Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்! நேர்காணல் – ஆன் (உளவியலாளர்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்! நேர்காணல் – ஆன் (உளவியலாளர்)

உளவளத்துறையில் கற்றுள்ள ஆன், அதன்மூலம் சேவைகளைச் செய்ய விரும்புகிறார். ஒரு பெண் உளவியலாளரான இவர் யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும் சேவையாற்றுவதே தன்னுடைய இன்றைய விருப்பம் என்கிறார் . உளவியலார் “ஆனு”டன் உளவளத்துணை, போரின் பின்னரான அதன் தேவைகள், இந்தச் சேவைகளைச் செய்வதில் உள்ள பிரச்சினைகள், உளவளத்தினால் கிடைக்கும் பெறுபேறுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசினேன். இந்த நேர்காணல் கடந்த ஓகஸ்ற் மாதம் கொழும்பு ஜானகி ஹொட்டேலில் செய்யப்பட்டது. கூடவே சக ஊடக நண்பர்கள் ந. பரமேஸ்வரன் மற்றும் சு.சிறிகுமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

-சந்திப்பும் தொகுப்பும் -கரன்

00௦௦௦௦

*யுத்தப்பாதிப்புகளில் முக்கியமானது உளப்பாதிப்பு. பிற பாதிப்புகளை நிவர்த்தி செய்வதைப்போல இதை உடனடியாகச் சீராக்கிவிட முடியாது. இந்த நிலையில் ஏற்பட்டிருக்கும் உளப்பாதிப்புகளை எப்படிச் சீர்செய்யலாம்?

இதைப் அனர்த்தத்துக்குப் பிந்திய – அதிர்ச்சிக்குப் பிந்திய உளத்தாக்கம்Post Traumatic Stress Disorder (PTSD என்று சொல்வதுண்டு. இயற்கை அனர்த்தம், மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற யுத்தம் மற்றும் கலவரம் வன்முறை போன்ற அனர்த்தங்களில் விளைவாக இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.

இலங்கையின் வடக்குக் கிழக்கில் இந்தப் பாதிப்புகள் இரண்டு காரணிகளாலும் ஏற்பட்டுள்ளன. சுனாமி என்ற இயற்கை அனர்த்தத்தினாலும் மனிதர்கள் உருவாக்கிய போரினாலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

உண்மையில் இது ஒரு பாரிய பிரச்சினை. சமூகத் துறைகளில் செயற்படுவோருக்கும் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தப் பிரச்சினையின் தாக்கத்தைப் பற்றி நன்றாகவே தெரியும்.

நான் வன்னிக்குப் பயணித்தபோது இந்த மாதிரிப் பாதிப்புக்குள்ளானவர்களின் நிலைமையை அவதானித்தேன்.அவர்களுக்கு பல விதமான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது ஒரு அவசியமான பணி.

சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புகளின் வலியோடு யுத்தப்பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள் அங்குள்ள மக்கள். யுத்தப் பாதிப்பை மட்டும் சந்தித்தவர்களும் உண்டு.

இந்தப் பாதிப்புகள் பல வகையானவை. அனர்த்தத்தின் போது உறவுகளை இழந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள், உடல் உறுப்புகளை இழந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள், சொத்துகள், உடமைகளை இழந்ததால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், தொழில் மற்றும் வருமானத்தை இழந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சொந்தங்களைப் பற்றிய தகவல் இல்லாத நிலையில் (காணாமற்போனாரின் பிரச்சினையால்) ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்று இந்தப் பாதிப்புகள் பல வகைப்படுகின்றன.

சில பாதிப்புகள் நீண்டகாலத் தன்மையுடையன. சில இடைநிலைத்தன்மையுடையன. சில பாதிப்புகள் குறுகிய காலத்திற்குரியன. ஆனால் எல்லாப் பாதிப்புகளும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதையே நாங்கள் கவனிக்க வேண்டும். இந்தப் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பின்னர், ஒரு சிதைவடைந்த, வீரியமற்ற ஒரு சமூகத்தையே நாம் எதிர்கொள்ள வேண்டியேற்படும்.ஆகவே இந்தப் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு வாய்ந்த பணி சம்மந்தப்பட்டவர்களிடம் உள்ளது.

*இந்தப் பாதிப்புகளினால் பாதிக்கப்பட்டோர் எத்தகையவர்கள்? அவர்களை எப்படி அணுகமுடியும்?

இந்தப் பாதிப்பில் பொதுவாக மூன்று வகையினர் உள்ளடங்குவர். 1. பொதுமக்கள். 2. பாதிப்பை உருவாக்குவோர். 3. மீட்க உதவுவோர். சம்மந்தப்பட்ட களத்தில் இருப்பதாலோ அல்லது அங்கிருப்பவர்களோ மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இந்தப் பாதிப்புகளைப் பற்றிக் கேள்விப்படுவோரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். உதாரணமாக போரின்போது உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்கள் (புலம்பெயர் தமிழர்களும்) பலர் உளரீதியான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்தப் பாதிப்பு உறவுகளின் பாதிப்பு என்ற வகையில் உணர்வு ரீதியாக ஏற்படுவது. இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அவசியம்.

முதலில் அதிகமான பாதிப்புக்குள்ளாகுவோர் பொதுமக்களே! இவர்கள் பாதுகாப்புக்குறைந்த நிலையில் உள்ளனர். இதனால் உடனடியாகவே பாதிப்புக்குள்ளாகின்றனர். அதேவேளை உடனடியாக தமக்கேற்படும் பாதிப்பிலிருந்து மீளவும் முடியாதிருக்கின்றனர்.

அடுத்த தரப்பினர், பாதிப்புகளை ஏற்படுத்துவோர். இவர்களும் ஒரு கட்டத்தில் ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். பாதிப்புகளுக்குக் காரணமானவர்கள் என்ற அடிப்படையில் இவர்களுடைய பாதிப்பு அமைகிறது. குற்றவுணர்ச்சி சார்ந்த பாதிப்பு. கையாலாக நிலையிலான பாதிப்பு என இதை நாம் அடையாளம் காண முடியும்.

இந்த வகையான பாதிப்புக்குள்ளாகியோரை நாம் பல இடங்களிலும் அவதானித்துள்ளோம்.

*சரி, இவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள் எவ்வாறு அமையும்?

இதை நாம் மூன்று பிரதான வகைப்படுத்தலுக்குள் கொண்டு வரலாம். 1. குழந்தைப் பருவத்தினர். 01 தொடக்கம் 19 வயது வரையானவர்கள். 2. இளமைப்பருவத்தினர். 20 தொடக்கம் 45 வயதுடையோர். 3. முதுமைப்பருவத்தினர். இவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டோர்.

இவர்களை நாம் அணுகும் வரையில் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் தன்மையும் அளவும் தெரியாது. வகைப்பாடுகளை நாம் மதிப்பிட்டாற்தான் அதற்கான சிகிச்சைக்கான வரைவை வரைய முடியும்.

*பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது?

இதுதான் கடினமான காரியம். உண்மையில் பாதிக்கப்பட்டவர்களையும் பாதிப்பின் தன்மை அல்லது பாதிப்பின் வகையையும் தெரிந்து கொண்டால், பின்னர் நாம் அவர்களுக்கான சிகிச்சையினை மேற்கொள்ளலாம். ஆனால், பாதிப்படைந்தவர்களை அணுகுவதும் அடையாளம் காண்பதுமே கடினமானது.

இதை அடையாளம் காண்பதற்கு உளவளம் படித்தவர்களால் கூடிய சாத்தியங்கள் உண்டு.

*பாதிக்கப்பட்டவர்களை பொதுவாக அடையாளம் காண்பது சாத்தியமா? உளவளத்துறையில் படித்தவர்களைத் தவிர வேறு எப்படிச் சாத்தியம்?

இளம்பிராயத்தினர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுடைய வயதை மீறிய மறதியும் பதற்றத்துக்கும் உள்ளாகியிருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் அவதானக்குறைவு, சோர்வு போன்ற தாக்கங்களுக்கும் உட்பட்டிருப்பர்.வன்னிப்பகுதியில் இத்தகைய பாதிப்பு நிலையில் உள்ள பல சிறார்களை நாம் பல பாடசாலைகளிலும் அவதானித்துள்ளோம். இதைப் பற்றிய அவதானங்களை அங்குள்ள ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இத்தகைய குறைபாடுகள் இவர்களுடைய எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்கும். இவர்கள் தங்களுடைய இந்த நிகழ்காலத்தை இழக்கும்போது, சக பிள்ளைகளோடு சமமாகப் பயணிக்க முடியாமற் திணறும்பொழுது இவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்டே தீரும்.

எனவே இந்தச் சிறார்களை நாம் கூடிய கவனத்திற்குட்படுத்தி, இவர்களுக்குத் தேவையான பணிகளைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆயிரக்கணக்கில் இருக்கும் இந்தச் சிறார்கள் நாளை நலிவுற்ற சமூகமொன்றின் பிரதிநிதிகளால் நிரப்பப்பட்டதாகவே இருக்கும்.

*இது தொடர்பாக உங்களுடைய சிகிச்சைத் திட்டம் எவ்வாறு அமைந்துள்ளது?

முதலில் இந்தப் பிரச்சினையையும் இதன் தாக்கத்தையும் இதன் விளைவையும் நாம் அறிந்து உணர்ந்ததே எமது சிகிச்சைத்திட்டத்தின் முதற்படியாகும். தொடர்ந்து இவர்களை மகிழ்ச்சிப் படுத்தல், நம்பிக்கையூட்டல், ஆதரவளித்தல், தேவைகளைப் பூர்த்தி செய்தல், அரவணைத்தல் என இவர்களின் வேர்களைத் துளிர்ப்படைய வைத்தல் என இது அடுத்த கட்டமாக அமையும்.

இவ்வாறே அடுத்த பருவத்தினருக்கான சிகிச்சை முறைகளும் பராமரிப்புகளும் அமையும்.

உளவளத்துணை என்பது பல ஒருங்கிணைப்புகளைக் கொண்டது. தொழில், உறவு மற்றும் ஆதரவளிப்பு, உதவி எனப் பல நிலைகளையுடைய தொழிற்பாட்டையுடையது.

முதிய வயதினர் தங்களின் பாதுகாப்பு, தாம் அனுபவிக்கும் தனிமை போன்ற காரணங்களினாலும் ஆதரவற்ற நிலையினாலும் அந்தரிப்புக்குள்ளாகின்றனர். சேர்த்து வைத்த சொத்துகள் மற்றும் உடமைகளும் அனர்த்தத்தினால் அழிந்து விட்ட நிலையில் பிள்ளைகளும் இல்லை என்ற இரட்டைத் தாக்கம் ஆறுதலற்ற – அமைதியற்ற நிலைமையை உருவாக்குகிறது.

இவர்கள் தங்களுக்கான உரிய வழிகளைக் காண உதவுவதும் இவர்களை ஆறுதற்படுத்துவதும் அந்தரிப்பு நிலையை நீக்குவதும் இவர்களுடைய உளவளத்துணையில் முக்கியமானவையாகும்.அடுத்தது பாதிப்புகளை உருவாக்கியோர் அல்லது பாதிப்புகளுக்குக் காரணமாக இருந்தோரின் நிலை தொடர்பாக…

உளவியற் பாதிப்படைந்த போராளிகள் பலரை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அதைப்போல படைத்தரப்பிலும் உண்டு. இந்தத் தன்மை போர்க்காலத்தையும் விட போருக்குப் பிந்திய நிலையில்தான் அதிகமாக உணரப்படுகிறது.பொதுவாக நிரந்தர மனநோயாளிகளாகும் தன்மை அதிகரித்துக் காணப்படுகிறது. அல்லது நிரந்தர உளப்பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையும் தன்மையும் கூடிச் செல்கிறது. இதை நாம் அவசரமாகத் தடுக்க வேணும்.

*உண்மைதான். நாங்களும் இவற்றைப் பற்றிய அவதானிப்பைக் கொண்டுள்ளோம். இதை ஒரு சமூகநிலையில் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? அல்லது மாற்றத்துக்குட்படுத்த இயலும்?

பாதிக்கப்பட்டிருப்போருக்கான உதவிகளைச் செய்வதன் மூலமாகப் நேரடிப் பாதிப்புக்குள்ளாகியிருப்போரும் அதிலிருந்து மீளக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய உதவிகளைச் செய்வதன்மூலம் தொலைவில் இருந்து கேள்விப்படுவதன் ஊடாக, வெளியரங்கில் இருப்பதன் காரணமான பாதிப்புக்குட்பட்டோருக்கும் ஒரு உளச் சமநிலை, உளத்திருப்தி ஏற்படுகிறது. இந்த ஆறுதல் முக்கியமானது. உதவிகளைச் செய்வதன் மூலமாக அதிலிருந்து மீள்தல்.

இத்தகைய உதவி முறை மூலம் மன நெருக்கடிப் பிராந்தியத்திலிருந்து மீளும் நிலை பல இடங்களிலும் ஏற்பட்டுள்ளது. இது அவசியமானது. இந்த நிலை இல்லையென்றால் இந்தப் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும்.

இது கவுன்ஸிலின் என்ற முறையில் துறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அது சமூகமயப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது. அப்படி மாறவும் வேணும். அன்று கூட்டுக்குடும்பத்தில் இருந்த அரவணைப்பு, அக்கறைப்பாடுகள், ஆலோசனைகள் வழங்குதல், அன்பு பாராட்டுதல் போன்றவற்றை சமூக நிலைப்பட்டுச் செய்ய வேண்டியுள்ளது.

இதைத்தவிர, மதம் சடங்கு போன்றவற்றின் பங்கும் இதில் உண்டு. ஆனால், இதில் சிக்கி மேலும் பாதிப்புக்குள்ளாகும் நிலையும் உள்ளது.திரும்பவும் சொல்கிறேன், இந்தப் பணியில் முக்கியமானது இவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு உதவுதலும் நம்பிக்கையை ஊட்டுதலும் ஆகும்.

*நீங்கள் சொல்கிறபடி இந்த விதமான பணிகளில் ஒரு பெரும் திரட்சியை எப்படித் தீர்ப்பது?

இதில் பலருக்கும் பொறுப்புகள் உண்டு. மதகுருமார், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தொண்டுநிறுவனங்கள், அவற்றின் பணியாளர்கள், பொதுச்சேவையாளர்கள் எனப்பலரும் இந்த நிலையை, தங்கள் முன்னே உள்ள இந்தப் பாரிய பிரச்சினையை விளங்கிக் கொள்ள வேண்டும்.தொடர்ந்து உரிய தரப்புகளுடன் தொடர்பு கொண்டு உதவி, இந்தப்பிரச்சினையைச் சீர் செய்ய வேணும்.

முக்கியமாக பாடசாலை மட்டத்தில், கிராம மட்டத்தில், பிரதேச மட்டத்தில் என இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. நீண்டகாலப் பாதிப்பு மற்றும் பெரிய அளவிலான தாக்கம் என்பவற்றுக்குரிய வகையில் ஊர்களைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.

இதன் அடிப்படைகள் பாதுகாப்பு, உதவி, சிகிச்சை, நம்பிக்கை, முன்னேற்றத்துக்கான ஏற்பாடு போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

http://eathuvarai.net/?p=2086

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.