Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Lebaraவின் புதிய தொழில் கைகொடுக்கும் திட்டம் - இளைய தலைமுறை மகிழ்ச்சி

Featured Replies

Lebaraவின் புதிய தொழில் கைகொடுக்கும் திட்டம் - இளைய தலைமுறை மகிழ்ச்சி

***********************************************

புலம்பெயர்ந்துவாழும் ஈழத்தமிழ் மக்களின் இளைய தலைமுறையினரை வர்த்தகத்தில்ஊக்குவிக்கும் மிக அரிய திட்டம்ஒன்றை லெபாரா (Lebara) நிறுவனம் ஆரம்பித்து வைத்துள்ளது.

புதிய சுயதொழில் (Entrepreneurial)ஆரம்பிக்கும் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின்தொடக்க நிகழ்வு 07-11-2012 மாலைலண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தின் அங்கமானCASS Business School இல்நடைபெற்றது.

இதில் வர்த்தக ரீதியாக பலசாதனைகளைப் புரிந்து முன்னோடியாகத் திகழும் லெபாரா நிறுவனத்தின்நிறுவனர்களில் ஒருவரும், தலைவருமான ரதீசன் யோகநாதன் மற்றும்பிரித்தானியாவில் நட்சத்திர விடுதி சுயதொழில் ஆரம்பித்துஇப்பொழுது முன்னேற்றகரமாக இருக்கும் ‘அரோரா விடுதிகளின்’ உரிமையாளர்சுரேந்தர் அரோரா ஆகியோர் கலந்துகொண்டுதமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இளைய தலைமுறையை ஊக்குவித்தனர்.

யூத இன மக்களைப் பற்றிப்பேசும்நாம், அவர்களைப் போன்று ஏனையவர்களுக்கும் உதவிசெய்து, ஒரு பலம் பொருந்தியதமிழ் சமூகத்தை புலம்பெயர் நாடுகளில் உருவாக்க வேண்டும் எனவும், தனது இந்தத்திட்டம்போன்று வர்த்தக ரீதியாக வெற்றிபெற்றஏனைய தமிழர்களும் இளைய தலைமுறைக்கு இவ்வாறானவாய்ப்பை உருவாக்கி ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து எல்லோரும்வளர்ச்சியடைய வேண்டும் என ரதீசன் தனதுஉரையில் கூறினார்.

தமிழ் இளையோர்களுக்கு மட்டும் இவ்வாறான திட்டத்தைஆரம்பித்தால், அது பக்கசார்பாகக் கணிக்கப்படும்என பலர் கூறியதாக தனதுஉரையில் கூறிய ரதீசன், இதுஉண்மையல்ல எனவும் லெபாரா நிதியத்தின்(Lebara Foundation) ஊடாக ஏனைய இனத்தவருக்கு ஏற்கனவேபல திட்டங்களை முன்னெடுத்துள்ளதால், இப்பொழுது தமிழ் மக்களை மட்டும்,அதாவது தனது இனத்திற்கு மேலும் ஏதாவதுசெய்ய வேண்டும் என்ற தூண்டுதலில் இதனைஆரம்பித்திருப்பதாகக் கூறினார்.

தமிழ் பெற்றோர்கள் பெரும்பாலும் தமது பிள்ளைகள் மருத்துவராகவும்,பொறியியலாளராகவும், கணக்காளராகவும் வர வேண்டும் எனஎண்ணுவதாகவும், தமது பிள்ளைகள் வர்த்தகத்தில்ஈடுபடுவதை விரும்புவதில்லை எனவும் கூறிய அவர்,தானும் இவ்வாறான கட்டத்தைக் கடந்து, தற்பொழுது வெற்றிகரமாகவர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதை முன்னுதாரணமாகக் கூறினார்.

CASS Business School இல்லெபாராவின் செலவில் கற்றல் நடவடிக்கைஆரம்பிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்த ரதீசன், நல்ல தொழில்திட்டங்களை எவ்வாறு உருவாக்குதல் எனவும்,வெற்றிகரமாக தொழில் செய்வது எப்படிஎன்றும் அங்கு கற்பிக்கப்படும் எனவும்கூறினார். சிறந்த தொழில் திட்டங்களையாராவது வைத்திருந்தால், அவர்கள் சுயதொழில் செய்யமுதலீட்டு உதவி செய்யப்படும் எனவும்அவர் கூறினார்.

லெபாராநிறுவனத்தின் வருமானத்தில் அரைப்பங்கு ‘லெபாரா நிதியத்திற்கு’ வழங்கப்பட்டுஉதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ரதீசன், அதற்கும் மேலாகஉருவாக்கப்பட்டுள்ள புதிய சுயதொழில் வர்த்தகர்களைஉருவாக்கும் இந்தத் திட்டம் போன்றுஏனைய முன்னணி வர்த்தகர்களும் தமிழ்சமூகத்திற்கு ஏதாவது செய்ய முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன்,பிரித்தானிய மொத்த தேசிய வருமானத்தில்8 வீதம் ஆசியர்களால் கிடைக்கின்றது எனச்சுட்டிக்காட்டிய ரதீஸ், அதில் ஒருவீதம் ஈழத்தமிழ் மக்களால் கிடைக்கும் நிலைக்கு தமிழ் மக்களின் வர்த்தகநடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த தொடக்க நிகழ்வில் உரையாற்றியஅரோரா விடுதிகளின்’ உரிமையாளர்சுரேந்தர் அரோரா, தனது தொழில்அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அதேவேளை, தானும் ஒரு தமிழனாகஇருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனக் கூறினார்.

‘பிரித்தானிய தமிழ் மாணவர் சங்கத்தினால்’ ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், அவர்களால்ஏற்கனவே தாயகத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும், கணவனைஇழந்த பெண்களிற்கும் முன்னெடுக்கப்பட்ட தொண்டுகள் பற்றி எடுத்துக் கூறியதுடன்,அதனைப் பாராட்டிய ரதீஸ், உடனடியாக தனதுசார்பில் 25,000 பவுண்ஸ் நிதியுதவி வழங்குவதாகஅறிவித்தார்.

இந்த நிகழ்வில் 150இற்கும் மேற்பட்ட தமிழ் இளையோர்கள் கலந்துகொண்டதுடன், லெபாரா நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு தமது ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்த அதேவேளை, தம்மில் பலர் இந்தத் திட்டத்தின் ஊடாக பல புதிய வர்த்தக முயற்சிகளை ஆரம்பிக்க இருப்பதாகவும், தெரிவித்தனர்.

லண்டன்கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தில் விமானிப்பட்டம் பெற்ற லெபாரா நிறுவனத்தின் நிறுவனர்களில்ஒருவரும், தலைவருமான ரதீசன் யோகநாதன், கடந்தவாரம் கலாநிதிப் பட்டம் பெற்றதுடன், அதேபல்கலைக்கழகத்தின் நிருவாகக் குழுவில் இளைய வயதில் இணைந்தவர்என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றார்.

லியோன்,பாஸ்கரன், ரதீசன் (LE-BA-RA) ஆகியோரால்உருவாக்கப்பட்டு, கடந்த 11 வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் லெபாரா நிறுவனம், தனதுநிதியத்தின் ஊடாக பல்வேறு தொண்டுகளைவழங்கி வருகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மூன்று அறைகள் கொண்ட50 வீடுகளைக் கடந்த சில மாதங்களுக்குமுன்னர் கட்டிக் கொடுத்திருந்த இந்தநிறுவனம், தற்பொழுது கிளிநொச்சியில் பல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.

இந்தியாதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள 113 ஏதிலிகள்முகாம்களில் கடந்த பல வருடங்களாகஇந்த நிதியத்தினால் பல்வேறு பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அத்துடன், தாயகத்தில் போரில் கால்களை இழந்த200 பேருக்கு செயற்கைக்கால் பொருத்துதல் உட்பட மேலும் பலபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லெபாராநிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவைமுன்னிட்டு தாயகம், தமிழ்நாடு மற்றும்உலகில் உள்ள சிறுவர்கள், ஏதிலிகளுக்குஉதவி புரிவதற்காக ஒரு மில்லியன் யூரோவைஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்(UNICEF), மற்றும்ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் அமைப்பிற்கு(UNHCR) லெபாராவழங்கி இருந்தது. இதன் மூலம் ஒருஇலட்சத்து 75 ஆயிரம் சிறுவர்கள் அனைத்துலகரீதியாகப் பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு:

http://www.lebarafoundation.org/

www.lebara.com

http://www.dreamitachieveit.co.uk/

http://www.uktsu.org/

Edited by வண்டுமுருகன்

[size=5]நல்ல முயற்சி போல் தெரிகின்றது. [/size]

இதில் ஒருவர் நோர்வே நாட்டு ஈழத் தமிழர் என நினைக்கிறேன். அவர்தான் நோர்வேயின் பணக்கார தமிழர் எனவும் தான் வாழும் மாவட்டத்தில் அதிக வருமான வரி கட்டியவர் என்றும் புகழ் பெற்றவர்,

நோர்வேயில் கடந்த காலங்களில் நடந்த பல தாயக நிகழ்ச்சிகளுக்கு பூரண ஆதரவு தந்தவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.