Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா?

Featured Replies

[size=4]பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை. ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும். ஆனால் இந்த வலைப் பதிவைப் படித்து வருகிற ஓர் அன்பர் எனக்கு இந்த் வதந்தி பற்றிக் குறிப்பிட்டு அது உண்மையா, அப்படி நடக்குமா என்று இ மெயில் மூலம் கேட்டிருந்தார். இது இணைய தளத்தில் பரவலாகக் கிளம்பியுள்ள வதந்தி என்பதால் அவருக்குப் பதிலளித்தேன்.

[size=5]அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி.[/size] [/size]

[size=4]நாஸா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.அன்பர் சுதாகர் எனக்கு இமெயில் மூலம் அனுப்பிய கேள்வியையும் நான் அளித்த பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். அந்த பதிலுடன் மேலும் சில விளக்கத்தையும் இங்கு சேர்த்திருக்கிறேன்.

[size=5]”NASA predicts total blackout on 23-25 Dec 2012 during alignment of Universe. US scientists predict Universe change, total blackout of planet for 3 days from Dec 23 2012. It is not the end of the world, it is an alignment of the Universe, where the Sun and the earth will align for the first time. The earth will shift from the current third dimension to zero dimension, then shift to the forth dimension. During this transition, the entire Universe will face a big change, and we will seea entire brand new world. The 3 days blackout is predicted to happen on Dec 23, 24, 25....during this time, staying calm is most important, hug each other, pray pray pray, sleep for 3 nights...and those who survive will face a brand new world....for those not prepared, many will die because of fear. Be happy..., enjoy every moment now. Don't worry, prayto God everyday. [/size][/size]

[size=4][size=5]There is a lot of talk about what will happen in 2012, but many people don't believe it, and don't want to talk about it for fear of creating fear and panic. We don't know what will happen, but it is worth listening to USA's NASA talk about preparation.[/size][/size]

[size=3]

[size=4]இது உண்மையா?.....உங்களிடமிருந்து இது பற்றிய தகவல்கள் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம்.” -சுதாகர்[/size][/size]

[size=5]Dear Sir[/size]

[size=4] நான் அறிந்த வரையில் நாஸா அப்ப்டி எந்த எச்சரிக்கையையும் விடவில்லை. [size=5]total blackout [/size]என்பது என்ன என்று புரியவில்லை. உலகில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களும் மின் உற்பத்தி செய்யாமல் பாதிக்கப்படும் என்ற அர்த்தம் என்றால் அது சாத்தியமில்லை. அனைத்து மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் செயலற்றுப் போக வாய்ப்பில்லை.[/size]

[size=4] அல்லது மூன்று நாள் சூரியனே தலை காட்டாது . மூன்று நாளும் ஒரே இருளாக இருக்கும் என்றால் அதற்கும் சாத்தியமில்லை.சூரியன் தனது இடத்திலிருந்து எங்கோ மூன்று நாள் லீவில் போய்விட்டுத் திரும்ப வாய்ப்பில்லை. பூமி தனது அச்சில் சுழல்வதால் தான் இரவும் பகலும் ஏற்படுகின்றன.[/size]

[size=4]பூமி தனது அச்சில் சுழலாமல் நிலை குத்தி நிற்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் பூமியின் ஒரு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து இரவாக இருக்கும். மறு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து பகலாக இருக்கும். ஆகவே பூமி முழுவதிலும் மூன்று நாள் இரவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது பகுத்தறிவுக்கு முரணானது.[/size]

[size=4]சூரியன் மற்றும் பூமியின் alignment பற்றிய சமாச்சாரமும் அபத்தமாகவே உள்ளது. பூமியின் Dimension மாற்றம் வெறும் உளறல்.[/size]

[size=4] நாஸா இப்படி கூறியது அப்படிக் கூறியது என்று வதந்தி கிளம்புவது இது முதல் தடவை அல்ல. [/size]

[size=4]Pray செய்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றால் நியூயார்க் நகரை சாண்டி புயல் தாக்கிய போது அவரவர் தங்கள் இடத்திலிருந்து பிரார்த்தனை செய்திருந்தால் தப்பித்திருக்கலாமே.[/size]

[size=4] படித்தவர்களும் இந்த வதந்திகளை நம்ப முற்படுவது வேதனையைத் தருகிறது. நமது உலகம், சூரிய மண்டலம், அண்டம், பிரப்ஞ்சம் ஆகியவை ஓர் ஒழுங்கு உட்பட்டவை. விபரீத மாறுதல்களுக்கு இடமே இல்லை.[/size]

[size=4]வீண் வதந்திகளை நம்பாதீர்கள். எனது இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்[/size]

[size=4]ராமதுரை[/size]

[size=4]========[/size]

[size=4]இப்போது கூடுதல் விளக்கம்:[/size]

[size=4]சந்திரனை விடப் பலப் பல மடங்கு பெரியதான ஒன்று ( பெரிய கிரகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நிற்குமானால் பூமிக்கு சூரிய ஒளியே கிடைக்காமல் பூமி முற்றிலும் இருளில் மூழ்கலாம்.[/size]

[size=4]அப்படி பிரும்மாண்டமான ஒன்று குறுக்கே நிற்பதானால் அது விண்வெளியில் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும். பூமியை நோக்கி அப்படி எதுவும் வருவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அப்படி ஒன்று வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் இத்தனை நேரம் விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடித்திருப்பார்கள்.[/size]

[size=4]அப்படி ஒன்று வருவதாக வைத்துக் கொண்டால் , காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல அது திடீர் என்று பிரேக் போட்டு நிற்க வாய்ப்பே இல்லை. பூமி அல்லது சந்திரன் பிரேக் போட்டு நிற்காது. ஆகவே எதுவும் சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து மூன்று நாள் முகாம் போட முடியாது.[/size]

[size=4]சரி, அது பிரேக் போட்டு நிற்பதாகவே வைத்துக் கொள்வோம். மறுபடி அதை எந்த சக்தி அங்கிருந்து கிளப்பும்? மூன்று நாட்கள் கழித்து அது தானாக எப்படி கிளம்பும்? இது நியூட்டன் வகுத்த விதிகளை மீறுவதாக இருக்கும்.[/size]

[size=4]ஒரு வேளை பூமியை விட பிரும்மாண்டமான ஒன்று சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நின்று பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்கும் என்றால் அது சில நிமிஷ நேரமே ( சூரிய கிரகணத்தின் போது நிகழ்வது போல்) அவ்விதம் தடுக்க முடியும்.[/size]

[size=4]ஏனெனில் அதுவும் பூமியைப் போல சூரியனை சுற்றியாக வேண்டும். அப்படியானால் சூரியனைச் சுற்றி வருவதில் அதன் வேகமும் பூமியின் வேகமும் வித்தியாசப்படும். அந்த பிரும்மாண்டமான ஒன்றினால் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது பல நாட்கள் பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்க முடியாது. அப்படி நிகழ்வதானால் அது கெப்ளர் வகுத்த விதிகளை மீறிவதாக இருக்கும்.[/size]

[size=4]ஆக்வே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 23, 24 , 25 தேதிகள் வழக்கம் போலத் தான் இருக்கும்.[/size]

[size=4](ப்டங்கள் இல்லை, மன்னிக்கவும்)[/size]

http://www.ariviyal.in/2012/11/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

மாயனின் கலண்டர்ப் படி அடுத்தமாதம் 21ம் திகதி உலகம் அழியுது.

நாசாவும் 23ம் திகதி பூமி இருளில்.. மூழ்கும் என்று.. அறிவித்திருக்குது.

டைனோசர் அழிந்த காலத்திலும், பூமியில்... விண்கல் மோதி... அதனால் ஏற்பட்ட நெருப்பு, புகை, புழுதிமண்டலத்தால்... பல வருடங்கள் பூமி இருளில் மூழ்கியிருந்தது.

இதை.. வைத்துப் பார்க்கும் போது... அடுத்த மாசம், ஏதோ... நடக்கப் போகுது.

வாழ்க்கையில்... இன்னும் எத்தனையோ... அனுபவிக்க வேண்டி இருக்குது, வேளைக்குப் போய்ச் சேரப் போறம் எண்டு... கவலையாயிருக்குது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி.[/size]

உலகம் முழுவதும், குடிசனம் பெருகித் துலையப் போகுது! :o

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பான செய்திகள் இங்கேயும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=110308#entry819254 இருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.