Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் அபிவிருத்திக்கு 85 சதவீத நிதி ஒதுக்கீடு, அமைச்சர் பசில் கணக்கு

Featured Replies

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் அரசாங்கம் பெறும் கடன்கள் என்பனவற்றில் வடக்கின் அபிவிருத்திக்காக 85 சதவீதம் செலவு செய்யப்படுகிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ஷ தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வவுனியா சாளம்பைக்குளம் அல்-அஷா மஹாவித்தியாலயத்தின் மூன்று மாடிக்கான அடிக்கல்லினை நாட்டி வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீமா இலாஹி பலூஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

அமைச்சர் பசில் ராஜபக்­ஷ மேலும் தெரிவிக்கையில்,

 

 

வடக்கில் வாழும் மக்களுக்கு இன, மதம், மொழி, பிரதேசம் கடந்து ஜனாதிபதி தலை மையிலான அரசு பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் மற்றும் அரசாங்கம் பெறும் கடன்கள் என்பனவற்றில் 85 சதவீதம் வடக்கிலேயே செலவு செய்யப்படுகின்றது. ஆனால் வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் மக்களின் இரத்தத்தை சூடேற்றி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். இந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இங்கிலாந்திலும் ஏனைய நாடுகளிலும் கல்வி பயிலுகின்றனர். தேர்தல் ஒன்று வந்துவிட்டால் தமது பிரசன்னத்தை செய்வதுடன் வாரத்துக்கு ஒரு முறை இங்கு வரும் அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர். இந்த நாட்டில் சமாதானம் ஏற்படக் கூடாது என்பதில் சர்வதேச சக்திகள் முனைப்புடன் செயற்பட்டன. இன்றும் அவர்களது நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கின்றனர். இதனை குழப்புவதற்கு எந்த வல்லரசும் முனைந்த போதும் அதற்கு ஒரு போதும் எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு இடமளிக்காது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை மீட்டெடுப்பதே இதற்கான நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

http://www.valampurii.com/viewnews.php?ID=35723

இந்த படஜட்டுக்கு பிறகு சிங்களவர்களுக்கு காசுகள் எல்லாம் எங்கை போகின்றன என்ற கவலை வரத்தொடங்கியிருக்கிறது. அதனால் தான் 2013 வருமுன்னரே அது எல்லாம் யாழ்ப்பாணத்திலை போட்டாச்சு என்று சொல்லிவிட்டார். கடடினது சிங்கள ராணுவத்திற்கு கொட்டகைகளும் இராணுவத்திற்கு அதிரடி நடவடிக்கைகளுக்கு போக்குவரத்து வீதிகளும்.

யாழ்ப்பாணம் போய் சரியாக அங்கே என்ன நடந்திருக்கு என்று மட்டுக்கட்டும் ஆற்றல் சனத்திற்கு இல்லை என்பது இவருக்கு நன்றாகத்தெரியும்.

  • தொடங்கியவர்

நாட்டை பிரிக்கும்பொழுது கடனையும் பிரிக்கவேண்டும். எனவே வேண்டிய கடனில் எழுபது வீதத்தை தமிழர்களின் தலையில் சுமத்த இது உதவலாம்   :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.