Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள அரசின் கபட நாடகத்தை புரிந்து கொண்டாராம் முன்னாள் தமிழக முதலவர் கருணாநிதி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karuna-41112-150.jpg

சிங்கள அரசின் கபட நாடகத்தை உலக நாடுகள் ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன என்பதையே ஐ.நா. மனித உரிமை ஆணைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றனஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடு கள் கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கின்றன. போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்பத் தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டிலாவது தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கையில் தற்போது தலைமை நீதிபதியை நீக்குவதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற் கொண்டிருப்பது நீதித் துறையில் அரசின் தலையீடாகும் என்று கூறியிருக்கிறது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சமரசிங்கே கூறும்போது, போருக்குப் பின் மறு சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மேலும் பெண்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு மொழிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த வாக்குறுதிகளைப் பற்றி சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் - பல ஆண்டுகளாக மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

இலங்கைச் சிங்கள அரசு, ஈழத்தந்தை செல்வா காலந்தொட்டே, தொடர்ந்து தமிழினத்தை ஏமாற்றி வருகிறது ஏமாற்றுவதற்குத் தேவையான கபட நாடகத்தை அவ்வப்போது அரங்கேற்றி வருகிறது. அந்தக் கபட நாடகத்தை நாம் புரிந்து கொண்டிருப்பதால் தான் ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வினை பொதுவாக்கெடுப்பு மூலமாக முடிவு செய்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சொல்லி வருகிறோம்.

சிங்கள அரசின் கபட நாடகத்தை உலக நாடுகள் ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன என்பதையே ஐ.நா. மனித உரிமை ஆணைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் கபட நாடகத்தை புரிந்து கொண்டாராம் முன்னாள் தமிழக முதலவர் கருணாநிதி..!

e973cb2ab862ea9c943ad74fe7f858b7.jpg

ஒரு கபட நாடகம் அதற்கும் பெரிய ஒரு கபட நாடகத்தை சாப்பிடுகிறதே..?

டிஸ்கி:

பெரிசு, வீட்டில பேர குழந்தைகளை பெரிய ஸ்கூலில் சேர்த்து படிக்க வைங்கப்பு.. மறுபடி அவங்க வந்து இனம் குலம் கோத்தரம் என்று எங்கட தலையில் வந்து மிளகாய் அரைக்கட்டும்

...

இதெல்லாம் ஒரு பொழைப்பு... :lol: :lol:

e973cb2ab862ea9c943ad74fe7f858b7.jpg

ஒரு கபட நாடகம் அதற்கும் பெரிய ஒரு கபட நாடகத்தை சாப்பிடுகிறதே..?

டிஸ்கி:

பெரிசு, வீட்டில பேர குழந்தைகளை பெரிய ஸ்கூலில் சேர்த்து படிக்க வைங்கப்பு.. மறுபடி அவங்க வந்து இனம் குலம் கோத்தரம் என்று எங்கட தலையில் வந்து மிளகாய் அரைக்கட்டும்

...

இதெல்லாம் ஒரு பொழைப்பு... :lol: :lol:

மாபெரும் தமிழன்,வீரத்தமிழ் மகன் அவர்களை அவமதித்துப்பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன் ............ :lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவுக்கு ஸ்டாலின், புதுடெல்லிக்கு கனிமொழி - இலங்கை விவகாரத்தில் கருணாநிதியின் பலே காய்நகர்த்தல்!

[Monday, 2012-11-05 07:39:10]

இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்து, ஐ.நா., சபை மனித உரிமை கமிஷனில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை வழங்கினார்.

ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த பின், பிரதமரை, கனிமொழி சந்தித்திருக்கலாம், ஐ.நா சபையில், ஸ்டாலின் மனு கொடுக்கும் போது, கனிமொழி, பிரதமரிடம் கடிதம் கொடுப்பது, போட்டா போட்டியாக இருக்கிறது என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இலங்கை தமிழர்கள் பிரச்னைக்காக ஐ.நா. சபையில் ஸ்டாலினும், பிரதமர் அலுவலகத்தில் கனிமொழியும் வலியுறுத்துவது கட்சிக்கும், தனக்கும் கிடைக்கும் அரசியல் லாபம் என, கருணாநிதி கருதுகிறார்.

தி.மு.க., ஆட்சியில் இலங்கையில் போர் நடந்தது. அப்போது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, மத்திய அரசை வலியுறுத்தி, தி.மு.க., நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழ் ஆர்வலர்கள் எழுப்பினர்.அந்த குற்றச்சாட்டை களைவதற்கும், இலங்கை தமிழர்களுக்காக ஐ.நா., சபையில் குரல் கொடுத்த முதல் அரசியல் கட்சி தி.மு.க., என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொள்ளவும் கருணாநிதி விரும்புகிறார். அதே நேரத்தில், ஸ்டாலினை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க, கனிமொழியை களமிறக்கி விட்டுள்ளார்.

இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கனிமொழியும் தவிர்க்க முடியாத சக்தியாக தி.மு.கவில் வலம் வருகிறார். எனவே, அவரை ஏன் பகைக்க வேண்டும் என, சில மாவட்டச் செயலர்கள் கருதுகின்றனர். அதனால், தான் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையில் நிர்வாகிகளை நியமிக்க, கட்சியினரை மாவட்டச் செயலர்கள் சிபாரிசு செய்து வருகின்றனர்.

இருப்பினும், கட்சியில், ஸ்டாலினுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குவது மற்ற வாரிசுகள் விரும்ப மாட்டார்கள் என்பதை கருணாநிதி உணர்ந்துள்ளார். ஸ்டாலின் - அழகிரி என்றிருந்த இரு அணிகளில், அழகிரி, சமீபகாலமாக ஒதுங்கி வருவதால், அந்த இடத்தில் கனிமொழியை நிறுத்த விரும்புகிறார்.

அதன் காரணமாகவே, ஸ்டாலினை ஐ.நா.வுக்கு அனுப்பி வைத்து விட்டு, டில்லியில் பிரதமரை, கனிமொழியை சந்திக்க வைத்துள்ளார். ஒருவர் உலக நாடுகளை சுற்றி வந்து நிற்க, மற்றொருவர் உள்ளூரிலேயே வலியுறுத்த, புதுவிதமான திருவிளையாடலை கருணாநிதி நடத்தியுள்ளார்.இவ்வாறு தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தன.

http://seithy.com/breifNews.php?newsID=69601&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.