Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள தேசத்தில் 40 ஆயிரம் சிறுவர்கள் விபசாரத்தில்?

Featured Replies

[size=4]விபசாரத்தில் ஈடுபடும் 40000 சிறுவர்கள் இலங்கையில் இருப்பதாக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோஸி சேனாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

யுனிசெப், புலம்பெயர்வோருக்கான சர்வதேச நிறுவனம் என்பவை தயாரித்த அறிக்கைகளிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிகாட்டினார்.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு மீதான குழுநிலை விவகாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எழுத்தறிவு, எதிர்பார்க்கப்படும் வாழ்க்கைக் காலம் என்பவை தொடர்பான உயர் சுட்டிகள் இருப்பதாக இலங்கை பெருமைப்பட்டாலும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் நிலைமை விசனத்துக்குரியதாகும்.

இவ்வருடத்தில் முதல் ஒன்பது மாதத்தில் சிறுவர்களுக்கு எதிராக 4414 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளது. பராயம் குறைந்த கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இவைபற்றி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதேவேளை இந்த விவாதத்தில் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தலத்த அத்துகோறள உரையாற்றுகையில்,

கொடகவலையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தடுப்புக்காவலில் உள்ளார். ஆயினும் இவர் அரசியல் செல்வாக்கு காரணமாக வசதிகளை அனுபவித்து வருகின்றார். பிரதேசசபை இவருக்கு தொடர்ந்து விடுமுறை வழங்கி வருகிறது. இரத்தினபுரி, கஹவத்தை பகுதிகளில் தொடர்கொலைகள் இடம்பெற்றுள்ளன.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பிணை எடுக்க முடியாத குற்றங்களாக ஆக்கப்பட வேண்டும் என்றார்.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53252-40-.html

சிங்கள பௌத்த தர்மம் வலுப்பெறுவது இதன் மூலம் தெளிவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – புதிய சட்டம் கொண்டுவர முயற்சி

[ வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012, 08:13 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

சிறார்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோர் மற்றும் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவோருக்கு மரணதண்டனை விதிக்கும் சட்டத்தைக் கொண்டுவர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சிறிலங்காவின் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, இத்தகைய பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனையை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார்.

சிறார்களும் பெண்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையிலேயே, இந்தக் குற்றச்செயல்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் தற்போது பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சிறிலங்காவில் 1450 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும், 1169 சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.com/view.php?20121123107328

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.