Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளக அறிக்கை கசிந்தது எவ்வாறு? ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை கடும் ஆட்சேபம்!

Featured Replies

[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் குறைநிறைகளை கண்டறிவதற் காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வ மாக வெளியிடப்படுவதற்கு முன்னமே அதிலுள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளமை முற்றிலும் தவறாகும் என இலங்கை ஐ.நா.விடம் தமது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.[/size]

[size=4]இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைக ளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் உள்விவகாரச் செயற்பாடுகளில் நிலவியதாக அவ்வறிக்கையில் கருதப்படும் குறைபாடுகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் ஊடகங் களுக்கு கசியவிடப்பட்டுள்ளமையானது இலங் கையின் இறைமைக்கு மாத்திரமன்றி ஐ. நாவின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயலென்பது இதன்போது சுட்டிக்காட்ட ப்பட்டி ருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.[/size]

[size=4]இவ்வாறான செயற்பாடு இலங்கைக்கு மட்டுமன்றி எந்தவொரு நாட்டிற்கும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து உத்தியோகபூர்வ மற்ற முறையில் தகவல்கள் கசிந்துள்ளமை ஐ. நா. மீது ஏனைய நாடுகள் கொண்டுள்ள மதிப்பு மற்றும் மரியாதையை குறைக்கும் செய்கை யென்பதனால், எதிர்காலத்தில் எந்தவொரு நாட்டுடன் சம்பந்தப்பட்ட விடயத்தையும் இவ்வாறு வெளியிடுவதற்கு ஐ. நா. அனுமதிக்க கூடாது என இலங்கை அரசாங்கம் ஐ. நா. விடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.[/size]

[size=4]இலங்கை மனிதாபிமான நடவடிக்கை களின் இறுதி கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டிருந்த தருஸ்மன் குழுவினர் முன்வைத்திருந்த அறிக்கையில், இலங்கையின் சில செயற்பாடுகளுக்கு ஐ. நா. பொறுப்புக் கூற வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.[/size]

[size=4]அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கள் அவற்றின் குறைகளை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயலாளர் நாயகம் பான்கீமூனினால் மேலுமொரு உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டி ருந்தது.[/size]

[size=4]மேற்படி, உள்ளக விசாரணைக் குழு, ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகச் செயற்பாடுகளில் நிலவியதாக கருதப்படும் குறைகள் அடங்கிய அறிக்கையினை தயாரித்துள்ள நிலையிலேயே அதன் தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் அதன் அதிருப்தியையும் ஆட்சேபனையையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]இந்த அறிக்கை முற்றும் முழுதாக ஐக்கிய நாடுகள் சபை சம்பந்தப்பட்டது. ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூனினால் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே அதன் குறைகள் அறிக்கையிடப்பட்டுள்ளன வேயொழிய இதில் இலங்கை அரசாங்கம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த அறிக்கை வெளியிடப் படுவதனால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லையெனவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.[/size]

http://www.tamilleader.com/mukiaya/7581-2012-11-19-23-58-22.html

[size=1]

[size=4]முன்னர் தருஸ்மன் அறிக்கையை சிங்களம் கசிய விட்டது. [/size][/size]

[size=1]

[size=4]இதைக்கூட சிங்களமே கசிய விட்டும் இருக்கலாம். [/size][/size]

இலங்கை அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் போது, முதலில் மந்திரியின் காரியதரிசி வந்து ஒரு கதை சொல்வார். பின்னர் அதை பிரதி அமைச்சர் மறுப்பார். அதை வந்து அமைச்சர் மறுப்பார். அவை எல்லாவற்றையும் ரம்புக்க வந்து மறுப்பார். ஆச்சரியம் தரத்தக்க திசையில் பிரிசு அறிக்கை கையளிப்பார். அல்லது கூட்டறிக்கை வெளிவிடுவார். பினனர் சம்பிக்கவும் விமலும் பெரிய பாறாங்கற்களை துக்கி போடுவார்கள்........

முதலில் அமைச்சர் இதில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பதில் அழித்தார். அது இலங்கையிடம் ஐ.நா இரகசியமாக அறிக்கையை கையளித்த போது, அறிக்கை பற்றிய கேள்வி வரும் போது மந்திரிகளிடம் கூறச்சொல்லி எழுதிக்கொடுத்த பதில். ஆனல் அறிகையை இரகசியமாக பெற்றுக்கொண்ட BBC கேட்ட கேள்வி "இலங்கை அரசு ஐ.நாவை மிரட்டியாதா" என்பது. இதற்கு பதில் கொடுக்கப்படவில்லை. இதனால் சற்று கோபம் அடைந்திருக்கும் உயர்மட்டம் பாதிக் கோபத்தை ஐ.நா மீது திருப்பியிருக்கு.

போர் முடியும் வரைக்கும் வல்லரசு நிரல் அமெரிக்கா, ரஸ்சியா, இலங்கை சீனா என்றிருந்தது அடுக்கு. போர் முடிந்த பின்னர் அமெரிக்கா, ரஸ்சியா, சீனா , இலங்கை என்று வந்துவிட்டது. இப்போது இந்தியாவின் பின் இலங்கை வருக்கிறது. இது இன்னும் பல சரிவுகளை விரைவாக சந்திக்க போகிற நிலையைத்தான் காட்டுகிறது. இதுதான் இலங்கைக்கு மனக்கவலை.

இதில் இந்த மந்திரிகள் குலைத்தென்ன? அறிக்கை இரகசியமாக வெளிவராவிட்டாலும், சகலநாடுகளுக்கும் இலங்கையில் நடந்ததை பற்றி தெரியும். அவர்களுக்கு இலங்கை மீது இருக்கும் மதிப்பில் மாற்றம் ஏதும் ஏற்பட ஒன்றும் புதிதாக நடக்கவில்லை. மேலும் நடத்தப்பட்ட விசாரணை இலங்கையில் நடந்தவற்றை ஐ.நா ஒழித்தது என்றது வெளிச்சத்திற்கு வந்ததால்தானே. அதாவது விசாரணைக்கு முன் தெரிய வந்தவை 1.) இலங்கையில் பாரதூர போர்க்குற்றம் நடை பெற்றது. 2.) ஐநா அதை மறைத்தது. இந்த அறிக்கை எப்படி முதலிலேயே தெரிய வந்திருந்த உண்மையை குழப்பும். இது இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததா என்று செய்ய பட்ட அறிக்கை இல்லையே. அதுதானே நிபுணர் அறிக்கை எப்போதோ வெளிவந்து இலங்கையில் போர்குற்றம் நடந்ததாக கூறப்பட்டு விட்டது.

இலங்கையை பற்றி நிபுணர் அறிக்கையில் கூறப்படாததொன்றும் இதில் கூறப்படவில்லை. இலங்கை, ஐ.நாவை மிரட்டியது கூட அதில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது. இங்கே நடந்தது ஐ.நாவில் விசாரிக்க பட்ட அதிகாரிகள் அதை தமக்கு கேடயமாக பாவித்திருக்கிறார்கள் என்பது. இவர்கள் இலங்கையில் இருந்த போது ஊழல்களுக்கு தமிழரால் சந்தேகிக்க பட்டவர்கள். இலங்கையை இதில் அவமானம் ஏற்பட்டுவிட்டதாக அழவைத்திருப்பது இந்த அதிகாரிகள் பாவித்த கேடயம். ஆதாவது இந்த அறிக்கை மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அவர்கள் இலங்கை தங்களை மிரட்டியது என்று தொடந்து சொல்ல முடியாது. மேலும் இலங்கை அதை மறுக்கும். ஆதலால் ஒரு கட்டத்தில் ஊழல் வெளிவரும். அப்போது அது இலங்கைக்கும் அவமானம். ஐ.நாவுக்கும் அவமானம். இலங்கை இபோதுதான் உண்மையில் மிரட்டுகிறது. அதாவது ஐ.நா இதை தொடர்ந்தால் "இரண்டு பக்கமும் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கப் போகிறோம். பல இழிவான செயல்கள் வெளிவரப்போகுது. ஆகவே இத்துடன் ஐ.நா வாயை பொத்துவது இருவரும் நல்லது" என்பதுதான் அந்த மிரட்டல்.

எது எப்படியோ, இந்த அறிக்கையிலும், நிபுணர் அறிக்கையிலும் காட்டப்பட்டிருக்கும் குற்றங்கள் எல்லாம் ஏற்கனவே தொழில் நிலை அதிகாரிகளால், ஊடகப்பேட்டிகளிலும், புத்தகங்களிலும் வெளிவிடப்பட்டுவிட்டது.

வலம்புரியார் மாதிரி இதற்கும் நாம் பாரதத்திலிருந்து உதாரணம் எடுத்தால், கம்சன் எவ்வளவோ முயன்றும், கிருஸ்ணன் பிறந்துவிட்டான். இடையர் குலத்தில் ஊர், பெயர் தெரியாமல் வளர்கிறான். ஒருநாள் களத்தில், இலங்கையை நேருக்கு நேர் சந்திக்கிற சந்தப்பம் வளர்ந்து வருகிறது. இலங்கை அரசு இனி போக்கை மாற்ற வேண்டும். இல்லையேல் போய்ச்சேரவேண்டி வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.