Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசே அணு உலையினை உடனே நிறுத்து; யாழில் முழங்கிய குரல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசே அணு உலையினை உடனே நிறுத்து; யாழில் முழங்கிய குரல்கள்

இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை நிர்மாணப் பணிகளை நிறுத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் யாருக்காக மின்சாரம், யாருக்காக அணு உலை, புதுடில்லிக்கு அபிவிருத்தி தமிழ் நாடு மற்றும் இலங்கைக்கு சுடுகாடு,ஐரோப்பிய நாடுகளில் அணு உலை மூடப்படுகின்றன இந்தியா அவற்றை வாங்கி கொலைக் களங்களை கட்டுகிறது.

கொல்லாதே கொல்லாதே சூரியக்கதிரால் கொல்லாதே இந்தியா அரசே அணு உலையை உடனே நிறுத்து போன்ற கோசங்கள் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSCF7916.jpg

[size=2]17 நவெம்பர் 2012, சனி 11:50 மு.ப[/size]

http://www.onlineuthayan.com/News_More.php?id=841381618517588554#

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல்தொரு நடவடிக்கை.. :D தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அணு உலையை எதிர்க்க வேண்டும்..!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல்தொரு நடவடிக்கை.. :D தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அணு உலையை எதிர்க்க வேண்டும்..!!

நல்ல ஐடியா.... சூப்பர் அய்யா...smiley-laughing001.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணுக் கழிவை மன்னார் கடலில் கொட்டி நாசப்படுத்தத் திட்டம்

தமிழ்நாடு, கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணுஉலை மின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தியும், இந்தத் திட்டத்தை எதிர்த்து இடிந்தகரை மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ். நகரில் நேற்று கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. கூடங்குளம் அணு உலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அது இலங்கையின் பல பகுதிகளில் கதிர்வீச்சுப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதே போராட்டத்தின் நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக மார்க்சியலெனினிசக் கட்சியின் தலைவர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார். எனினும் சுமார் நூறு பேர்வரையிலானோரே போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஏனைய கட்சிகளின் பிரமுகர்களைக் காணமுடியவில்லை.

"எமது போராட்டத்துக்குத் தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், இடிந்தகரை மக்கள் நீண்ட நாள்களாகத் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இதுவரை நினைக்காதது எவ்வளவு பெரிய துரோகம்'' என்று சுற்றுச் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் அங்கு தெரிவித்தார்.

"கூடங்குளம் அணு உலையால் வரும் அணுக் கழிவுகளை, மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வுக்காகத் தோண்டிய குழிகளில் போட்டு மூடிவிட எத்தணிக்கிறார்கள். இதனால் இலங்கையின் அதிகளவு மீன் வளத்தைக் கொண்டுள்ள மன்னார் கடல்படுக்கை பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.

அங்கு மீள்வளம் அழிந்து, மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைமை ஏற்படும்'' என்று சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக முற்பகல் 11 மணியளவில் கூடியவர்கள் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க, ஜப்பானில் அணு உலைகள் கைவிடப்படுகையில் இந்தியாவில் ஏன் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். "தனது சொந்த மக்களின் உயிர்கள் குறித்தே அக்கறைப்படாது கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்குவதில் உறுதியாக உள்ள இந்திய மத்திய அரசு, எப்படி ஈழத் தமிழர்களுக்கு நீதியை நியாயத்தைப் பெற்றுத் தரும்?'' என்று கேள்வி எழுப்பினார் மார்க்சியலெனினிசக் கட்சியின் தலைவர்.

பின்னணி

கூடங்குளம் அணுமின் நிலையம், தமிழ் நாட்டின் திருநெல்ர்வலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ளது. இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் இந்த அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தினை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் 1988 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர்.

அதன் பின்னர் ரஷ்யா பல நாடுகளாகப் பிரிந்து போனதனாலும், இந்தியா அணுக்கரு வழங்குவோர் குழுமத்தின் ஒப்புதல் பெறவில்லை என்ற காரணத்திற்காக அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இத்திட்டம் பத்தாண்டுகளுக்கு கிடப்பல் கிடந்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டில் கையெழுத்தானது. தற்போது அங்கு ஒரு உலை செயற்படும் நிலையை அடைந்துள்ளது. இதுபோன்ற 6 உலைகளைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு உலையில் இருந்தும் 1,000 மெகா வோட்டுக்கும் அதிகமான மின்சாரத்தைப் பெறமுடியும்.

ஆரம்பத்தில் இருந்தே அணு உலைக்கான கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் இருந்தாலும், அண்மையில் ஜப்பான் நாட்டில் புக்குஷிமா, டா இச்சி அணு உலைகளில் ஆழிப் பேரலை (சுனாமி) காரணமாக நடந்த விபத்துக்களைத் தொடர்ந்து பெரும் போராட்டமாக வெடித்துள்ளது.

இந்த விபத்துக்களுக்குப் பின்னர் தம்மிடம் இருக்கும் அணு உலைகளை மூடிவிட ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் முடிவெடுத்திருக்கும் பின்னணியில் கூடங்குளத்தின் மிக அருகே உள்ள இடிந்தகரை ஊர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்ட மக்கள் கூடங்குளம் அணு உலையை மூடிவிடும்படி கோரிப் போராட்டம் நடத்திவ வருகின்றனர்.

மக்கள் போராட்டங்கள் பொலிஸார் மற்றும் படையினரின் உதவிகளுடன் அடக்கி ஒடுக்கப்படுகின்றன. எனினும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுவரை அரச வன்முறைக்குப் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில், 23 மார்ச் 2012 அன்று பாளையங்கோட்டையிலிருந்து இடிந்தகரைக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் உள்ளிட்ட 500 பேரைக் கைது செய்தது தமிழகப் பொலிஸ்.

செப்டம்பர் 11, 2011 அன்றுமுதல் இடிந்தகரை கிராம மக்கள் 10,000 பேர் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

18 நவெம்பர் 2012, ஞாயிறு 8:30 மு.ப

http://www.onlineuth...71618518165574#

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=6]Kudankulam to go live during Putin trip[/size]

[size=4]NEW DELHI: [size=5]After the setback over Russian President Vladimir Putin's abrupt decision to postpone his India visit, the two countries are looking to undo some of the recent strife by commissioning the first [/size][/size][size=5]Kudankulam reactor during his visit in late December. [/size]

[size=4]While foreign ministry officials confirmed that India was looking at commissioning of the reactor either in December or early next year, diplomatic sources said that the possibility of commissioning while Putin is in India cannot be excluded as this will have an immense "symbolic value'' for relations. However, they ruled out Putin's visit to Kudankulam. [/size]

[size=4]"The time constraint will prevent Putin from going there himself but the commissioning can happen even in a virtual manner with the Russian President and PM [/size]Manmohan Singh[size=4] together giving the go-ahead from Delhi,'' said a source. It remains to be seen if the two sides, especially the [/size]Indian government[size=4], eventually agree to this as too much fanfare around the commissioning of the first 1,000 MW pressurized heavy water nuclear power plant could spark a fresh wave of protests from the locals. [/size]

[size=4]For Putin, the commissioning of the plant could be a significant takeaway from his summit meet with Singh in the absence of any settlement of issues concerning Russian telecom giant [/size]Sistema[size=4] and Kudankulam 3 and 4. Interestingly, the Russians seem to have been waiting for green signal from India to commission the plant. NPCIL started loading uranium fuel in the reactor in September, and now trials at different operating conditions are being carried out. "We have reached a stage where the commissioning of the plant means no more than pushing a button,'' said a source. [/size]

[size=4]Sources, however, said that there is still no progress in attempts by both sides to settle the issue of Kudankulam 3 and 4, which India wants to bring under the purview of its nuclear liability law. The two sides are discussing the likely hike in the cost of these two reactors following India's decision. Along with the cancellation of Sistema's licences for [/size]CDMA[size=4] services by the Supreme Court, this was one of the reasons which forced Putin to defer his summit meet with Singh. The fact that the fresh 2G auctions have not yielded a substantial amount, according to Russian officials, has vindicated Sistema that did not participate in the auction. "Sistema has been proved correct by the fresh auction and we hope that India will approach Sistema's case in a more liberal manner,'' said Russian senior counselor Sergey Karmalito.[/size]

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.