்வித பதில்களையும் வழங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size]

[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம், சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் வீ ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன.[/size]

[size=4]இதற்கு அப்பால், வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜ பெருமாள் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்நாபா அணியும் ஏனைய சிறிய தமிழ் கட்சிகளும் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விருப்பம் வெளியிட்டுள்ளன.[/size]

[size=4]இந்தநிலையில், நேற்றிடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அந்த கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசு கட்சிக்கு விருப்பம் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.[/size]

[size=4]எனினும், கூட்டமைப்பு கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளலாம் என்ற கருத்தை தமிழரசு கட்சி தெரிவித்தது.[/size]

[size=4]தமிழரசு கட்சியின் இந்த நிலைப்பாட்டை ஏனைய கூட்டமைப்பு கட்சிகள் ஏற்று கொள்ளவில்லை.[/size]

[size=4]அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்;பு புதுடில்கி சென்ற போது தமிழர் விடுதலை கூட்டணியையும், தமிழீழ மக்கள் விடுதலை கழககத்தையும் இணைத்து கொள்ளமை தொடர்பாகவும் நேற்றைய கலந்துரையாடலில் அதிருப்தி வெளியிடப்பட்டது.[/size]

[size=4]இதன்போது, தமிழரசு கட்சியின் சார்பில் நியாயங்கள் முன்வைக்கப்பட்டன.[/size]

[size=4]எனினும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் என்ற வகையில் கூட்டத்திற்கு முன்னரோ அல்லது பின்னரே புதுடில்கி பயணம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.[/size]

[size=4]இந்தநிலையில், கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான உறுதியான நிலைப்பாடுகள் இன்றி நேற்றைய கலந்துரையாடல் நிறைவடைந்தது.[/size]

[size=4]இது தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது குரல் பதிவுகளை பெற்று கொள்வதற்காக எமது செய்தி சேவை முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.[/size]

http://www.hirunews.lk/tamil/46236

[size=5]ஒரு கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் இருப்பது வழமை - இது ஒரு பிரச்சினை அல்ல.

முக்கியமான விடயங்கள்:

(1) கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தலைமைத்துவம் 3 வருடங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாவை, கஜேந்திரகுமார், சுரேஷ் போன்றவர்கள் மத்தில் இருக்கும் வகையிலும், 10 வருடங்களில் இதை மீளாய்வு செய்யும் வகையில் வரைபுகள் அமைக்கப்பட வேண்டும்.

(2) தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுக்காமல் சம்பந்தன் உட்பட கடைந்தெடுத்த அரைவேக்காடுகளை பெரும்பான்மையாக கொண்ட தங்கள் கட்சிக்கு முன்னுரிமை கொடுத்தால் விரைவில் முற்றாக ஓரம் கட்டப்படும் நிலை ஏற்படலாம்.

(3) பதிவு செய்யப்படும் கூட்டமைப்பில் சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார். செல்வம், சுரேஷ் தவிர ஏனைய கட்சி (அல்லது உறுப்பினர்கள்) சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

* முதலாவது சித்தார்த்தன்: இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன என்பதை அறிக்கையாக சமர்ப்பிபதுடன், தமிழின விரோத சக்திகளுடன் (இந்திய, சிங்கள அரச, புலனாய்வு பயங்கரவாதிகள் உட்பட) இனி எந்த தொடர்பும் வைப்பதில்லை என்ற உறுதிமொழியை வழங்க வேண்டும். சிவராம் உட்பட பல தமிழின விரோத கொலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும். இதை மீறினால், முன்னர் போல் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு விரோதமாக செயற்பட்டால் உடனடியாக கூட்டமைப்பிலிருந்தும், அரசியலிலிருந்தும் விலகுவதாக சத்தியக் கடதாசி உட்பட ஆவணங்களை முன்னரே கையளிக்க வேண்டும் (ஏனெனில் இவர்கள் இதுவரை நம்பும்படி நடக்கவில்லை). முக்கியமாக அடுத்த 4 வருடங்கள் (நன்னடத்தைக் காலம்) எந்த பொறுப்பும், பதவியும், பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதித்துவமும், வேட்பாளர் பங்கும் கேட்க மாட்டோம், ஆனால் நிர்வாககுழு ஒதுக்கும் வேலைகளை முழு மனதுடன் செய்வோம் என்ற உறுதி மொழியை வழங்க வேண்டும். கூட்டமைப்பு மட்டத்திலான குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும், கருத்து முன்வைக்கும் முதலிய சகல உரிமைகளும் நிபந்தனையின்றி இருக்கும்.

* அடுத்தது ஆனந்தசங்கரி: இவர் இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன என்பதை அறிக்கையாக சமர்ப்பிபதுடன், தமிழின விரோத சக்திகளுடன் (இந்திய, சிங்கள அரச, புலனாய்வு பயங்கரவாதிகள் உட்பட) இனி எந்த தொடர்பும் வைப்பதில்லை என்ற உறுதிமொழியை வழங்க வேண்டும். இதை மீறினால், முன்னர் போல் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு விரோதமாக செயற்பட்டால் உடனடியாக கூட்டமைப்பிலிருந்தும், அரசியலிலிருந்தும் விலகுவதாக சத்தியக் கடதாசி உட்பட ஆவணங்களை முன்னரே கையளிக்க வேண்டும் (ஏனெனில் இவர்கள் இதுவரை நம்பும்படி நடக்கவில்லை). முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணியை முற்றாக கலைக்க வேண்டும். முக்கியமாக அடுத்த 6 வருடங்கள் (நன்னடத்தைக் காலம்) எந்த பொறுப்பும், பதவியும், பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதித்துவமும், வேட்பாளர் பங்கும் கேட்க மாட்டேன் என்ற உறுதி மொழியை வழங்க வேண்டும். கூட்டமைப்பு மட்டத்திலான குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும், கருத்து முன்வைக்கும் முதலிய சகல உரிமைகளும் நிபந்தனையின்றி இருக்கும்.

* அடுத்தது பத்மநாபா குழுவினர் சுரேஷுடன் இணைந்து கொள்ளலாம். இவர்கள் கூட்டமைப்பில் நேரடியாக இணையும் எந்தத் தகுதிகளையும் கொண்டிருக்கவில்லை.

* அடுத்தது இந்திய அரசியல்வாதிகளுடன் இணைந்து தமிழின விரோத செயற்பாடுகளைச் செய்த வரதராஜ பெருமாள் கும்பல் கூட்டமைப்பில் இணையும் எந்தத் தகுதிகளையும் கொண்டிருக்கவில்லை.

* அடுத்தது ஏனைய சிறு கட்சிகள், முதலில் கட்சிகளை முற்றாக கலைத்த பின்னர் சில வருடங்களின் பின்னர் உறுப்பினர்களாக சேரலாம்.

எது எப்படி இருந்தாலும், இவர்கள் தமக்கு கிடைத்த, கிடைக்கும் ஒரு சில இடைக்கால வருடங்களை தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் செய்யாவிட்டால் - அதன் விளைவுகளை பின்னர் அனுபவிப்பர்!!![/size]

Edited by nunavilan

[size=5]ஆராவமுதன் வணக்கம் [/size]

[size=1][size=5]நான் உங்களுக்கு எதிராக எழுதுவதாக நினைக்கவேண்டாம் .[/size][/size]

[size=1][size=5]நீங்கள் யதார்த்தத்தில் இருந்து விடுபட்டு கற்பனையில் மிதக்கிறிங்கள்.[/size][/size]

[size=1][size=5]இப்படிதான் பாராளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் கூட்டத்தை புலத்தில் [/size][/size]

[size=1][size=5]இருந்து உசுப்பேத்திவிட்டு கட்டுகாசை இழந்து ,டக்ளசும் ,மகேஸ்வரியும் [/size][/size]

[size=1][size=5]வென்றதுதான் மிச்சம் .தாயகத்தில் உள்ள மக்கள் தங்கள் தலைவர்களை [/size][/size]

[size=1][size=5]தீர்மானிக்கட்டும். புலத்தில் உள்ளவர்கள் இன்றைக்கு பாதிக்கபட்ட மக்கள் ,போராளிகள் ,[/size][/size]

[size=1][size=5]மாவீரர் குடும்பங்களுக்கு உதவுவோம் .நானும் சிலரும் சேர்ந்து எங்களது மாவட்டத்தில் [/size][/size]

[size=1][size=5]பல குடும்பங்களுக்கு உதவி செய்கின்றோம் ,அதன் முலம் அரசியல் விழிப்புணர்வையும்[/size][/size]

[size=1][size=5]ஊட்டுகின்றோம் .[/size][/size]

குடும்பங்களுக்குள்ளேயும் பிரச்சனையுண்டு. இது கட்சிகளின் கூட்டு, பிரச்சனைகள் இருக்காமலா போகும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.