Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூச்சாகி, நாளை முடி சூடும்...

Featured Replies

[size=4]தற்போது விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரதான ஈகைச்சுடரினை ஏற்றுகின்றார். சமநேரத்தில்... காற்றலையில் மிதந்து வரும் இந்த அறிவிப்பின் கனதி வெறுமனே வார்த்தைகளால் விவரிக்கும் அளவுடையதல்லவே.[/size]

[size=2]

[size=4]நேற்றும் கூட ஓயாமல் நினைவுகூர்ந்த இந்த வார்த்தைகளும் அந்த நொடிப்பொழுதுகளும் கண்காணாத இடம் புரியாத இவ்வுலகின் புள்ளியொன்றுக்கு புலம் பெயர்ந்துள்ளமையைத் தவிர வேறெந்தப் புறமாற்றமும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும் பக்குவம், ஈழத்தமிழர் உணர்வெழுச்சி சுமக்கும் நெஞ்சங்களின் காலக்கடமைகளில் ஒன்று.[/size][/size]

[size=2]

[size=4]"சுலபமாக மறந்துவிடும், வேகமாக மரத்துவிடும்'' நினைவுகளல்ல நாம் சுமப்பவை என்பதை நிரூபிப்பதற்கு ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் "கார்த்திகை' கொடுக்கும் சந்தர்ப்பம் இஃது. அதையே, மனம் என்னும் இரசாயனத்தின் மாற்றீடுகளுக்குள் செறிவிழந்து போகாத நினைவு மீளலினுள் கொஞ்சம் கண்ணீருடனும் நிறைய கனவுகளுடனும் காலாற நடப்போம், இவ்வாரம் வாருங்கள் நண்பர்களே.[/size][/size]

[size=2]

[size=4]பிதிர்க் கடமை ஈழத்தமிழனால் பின்பற்றப்படுகின்ற இரு பிரதான மதங்களினாலும், போதுமான நம்பிக்கைகளுடன் வலியுறுத்தப்படுகின்ற விடயம். ஆதித் தமிழ்க் குடிகளான இயக்க நாகர்களின் "ஈழத்தாழி' நடைமுறையானது, மரணத்தின் பின்னான வாழ்வின் பற்றுதல்களை எம்மினத்தின் முதல் வேரிலேயே சேர்த்துப் பின்னி வைப்பதற்கான காரணமாக அமைந்திருக்கலாம்.[/size][/size]

[size=2]

[size=4]ஈழத்தின் சைவப் பெருமக்கள், நீத்தவர் ஒவ்வொருவருக்குமான தனித்தனியான திதிகளோடு பொதுக்கடமை நோன்பு தினங்களாக சித்திரா பௌர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவற்றை அனுஷ்டிப்பதும் கிறிஸ்தவப் பெருமக்கள் நவம்பர் மாத முழுமையையுமே ஆன்மாக்களின் மாதமாகவும் புனிதர்களை நினைவு கூர்வதற்கான பிரார்த்தனைக் காலமாக பயன்படுத்துவதும் எம்மினம் சார்ந்துள்ள சமயங்களால் இறுக வலியுறுத்தப்படுவதற்கான சான்றுகள். [/size][/size]

[size=2]

[size=4]வெற்றுச் சடங்குகளாக இல்லாமல் பயபக்தியோடு கூடிய ஆழ்மன உணர்வுகளாக வாழும் உடல் சுமந்த வாழும் உயிர்களின் நீள நினைவுகளில் நனைவது அவர்கள் காலத்தினால் செய்த நன்றிகளை "ஞாலம் பெரிதாக்கிச் சுமக்கும்' நல்ல தமிழ்ப் பண்பாடு. உயிர் ஒடுங்கலின் பின்னான வெற்றுடலினை, பஞ்ச பூதங்களிடமும் ஒப்படைக்கும் வீர சைவப் பழக்கம், மண் மீது கிடத்தி, தீயிட்டு எரித்து, காற்றில் ஆவியாக்கி, நீரில் கரைத்து, விண்ணேகிய உயிருக்கான எச்சத்தை சக்திகளாக்கி விடுகின்றது. [/size][/size]

[size=2]

[size=4]ஆயினும் பெரும்பான்மையில் இந்து இளைஞர்களையே கொண்டிருந்த விடுதலை இயக்கம் ஒன்றின் அங்கத்தவர்களை வீர மரணத்தின் பின், கிறிஸ்தவ மத வழக்கத்தோடு பெரிதும் இணங்கும் பூமிக்குள் மட்டுமே புதைக்கும் நடைமுறையை அசாதாரணமான புரிதலோடு ஒத்திசைந்தோம் என்பது அளப்பரும் ஆச்சரியம் இல்லையா? [/size][/size]

[size=2]

[size=4]கனவுகள் நிறைவேறிவிடாத, வாழ்ந்த வயதை அடைந்துவிடாத இளசுகளின் அகாலமரணத்தின் போது எரியூட்டாமல், புதைத்துவிடுகின்ற விதிவிலக்கு மட்டுமே காணப்படுகின்ற உலகின் ஆதிச் சமயங்களில் ஒன்று, "இனவிடுதலை' என்ற தீராக்கனவின் வழிச் சென்று, உயிர்க் கொடை தந்தவர்களின் மறுவுலக வாழ்வு தொடர்பில், தனது இறுக்கமான சடங்கு, சம்பிரதாய, சாத்திரங்களை முற்றிலும் தகர்த்தெறிந்து "விதைத்தல்' என்கின்ற சொல்லாடலையும், செய்கையையும் தன்னுள் உள்வாங்கிக் கொண்டது எங்ஙனம்?[/size][/size]

[size=2]

[size=4]"மானுட வாழ்வினை, நெறிப்படுத்துபவையாகவே கைக்கொள்ளப்படுகின்ற மதங்கள், மனிதக் கூட்டமொன்றின் அவலத்தின் மீட்பர்களாக தம்மைத் தாமே செதுக்கிக் கொண்டவர்களின் தற்தியாகத்தின் முன்னால், தம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஒதுங்கிக் கொண்டன' எனப் பொருள்கோடுவதில் தப்பேதுமில்லை. இதுவே அடக்குமுறையும், அடக்குமுறைக்கு எதிராகக் கொதித்தெழுந்த ஆக்ரோஷமும் எமக்குத் தந்துவிட்டுப் போன, முற்தீர்ப்பும், முன்னுரிமை கலந்த பாடமுமாகும். [/size][/size]

[size=2]

[size=4]"மெலிதைக் கொன்று வலிது வாழும்' உயிரியல் தத்துவம் செறிந்து நிறைந்த உலகில், "மெலிதின் எழுச்சி'யின்போது கட்டுமீறுகின்ற "அகம்' சார் தூண்டல்களின் முன்னால் "புறம்'சார் சேர்க்கைகள் வேக, வேகமாக வன்மையிழக்கக் கூடும். "தமிழன் தமிழ்' என்கின்ற இன மொழி கோர்த்த பேரெழுச்சியின் பால் அத்தனை லட்சோபலட்சம் ஆத்மாக்களை உந்தச் செய்த மனித சக்தி உடைத்தெறிந்தது, "இந்து', "சைவம்', "றோமன் கத்தோலிக்கம்', "புரட்டஸ்தாந்து', "பெந்தெகொஸ்தே' போன்ற புற அடையாளங்களை இவற்றில் "எது பெரிது எது வலிது' என்கின்ற முடிவுக்குள் எம்மைத் தூண்டிய "பௌத்த சிங்களம்' இக்கணத்தில் எம் நன்றிக்குரியதும் கூட. [/size][/size]

[size=2]

[size=4]என் மகனின் வித்துடலை புதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்து மயானமொன்றில் எரித்தே தீருவேன் என்று திரு திருமதி கனக சபாபதியும், "என் மகளின் ஆத்ம வழி பாட்டுக்கு கற்பூரம், சாம்பிராணி பாவிப் பதை விடுத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்'' என்று திரு திருமதி டேவிட் செபஸ் ரியனும், எள்ளளவிலேனும் எண்ணிவிடாத படி, "தமிழீழம்' என்கின்ற மதமதிப்பற்ற மகா கனவு எம் சொல், செயல், சிந்தனைகளை பிணித்திருந்ததெனில், நாம் ஒவ்வொருவரும் அன்னை திரேசாக்களே. நாம் ஒவ்வொருவரும் சுவாமி ஞானப்பிரகாசர்களே. நாம் ஒவ்வொருவரும் தந்தை பெரியார்களே.[/size][/size]

[size=2]

[size=4]அதேபோராட்ட இயக்கம், சாதி கடந்த கலப்பு மணங்களை ஊக்குவித்ததென்பதும் சாதிக் கட்டமைப்புகளுடனும் வீண் கட்டியம் பேசிய சமூக அமைப் புகளான கோயில்கள், பாடசாலைகள், விளையாட்டு அமைப்புகள், உயர் கல்வி நிறுவனங்கள், பொது அமைப்பு கள் போன்றவற்றில் சமத்துவம் தழைக்க தம்மாலான முயற்சிகளை முன்னெடுத்த தென்பதும் மறக்க முடியாதது. [/size][/size]

[size=2]

[size=4]ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிவில் நிர்வாகத்தின் கீழான அத்தியாயங்களின் பெறுகையில், மத சமத்துவத்துக்குக் கிடைத்த பரிபூரண வெற்றியும், பல்திசை ஆசீர்வாதங்களும், சாதிச் சமத்துவத்துக் குக் கிடைத்திருக்கவில்லை என்பதும் மறுக்க முடியாதது. இந்த "நாய்வாலை' நிமிர்த்திட அவர்களும் ஒரு காலத்தில் முயன்றார்கள் என்பதே இன்றளவு வரைக்கும் வரலாற்றின் பதிவு.[/size][/size]

[size=2]

[size=4]மேலாக "சமயம்', "சாதீயம்' போன்ற சுலபமாக உசுப்பேறி விடக்கூடிய சமூகப் பாகுபாடுகளிலிருந்து நிறைந்தளவு வெளியேறிச் சிந்திக்கவும், நெஞ்சார்ந்து புரிந்துணர்வுடன் கூட்டிணையவும், "அவலத்தை தந்தவனுக்கே, அவலத்தை திருப்பித் தரும் ஆயுதப் போராட்டம்', ஈழத் தமிழினத்தின் ஒவ்வொரு தனியனையும் புடம்போட்டது புரட்டிப் போட்டது! [/size][/size]

[size=2]

[size=4]முடிவு "இதுதான் பெரிது, இதுதான் வாழ்வு, இதுதான் கௌரவம், இதுதான் மானம்' என்று வாழ்ந்த எம் கிராமத்து மனிதர்கள் உலகளவு வியாபித்து பேசப்படும் "விடுதலைப் போராட்டத்தின்' வீரியம் கெடாமலிருக்க, "அதையதையெல்லாம்' வீசியுமெறியத் தயாராகவிருந்தார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]செருப்புத் தைக்கும் குடும்பத்தில் வந்த ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியானதையும், ரயில் நிலையத்தில் வீசப்படுகின்ற தினசரிப் பத்திரிகைக் கட்டுகளை ஓடிப்பொறுக்கிச் சேர்த்த அப்துல் கலாம் அணுவிஞ்ஞானியாகியதையும் கால காலமாக, "தாழ்ந்திருந்தவர்களின் எழுச்சிக்கு'' பாடமாக படித்து வரும் நாங்கள், எம்மினத்தின்முதுகில் ஒட்டப்பட்டுள்ள இதேவகை பெருமிதப் பட்டியல்களை படிக்க மறந்தே போனோமே ஏன்?[/size][/size]

[size=2]

[size=4]"எட்டாம் வகுப்புக் கூட படித்து முடிக்காமல் தந்தைக்கு பெரும் தலைவலியாய் தெரிந்தவன் தானே அக்காவின் அணிகலனை "சுட்டு' விற்று ஆயுதம் வாங்கித் தொடங்கியவன் தானே உலகத் தமிழர்களின் தனித் தலைவன், "எந்தவொரு அரச பொதுப் பரீட்சையையும் எழுதியிருக்காத வெங்காய வரம்போர மேதை தானே, உயிர்மை குழைத்து தேச விடுதலை வரிகளை தன் விரல்களால் வடித்த புத்தூர் கவிஞன்,'' "தன் ஆரோக்கியத்துக்கு தானே கொள்ளி வைத்துக் கொண்ட புகையையும், மதுவையும் தவிர்க்கவே முடியாமல் தன்னையே உருக்கியதொரு முன்னாள் பேனாக்காரன் தானே ஆயுதப் போராளிகளை, உலகரங்குகளின் அரசியல் சதுரங்கத்தின் கிங் மேக்கர்களாக ஆக்கி வைத்த மதியுரை சாணக்கியன்,'' [/size][/size]

[size=2]

[size=4]"ஐந்து வயது வரை பேச்சு வராமல் பெற்றோரையும், உற்றோரையும் அஞ்ச வைத்த குழந்தை தானே, அகிலத்தின் அந்தளவு கேள்விகளுக்கும் முத்திரைச் சிரிப்போடு, பத்தரை மாற்றுப் பதில் தந்த அரசியல் செல்வன், "பலமான இடி மின்னலின் போது பாய்ந்தோடி வந்து தாயின் மடியில் பதுங்கிக் கொள்பவன் தானே, இளைஞனான பின்னால் நெல்லியடியில் முதலில் உயிரால் வெடித்தவன்'' நாளை வரும் எம் குழந்தைகளுக்கு இந்தக் கதைகளும், கதாநாயகர்களும் தெரிய வருகின்ற போது "பள்ளிக்கூடம் போகாத எடிசனும்'', "தான் வடித்த இசையை கேட்கவே முடியாத பீத்தோவனும்'' வெகு சாதாரணமாகவே தெரிவார்கள்![/size][/size]

[size=2]

[size=4]"நல்லூர் திருவிழா முடிகின்ற நேரம் தான், நான் வெடியோடு போக வேணும். தகவலறிந்து வீட்ட போற போராளித் தோழர்களுக்கு தேத்தண்ணி, சாப்பாடு குடுக்குற அளவுக்கு அப்பதான், கையில காசு இருக்கும்'' என்று சாவுக்கு, "மரணயோகம்'' கணித்து விட்டு, பயிற்சியில் ஈடுபட்ட அங்கயற்கண்ணிக்கு மேலதிகமாக தனக்கு மீறி தன் தாயை, தன் குடும்பத்தை, தன் சமூகத்தை, தன் இனத்தை, தன் தாய் மண்ணை நேசித்த ஒரு மகவை இவ்வுலகின் எந்த மூலையில் கண்டுவிடப்போகின்றோம்.[/size][/size]

[size=2]

[size=4]வெறும் பதினாறு வயதில், செத்தல் மிளகாய் நிரப்பிய சாக்குகளின் மேல் வெற்று மேனியோடு படுத்துருண்டு கடுமையான தேகப்பியாசங்களைத் தமக்குத் தாமே கற்பித்துக்கொண்ட அந்த ஐந்து ஏகலைவர்களின் குழந்தைக் குழு தான், மூன்று தசாப்த இனவிடுதலைப் போராட்டத்தின் கால்கோள் என்பதற்கு மேலதிகமாக, "விடாமுயற்சியே, விஸ்வரூப வெற்றி'' என்பதை எந்தப் புத்தகத்தின், எத்தனையாம் அத்தியாயத்தில் வாசித்து தெரிந்து விடப் போகின்றோம்.[/size][/size]

[size=2]

[size=4]தன் முன்னே செங்கொடி போர்த்தப்பட்டு, மலர்மாலை சூட்டப்பட்ட புகைப்படத்தில் கொடுப்புக்குள் கள்ளச் சிரிப்புடன் இமைகளில் நினைவாக ஏறி உட்கார்ந்திட்ட தலைமகன், உயிரை மட்டுமல்லாது உடலையும் துகள்களாக்கி, இலட்சியப் பதங்கமாதலில் இணைந்ததை அறிந்தும், தோழர்கள் சூழ்ந்து தந்திருக்கும் மூடிய பெட்டிக்குள் "என்ன இருக்கக்கூடும்'' என்கின்ற ஊகத்தை, சோகத்தில் கரைத்து விட்டு, காலத்தின் மேல் கொடுமை சொல்லி, ஊட்டிய மார்பில் ஊறலெடுக்குமளவுக்கு உருகிக் கதறிய பல்லாயிரம் அன்னையரின் வீரத் தாய்மைக்கு மேலாக, ஏன் இன்னமும் வேண்டும் எமக்கு "பழைய' புறநானூறு.[/size][/size]

[size=2]

[size=4]வீட்டிலிருக்கும் வரை ஆழக்கிணற்றில் வாளி வீசித் தண்ணீரள்ளுவதற்கு அனுமதிக்கப்படாத செல்லக் கடைக்குட்டிகளில் எத்தனை பேர், சோழன் மீதி வைத்த வங்கக் கடலின் அலைத்தூளியில், நீலநுரை எல்லைகளை எதிர்த்துடைத்து வானுக்கும் பூமிக்கும் எகிறிப் பாய்ந்து விளையாடப் போனார்கள்? [/size][/size]

[size=2]

[size=4]பென்சிலைச் சீவிய கூர்முனை, பெரி தூண் விரும்பி, விரலைக் கிழித்து விட்ட பிற்பக லொன்றில், குடும்பமே கூடி அழுகை மறக்கச் செய்த ஆசைச் செல்வங்களில் எத்தனைபேர், அசைய முடியாத ஆழ்காயம் கண்ட சமர்க்களத்தில், தான் சுமந்த சுடுகலத்தின் நெருப்பு முனையில் தன்னுயிரை மாய்த்து, களத் தோழனின் கையில் ஆயுதம் கொடுத்தனுப்பும் அமர வீரனாகிப் போனார்கள்? உண்மை சொல்லுங்கள் அன்பு நெஞ்சங்களே! [/size][/size]

[size=2]

[size=4]மேற்படி சம்பவக் கோர்வைகளால் சான்றாக்கப்பட்ட எம்மினத்தின் வீரவரலாற்றுத் துளிகளால் தம் குடும்பத்தில் கடுகளவேனும் பாதிப்புக் கண்டிராதவர்களும், பத்திரிகை பெட்டிச் செய்திகளில் மட்டுமே களமுனையை கதையாக படித்தவர்களும், வானொலி அறிவித்தலில் மட்டுமே வீரச்சாவு அறிவித்தலை கேட்டுவிட்டு நகர்ந்தவர்களும், சனல் 4 இனை சம்பிர தாயத்துக்காக பார்த்து வைத்து, "உச்'' கொட்டியவர்களும் தானே "விடுதலைப் போராட்டவேரை, வேகமாக மறக்கும்'' வியாதியின் நோய் காவிகள்?[/size][/size]

[size=2]

[size=4]இருபது வருடங்களுக்கு முன் கொடுத்த தங்கத்துண்டுக்கு, பற்றுச்சீட்டை பற்றியே வைத்திருந்து, வட்டியோடு மீட்டு வந்தவர்களின் வாய்தானே, ஆயுதக் கப்பல்களோடு முழ்கிய அந்நியப்பணத்தினை தசமதானத்தில் அச்சொட்டாகப் பேசுகின்றது பின்னேரத் திண்ணைகளில்? அவல் விரும்பி வெறுவாய் மென்பவர்களே! (அழைப்பதில் தப்பில்லை) அவரசமாக திருந்தி விடுங்கள். [/size][/size]

[size=2]

[size=4]இந்தக் கார்த்திகைக் கருக்கலுக்குள்ளாவது? நான்கு ஆண் மக்களையும் முல்லைத்தீவில், கோர ஆயுதங்கள் தின்ற அதர்மப்போரில் இழந்த பின்னரும், "தலைவர்'' என்றே இன்றும், "ஆர்' விடுதியில் மரியாதை மிகுந்து விளிக்கும் அறுபதைத்தாண்டிய என்பு தோல் மட்டுமல்லாது, அன்பும் போர்த்த அப்பனை நானறிவேன் நன்கு! கொழுத்த கம்பளிப் போர்வைகளுக்கு சொந்தக்காரர்களே, மார்கழிப் பனியை "மடமை' யென்று பழிக்கும் இழிவை எண்ணில் இனமே சிறுமை கொள்ளாதோ?[/size][/size]

[size=2]

[size=4]நாளைக்கும் நிலைக்கும் இலக்கி யங்களில், ஈழத்து விடுதலைப் போரின் வீரப்பக்கங்களை தெரிந்தே தவிர்க்கும் "சாகித்யரத்னா', "கலா பூஷண' "தேசமான்ய', "தேசகீர்த்தி' முன்தாங்கும் "கர்த்தா'க்களின் "நுனியமர்ந்து, அடிக்கிளை அறுக்கும்'' கூரிய(?) மொழி நோக்கின் போக்கினையாவது விரைந்து மாற்றி வைக்க மண்டாடுகின்றோம் எம் மாவீரர்களிடம், "ஒளியாகி எங்கள்.........''[/size][/size]

[size=2]

செந்தூரி [/size]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=4116742401604097

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.