Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவை மலேசியாவிற்குள் அனுமதிக்க வேண்டாமென அரசு சார்பற்ற நிறுவனங்கள் போர்க்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.adaderana.lk/tamil/news.php?nid=31538

மஹிந்தவை மலேசியாவிற்குள் அனுமதிக்க வேண்டாமென அரசு சா

1380889243sem.jpgர்பற்ற நிறுவனங்கள் போர்க்கொடி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின.

ஒருவேளை, போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்குள் வர அனுமதிக்கப்பட்டால், வருகின்ற 4-ஆம் திகதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரை எதிர்த்து பெரும் அளவிலான முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் இப்போராட்டத்திற்கு உணர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிள்ளானில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல்.சேகரன் கூறினார்.

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு அனைத்துலகப் போர் விதிமுறைகளை மீறி 40,000-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து மனித இனத்துக்கெதிரான போரை நடத்தியதோடு மட்டுமன்றி, அங்குள்ள தமிழர்களை தொடர்ந்து சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வரும் இலங்கை ஜனாதிபதியை, தமிழர்கள் வாழும் மலேசியாவுக்குள் அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறிய சேகரன்,

நமது பிரதமர் நஜிப் இம்மண்ணில் வாழும் 16 இலட்சம் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, போர்க்குற்றவாளியை இந்நாட்டுக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர் 14-இல் வெளியான ஐக்கிய நாட்டு மன்றத்தின் இரகசிய அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்பதோடு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ராஜபக்ஷவின் கொடுங்கோல் ஆட்சியைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.

ஆகவே, இப்படி அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த அவரை இந்நாட்டுக்குள் கால் பதிப்பதை வன்மையாக கண்டிப்பதோடு; மனித உரிமையை மதிக்கும் அனைத்து மலேசியர்களும் கட்சி, மொழி, இன பேதங்களின்றி போர்க்குற்றவாளிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றுகூடவேண்டும் என்று முன்னாள் நகராண்மைக் கழக உறுப்பினருமான சேகரன் கேட்டுக்கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்....எம் உறவுகள்....கண்ணால் கண்டு அறியாதவர்கள்......இதனை...எம்மிடையே இருந்து காட்டி கொடுக்கும் கூட்டம் படித்தாவது திருந்தட்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.