Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்கள் ஏன் இப்படி..??!

Featured Replies

பொதுவாக பெண்கள் தங்கள் பக்க தவறுகளை நோக்காமல் தவறு செய்துவிட்டு ஆண்கள் மீது ஏன் பழியைப் போட்டு தப்பிக்க முயல்கின்றனர்..அல்லது தங்களை சுத்தவாளிகளாக காட்ட முயல்கின்றனர்..!

அண்மையில் ஒரு இளம் பெண் ஒரு முக்கிய விடயமாக மேலதிகாரியை சந்திக்கப் போய் இருக்கிறார்..! போனவர் போன வேலையைப் பார்த்திட்டு வராமல் மேலதிகாரியுடன் அரட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அவரும் கூட அரட்டை அடித்திருக்கிறார். இத்தனைக்கும் அந்தப் பெண் தான் ஆண்களுடன் அநாவசியமாக அதிகம் கதைப்பதில்லை என்றும் பீற்றித் திரிந்திருக்கிறார்.

அடுத்த நாள் ஒரு ஈமெயில் வந்ததாம். நீ தற்போது இருக்கும் பொறுப்பில் இருந்து கீழிறக்கப்படுகிறாய் என்று. தற்போது அந்தப் பெண் மேலதிகாரியைத் திட்டித் திரிகிறாராம். அவர்தான் வலியக் கதை கொடுத்தார் நானும் கதைத்தேன் என்று. ஏன் அந்தப் பெண்... மேலதிகாரி கதைக்க முற்பட்டிருந்தாலும் அந்தச் சூழலைத் தவிர்க்க வழி இருந்தும் தவிர்க்காமல்..மேலதிகாரி மீது தற்போது குற்றம் சுமத்துகிறார்...அதுதான் யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

எனவே ஆண்கள் ஆகினும் பெண்கள் ஆகினும் தேவைக்கு அதிகமாக கதைக்க இல்ல பழக சந்தர்ப்பம் கிடைக்கிறது என்பதற்காக கதைத்துப் பழகி வம்பில் மாட்டிவிட்டு மற்றவர்களைத் திட்டித் தீர்க்காதீர்கள்..! குறிப்பாக வேலைத் தளங்களில்...பொது இடங்களில்..! :idea:

  • Replies 67
  • Views 12k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இது பெண்கள் பழிதீர்க்கும் புராணமாய் இருக்கிறது.. கதை கேட்டால் பதில் சொல்லவது தானே மனிசத்தன்மை.. கதைத்ததற்கே கீழ் இறக்கப்பட்டிருக்கிறதா.. அப்ப விலலங்கந்தான்.. அது சரி.. மேலதிகாரி தேவையில்லாமல் கதைக்கிறார்..?? அவரை எல்லவோ முதலில் இறக்க வேணும்.. கிளம்பீட்டாங்கையா.. :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

மேலதிகாரிகள் செக் பண்ண அப்படிச் செய்வினம். அங்க போய் இப்படி அநியாயத்துக்கு வாதாட வரட்டாம். முகாமைத்துவத்தில் இப்படியான ரெஸ்ரிங் சகஜம். அது தெரியாம அரட்டை அடிச்சு மாட்டிட்டு இப்ப புலம்பி என்ன பயன். இது கனடாவில் நடந்திருக்கு..!

கேட்ட கதைக்கு பதில் என்றால் ஓக்கேயா இருந்திருக்கும்...அரட்டை எல்லோ அடிச்சிருக்கிறா பொண்ணு. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்படிங்க ஒரு பொண்ணு தனியா அரட்டை அடிச்சிருக்க முடியும்..?? இன்னொராள் சேந்து அடிக்காமல்.. முகாமைத்துவத்தில இது சகஜமோ.. இதெல்லாம் ஆணியம்.. செய்யிற கூத்துப்போல.. :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

பெண் மேலதிகாரியை சந்திக்கப்போய் அரட்டை அடித்ததற்காக பதவி இறக்கமா? நல்லாயிருக்கே.

இதுவே ஒரு ஆணாக இருந்தால் வேலையில் இருந்து ஒரேயடியாக தூக்கிவிட்டிருப்பார்கள்.

பாவம் பெண்ஜென்மம் என்பதால் பதவி இறக்கத்துடன் விட்டுவிட்டார்கள் போலிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படிங்க ஒரு பொண்ணு தனியா அரட்டை அடிச்சிருக்க முடியும்..?? இன்னொராள் சேந்து அடிக்காமல்.. முகாமைத்துவத்தில இது சகஜமோ.. இதெல்லாம் ஆணியம்.. செய்யிற கூத்துப்போல.. :wink: :P

தொடங்கீட்டாங்க!! தொடக்கீட்டாங்க!! ஒரு வழி பண்ணமல் விட மாட்டாங்க பாருங்கோ!!

அந்த அரட்டை தான் பதவி நீக்கம் என்று யாருக்குத் தெரியும். அனுதாபத்துக்காக ஆண் ஆதிக்கம் என்று கதைப்பதே பெண்களுக்கு இப்ப பிழைப்பாகப் போச்சு!! :twisted: :wink:

ஏன் அந்த மேலதிகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்லையா தமிழ் அக்கா கேட்ட மாதிரி இரண்டு கை தட்டினால் தானே சத்தம் வரும்

ஏற்கனவே அந்த பெண்ணுக்கு அரட்டை அடிக்க வேண்டாம் என்று அறிவித்தல் கொடுத்து இருந்தால் இது அவரது குறைபாட்டால பதவி இறக்கம் எண்டு எடுக்கலாம்

அப்படி இல்லாமல் சும்மா மேலதிகாரியோட கதைச்சதுக்கு பதவி இறக்கம் எண்டா இது டிஸ்கிரிமினேஸன் மாதிரி தான் இருக்கு

ஆணாதிக்க சமுதாயத்தில தெல்லாம் சகஜம்தான் இல்லாட்டில் ஒரே தகுதி உள்ளவர்களுக்கு பால் வித்தியாசத்தால மட்டும் சம்பள வேறுபாடு வருமா (சமீபத்தில இது பற்றி பத்திரிகைளில வாசிச்சன் இதுபற்றி உங்கட அபிப்பிராயத்தை சொல்லுங்க)

ம் லோயரம்மா கேஸ் பிடிக்கிறா போல,அப்ப கனடாவுக்கு இலவச சுற்றுலா போல.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அந்த மேலதிகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்லையா தமிழ் அக்கா கேட்ட மாதிரி இரண்டு கை தட்டினால் தானே சத்தம் வரும்

ஏற்கனவே அந்த பெண்ணுக்கு அரட்டை அடிக்க வேண்டாம் என்று அறிவித்தல் கொடுத்து இருந்தால் இது அவரது குறைபாட்டால பதவி இறக்கம் எண்டு எடுக்கலாம்

அப்படி இல்லாமல் சும்மா மேலதிகாரியோட கதைச்சதுக்கு பதவி இறக்கம் எண்டா இது டிஸ்கிரிமினேஸன் மாதிரி தான் இருக்கு

ஆணாதிக்க சமுதாயத்தில தெல்லாம் சகஜம்தான் இல்லாட்டில் ஒரே தகுதி உள்ளவர்களுக்கு பால் வித்தியாசத்தால மட்டும் சம்பள வேறுபாடு வருமா (சமீபத்தில இது பற்றி பத்திரிகைளில வாசிச்சன் இதுபற்றி உங்கட அபிப்பிராயத்தை சொல்லுங்க)

நான் பெண் உரிமைகளுக்கு எதிரானவன் கிடையாது! ஆனால் பெண்கள் ஆணாதிக்கம், ஆணாதிக்கம் என்று புலம்புவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. உங்களுக்கு சம உரிமை இருக்குது என்றால் அதை எடுத்துக் கொள்ளுங்கோவன்! அப்படி அதைத் தட்டிப்பறிக்க ஆர் இருக்கினம்! உங்கள் உற்றவர்கள் தானே! அப்பா, அண்ணன்....... இவர்களை ஆதிக்க வெறியர்கள் என்கின்றீர்களா?

இந்தவிடயம் மேலதிகாரி ஒருவருக்கும், ஊழியர் ஒருவருக்கும் உள்ள பிரச்சனை? அதைத் திசைதிருப்புவதைத் தான் சுட்டிக் காட்டுகின்றோம்! மேலதிகாரி பெண்hக இருந்து அப்படி நடந்தால் உடனே பெண் ஆதிக்கம் எண்டு கூச்சல் போடுவீர்களா?

இதைத் தான் நாம் வேண்டாம் என்கின்றோம்! ஒரு அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைக்கு ஒட்டுமொத்த ஆண்களையும் குற்றம் சாட்டுவது என்னவகையில் நியாயம்? அந்த ஆண் ஆதிக்க முறைமைக்குள் தந்தை, தம்பி, அண்ணன், சித்தப்பா......... போன்றவர்களும் உள்ளனர் என்பதையும், அவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்றீர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

உதில ஆண் பெண் என்ற ஒரு கத்தரிக்காயும் இல்ல எல்லாருக்கும் ஒரு தாழ்வு மனபான்மை குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களுக்கு முக்கியமாக எடுத்து கொண்டால் சகல பிரச்சினைகளுக்கும் ஆண்கள் ரேசிச்சம் என்ற கொள்கையை கொண்டு வருவார்கள்.....

கி கி கி

சிட்னியிலிருந்து புத்தன் மப்பில(போதனையில் அல்ல)

மேலதிகாரிகள் செக் பண்ண அப்படிச் செய்வினம். அங்க போய் இப்படி அநியாயத்துக்கு வாதாட வரட்டாம். முகாமைத்துவத்தில் இப்படியான ரெஸ்ரிங் சகஜம். அது தெரியாம அரட்டை அடிச்சு மாட்டிட்டு இப்ப புலம்பி என்ன பயன். இது கனடாவில் நடந்திருக்கு..!

கேட்ட கதைக்கு பதில் என்றால் ஓக்கேயா இருந்திருக்கும்...அரட்டை எல்லோ அடிச்சிருக்கிறா பொண்ணு. :wink:

மேலதிகாரிகை செக் பண்ணுவது எல்லாம் சரிதான் ஆனால் தான் அரட்டை அடிச்சு மற்ற ஊழியரும் அரட்டை அடிக்கிறாரா என்ற மாதிரியான ரெஸ்டிங் எல்லாம் சரியா படேல்ல.

இனி அடுத்ததா மேலதிகாரிகள் பியரை வாங்கி கொடுத்து சேர்ந்து குடிச்சிட்டு வேலை நேரத்தில் குடிச்சது தவறு என்று சொல்லி வேலையை விட்டு தூக்குவார்களோ? இப்படியான ரெஸ்டிங் செக்கிங் தொடருமோ?

தவறை செய்யதவருக்கு முதல் செய்ய தூண்டினவருக்கு தானே முதலிலை தண்டனை தரணும்.

நான் பெண் உரிமைகளுக்கு எதிரானவன் கிடையாது! ஆனால் பெண்கள் ஆணாதிக்கம், ஆணாதிக்கம் என்று புலம்புவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. உங்களுக்கு சம உரிமை இருக்குது என்றால் அதை எடுத்துக் கொள்ளுங்கோவன்! அப்படி அதைத் தட்டிப்பறிக்க ஆர் இருக்கினம்! உங்கள் உற்றவர்கள் தானே! அப்பா, அண்ணன்....... இவர்களை ஆதிக்க வெறியர்கள் என்கின்றீர்களா?

இந்தவிடயம் மேலதிகாரி ஒருவருக்கும், ஊழியர் ஒருவருக்கும் உள்ள பிரச்சனை? அதைத் திசைதிருப்புவதைத் தான் சுட்டிக் காட்டுகின்றோம்! மேலதிகாரி பெண்hக இருந்து அப்படி நடந்தால் உடனே பெண் ஆதிக்கம் எண்டு கூச்சல் போடுவீர்களா?

இதைத் தான் நாம் வேண்டாம் என்கின்றோம்! ஒரு அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைக்கு ஒட்டுமொத்த ஆண்களையும் குற்றம் சாட்டுவது என்னவகையில் நியாயம்? அந்த ஆண் ஆதிக்க முறைமைக்குள் தந்தை, தம்பி, அண்ணன், சித்தப்பா......... போன்றவர்களும் உள்ளனர் என்பதையும், அவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்றீர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!!

இது மேலதிகாரிக்கும் ஊழியர் ஒருவருக்கும் உள்ள பிரச்சனை தான். அது ஏன் ஆண் பெண் பிரித்து திசை திருப்பபடுகின்றது? தலைப்பில் பெண்கள் ஏன் இப்படி என்று தானே கேட்கப்பட்டிருக்கின்றது, அங்கேயே திசை திருப்பல் ஆரம்பமாயிட்டுதே தூயவன் :P

அதுக்கு தலைப்பைப் போட்டவரைச் சாடியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஒட்டுமொத்த ஆண்களைச் சாடினால் எப்படி? :idea: :oops:

(இதற்கு மீசை துடிக்கின்றது! ஆனால் ஒட்டு விட்டு விடுமோ என்ற பயத்தால் அடக்கி வைக்கின்றேன்! :P )

நித்திலா சொன்னது:

தமிழ் அக்கா கேட்ட மாதிரி இரண்டு கை தட்டினால் தானே சத்தம் வரும்

சகோதரம் -ஒரு கையால சத்தம் வராதா?

சுவரில அடிச்சு பாரும் வரும் - ! :wink:

ஏற்கனவே வேலையில் அந்த பெண்ணிருந்தால் - மேலதிகாரி எதுக்கு ரெஸ்ட் பண்ணினார் என்பது ஒரு விடயம்-

ஒரே தடவையில் எந்த இடத்திலும் பதவியிறக்கமாட்டார்கள் என்பது - பொதுவான விடயம் - மிகபாரதூரமான - ஒழுங்கீனம் தவிர்த்து!

எச்சரிக்கைகள் குறைந்தது 2 தடவையாவது கொடுக்கப்படலாமோ - என்னமோ!

கூட்டி கழிச்சு பார்த்தால் - ஏற்கனவே போன புகார்களை வைத்து - அதிகாரி அமுக்கிட்டான் என்றே எண்ண தோணுது நேக்கு - உங்களுக்கு எப்பிடியோ?! :roll: 8)

தொடங்கீட்டாங்க!! தொடக்கீட்டாங்க!! ஒரு வழி பண்ணமல் விட மாட்டாங்க பாருங்கோ!!

அந்த அரட்டை தான் பதவி நீக்கம் என்று யாருக்குத் தெரியும். அனுதாபத்துக்காக ஆண் ஆதிக்கம் என்று கதைப்பதே பெண்களுக்கு இப்ப பிழைப்பாகப் போச்சு!! :twisted: :wink:

ராசா உந்தப்பக்கத்தை விட்டு வெளியேறப்பு பொட்டையளைப்பற்றியே கதை நடக்கிது

மகனே கோமணத்தோடை அலையப்போறீர்

:oops: :oops: :oops:

கடவுளே அதுவும் டமிழிட்டை வாயைக்குடுத்து :cry:

டமிழ் பறவாயில்லை உந்த சுட்டீ வந்தா

சுட்டீயும் ஓகே கடவுளே ரமா அல்லது சிநேகிதி

ஆளைவிடங்கோப்பா

:cry: :cry: :cry: :cry:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

யோவ் பீஏ என்ன ம...பா எங்கை வந்து எதை கதைக்கிறீர்

ஒரு வளி பண்ணாமல் விடமாட்டீர் போல இருக்கு

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

நித்திலா சொன்னது:

தமிழ் அக்கா கேட்ட மாதிரி இரண்டு கை தட்டினால் தானே சத்தம் வரும்

சகோதரம் -ஒரு கையால சத்தம் வராதா?

சுவரில அடிச்சு பாரும் வரும் - ! :wink:

ஏற்கனவே வேலையில் அந்த பெண்ணிருந்தால் - மேலதிகாரி எதுக்கு ரெஸ்ட் பண்ணினார் என்பது ஒரு விடயம்-

ஒரே தடவையில் எந்த இடத்திலும் பதவியிறக்கமாட்டார்கள் என்பது - பொதுவான விடயம் - மிகபாரதூரமான - ஒழுங்கீனம் தவிர்த்து!

எச்சரிக்கைகள் குறைந்தது 2 தடவையாவது கொடுக்கப்படலாமோ - என்னமோ!

கூட்டி கழிச்சு பார்த்தால் - ஏற்கனவே போன புகார்களை வைத்து - அதிகாரி அமுக்கிட்டான் என்றே எண்ண தோணுது நேக்கு - உங்களுக்கு எப்பிடியோ?! :roll: 8)

அறிவுக்கொழுந்து

கடவுளே யார் யார் கூட எல்லாம் நம்மளை படைச்சிருக்கிறாய்

:cry: :cry: :cry: :cry:

வர்ணன் அண்ணா என்ன விளையாடுறீங்களா சுவரில ஒருகையால தட்டினா சத்தம் வரும் தான் ஆனாஅதுக்கு சுவரும் வேண்டும் தானே சுவரோ கையோ இல்லை வேறு எதுவுமோ இல்லாம ஒருகையால (பிறகு கையில 5 விரல் எண்டு கடி ஜோக் சொல்ல மாட்டீங்க தானே) மட்டும் சத்தம் எழுப்ப முடியுமா என்ன

இங்க நீங்க சொன்னது தான் நானும் சொல்லியிருப்பது அதாவது ஒருவரது வேலை தரமோ அல்லது அவரது நடவடிக்கைகளோ (கிரிமினல் இ பாலியல் குற்றம் தவிர்ந்த) சரியில்லை என்றால் எச்சரிக்கை கொடுக்காமல் எப்படி பதவியிறக்கம் செய்ய முடியும் :?: :?:

அது ஏன் பெண்கள் மட்டும் தான் இப்படியானவர்கள் எண்டமாதிரி ஓரு தலைப்போட இங்க போடப்பட்டிருக்கு இது தான் எனது கேள்வி :?: :?:

தூயவன் நான் தனிப்பட்ட hPதில ஆண்களை பற்றி எதுவுமே சொல்லவில்லையே எனது தந்தையும் அண்ணாக்களும் ஏன் களத்தில இருக்கிற பல உறவுகளுமே ஆணாதிக்க வாதிகள் எனறு நான் சொல்லவில்லை ஆனால் நாங்கள் இருப்பது ஆணாதிக்க சமுதாயம்தான்

உதாரணமாக நான் சொன்னதுதான் ஓரே வயது கல்வித்தகமை உள்ளஆணுக்கும் பெண்ணுக்குமே சம்பள விடயத்தில எற்றத்தாழ்வு இருப்பதை சமீபத்தில பத்திரிகைகளில படித்தேன் இது அரசாங்கத்துறையிலும் இருக்கு தனியார்துறையிலும் இருக்கு

காரணம் நாங்க இன்னும் பழைய ஆணாதிக்க வாதிகள் வகுத்த பாதையில தான் எங்களை அறியாமலே போய்க்கொண்டிருக்கிறம்

இன்னும் வீடுகளில பாருங்க சமைக்கிறது பெண்கள் வேலை எண்டு அதை ஏன் ஆண்கள் செய்யக்கூடாது எண்டு கேக்கிறம் பாருங்க அந்தக்கேள்வில இருந்து தெரியுதே இது ஆணாதிக்க சமுதாயம் தான் எண்டு

எப்ப ஆண்கள் சமைக்கினம் என்பது ஒரு ஜோக்காக இருக்கே தவிர இதை ஒரு சாதாரண நிகழ்வா பார்க்கிறார்களா இல்லையே

இந்த மாதிரி எத்தனையோ உதாரணம் ஆனால் சமுதாயத்தில இருக்கிற எல்லா ஆண்களும் ஆணாதிக்க வாதிகள் கிடையாது ஆனால் ஆணாதிக்கவாதிகளும் கொண்டது தான் சமுதாயம்

ஏன் இதை ஏற்பதில உங்களக்கு என்ன சிரமம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா பெண்களைப் பற்றியா இங்க நடக்குது Üத்து

தகவலுக்கு நன்றி குருவிகள் அண்ணா

எனக்கு மனசில பட்டதைச் சொல்றன் யாரையுமே குறை சொல்லவில்லை சண்டைக்கு வந்திடாதீர்கள் ?

உலகில் எல்லபெண்களும் பாவம் செய்தவர்கள்

நல்ல பெயர் வேண்டேலாது

ஆனால் கேட்ட பெயர் உடனேயே கேட்டு விடலாம்

பெண்கள் வேலை இடத்தில் நிம்மதிலாக வேலை செய் ஏலாது

வேலை இடத்தில் பிரச்சனை வந்தால் உடனே பெண் மீது தானே பழியைப் போடுவினம் :cry: :evil:

ஒரு கை தட்டினால் சத்தம் வராது இரண்டு கை தட்டினால் தான் சத்தம் வரும்

ஆணும் பெண்ணும் தப்புச் செய்தால் உடனே அந்த பெண் மீது தான் பழி வரும்

ஏன் இருவரும் சேர்ந்து தான் தப்பு தெய்தோம் என்று சொல்ல மாட்டினம் ஆண்கள்

வீடுகளிலும் பாருங்க பெண்கள் தான் சமைக்கனும்

ஏன் இருவரும் சேர்ந்து சமைத்தால் என்ன

அதுக்காக பெண்கள் கதைக்கிறினம் என்றால் ஆண்கள் விலத்தி போங்க நீங்களும் சேர்ந்து கதைத்துப் போட்டு பழயை பெண் மீது போடாதீர்கள்

அப்படிப்போடுங்க அரிவாளை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படிப்போடுங்க அரிவாளை.

எப்படிப் போடுவது அரிவாளை :roll:

எப்படிப் போடுவது அரிவாளை :roll:

ஓ அப்ப நீங்க போடலயா? சாரி :roll:

:evil: :evil: :evil: :evil:

19ni2.jpg

23en.jpg

33df.jpg

ஓய் சாட்றீயின்ர நிலமையை பாருங்கோாாாா

:cry: :cry: :cry: :cry:

உது நேற்று,இன்று, புலம் எண்டு வரும் போல :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடங்கீட்டாங்க!! தொடக்கீட்டாங்க!! ஒரு வழி பண்ணமல் விட மாட்டாங்க பாருங்கோ!!

அந்த அரட்டை தான் பதவி நீக்கம் என்று யாருக்குத் தெரியும். அனுதாபத்துக்காக ஆண் ஆதிக்கம் என்று கதைப்பதே பெண்களுக்கு இப்ப பிழைப்பாகப் போச்சு!! :twisted: :wink:

தூயவன்ஸ்.. அனுதாபத்திற்காக ஆணாதிக்கம் பற்றிக்கதைக்கவில்லை.. குருவிகளின் தலைப்பே அப்படிக்கோணல் தான் பாருங்கோ... அரட்டை இருவரும் சேந்து அடிச்சால்.. (பரிசோதனைக்காக எனினும் மேல் அதிகாரி அரட்டை அடிச்சவர் தானே) இருவருக்கும் அல்லவா தண்டனை கொடுக்கப்படவேணும். அதெப்படி.. மேல்அதிகாரிக்கு விதிவிலக்கு..?? அதைவிட.. அரட்டை அடிச்சு பரிசோதிக்க வேண்டிய அவசியம் என்ன..?? அவரது வேலையில பரிசோதிச்சு பதிவிஇறக்கும் கொடுத்தா.. ஏற்க தயக்கமா என்ன..?? இதென்னவோ.. பழிவாங்கும் படலம் போல.. நான் என்றால்.. அங்கையே வேலை நிறுத்தம் பண்ணி.. 2ல ஒன்று பாத்திருப்பன்.. :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.