Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா அறிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - B.B.C க்கு சம்பந்தரின் பேட்டி

Featured Replies

பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் ஐநா அறிக்கை அதிகாரபூர்வமாக வெளிவந்த பின்னர் அது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் கூறியுள்ளார்.

யுத்த வேளையில் ஐநா அதிகாரிகள் வன்னியில் இருந்து வெளியேறியமையானது - அங்கு செய்தியாளர்களோ அல்லது வேறு எந்த கண்காணிப்பாளர்களோ செல்ல அனுமதிக்கப்படாத நிலையில்- அங்கு ஒரு சாட்சிகளற்ற யுத்தத்துக்கு காரணமாகிவிட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

'சாட்சிகளற்ற போருக்கு காரணமாகிவிட்டது'

தமக்கு எவரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது என்கின்ற போதிலும் போர் வேளையில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மை அறியப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐநா தமது ஆணைக்கு உட்பட்ட வகையில் செயற்பட்டதா என்பதை அதன் செயலாளர் ஆராய்ந்து அதற்கான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk...nunreport.shtml

சம்பந்தர்: "ஐ.நாவை அறிக்கைப் பற்றி ஐ.நா விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ". அவர் தனது கருத்துகள் முக்கியமில்லாதவை என்கிறார். இந்த அறிக்கையை விசாரிக்கத்தக்க ஒரே ஆள் ஐ.நா மட்டும்தான் என்கிறார்-

Edited by மல்லையூரான்

[size=4]இந்தியாவையும் மீறி பான் கி மூனுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியர்வர்கள் - அமெரிக்கா மட்டுமே என தோன்றுகின்றது. நவி பிள்ளை அவர்கள் கூட அழுத்தம் தரலாம். [/size]

[size=1]

[size=4]இவை ஊடாக ஒரு சுயாதீன போர்குற்ற விசாரணை நடந்தால் அதுவே எமக்கு பெரிய திறவுகோலாக அமையும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா உட்பட அனைத்துலக நாடுகளும் இப்போது இடுப்பிலுள்ள துணி அவிழ்ந்து அம்மணமாக நிற்கின்றன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் தெருக்களில் இனப்படுகொலைகளை நிறுத்தச்சொல்லி கூக்குரலிட்டபோது, எம்மை அவர்கள் ஏளனம் செய்தனர், எள்ளிநகையாடினர், தமிழர் பயங்கரவாதிகள் எனக்கூறினர். தமிழர் நிலையை நேரில்சென்று பார்த்து அறிக்கை தரச்சொல்லி அனுப்பிவைக்கப்பட்ட நம்பியார். கொழும்பு சென்று பின்பு இந்தியாவில் கொல்லைப்புறத்தில் பதுங்கிவிட்டு எல்லாம் முடிந்ததும் ஐ நா சென்றான். "சில நாடுகள் எப்படியான அறிக்கையை விரும்பினவோ அதையே ஐ நா அதிகாரிகள் வெளியிட்டனர்" என தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதாவது "தமிழர்விரோததேசம் இந்தியா" எதை விரும்பியதோ அதையே ஐ நா அதிகாரிகள் வாந்தியெடுத்தனர். உணமையை ஆழமாக மிகவும் ஆழமாக மூடிப் புதையுங்கள், எவ்வளவு ஆழமாக புதைக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக அது உங்கள் முகத்திற்கெதிரே வந்து சதிராடும். ஒவ்வொரு தமிழனும் மட்டுமல்ல மனிதநேயம் மிக்கவர்கள் அனைவரும் உங்கள் முகத்தில் காறி உமிழும் காலம் விரைவில்வரும் அதுவரை தமிழா உனது தவத்தினைக் கலையாதெ. எமது பசி மிகவும் கொடியது அண்டசராசரங்களையெல்லாம் ஒரு நொடியில் விழுங்கி ஏப்பம்விட வல்லது ஆகவே தமிழா உனது பசிக்கு சரியான இரை கிடைக்கும் வரை பசித்தேயிரு.

[size=5]சம்பந்தன் பொறுப்பற்ற வகையில் பேட்டிகள் கொடுப்பதை விட்டுவிட்டு - ஐ.நா. சபைக்கும் மேலை நாடுகளுக்கும் உடனடி பரிகார நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்தும் கோரிக்கையை எழுத்து மூலம் முன்வைக்க வேண்டும். இதை மாதமொருமுறை எழுத்து மூலம் வற்புறுத்த வேண்டும்.[/size]

[size=5]Report describes in its annexes troubling efforts by the then-chef de cabinet, Vijay Nambiar; the under-secretary-general for humanitarian affairs, Sir John Holmes; and the UN resident coordinator in Colombo, Neil Buhne, to downplay alarming casualty numbers that were collected by UN staff members with a “rigorous methodology” and “of a standard comparable to best-practice on information collection in other conflict situations.[/size]

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/The_Internal_Review_Panel_report_on_Sri_Lanka.pdf

[size=1][size=5]இந்த மூவரும் தான் எமது மக்களின் படுகொலைக்கு ஐ.நா. சார்பில் காரணமானவர்கள்[/size] :icon_mrgreen:[/size]

[size=5]Report describes in its annexes troubling efforts by the then-chef de cabinet, Vijay Nambiar; the under-secretary-general for humanitarian affairs, Sir John Holmes; and the UN resident coordinator in Colombo, Neil Buhne, to downplay alarming casualty numbers that were collected by UN staff members with a “rigorous methodology” and “of a standard comparable to best-practice on information collection in other conflict situations.[/size]

http://www.un.org/Ne...n_Sri_Lanka.pdf

  • தொடங்கியவர்

[size=5]chef de cabinet, Vijay Nambiar நல்லாதான் அவிச்சியிருக்கிறார் இந்த மலையாள குக்[/size]

[size=4]ஈழத்தமிழர் நினைவு -மே 13 2009

* பாதுகப்பு சபை கூட்டபட்டிருக்கிறது - இலங்கை விடயம் ஆராயப்படவேண்டும்

* ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் பாதுகாப்பு சபையில், சிறிலங்கா விவகாரம் பற்றிய சம்பிரதாய பூர்வமான முதலாவது விவாதம் (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

* இது தொடர்பாக ராஜதந்திரிகள் கருத்து தெரிவிக்கையில், மோதல் வலயத்தில் சிக்கியுள்ள மக்கள் பிரதேசங்கள் மீது, சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் ஷெல் தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மௌரிஸ் ரிபர்ட் மற்றும் ஏணைய மேற்கத்தேய பிரதிநிதிகள், இம்மூடிய கதவு விவாதத்தினுள் கலந்து கொண்டுள்ளனர்.

* சிறிலங்காவின் மோதல் பிரதேசத்தின் அபாயகரமான நிலைமையை பாதுகாப்பு சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சிறிலங்கா அரசு தனது தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு, ஐ.நாவின் மனிதாபிமான பணிகயாளர்கள், அரசசார்பற்ற தொண்டு நிறுவன பணியாளர்களை அகதி முகாம்களுக்கு அனுமதிக்குமாறும், புலிகளை ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறும் தாம் இவ்விவாதத்தின் போது கோரியுள்ளதாகவும், ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்ஸ் மௌரிஸ் ரிபர்ட் கூறியுள்ளார்.

* மனிதாபிமானத்தின் பேரில் யுத்த நிறுத்ததினை அமுல் செய்ய விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளர் வேண்டுகோள்.

* போர்ப் பகுதிகளில் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதன் காரணமாக சிறுவர்கள் பலியாவதைக் கண்டு பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்திருக்கின்றார்.

* மீண்டும் புதிய செய்மதி படங்கள் வெளியாகின.

* உடனடியாக உத்தம் நிறுத்த படவேண்டும் - அமெரிக்க மற்றும் பிரிட்டன்.[/size]

[size=5]to : sbell@nationalpost.com[/size]

[size=5]Dear Stewart,[/size]

[size=5]Thanks for your story, [/size][size=5]UN failing its duty to protect civilians during conflicts: internal report on Sri Lanka. [/size]

[size=5]This brings back all the memory where thousands of Tamils around the world were pleading world powers and UN to safeguard innocent civilians. Now we know those people were telling the truth and demanding actions.[/size]

[size=5]I believe only by initiating an independent inquiry into these events by UN can prevent future crimes against humanity. Else, we will be repeating from Rwanda to Sri Lnaka to Syria to ...[/size]

[size=5]Sincerely,[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.