Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவர்கள் 5 பேருட்பட 6மாணவர்கள் வவுனியா கொண்டு செல்லப்பட்டனர்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவர்கள் 5 பேருட்பட 6மாணவர்கள் வவுனியா கொண்டு செல்லப்பட்டனர்-
06 டிசம்பர் 2012
 
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஜந்து பேருட்பட ஆறு மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டு வவுனியாவில் செயற்பட்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு இன்றிரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முன்னதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
 
இதனிடையே குறித்த மாணவர்களில் மருத்துவ பீட மாணவர்கள் ஜவரையும் மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன் முன்னணி மருத்துவரும் விரிவுரையாளருமான ரவிராஜ் மற்றும் மருத்துவர் முகுந்தன் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரிடம் கையளித்தமை குறித்து பலத்த வாதப் பிரதிவாதங்களை பல்கலைக்கழக சமூகத்திடையே ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாணவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையததிற்கே இவர்கள் அழைத்து சென்றிருந்த போதும் கோப்பாய் பொலிஸார் மாணவர்களை பொறுப்பேற்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பொன்றை அடுத்து நகரப்பகுதியிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இவர்களை கையளித்துள்ளனர்.
 
ஏற்கனவே மாணவர்களது பகிஸ்கரிப்புப் போராட்டத்தை கைவிட வேண்டுமென பேரம் பேசியே அவர்கள் குறித்த மாணவர்களை பொலிஸாரிடம் அழைத்து செல்ல சம்மதித்ததாக கூறப்படுகின்றது. 
 

இதனிடையே குறித்த மாணவர்களில் மருத்துவ பீட மாணவர்கள் ஜவரையும் மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன் முன்னணி மருத்துவரும் விரிவுரையாளருமான ரவிராஜ் மற்றும் மருத்துவர் முகுந்தன் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரிடம் கையளித்தமை குறித்து பலத்த வாதப் பிரதிவாதங்களை பல்கலைக்கழக சமூகத்திடையே ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாணவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையததிற்கே இவர்கள் அழைத்து சென்றிருந்த போதும் கோப்பாய் பொலிஸார் மாணவர்களை பொறுப்பேற்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பொன்றை அடுத்து நகரப்பகுதியிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இவர்களை கையளித்துள்ளனர்.

 

SL police directs Medical Dean to hand over students to SL military intelligence

The occupying SL military was individually intimidating the deans and former deans of all the faculties of the university.

 

 

The Medical Dean was not acting on his own, but was directed by another faculty member Dr. Raviraj, who was earlier in the EPDP-controlled Council of the University and by one more faculty member, Dr Mukunthan, informed sources said.

Out of the four students detained earlier this week, one has been released, but three are kept in SL military detention in Vavuniyaa.

 

http://tamilnet.com/art.html?catid=13&artid=35825

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் மேலும் 6 மாணவர்கள் நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் மருத்துவபீடத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்தவர்.

 
பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 
 
எனினும் மாணவர்கள் கைது குறித்த எந்தத் தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி நேற்று மாலை தெரிவித்தார். 
 
ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 மாணவர்களுக்கு மேலதிகமாக 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை யாழ். குடாநாட்டில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனால் பல்கலைக்கழகத்தின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படும் வரை கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் சூழல் இருக்காது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய கைதுகள் இடம்பெற்றுள்ளன.
 
 
10 மாணவர்களை தேடியது பொலிஸ்
 
மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையை யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். தனது பெயர் வெளியிடப்படுவதை அவர் விரும்பவில்லை.
 
அவர் தெரிவித்ததாவது:
""யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரை விசாரணைக்கு வருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (நேற்று) அழைப்பு விடுத்திருந்தனர். இது தொடர்பான அறிவிப்பு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
 
மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐவர், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவர், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மூவரின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
 
இந்த நிலையில், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 மாணவர்களையும் பெற்றோருடன் விசாரணைக்குச் செல்லுமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியிருந்தார். 
 
இதனை அடுத்து மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவரும் தமது பெற்றோர் மற்றும் மருத்துவ பீடாதிபதி ஆகியோருடன் இன்று (நேற்று) மதியம் யாழ். பொலிஸ் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு வைத்து குறித்த மாணவர்கள் ஐவரையும் பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் விசாரணைக்காக கைதுசெய்தனர்.
 
இதேவேளை, முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் தனது பெற்றோர் மற்றும் முகாமைத்துவ பீடாதிபதியுடன் இன்று (நேற்று) மதியம் யாழ். பொலிஸ் நிலையத்திற்குச் சென்றார். அவரையும் அங்கு வைத்துப் பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் விசாரணைக்காக கைதுசெய்துள்ளனர்'' என்றார்.
 
விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஏனைய நான்கு மாணவர்களின் நிலைமை தொடர்பாக அவரிடம் கேட்டபோது, "குறித்த நான்கு மாணவர்களோ அல்லது அவர்களினது பெற்றோர்களோ பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இன்று மாலை (நேற்று மாலை) வரை தொடர்பு எதையும் ஏற்படுத்தவில்லை'' என்று தெரிவித்தார்.
 
மூவர் தொடர்ந்தும் விசாரணையில்
 
ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் மூவர் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 7 நாள்களாக அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
 
மேலும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. 
 
பல்கலைக்கழக வளாகத்திற்குச் செல்லவே தமக்கு அச்சமாக இருப்பதாக மாணவர்கள் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தனர். 
 
இது தொடர்பில் ஆராயும் வகையில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கூட்டம் இன்று அவசரமாகக் கூட்டப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.