Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபதிகள்,நீதவான்கள் கொழும்புக்கு அழைப்பு

Featured Replies

மாவட்ட நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் கொழும்புக்கு இன்று திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

 

 

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவே நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த அழைப்பை  விடுத்துள்ளதாகவும் விடுமுறை தினமான நேற்றைய தினமும் நீதிச்சேவை ஆணைக்குழு வேலைச்செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மாவட்ட நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் கொழும்புக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதனால் நீதிமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதம் அடைவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுக்கிறது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53953-2012-12-02-20-36-30.html

  • தொடங்கியவர்

#1 : If public confidence in the judiciary is lost there can be no rule of law.

 

This means Sri Lanka will have the law of the jungle with democracy buried in a white-washed sepulchre while dictatorial rule is enforced without checks or balances, accountability, transparency or good governance.



#2 : Judicial integrity was one of the fundamental needs of a democratic government. The State or the Government had an important role to play in protecting and promoting judicial integrity. Just as it was the obligation of every judge to do all within the ambit of judicial power to ensure judicial integrity, so also it was the obligation of the State to protect and promote the conditions in which it could flourish.



#3: Judicial integrity was not possible without judicial independence and judicial independence was not possible if the State, in one way or another, used its vast executive powers to influence or control the Judiciary.

 

This takes us also into the realm of constitutional law and the separation of powers.

 

 



#4 : The Court is the last resort of the oppressed and of those who are unfairly treated. Such a place needs to be a model of integrity and a repository of the highest values that are re-enshrined in the concept of justice.

 

Viewed in this light, judicial integrity is the very foundation of democracy. Any factor that disturbs this, however slightly, thus undermines democracy.

 

Political influence either by way of rewards for judges who deliver opinions acceptable to those in power or by way of manifestations of disapproval such as transfers undermine democracy even further.



http://www.dailymirror.lk/opinion/172-opinion/23914-editorial-listen-to-this-elder-statesman.html

D.S. தமிழர்களின் குடியுரிமையை பறித்தபோது ஜனநாயகத்திற்கு குழிதோண்டும் படலம் ஆரம்பமானது.

எப்படி ஒவ்வோரு சிறி மணலும் ஒரு வீட்டை ஆக்குகின்றனவோ அப்படித்தான் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயக அரசை ஆக்குகின்றன. யார் யார் மக்களின் வாக்குரிமைகளை அழிக்கத் துணை போகிறார்களோ அவர்கள் ஜனநாயகத்தை அழிக்க வேலேந்துகிறார்கள்.

D.S, S.W.R.D, சிறிமா, J.R., பிரேமதாச, சந்திரிக்கா, மகிந்தா எல்லோருமே மக்களிடம் வெளிப்படையாக அதிகாரத்தை கேட்டு வாங்கி வந்துதான் சர்வாதிகாரத்தை வளர்த்தார்கள். சந்திரிக்காவும், மகிந்தாவும் ஒரு படி மேலே சென்று தமது முதல் தேர்தல்களில் அடக்குமுறை ஜனாதிபதி பதவியை நீக்குவதாக தேர்தல்களில் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் சிங்கள மக்களின் மனங்களில் இதன் தேவையின் தாற்பரியம் விளங்கியிருக்க வில்லை. ஆகையால் அவர்கள் இந்த வாக்குறுதிகளை கணக்கில் எடுக்கவில்லை. இதை அவர்கள் இருவரும் கொடுத்த காரணம், ஜனநாயக மேற்குநாடுகளை முட்டாள்களாக்கி ஆயுதம் வாங்கவும், தமதுடடுத்த தேர்தலில், சிங்கள மக்களிடம் இனத்துவேசத்தைக் காட்டி தமது இருப்பை உறுதி செய்துகொள்ள முன்னர், இந்த ஜனநாயக நாடுகள் தமது அரசியல் பொருளாதார எதிர்ப்புக்களை ஆரம்பித்து தம்மை தமது முதல் தேர்தலில் விழுத்தி விடாமலும் இருக்கவுமே.

இரண்டாவது தேர்தல்களை இருவரும் வேறு வேறான பாதைகளில் முயற்சி பண்ணி வென்றார்கள். மிக மிக புதிதானதும்,எல்லோரையும் முட்டாள்களாகியதுமான முயற்சியாக சந்திரிக்கா தமிழருக்கெதிராக தமிழரை வைத்து வெளிநாடுகளில் இனத்துவேச பிரசாரம் செய்து, தனக்கு வரத்தக்க எதிர்ப்புகளை தமிழருக்கு எதிராக திருப்பி, தமிழர் என்றால் பயங்கரவாதிகள் என்ற அபிப்பிராயத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி தேர்தல் வென்றார். ஆனால் மகிந்தா பழைய தலைவர்கள் பாணியில் வெகு லாவகமாக செய்த்து முடித்தார். போர் முடிந்தவுடனேயே போரில் உதவிய மேற்கு நாடுகளை மகிந்தா தூக்கி எழுந்தார். தூராப்போய் விழுந்து நொண்டிக்கொண்டிருந்த மேற்கு நாடுகள் பொன்சேக்கா என்ற முறிந்து போன ஊண்று கோலை எடுத்து நிமிர்ந்து மகிந்தாவின் தேர்தலை குழப்ப முயன்றன. ஆனால் அவர் இனத்துவேசத்தின் அதி உச்சிக்கு சென்று, தமிழர்களின் பரம எதிரியான இந்தியாவுடன் இணந்து, அவர்களின் விருப்பத்திற்காக பதவி இறக்க பட்ட பொன்சேக்காவை இலகுவில் விழுத்தினார்.

சிங்கள மக்கள், போர் முடிந்துவிட்டது, மகிந்தா வந்தால் அடக்குமுறை அதிபர் பதவியின் பலம் அதிகரிக்கும், ஆகவே இனி அவரை தேவை இல்லை என்று விலத்திவிடவில்லை. தமிழ் மக்களின் வாக்களிக்கும் திறன் போரின் பின்னர் குறைந்திருப்பதை அறிந்து, மகிந்தாவின் மீள்வரவை அமோக வாக்குக்களுடன் நிச்சயம் செய்தார்கள்.

அமெரிக்க தேர்தல் அண்மையில் நடந்தது. ஒரு பேச்சுக்கு முந்தைய நாள் வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் நேற்று நடந்த தேர்தலில் பிரதான பங்கு எடுத்திருந்தார்கள். இவர்களின் நிலையை பற்றி இரு பிரதான வேட்பாளர்களும் வைவாதிக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்த வாக்குரிமை இல்லாதவர்களுக்கு சாதகமான கொள்கைகளை ஓபாமாவும், அவர்களின் நலங்களை இலங்கை மாதிரி முழுவதாக அழிக்காமல் ஆனால், கடும் போக்கு கொள்கைகளை ரோமினியும் முன் வைத்தார்கள். இந்த வாக்குரிமை இல்லாதவர்களுக்கு சாதக கொள்கைகளை முன் வைத்த ஒபாமா தேர்தலில் வெல்ல இதும் ஒரு காரண்மாயிற்று. இந்த வெற்றியால், வாக்குரிமை இல்லாதார் கூட தேர்தலில் தமது ஆளுமையை காட்டி, தேர்தலை ஜனநாயகத்தின் அடுத்த படியில் வைத்திருந்தார்கள். இந்த வாக்குரிமை இல்லாதா, இரவு பகலாக, எல்லோராலும் கழித்துவிடப்படும் இழிதொழில்களை செய்வோர், நாட்டின் ஒரு சிறிய பங்கினரானாலும், இவர்கள் இல்லாவிட்டால், நகரங்களில், ஏன் தோட்டப்புற கிராமங்களில் கூட பாரிய பொருளாதார இடைஞ்சல் ஏற்பட்டிருக்கும். இது அமெரிக்க பொருளாத கொள்கை வகுப்பாளர்களினால் தெளிவாக விளங்கை கொள்ளப்பட்டிருக்கும் தத்துவம். என்வே அவர்களின் வாக்குகள் அமெரிக்க ஜனநாயகத்தை நெறிப்படுத்த முடியாதானாலும் அவர்களின் உழைப்புக்களுக்கு அது முடியும். அதாவது நாட்டின் பொது நன்மையானது, பழைய நாட்களில் கிரேக்கத்தில் காணப்பட்டது போன்ற வெற்றுப் பேச்சு வாக்குரிமை ஜனநாயகத்தை நாட்டில் பேணி வளக்க முடியாமல் செய்துவிட்டது. ஜனநாயகமாது மக்களின், சந்தோச, சுபீட்ச வாழ்க்கைக்கான மூலதனமாக இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுததப்படது.

அமெரிக்க மக்களுக்கு இன்றிருக்கும், இப்படியான ஒரு விளக்கம் D.S. காலத்தில் சிங்கள மக்களுக்கும் இருந்திருந்தால், அவர்கள் தமக்கு இலவச கல்வியையும், படியரிசியையும் போட்ட தமிழரின் வாக்குகளை பறித்து அவர்களை இந்து சமுத்திரத்தில் தள்ளி கொட்டிவிட வேண்டும் என்று துடித்திருக்க மாட்டார்கள். இன்றைய அமெரிக்க நிலமை போலவன்றி அன்று,அவர்களின் கையில் நாட்டிந் முழு பொருளாதாரமும் தங்கியிருந்தது. நேற்று வந்த அமெரிக்க சட்டமில்லா குடிவரவுகள் போலன்றி, 100 வருடங்களுக்கு மேல், பரம்பரை பரம்பரையாக இந்த மண்ணில் வாழ்ந்துவிட்டவர்கள் அவர்கள். அமெரிக்க கடதாசி இல்லாமல் தொழில்புரிபவர்கள் போலன்றி, சுதந்திரத்தின் பின் வந்த ஜனநாயகத்தை நெறிப்படுத்த வாக்குரிமை என்ற பத்திரத்துடன், சிங்கள் முஸ்லீம் மக்களுடன் சேர்ந்து, தோளோடு தோள் கொடுத்து, இலங்கை என்ற வண்டியின் சில்லை ஒற்றுமையாக தள்ளிக்கொண்டு நம்பிக்கையுடன் தங்கள் பயணத்தை ஆரம்பிதத்வர்கள். நெடுநாளைய தமது கனவான கூலித்தொழில் என்ற அடிமைத்தனத்தில் இருந்து மீள, சுதந்திரம் என்ற சுத்தக்காற்றை சுவாசிக்க, அன்னியர் ஆட்சி என்ற அடை மழை முடிந்து விட்டதாக நினைத்து வெளியே கூடிய எல்லோருடனும் ஓடு வந்து கூடியவர்கள்.

ஆனால் அவர்கள் சிங்களவர்களின் தலைமைகளால் வஞ்சிக்கபட்டர்கள். சிங்களவர்கள் தமது தலைவர்களை தண்டிப்பதற்கு பதிலாக இப்படி பட்ட தலைவர்களை,அவர்கள் செய்யும் ஈனச்செயல்களை கைதட்டி வரவேற்பது போல அதிகப்படியான வாக்குகளால் திரும்பத் திரும்ப பல முறை தெரிவு செய்தார்கள்.

ஆனால், இன்று தனி நபர் ஒருவரின் பதிவி போகிறது என்றவுடன் இவர்களில் சிலர் பெரிய நீதித்துறை தத்துவங்களுடன் வந்திறங்கி, இவர்களின் அரசியல் வரலாற்றை அவதனிப்பவர்கள் எல்லோரையும் முட்டாள்களாக்குகின்றார்கள். சிராணியை நீதிபதியாக்கினதே சந்திரிக்கா செய்த ஊழல். இவர் உச்சநீதிமன்ற நீதியரசராக பதவி உயர்த்தப்பட்டதின் காரணம், ஊழலிற்கு துணை போவார் என்றுதான். அந்த இரு சந்தர்ப்பங்களும் தான் இன்று நடப்பதை விட பெரிய பெரிய கற்களை நீதி தேவதையின் சவக்குழியின் மேல போட்டு மூடியது. இன்றைய பாராளுமன்றத்தின் பதவி நீக்க முயற்சி அல்ல. இவரின் கணவர் பல தில்லுமுல்லுகள் புரிந்த ஒரு தொழில் அதிபர். மேற்கு நாடொன்றாயின் இப்படி அப்பழுக்கு உடையவர் ஒருவரின் துணைவரை பதவியில் இருத்தினால், அவர் தான் எவ்வளவு நேர்மை உடையவராக இருந்தாலும் உழல் தலை எடுப்பததை கட்டுப்படுத்த முடியாது என்று பதவியில் இருக்க விடமாட்டர்கள். கிளின்ரன் பதவியில் இருந்தபோது கில்லரியின் வரத்தக விடையங்களான வைட்வாட்டர் கொடுக்கல் வாங்கல்கள் 83 மில்லியன் டலர்கள் செலவளிக்கபட்டு, 3 ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டது.

இலங்கையில் நீதியின் இறப்பு ஆரம்பித்தது 1948ம் ஆண்டு. இன்று தேர்தட்டில் குற்றுயிராக படுத்திருக்கும் நீதி என்ற போர்வீரனாகிய கர்ன்னன் என்றோ இறந்து விட்டான். சரித்திரம் அறியா போர்க்கள சேனை மகிந்தா எனற அரிச்சுனன் கொன்றான் என்றால் இலங்கையின் அரசியல் சரித்திரம் அறிந்த கிருஸ்ணன்கள் அதை நம்ப மாட்டர்கள். பதிலாக எள்ளி நகையாடுவார்கள்.

”என்னை எவராலும் வீழ்த்த முடியாது” – மார்தட்டுகிறார் மகிந்த

[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 01:37 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

அனைத்துலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் எத்தகைய சதித்திட்டங்களின் மூலமும், தனது அரசாங்கத்தை ஒருபோதும் அசைக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குண்டசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மக்கள் எம்முடன் இருக்கும் வரை, அனைத்துலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் எத்தகைய சதித்திட்டங்களின் மூலமும், எனது அரசாங்கத்தை ஒருபோதும் அசைக்க முடியாது.

என்னையும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு வெளிநாடுகளில் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சில அரசசார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், டொலர்களுக்காக விலைபோயுள்ள சிறிலங்காவில் உள்ள சில சக்திகளும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

மக்கள் எம்முடன் இருக்கும்வரை எவரும் எம்மை வீழ்த்த முடியாது.

சிறிலங்கா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், மக்கள் ஒரு போதும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20121203107384

  • தொடங்கியவர்

நேற்று கனடாவும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறும்பொழுது நீதித்துறையையும் குறிப்பிட்டு இருந்தது. ஆனால், மகிந்த அரசு 'மக்கள் ஆதரவு' என்ற சக்தி தம்முடன் உள்ளதாக கூறுகின்றது.

 

மகிந்தாவின் நண்பன் கடாபியின் கூற்றுக்களும் இவ்வாறே இருந்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.