Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் மொத்தக் கடன் தொகை 6 ட்ரில்லியன் ரூபா: இலங்கை மத்திய வங்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் மொத்தக் கடன் தொகை 6 ட்ரில்லியன் ரூபா: இலங்கை மத்திய வங்கி

[Wednesday, 2012-10-31 10:37:22]

அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை ஆறு ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 2012ம் ஆண்டு ஜூலை மாதமளவில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 6 ட்ரில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை மூன்று ட்ரில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அதிகளவில் சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்தக் கடன் தொகை அபிவிருத்தித் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://seithy.com/breifNews.php?newsID=69327&category=TamilNews&language=tamil

Rs. 6,000,000,000,000!?

just 46 B USD

tumblr_m8k82nrRxf1rt3jpj.gif

[size=4]இவ்வளவு கடனுக்கும் மாதாந்த வட்டி எவ்வளவு இருக்கும்?[/size]

[size=4]மகிந்த ஆட்சியில் கடன் மேலும் மேலும் அதிகரிக்கும். [/size][size=4]இதனால் மேலதிகமாக பெறும் கடன் கூடிய வட்டி வீதம் உடையதாக இருக்கும்.[/size]

[size=4]இலங்கை அரசாங்கத்தின் படுகடன் 2012 ஆம் ஆண்டு ஜுலை மாத முடிவில்; 6161 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. ஒரு வருடத்துக்கு முன்னர் இது 4975.2 பில்லியன் ரூபாவாக இருந்தது என்று மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்க உத்தரவாதம் கொண்ட பிணைகளை விற்றதன் மூலும் பெற்றுக்கொண்டதே இந்த படுகடன் அதிகரிப்புக்கு காரணமாகும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் 500 மில்லியன் டொலர் முதிர்ச்சி அடைந்த பிணைகளை விற்றதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறான கடனானது படுகடனை செலுத்துவதற்கு ஒப்பானதாகும்.

இலங்கையில் தற்போதைய கடனில் உள்நாட்டு படுகடன் 3185.7 பில்லியன் ரூபாவாகவும் வெளிநாட்டு படுகடன் 2975.3 பில்லியன் ரூபாவும் ஆகும்.

இலங்கை சீன எக்ஸிம் வங்கியிலிருந்தும் சீன அபிவிருத்தி வங்கியிலிருந்தும் பெருமளவு கடனை பெற்றுள்ளது.

கூடுதல் கடனை பெறுவது சென்மதி நிலுவையிலும், பொருளாதாரத்திலும் பாதகங்களை தோற்றுவிக்கும் என பொருளியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/51626--6161---.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.