Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்சவின் மலேசியப் பயணம் பிசுபிசுத்தது ஏன்? – விபரிக்கிறது கொழும்பு ஆங்கில ஊடகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்த ராஜபக்சவின் மலேசியப் பயணம் பிசுபிசுத்தது ஏன்? – விபரிக்கிறது கொழும்பு ஆங்கில ஊடகம்.
சிறீலங்கா | ADMIN | DECEMBER 5, 2012 AT 10:17
 
 
போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணை நடத்துமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் மலேசிய அரசாங்கம் வலியுறுத்தத் திட்டமிட்டிருந்ததாலும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெறத்தொடங்கியதாலும் தான், மலேசியப் பயணத்தை அவர் கைவிட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜொகோர் பாருவில் நேற்று ஆரம்பமான இஸ்லாமிய பொருளாதார மன்றக் கூட்டத்தில், ‘மாற்றடையும் போக்குகளும் புதிய வாய்ப்புகளும்‘ என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மலேசிய செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பில் மலேசியா பங்கேற்காததைக் கருத்தில் கொண்டு இந்த அழைப்பை சிறிலங்கா அதிபர் செயலகம் உடனடியாகவே ஏற்றுக் கொண்டது.
சிறிலங்கா அதிபரின் பயணம் பற்றிய தகவல் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் அமைப்புகள், மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக போராட்டங்களை நடத்த ஆரம்பித்தன.
மக்கள் நலன்புரி இயக்கம் மலேசிய நாடாளுமன்றத்தின் முன்பாக பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியது.
இந்திய வம்சாவளி மலேசிய அரசியல்வாதியான கோபிகிருஸ்ணன் இதற்குத் தலைமை தாங்கினார்.
இந்தப் பேரணியில் உரையாற்றிய கோபி கிருஸ்ணன், சிறிலங்கா அதிபரின் வருகைக்கு எதிரான தொடர்போராட்டங்களின் தொடக்கமே இது என்றும், டிசம்பர் 4ம் நாள் சிறிலங்கா அதிபர் வரவுள்ள ஜொகோர் பாருவில் பாரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
சிறிலங்கா அதிபரின் மலேசிய வருகைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் கோபிகிருஸ்ணனின் எச்சரிக்கைக்கு மலேசிய ஊடகங்கள் பெரியளவில் முக்கியத்துவம் கொடுத்தன.
மலேசியத் தமிழர்கள் பெருமளவில் போராட்டங்களில் பங்கேற்றதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன.
அதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா படைகளால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளை நடத்தும் வரை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் வருகையை தடுக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும், பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
அழுத்தங்கள் அதிகரித்த நிலையில், மலேசியப் பிரதமர் பணியகப் பேச்சாளர் ஒருவர், “போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளை நடத்தும்படி, மகிந்த ராஜபக்சவிடம் பலமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக” ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டார்.
அதேவேளை, மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக, எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க, பல்வேறு அமைப்புகளும் தயாராகி வருவதாக, ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
மகிந்த ராஜபக்சவின் பயணத் திட்டத்தினால் மலேசியாவில் சிறிலங்கா எதிர்ப்பு உணர்வு வலுவடைந்து வருவதை உணர்ந்து சிறிலங்கா அரசாங்கம், அவரது பயணத்தை ரத்துச் செய்ய முடிவு செய்தது.
இதையடுத்து ‘தவிர்க்க முடியாத சூழ்நிலை‘ காரணமாக சிறிலங்கா அதிபரின் பயணம் நிறுத்தப்படுவதாக, மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம், நவம்பர் 27ம் நாள் அறிவித்தது.
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ...எங்கள் உறவுகளே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.