Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையே இன்றைய நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம்

Featured Replies

நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையே இன்றைய நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம்: (தமிழாக்க கட்டுரை)

(டெயிலி மிறர் ஆசிரியர் தலையங்கம் - தமிழாக்கம் நக்கீரன்)

நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மக்கள், பொதுமக்கள் செயற்பாட்டுக் குழுக்கள் முன்வந்து பரப்புரை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமை மக்களாட்சி முறைமையின் அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இன்று தடுப்பு மற்றும் சமநிலை (checks and balances) சிறிதளவு அல்லது முற்றாக இல்லை. காரணம் கட்டற்ற ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் ஆகும். இன்று அரசியல் குற்றமயப்படுத்தப் பட்டுள்ளது. குற்றம் அரசியல்மயப்படுத்தப் பட்டுள்ளது.

1978 க்குப் பின்னர், முக்கியமாக 17 ஆவது சட்ட திருத்தத்தை இல்லாது செய்துவிட்டு 18 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய போது நல்லாட்சி, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளார்ந்த உண்மைத்தன்மை போன்ற சனநாயக கோட்பாடுகள் காற்றோடு போய்விட்டன. அதற்குப் பதிலாக சர்வாதிகாரத்தன்மை, எதற்கும் தலையாட்டும் நாடாளுமன்ற முறைமை, தாங்கள் செய்வதே சரி, பாசாங்குத்தன்மை மற்றும் ஏமாற்றல் ஆகியவற்றையே நாம் பார்க்கிறோம். உள்ளார்ந்த உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றன, ஆனால் அவை பெரும்பான்மை மக்களுக்கு இப்போது வெறும் பகட்டு ஏமாற்று என்பது தெரிந்துள்ளது. காரணம் அத்தகைய உறுதிமொழிகள் சம்பள உயர்வாகட்டும் நாட்டின் செல்வத்தையும் வளங்களையும் சமமாகப் பங்கிட்டு வழங்குவதாகட்டும் அல்லது உண்மையான மீள்நல்லிணக்கத்துக்கு ஏதுவாக இனச் சிக்கலுக்கு ஒரு நீதியான மற்றும் நியாயமான தீர்வை காண்பதாகட்டும் இவை ஒன்றிலும் அரசு அக்கறையோடு செயற்படவில்லை.

இன்று ஏமாற்றலின் ஒரு பகுதி எதுவென்றால் நுட்பமான திசைதிருப்பல் ஆகும். எடுத்துக்காட்டாக அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள குறைந்தது மூன்று பங்காளிக் கட்சிகள் 13 ஆவது சட்ட திருத்தத்தை நீக்கிவிட வேண்டும் எனப் பரப்பல் செய்கின்றன. அதேசமயம் அனேக தன்னாண்மை (independence) அரசியல் நோக்கர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் இன்றைய நெருக்கடிக்குரிய காரணம் முழு அதிகாரம் படைத்த நிறைவேற்று சனாதிபதி முறைமையே என்பதில் உடன்படுகிறார்கள்.

மேலும் தியூனிசியா, எகிப்து மற்றும் லிபியா போன்ற நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகள் அராப் வசந்த மூலம் கவிழ்க்கப்பட்டபோது மக்களது ஆற்றலைப் பார்த்தோம். சிறீலங்காவில் மக்களாட்சிமுறைமை மீள் உருவாக்கப்படுவது சனாதிபதி மகிந்த இராசபக்சேயின் அரசியல் வல்லமை படைத்த செயலால் மட்டுமே அமையலாம். அவருக்கு முன் சனாதிபதியாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா 1994 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது தான் பதவிக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி ஆட்சிமுறைமை 24 மணித்தியாலத்தில் ஒழிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி ஆட்சிமுறை ஒரு சாபக்கேடு என அவர் நினைத்தார். ஆனால் சாபக்கேடு அவருக்கு ஒரு கொடையாக அமைந்தது. இப்போது குமாரதுங்கா தான் செய்த அல்லது செய்யத்தவறிய செயல்களால் ஏற்பட்டுள்ள பெருங்கேட்டை உணர்கிறார். ஆகவே சனாதிபதி மகிந்த இராசபக்சேயும் சந்திரிகா குமாரதுங்கா உருவாக்கிய குளறுபடிபோல் நடந்து கொள்ளக் கூடாது. நாட்டை ஏமாற்றலுக்கும் பேய்க்கும் உரிய நரகத்துக்குள் மூழ்கடித்து விட்டோம் என்பதை காலம் தாழ்த்தி உணர்ந்து கொள்ளக்கூடாது.

இன்று நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளில் ஒன்று நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். இந்த அழுகல் நோய் அல்லது அரசியல்மயப்படுத்தல் சனாதிபதி குமாரதுங்கா உச்சநீதி மன்ற மூத்த நீதியரசர் மார்க் பெர்னாந்துவை ஒதுக்கிவிட்டு தலைமை நீதியரசர் ஆக சரத் சில்வா அவர்களை நியமித்ததோடு தொடங்கியது. இப்போது கொண்டுவரப்பட்டுள்ள துரோகக் குற்றச்சாட்டுத் தீர்மானம் - இது தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக எடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல் என உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலாகக் கண்டிக்கப்பட்டுள்ளது - 1999 இல் தொடக்கப்பட்ட அந்த அழுகல் நோயின் பின்விளைவாகும்.

இந்தத் துரோகக் குற்றச்சாட்டுத் தீர்மானம் மீளாய்வு செய்யப்படாவிட்டால், நீதித்துறையின் தன்னாண்மைக்கு பொறுப்புறுதி வழங்கப்படாவிட்டால் சிறீலங்கா உரூவண்டா அல்லது சோமாலியா போல மாறிவிடும் அபாயம் உள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=70936&category=TamilNews&language=tamil

"தமிழர் இறந்து விட்டார்கள். இனி நாம் சுகமாக வாழ வேண்டும்" என்று ஆசைப்படும் ஒரு கனவுக் கட்டுரை. இலங்கையின் பிரச்சனை இனத்துவேசம். அதுதான் D.S. 50:50 கிடைக்கவிடாமல் எதிர்த்ததின் காரணம். இல்லையேல் தமிழர் சரவாதிகார ஜனாதிபதியை பாரளுமன்றம் 65 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து ஏற்படுத்தியபோது அதை 50:50தை வைத்து தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.