Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் பார்க்கவேண்டிய திரைப்படம் "நீர்ப்பறவை"

Featured Replies

Nandita_Das_Wallpapers%20(1).jpg

 

 

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கப் போன கணவன் அருளப்பசாமிக்காக (விஷ்ணு) காத்திருக்கிறார் எஸ்தர் (நந்திதா தாஸ்).. வீட்டு முன்பு அருளப்பசாமியின் எலும்புக்கூட்டை எஸ்தரின் மகன் கண்டுபிடிக்க எஸ்தர் கைது செய்யப்படுகிறார்… எஸ்தரிடம் நடக்கும் போலீஸ் விசாரணையில் பிளாஷ்பேக்காக கதை நமக்கு சொல்லப்படுகிறது…

 
சதா குடித்துக் கொண்டிருக்கும் அருளப்பசாமிக்கும், எஸ்தருக்கும் (சிறு வயது எஸ்தராக சுனைனா) இடையே காதல்… இயலாதவர்களுக்காக பிரார்த்திக்கும் ஒரு கிறிஸ்தவப் பெண் நாயகியாக வருவது தமிழ் சினிமாவுக்கு புதுசு… அருளப்பசாமியின் தலையில் கை வைத்து எஸ்தர் பிரார்த்திப்பது, ‘’சாத்தானே அப்பால போ’’ என அவனைப் பார்த்து பதறுவது என பல காட்சிகள் சுவாரஸ்யம்…
 
கடலோர கிராமத்தை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா என்று பிரமிக்கும் வகையில் இருக்கிறது பாலசுப்பிரமணியமின் ஒளிப்பதிவு…. ஆனாலும் சில இடங்களில் கடலை மஞ்சள், சிவப்பு நிறங்களில் எல்லாம் காட்டும்போது உறுத்துகிறது... படகு கட்டித்தரும் இஸ்லாமியராக சமுத்திரக் கனி… கிராமங்களில் மதபேதமின்றி கலந்து பழகும் ஒரு இயல்பான இஸ்லாமியர்.. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே காட்டிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு சமுத்திரக்கனியின் பாத்திரப்படைப்பு புதிதுதான்.. 
 
படத்தின் இன்னுமொரு ப்ளஸ் பாத்திரங்களின் இயல்பான நடிப்பு.. அதிலும் சரண்யா பிச்சு உதறுகிறார்… குடிக்கும் மகனுக்கு காசு கொடுப்பது, குடியில் இருந்து மீட்க ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, வார்டு பாயிடம் காசு கொடுத்து, ‘’குடிக்க கேட்டா வாங்கிக் கொடுத்து கொஞ்சம், கொஞ்சமா திருத்துங்கடா...’’ என சொல்வது… கணவர் லூர்துசாமி (ராமு) மகனை அடிக்க, ‘’இனிமேலும் அடிச்சா நான் டைவர்ஸ் வாங்கிட்டு பையனோட தனியாப் போயிடுவேன்’’ என மிரட்டுவது, சர்ச் வாசலில் மகனுக்காக நியாயம் பேச, ‘’பொம்பளை பேசாத’’ என எதிர்க்குரல் எழும்ப... ‘’மாதா கோயில் வாசல்ல பொம்பளை பேசாம, வேற எங்க பேசறது?’’ என ஆவேசப்படுவது என கலக்குகிறார்… அம்மாவாக நடிப்பதற்கே பிறந்திருப்பார் போல… 
 
எல்லாம் சரி.. மீனவ மக்களின் வாழ்க்கை சார்ந்த படம், அதிலும் ராமேஸ்வரத்தை களமாகக் கொண்ட படம் என்பதால் அவர்களது பிரச்னைகளை பேசியிருக்கிறதா என்றால் இல்லை.. அவ்வப்போது வசனங்களில் பிரச்னைகள் பற்றிப் பேசுகிறார்களே தவிர, மீனவர் பிரச்னை தொடர்பான ஆழமான தெளிவான காட்சியமைப்பு ஒன்றுகூட இல்லை… 
 
ஈழத்தை சேர்ந்த சிறுவன் குடும்பத்தோடு படகில் வரும்போது மீதமிருப்பவர்கள் சுடப்பட்டு நடுக்கடலில் சிறுவன் மட்டும் லூர்துசாமியால் மீட்கப்படுகிறார்.. அதன்பிறகு அவரது மகனாக அருளப்பசாமியாக வளர்கிறார்.. அப்படி அகதியாக வரும் சிறுவனை யார் வேண்டுமானாலும் எடுத்து வளர்க்க முடியுமா? சட்டம் அனுமதிக்குமா என்ற கேள்வி படம் முழுவதும் இடித்துக் கொண்டே இருந்தது…
 
’’இந்தியா முழுவதும் கடலில் மீனவனைத் தவிர வேறு யாரையும் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள்’’.. அருளப்பசாமியை கடலுக்குள் இறங்க மீனவர்கள் மறுப்பதற்கு சொல்லும் காரணத்தை தவிர, மீனவர்கள் வாழ்வியல் குறித்த எந்தப் பதிவும் படத்தில் இல்லை.. ஆனால் அவர்களது மத நம்பிக்கைகள், தேவாலயத்தோடான அவர்களது தொடர்புகள் எல்லாம் படத்தில் விரிவாகவே பார்க்கக் கிடைக்கிறது… எனக்குத் தெரிந்து மீனவ கிராமங்களில் பங்குத் தந்தைகள் வைத்ததே சட்டம்.. படத்தில் காண்பிப்பது போல் மீனவர்கள் அவரை எல்லாம் எதிர்த்து பேச முடியுமா எனத் தெரியவில்லை...
 
மீனவர்களின் பெரிய பலமே அவர்களது ஒற்றுமை தான்… சில ஆண்டுகளுக்கு முன்பு குளச்சல் மீனவர்கள் ஏழுபேர் காணாமல் போய் கொல்லம் கடற்கரையில் கரை ஒதுங்கிய நாட்களில் குமரி மீனவ கிராமங்களின் பதட்டத்தை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.. இந்தப் படத்தில் தனியாக மீன்பிடிக்கப் போகும் அருளப்பசாமி காணாமல் போக, அவரது குடும்பத்தைத் தவிர வேறு யாரும் பதட்டப்படவே இல்லை.. அப்பா லூர்துசாமி மட்டுமே இரவில் தனியாகப் போய் சுடப்பட்டுக் கிடக்கும் மகனை மீட்டுக் கொண்டு வருகிறார்.. மகன் மருமகளுக்கு துணையாக இருக்கட்டும் என வீட்டிற்குள்ளேயே புதைத்து வைக்கிறார்.. இதில்தான் படம் தொடங்குகிறது.. படத்தில் வலுவாக இருக்க வேண்டிய இந்தக்காட்சி அழுத்தமாகவே இல்லை…. புதைத்து வைப்பதற்கும் எஸ்தர் சொல்லும் காரணம் மனதில் பதியவே இல்லை...
 
படத்தில் இன்னொரு உறுத்தலான விஷயம்.. பீரியட் ஃபிலிம்க்கான எந்த மெனக்கெடலும் இல்லை… கழுதை காலர் சட்டையைத் தவிர எண்பதுகளில் கதை நடப்பதற்கும், சம காலத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை..எண்பதுகளில் பத்து ரூபாயின் மதிப்பு மிக, மிக அதிகம்.. ஆனால் படத்தில் அருளப்பசாமி குடிப்பதற்கு காசு கேட்க, அம்மா மேரி (சரண்யா) இருபது, ஐம்பது என அள்ளி, அள்ளிக் கொடுக்கிறார். 
 
படம் மீனவர்களின் வாழ்க்கையை களமாகக் கொண்டதெனினும் கடலில் அவர்கள் படும் அல்லல், அவர்களது கலாச்சாரம், பேச்சுவழக்கு, குறிப்பாக மீனவப் பெண்களின் வாழ்க்கை எதுவுமே படத்தில் இல்லை.. உயிர்பயத்தோடு மீனவர்கள் தினமும் கடலுக்குள் போய்வர, மீனவர்களின் வீரம், கடலுக்குப் போனாத்தான் ஆம்புள, கடலுக்குள்ள நாமதான் முதலாளி என வலியை ரொமாண்டிஸைஸ் செய்திருக்கிறார்கள்... இந்தப் படத்திற்கு நந்திதா தாஸே தான் வேண்டும் என்று இயக்குனர் ஏன் நினைத்தார் எனத் தெரியவில்லை.. அவருக்கான எந்த முக்கியத்துவமும் படத்தில் இல்லை.. 
 
அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள் போல் இந்தப் படமும் அழகிய கடல் பின்னணியில், கடலோரக் கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதை தான்.. குடியில் இருந்து நாயகியால் திருந்தும் காதலன், அவளைத் திருமணம் செய்ய கஷ்டப்பட்டு படகு வாங்குகிறான்.. திடீரென ஒருநாள் சுடப்பட்டு இறந்து போகிறான்.. நாயகனின் பிறப்பிலும், சாவிலும் ராமேஸ்வரத்தில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டை இணைத்ததன் மூலம் அரசியல் படமாகத் தெரிகிறது.. படத்தின் சில வசனங்கள் அதை நம்பவும் வைக்கிறது.... 
 
ஆயினும்.. மீனவர்களுக்கான குரல் இங்கு முற்றிலும் நெரிக்கப்பட்ட நிலையில் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது... இந்த அரசியல், லாஜிக் எல்லாவற்றையும் விட்டு விட்டு பார்த்தால் கமர்ஷியல் குப்பைகளுக்கு இடையில் இந்தப் படம் மிகப் பிரமாதமான படமாகத் தோன்றும் என்பதும் இந்தப் படத்தை மிகச் சிறந்த படமாக்குகிறது....
 
 
விமர்சனம் நன்றி - பிரியாதம்பி
fb தமிழ்ச் செல்வன்
 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.