Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலை மாணவர்களின் போராட்டத்தை சிதைக்க சிங்களத்துடன் கைகோர்த்துள்ள ரெலோ .

Featured Replies

2012 நவ 27 நடந்து முடிந்த மாவீரர் தினம் பல திடுக்கிடும் அச்சமூட்டும் செய்திகளை தாயகத்து தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தமிழீழத்தில் இன்று வெளிப்படும் இன உணர்வுகளை துடைத்து அழிப்பதற்கான பெருத்த அடக்குமுறை அச்சுறுத்தல் ஒன்றை தமிழீழ மாணவர் சமூகத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர். இதன்மூலம் அனைத்து தாயக தமிழர்களுக்கும் எதிர்காலத்தில் பெருத்த உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.

மாவீரர் வாரம் ஆரம்பமான நாட்களில் இராணுவ அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது முல்லைத்தீவு, வலைஞர்மடம், மட்டக்களப்பு யாழ்ப்பாணம் என பரவலாக பலபகுதிகளிலும் கொடி ஏற்றும் சம்பவங்களும் சுவரொட்டிகளும் உணர்வாளர்களால் இரவோடு இரவாக செய்யப்பட்டிருந்தது. இந்தச்செயற்பாடு பல்கிப்பெருகிவிடும் என்ற அச்சம் காரணமாக ஒரு அடக்குமுறையை ஸ்ரீலங்க புலனாய்வுத்துறை தமிழர்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

சர்வதேசத்துக்கு தமிழர்களை கிளர்ச்சிவாதிகளாக சித்தரித்து காட்டும்முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களை தெரிவுசெய்து கிளர்ச்சிவாதிகளாக இனங்காட்டி இராணுவமும் பொலிஸும் துப்பாக்கிமுனையில் பெருத்த வன்முறையை யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏவிவிட்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தது. இதன் பின்னணியில் இருப்பது ஈபிடிபி போன்று புதிதாக இனங்காணப்பட்டிருக்கும் “ரெலோ”( ஸ்ரீரெலோ) என்ற ஒட்டுக்குழு என்ற பயங்கரம் வெளியாகியிருக்கிறது.

பல்கலைகழக மாணவர்களை மிரட்டி அடக்குமுறைக்குள் கொண்டுவந்து எந்த ஒரு தேசிய விழிப்புணர்வையும் மேலோங்க விடாமல்த்தடுப்பதற்கு ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை தமிழ் கைக்கூலிகளை அமர்த்தியிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் இன்று கிடைத்திருக்கின்றன. கடந்த காலங்களில் அரசியல் நீரோட்டத்தில் கலக்காமல் இராணுவ உளவாளிகளாக பணியாற்றிய ரெலோ இயக்கத்தின் ஒரு பிரிவினர் “ஸ்ரீரெலோ” என்ற நாமகரத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் நேரடி ஆதரவுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் பின்புறமாக அலுவலகம் ஒன்றை அமைத்து செயற்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்துவருவதாக தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

2009 க்கு முன் யாழ், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய இடங்களில் தலைகாட்ட முடியாத ஈ பி டி பி, புளொட், ஈபிஆர்எல்எவ் ரெலோ ஆகியவற்றின் சில சிறிய குழுக்கள் வவுனியாவை மையமாக கொண்டு இராணுவத்தினருடன் இயங்கி வந்திருந்தது சகலரும் அறிவர். அவை அனைத்தும் இப்போ யாழ்ப்பாணத்தை தெரிவுசெய்திருப்பது அறியப்பட்டிருக்கிறது.

ரெலோ, வின் இத்தகைய தேசிய சமூக விரோத நாசகார நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாதது, இன்று தேசியக்கூட்டமைப்புடன் ஜனநாயக அரசியலில் சங்கமித்திருக்கும் ரெலோ இயக்க அரசியற் கட்சியினர் தமிழர் விரோத “ஸ்ரீரெலோ” ஒட்டுக்குழுவின் நடவடிக்கைகளை பற்றிய உண்மை நிலையை மக்களுக்கு பகிரங்கப்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் புறந்தள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்றே நம்புகிறோம்.

பல்கலை மாணவர்களின் தேசிய உணர்வை சிதைத்து,மலுங்கடித்து அற்றுப்போக செய்வதோடு இனி வரும் காலங்களிலும் பல்கலைக்கழகத்தில் எந்தவிதமான எழுச்சி நிகழ்வுகளோ அல்லது தேசியம் நோக்கிய வேலைத்திட்டங்களை மாணவர்களை செய்யவிடாமல் தடுக்கும் முகமாக யாழ்.பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக முகாம் இட்டு வேவு பார்த்துவரும் ரெலோவினர் தேசியம் சார்ந்த வேலைத்திட்டங்களையும் நிகழ்வுகளையும் முன் நின்று நடத்தும் மாணவர்களின் பெயர் விபரங்களை இனவாத சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினரிடம் வழங்கி பின் அந்த மாணவர்கள் மீது பொய்யான பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி குறிப்பாக தற்போது பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சிறீலங்கா ராணுவத்தினருக்கு எதிரான போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்கள் மீது பெற்றோல் குண்டுகள் வைத்திருந்ததாகவும் வன்முறையை கையிலெடுக்க இருந்ததாகவும் என்று பல பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.இதற்கு பல்கலைக்கழகத்திற்கு பின் புறம் முகாம் அமைத்துள்ள ரொலோ அமைப்பினரே காரணம் என்றும் மாணவர்கள் தொடர்பான தகவல்களை ரெலோ அமைப்பினரே புலனாய்வுப்பிரிவினருக்கு வழங்கியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்ள இடம்பெறாமல் தடுப்பதற்கு ஜனநாயக வழியில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை, சிறிலங்கைப் படையினரும் பொலிஸாரும் தடுத்து ஒடுக்குமுறையைப் பிரயோகித்ததை சர்வதேசத்திற்குச் சொல்லும் ஒரு போராட்டமாக அமைந்துள்ளது என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட விரிவுரையாளர்கள், “தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு தமிழர்கள் தீபமேற்றவும் தடையா?”, “யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவத்தினரின் காடைத்தனம்”, “கல்விக் கூடமா? இராணுவமுகாமா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து,

உணர்வாளன்.

http://thaaitamil.com/?p=39573

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.