Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலுவையில் அறையப்படும் மனிதாபிமானம்

Featured Replies

e465a053f83bff1f8449b859f4f41734.jpg

ஆனால் போரின் போது ஒருவன் இறந்து விட்டால் அவன் எதிரிப் படையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனின் சடலத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஓர் இராணுவ மரபு.

1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஏற்கனவே கைப்பற்றிய அரச படையினர் சத்ஜெய நடவடிக்கை மூலம் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சியை நோக்கி முன்னேற முயன்ற நாள்கள் அவை.

அப்போதுதான் வட இலங்கையின் கிழக்கு முனையில் ஒரு பூகம்பம் வெடிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் ஒன்று பொங்கியெழுந்து முல்லைத்தீவு இராணுவத்தளம் மீது பாய்கிறது. யாழ்.குடாநாட்டைக் கைபற்றிய வெற்றியின் மமதை சிதறடிக்கப்பட்டு முல்லைத்தளம் முற்றாகவே நிர்மூலம் செய்யப்படுகிறது.

 

 

மீண்டும் முல்லைத்தீவைக் கைப்பற்ற கடல் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் முறியடிக்கப்படுகிறது. அளம்பிலில் தரையிறங்கிய ஒரு பகுதி படையினரும் பலரைப் பலிகொடுத்துவிட்டுக் கப்பலேறித் தப்புகின்றனர்.

முல்லைத்தீவு இராணுவத்தளம் முற்றாகவே துடைத்தழிக்கப்படுகிறது. இதில் ஏறக்குறைய 800 படையினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்படுகின்றன. சடலங்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இலங்கை அரசிடம் ஒப்படைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைகின்றன.

 

அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை சடலங்களை ஏற்க மறுக்கிறார். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் படையினரின் சடலங்களைச் சுத்தம் செய்து புதிய ஆடைகள் உடுத்தி முறைப்படி இராணுவ மரியாதையுடன் கொக்காவில் பிரதேசத்தில் தகனம் செய்கின்றனர். அந்தப் படைவீரர்களின் பெயர்கள் நீண்ட காலமாகவே இலங்கை இராணுவத்தின் காணாமற் போனோர் பட்டியலிலேயே வைக்கப்பட்டிருந்தன.

இன்றைய ஜனாதிபதி, பல சிரேஷ்ட அமைச்சர்கள் ஆகியோர் அன்றைய ஆட்சியில் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பங்குகொண்டிருந்தனர். ஆனால் எவரும் தங்கள் ஆட்சிக்காக உயிர் கொடுத்த அந்த வீரர்களின் சடலங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டி ஒரு சிறு முயற்சி கூட எடுக்கவில்லை. வீதியில் வாகனத்தில் அடிபட்டுச் சாகும் நாயைக் கூட எடுத்து ஒரு பக்கமாகப் புதைப்பதுண்டு.

 

ஆனால் இவர்கள் தமக்காக உயிர் விட்டவர்களின் சடலங்களைப் பொறுப்பேற்று அவற்றை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய மறுக்கும் அளவுக்கு மனிதாபிமானமற்றவர்களாக விளங்கினர் என்பதை நாம் இங்கு அவதானிக்க வேண்டும். இவர்கள் எமது போராளிகள் தொடர்பாகவோ மக்கள் தொடர்பாகவோ மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா?

போர் என்பது ஒருவரையொருவர் அழிப்பதற்காக நடத்தப்படும் ஒரு சமர் என்பதில் சந்தேகமில்லை. அங்கு கொலைகள், அழிப்புகள் குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஆனால் போரின் போது ஒருவன் இறந்துவிட்டால் அவன் எதிரிப் படையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனின் சடலத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஓர் இராணுவ மரபு.

 

அந்த வகையில் முல்லைப் போரில் கைப்பற்றப்பட்ட படையினரின் சடலங்களுக்கு விடுதலைப் புலிகள் உரிய இராணுவ மரியாதை வழங்கி அவற்றை எரியூட்டினர். ஆனால் இலங்கை அரசோ தமது படைவீரர்களின் சடலங்களை ஏற்க மறுத்ததன் மூலம் அந்த இராணுவ மரபை மதிக்கத் தவறியதுடன் தமது மனிதாபிமானமற்ற தன்மையையும் வெளிக்காட்டியிருந்தது.

2009 மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு களத்திலிருந்து அகற்றப்பட்ட பின்பு தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமெங்கும் படையினர் குவிக்கப்பட்டனர். எங்கும் படை முகாம்கள் அமைக்கப்பட்டன. அதையடுத்து சகல மாவீரர் துயிலும் இல்லங்களும் அழிக்கப்பட்டன. மாவீரர் கல்லறைகள் இடித்து நொருக்கப்பட்டன.

 

போராளிகளின் எலும்புக் கூடுகள் கூட தோண்டி எடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.

 

இது இலங்கை இராணுவத்தினர் எதிரிப் படையின் இறந்த வீரர்களுக்குக் கௌரவம் வழங்கித் தமது ஒழுக்கத்தையும் பண்பையும் வெளிப்படுத்திய விதம். கல்லறைகள் நொருக்கப்பட்டாலும் எலும்புகள் எரிக்கப்பட்டாலும் அந்த மாவீரர்கள் எமது மக்கள் நெஞ்சில் என்றும் நிலைகொண்டு வாழ்வர். அதை எவராலும் அழித்துவிட முடியாது.

ஆனால் இலங்கைப் படையினரின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கேவலமான கறையைப் பதித்துவிட்டது என்பதுதான் இங்கு முக்கிய விடயமாகும். இதற்காக அவர்கள் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இலங்கை இராணுவத்தின் மனிதாபிமானப் படுகொலைகள் பலமுனைகளில் விரிவடைந்துள்ளன என்பது சர்வதேசமே ஏற்றுக் கொண்ட உண்மையாகும்.

 

மாவீரர் துயிலும் இல்லங்கள் மீதும் மாவீரர் கல்லறைகள் மீதும் மாவீரர் எலும்புக் கூடுகள் மீதும் அவர்கள் மேற்கொண்டு வரும் கேவலமான அநாகரிகங்கள் அவற்றின் ஒரு பகுதியேதான். அதேவேளையில் இவ்வழிப்பு நடவடிக்கைகளுடன் அவர்கள் நிறுத்திவிடவில்லை. அதாவது வருடாவருடம் மக்கள் மாவீரர் தினத்தன்று மாவீரர்களை நினைவுகூர்வதையும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதையும் தடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மாவீரர் கல்லறைகளை அழிப்பது மாவீரர் எலும்புகளை எரிப்பது போன்றவை ஒரு மிருகத்தனமான பழிவாங்கும் உணர்ச்சியிலிருந்து பிறப்பவை. ஆனால் மாவீரரை நினைவுகூர்வதைத் தடுப்பது அப்படியல்ல. அது ஒரு விதமான அச்ச உணர்விலிருந்தே பிறக்கிறது. அதாவது அவர்களை நினைவு கூர்வதன் மூலம் அவர்களின் இலட்சியங்கள் நினைவுகூரப்பட்டு அவை ஒரு சக்தியாக மேலெழுந்து விடும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும்.

 

ஆனால் நினைவுகூரல் என்பது மலர்களைத் தூவுவதுடனோ அல்லது விளக்கேற்றுவதுடனோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அது ஒரு மனம் சார்ந்த நிகழ்ச்சி. உதிரம் சிந்தி எமது உரிமைகளுக்காக உயிர் நீத்தவர்களின் நினைவுகள், இலட்சியங்கள் என்பன அணைபோட்டுத் தடுக்குமளவுக்குப் பலவீனமானவையல்ல. அவை என்றும் இதயத்தில் நின்றெரியும் நெருப்பாக நிலைத்து நின்று ஒளிவிடுபவை. அதை எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது.

இராணுவத்தினரின் எத்தகைய கெடுபிடிகள் மத்தியிலும் எமது மக்கள் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலிக்கத் தவறுவதில்லை. படையினரின் இறுக்கமான கண்காணிப்பின் மத்தியிலும் எமது மக்கள் அவர்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடங்களில் விளக்கேற்றி விடுகின்றனர். ஆலயங்களில் மணியொலித்து விடுகின்றனர்.

 

ஏனெனில் மாவீரர் அஞ்சலி என்பது இதய உணர்வாக எழுந்து எல்லாத்தடைகளையும் மீறிக் கொழுந்துவிட்டு எரிவது. அது ஓர் இனத்தின் தியாக வரலாற்றின் புனிதமான அடையாளச் சின்னம். அவ்வகையிலேயே இந்த வருடம் மாவீரர் தினத்தன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்கள் அஞ்சலி நிகழ்வை விளக்குகளேற்றி நிறைவேற்றினர்.

ஆனால் வழமைபோலவே அது நடைபெறாமல் தடுப்பதற்காகப் படையினர் அன்று மாலையே தமது பகீரத முயற்சிகளையும் அச்சமூட்டும் நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவிட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறிப் புகுந்த படையினர் அங்கு சோதனை நடவடிக்கை என்று பேரில் மாணவர்களைப் பயமுறுத்தியதுடன் மாணவ, மாணவியரின் இயல்பு நிலைமையைக் குழப்பினர்.

 

அதுமட்டுமன்றி பெண்கள் விடுதிக்குள் அவர்கள் உட்புகுந்த போது சில மாணவிகள் மூர்ச்சையடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களுக்கும் படையினருக்குமிடையே முறுகல் நிலை தோன்றியது. அந்த வேகத்தில் இந்தச் சம்பவங்கள் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் ஆசிரியர் படையினரால் தாக்கப்பட்டதுடன் அவரின் புகைப்படக் கருவியையும் பறிக்க முயற்சிக்கப்பட்டது.

அந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களின் வாகனக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதாவது படையினரால் எவ்வித சட்டவரம்புக்கும் உட்படாத காடைத்தனம் பல்கலைக்கழகச் சுற்றாடலிலும் உள்ளும் அரங்கேற்றப்பட்டன. எனினும் குறிப்பிட்ட நேரத்தில் விடுதிகளின் மாடிகளிலும் இன்னும் சில இடங்களிலும் சுடர்கள் எரிய ஆரம்பித்தன. எல்லாத் தடைகளையும் மீறி மாவீரர் நினைவுகள் எங்கும் ஒளியாய் பரவின.

 

பல்கலைக்கழகத்தினுள் இராணுவம் அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்தமையைக் கண்டித்து மறுநாள் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டு தங்கள் அடாவடித்தனத்தை வெளிப்படுத்தினர். அதில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.

உதயன் ஆசிரியர் மேல் தாக்குதல், மாணவர் மீது தடியடிப் பிரயோகம் என வன்முறைகளை வலிந்து தூண்டும் வகையில் பொலிஸாரும் படையினரும் செயற்பட்டுள்ளனர். ஏற்கனவே இலங்கையின் ஆட்சியாளர்களாலும் அரச படைகளாலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் சில செய்திகள் இம்முறை மாவீரர் நாளன்று மீண்டும் அழுத்தமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 

அதாவது எமக்காக உயிர்நீத்த, எமது குருதியில் உருவாகி எமக்காகக் குருதி சிந்திய எமது பிள்ளைகளுக்காக கண்ணீர் விடும் உரிமையையோ அஞ்சலி செலுத்தும் உரிமையையோ கூட சிங்கள தேசம் அனுமதிக்கத் தயாரில்லை. இலங்கை அரசும் படைக்கட்டமைப்பும் சகலவிதமான மனிதாபிமான நடைமுறைகளையும் இராணுவ ஒழுக்க விழுமியங்களையும் நிராகரித்து அடாவடித்தனத்தையே கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளன. தமிழ் மக்கள் சிங்கள தேசத்தின் அடிமைகளாக வாழமட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அதேவேளையில் தமிழ் மக்கள் விடுக்கும் மாவீரர் தினச் செய்தி ஒன்றுண்டு. அதாவது எந்த ஒடுக்குமுறைகளும் தமிழ் மக்களின் உரிமைப் போருக்குத் தடைக் கல் போட முடியாது. மனிதாபிமானத்தைச் சிலுவையில் அறைபவர்கள் தங்களைத் தாங்களே சிலுவையில் ஏற்றுபவர்கள் என்பது வரலாறு சொல்லும் அனுபவமாகும்.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=2735342805783545#

  • தொடங்கியவர்

சிங்களத்தின் மனிதாபிமானத்தை இந்தக்கட்டுரை அழகாக சித்தரித்துள்ளது.

 

இவ்வாறான ஒரு இனத்துடன் இல்லை இவர்களுக்கு அடிமையாக வாழ்வது என்பது எவ்வாறு ஒரு கொடூரமான தண்டனை !

இல்லை மூச்சு விடுவதற்கு.... அதற்காவது அனுமதி தந்திருக்கிறார்கள் .............ஆகவே அவர்கள் கொடுமையானவர்கள் அல்ல..............அதற்காக பேய்க்கு பிறந்தவர்கள் என்று சொல்லுகிறேன் என்று ...நினைக்காதீங்கோ ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.