Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலை மாணவர்களில் மேலும் 10பேரை உடனடியாக ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவு உத்தரவு

Featured Replies

யாழ்.பல்கலை மாணவர்களில் மேலும் 10பேரை உடனடியாக ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவு உத்தரவு
06 டிசம்பர் 2012
lg-share-en.gif
 

 

GTNBreakingNews_CI.jpg

 

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் மேலும் பத்துப்பேரினை உடனடியாக ஒப்படைக்குமாறு இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸ் தலைமை துணைவேந்தருக்கு அறிவித்துள்ளது. 

ஏற்கனவே கைது செய்யப்பட்ட நால்வரினில் மூவர் தொடர்ந்தும் வவுனியாவிலுள்ள பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் வசம் தடுத்தே வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் பத்துப்பேரது பெயர்ப்பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஓப்படைக்கப்பட்ட பெயர் பட்டியலின் பிரகாரம் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் ஒவ்வொரு பீடங்களினதும் தலைவர்களுடன் மருத்துவ பீடத்தை சேர்ந்த ஜவரது பெயர்களும் உள்ளடங்கியுள்ளது.

எனினும் பெரும்பாலான மாணவ தலைவர்கள் சரண் அடைவது பற்றிய பேச்சிற்கே இடமில்லையென தெரிவித்துள்ளனர். தமக்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிக்க வைக்கும் சதி முயற்சிகள் இருக்கக்கூடாதென மாணவர்கள் தரப்பினில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவ பீடமாணவர்களை கோப்பாய் பொலிஸிடம் ஒப்படைக்க மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன் வைத்தியர்களான ரவிராஜ் மற்றும் முகுந்தன் ஆகியோர் முன்வந்து அழைத்து சென்றுள்ளனர். 

எனினும் மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்து வரும் பகிஸ்கரிப்பு போராட்டங்களை கைவிடுமாறு அவர்கள் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக மாணவ ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் மருத்துவ பீட மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தே வருகின்றனர். இந்நிலையில் தெற்கிலிருந்து வருகை தந்து கற்கைகளினில் ஈடுபட்டு வரும் மருத்துவ பீட சிங்கள மாணவர்களை வைத்து போராட்ட முடிவு பற்றி அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86250/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

வடக்கில் தமிழர்களுக்கு எதிராக மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம் [ வியாழக்கிழமை, 06 டிசெம்பர் 2012, 12:28 GMT ] [ தா.அருணாசலம் ]

police-attack-student.jpgபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வடக்கில் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்டவர்களில் பலர் மாணவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

வடக்கில் அரசியல் பதற்றம் ஏற்பட்டதை அடுத்தே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. 

எனினும் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளனர். 

தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வடக்கில் நேற்று 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் 2009ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி, தெரிவித்துள்ளார். 

இவர்கள் சிறிலங்கா அரசின் புனர்வாழ்வைப் பெற்றவர்களோ, போரின் முடிவில் சரணடைந்தவர்களோ அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 

இவர்கள் யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டு தற்போது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுகுறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியான, சந்திரா வாகிஸ்ரா, 20 தொடக்கம் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசிக்கு தெரிவித்துள்ளார். 

உரிய நடைமுறைகளின்றி யாரும் கைது செய்யப்படவில்லை, அனைவரும் அதிகாரபூர்வமாகவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, மேலும் தாம் கைது செய்யவுள்ள மாணவர்கள் 10 பேரின் பட்டியலை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சிறிலங்கா காவல்துறை அனுப்பியுள்ளது. 

சிறிலங்காவில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், நீதிமன்றத்தில் எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமலேயே 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20121206107406

" பயங்கரவாதம் " என்ற மந்திர தந்திரத்தை சிங்களம் தொடர்ந்தும் தொடர்ந்தும் தமிழர்களை அழிக்க பாவிக்கின்றது.

 

 

இந்த இனவழிப்பு யுத்தியை ஒன்றுபட்டு நாம் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து முறியடிக்கவேண்டும். அதை செய்யும் புலம்பெயர் சக்திகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தரவேண்டும்.


நடக்கும் புலம்பெயர் நடவடிக்கைகள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=112234

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.