Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் தலைவர்களின் சரணாகதி அரசியல் செயற்பாட்டால் நாம் இந்த துயரத்தை அனுபவிக்கிறோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் தலைவர்களின் சரணாகதி அரசியல் செயற்பாட்டால் நாம் இந்த துயரத்தை அனுபவிக்கிறோம் - முஸ்லிம் இடதுசாரி முன்னணி

31 அக்டோபர் 2012

அனுராதபுரத்தில் முஸ்லிம்களின் புனித நாளான ஹஜ்ஜுப் பெருநாளன்று பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூதாயம் முழுவதற்கும் இச் சம்பவம் அதிர்ச்சியையும் மிகப் பெரியசோகத்தையும் உருவாக்கியுள்ளது. இன்று வரை இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை

அரசாங்கத்தில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் வெட்கமில்லாமல் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என வழமைபோல் கூறத் தொடங்கியுள்ளனர்;. மேற்படி சம்பவம் தொடர்பாக தமது கண்டனங்களையோ அரசாங்கத்திற்கு அழுத்தங்களையோ இவர்கள் வழங்காமல் இருந்து வருகின்றனர்

ஒன்றல்ல இரண்டல்ல இருபதுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமை மேலும் தொடர்வதற்கு உரிய சூழ்நிலைகளே உருவாகி உள்ளன.

முஸ்லிம் தலைவர்களின் சரணாகதி அரசியல் செயற்பாட்டால் நாம் இந்த துயரத்தை அனுபவிக்கிறோம் வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் இந்த பேரினவாத அரசாங்கத்திற்கு எமது தலைவர்கள் ஆதரவை வழங்குகி வருகின்றனர். மறுபக்கத்தில் வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் துயரத்தை நாம் அனுபவித்து வருகின்றோம்

அரசாங்கம் தமக்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு கேட்கும்போதெல்லாம் பல்வேறு வழிகளில் மக்களை வீதிக்கு கொண்டு வந்து அரசாங்கத்திற்கு சார்பாக குரல்கொடுக்க வைக்கின்றனர். ஆனால் எம் மக்கள் மீது கொடுமைகள் இழைக்கும்போதும் மௌனவாகவே இருக்கின்றனர்

இன்றைய காலப்பகுதியில் முஸ்லிம் சமூதாயம் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே உள்ளனர். இதை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவு நன்கு புலப்படுத்தியுள்ளது. ஆனால் முஸ்லிம்மக்களின் முடிவிற்கு எதிராகவே முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்ததன் மூலம் கிழக்கு மாகாண சபை அரசாங்கத்திற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. அது போதாது என்று 'திவிநெகும'சட்டத்திற்கும் ஆதரவையும் முஸ்லீம் காங்கிரஸ் வழங்கியுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் இத்துரோகச் செயல் குற்றுயிராக இருந்த பேரினவாதத்தளம் மீண்டும் பலம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இன்றைய காலகட்டத்தில் இந்த பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்து எழும் தென்னிலங்கை சக்திகளுடன் கைகோர்த்து செயற்பட நாம் தயாராக வேண்டும்

மொஹமட் பைசால்

பொதுச்செயலாளர்

முஸ்லிம் இடதுசாரி முன்னணி

http://www.globaltam...IN/article.aspx

இன்றைய காலகட்டத்தில் இந்த பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்து எழும் தென்னிலங்கை சக்திகளுடன் கைகோர்த்து செயற்பட நாம் தயாராக வேண்டும்

[size=4]இதைத்தான் மகிந்தாவுக்கும் கூறி ஆதரவு தந்தீர்கள்.[/size]

[size=4]உங்கள் பிழைகளையே உங்களுக்கு பாடம் கற்றுத்தந்தாலும் ஏற்க மறுக்கின்றீர்கள் கற்ற பாடத்தை :( [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.