Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா சபையின் திடீர் ஞானம் ஈழத்தில் இழந்த உயிர்களை மீட்குமா? கலாநிதி விக்கிரமபாகு கேள்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சபையின் திடீர் ஞானம் ஈழத்தில் இழந்த உயிர்களை மீட்குமா? கலாநிதி விக்கிரமபாகு கேள்வி!

'காஸா மீது கொடூரத் தாக்குதலை மேற்கொள்ளும் இஸ்ரேலுக்கு இன்று உதவுவதுபோல்தான் அன்று ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுக்கு அமெரிக்காவும் அதன் கைப்பாவையாகச் செயற்படும் ஐ.நாவும் உதவிகளை வாரி இறைத்தன. எனவே, அமெரிக்காவின் தேவையைத்தான் இன்று ஐ.நா. சபை நிறைவேற்றுகிறது. அந்நாடு ஐ.நாவின் சுயாதீனத்தை விலைகொடுத்து வாங்கிவிட்டது.'

இவ்வாறு நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் பல பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ள ஐ.நா வின் உள்ளக விசாரணை அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும்போது மேற்கண்டவாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

செய்வதையெல்லாம்சரிவரச் செய்து முடித்துவிட்டு இன்று தமிழர் தொடர்பில் ஐ.நா. நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. ஐ.நா. தற்போது கற்பிக்கும் நியாயாதிக்கத்தை எம்மால் ஒருபோதும் ஏற்க முடியாது. பான் கீ - மூனுக்கு திடீரெனப் பிறந்துள்ள ஞானம், மடிந்த உயிர்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்குமா?

ஐ.நா.சபையின் சுயாதீனம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. பக்கச்சார்பின்றி செயற்படவேண்டிய அந்தச் சபையை அமெரிக்காதான் நிர்வகிக்கிறது. எனவே, இப்போது இயங்கும் ஐ.நா.சபையை ஒரு பொது அமைப்பாக ஏற்க முடியாது.

குறிப்பாக, பலஸ்தீனத்தின் காஸாமீது இஸ்ரேல் உக்கிர தாக்குதலைத் தொடுக்கின்றது. இதற்கு அமெரிக்காவும் பக்கபலமாக இருக்கின்றது. அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதால் ஐ.நாவும் அந்நாட்டுக்கு சார்பாகவே செயற்படுகின்றது.

இவ்வாறுதான் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போதும் விடுதலைப்புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் இலங்கை முன்னெடுத்த யுத்தத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் வழங்கியது. இதில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

அன்று இலங்கை பக்கம் அமெரிக்கா நின்றதால் தமிழர்களின் படுகொலையை ஐ.நா. கைகட்டி வேடிக்கை பார்த்தது என்றார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=89d7aae8-eb1c-475b-9186-a796f48207b9

[size=4]இந்த சிங்களவர் பொதுவாக தமிழர் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் ஒரு முற்போக்கு சிங்கா அரசியல்வாதி. [/size][size=1]

[size=4]அவர் கூறியுள்ள பல நடுநிலை கருத்துக்கள் அடங்கிய இந்த கட்டுரைக்கு இடப்பட்ட தலையங்கம் பொருத்தமாக இல்லை.[/size][/size]

அவரின் பாதை எமக்கு பொருந்ததாது. பௌத்தம் பல ஜீவகாருண்ணியங்களை கூறலாம், நாம் போவது சைவம். பாதை மாறாது.

அவரின் கண்களுக்கு போரில் அமெரிக்கா, இந்தியா செய்ததுமட்டும்தான் படுகிறது. சீனா, ரஸ்சியாவும் செய்தன. போரின் பின் பிரேணை எதிர்ப்பை மனித உரிமைகள் பேரவையில் முன்னிறு நடத்தியவை, சீனா, ருசியா. பாதுகாபுச்சபை எமக்கு மூடப்பட்டிருப்பது, சீனா, ரூசியாவால். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்றவற்றின் மனத்தை மாற்றி பாதுகாப்பு சபையில் ஒரு நடவடிக்கை கொண்டுவர முடியும் என்று பல தமிழர்கள் நம்புகிறார்கள். சீனாவையோ, ருசியாவையோ மாற்றலாம் என்று நம்புவது ஒருவரும் இல்லை.

மேற்கு நாடுகள் பலதடவையும், இந்தியா ஓரிரு தடவையும் இலங்கையை கண்டித்து அறிக்கைகள் விட்டிருக்கின்றன. ஆனால் சீனாவோ, ருசியாவோ அதை செய்யவில்லை.

நமக்கு தொடர்பில்லாத சிங்கள நாட்டின் நீதிதுறை விவகாரமாயினும், உலகநடப்பில் ஒரு பகுதியாக பார்க்கப்படும் சிராணி விடயத்தில் கூட இந்த இரண்டு நாடுகளும் ஒன்றும் செய்ய வில்லை.

இடதுசாரித்துவத்தின் நல்ல முறைகள் செயல்ப்பாட்டில் போடமுடியாதவை. அவை பாடப்புத்தகங்களில் ஜநாயக கட்டமைப்புடன் ஒப்பிடுதலுக்காகமட்டும்தான் இன்றுவரை இருக்கின்றன. எனவே, விக்கிரமபாகு தமிழரை விட்டுவிட்டு, ஒரு நல்ல அரசாங்கம் நாடு சுதந்திரம் அடைந்தலில் இருந்து இன்றுவரை அமையாத குறையை சிங்கள நாட்டில் நிவிர்த்தி செய்யட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.