Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான்தான் கடவுளா..? - பூநகரான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்தான் கடவுளா..? - பூநகரான்

[saturday, 2012-12-08 22:28:40]
The-Maya-Calendar-150-artical.jpg

நான் பிறந்த நாள் மார்கழியில் வருகிறதாம். ஆனால் இந்த மாதத்திலேயே உலகம் நிறைவுறும் என்கிறார்கள். என்னால் திரும்பிப் பார்க்கக் கூடிய வரை , இந்த நாளை நோக்கி எனது நினைவுகளை திரும்பிப் பார்க்க முயல்கிறேன். அவற்றை இரை மீட்டுப் பார்க்க முயன்ற போதும் , ஏழு வயதிற்கு முந்திய எந்தச் சம்பவமும் என் மனதிற்கு எட்டுவதாக இல்லை. ஐந்து வயதாகிய பின்னரும் அதாவது , 'அருவரி' (இன்றைய கின்ரர் காடின்) வகுப்பிற்கு போகும் போதும் பால் குடித்து விட்டுத் தான் போனேனாம்.

  

அது மட்டுத் சற்று மங்கலாக என் மனத் திரையில் புலப்படுகிறது. அம்மாவின் மடியால் இறங்கிப் போனது ஏதோ கறுப்பு வெள்ளைப்படமாய் கலங்கலாகத் தெரிகிறது. ஒன்பது வயதிற்கு பின்னரான ஒரு சில நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க முடிந்த போதும் 14 வயதிற்கு பிந்தியவற்றை மட்டுமே தொடர்ச்சியாகக் கோர்க்க முடிகிறது. ஆனால் முற் பிறப்பில் நடந்தவற்றைக் கூட சிலரை சொல்ல வைக்கிறார்களாம். அப்படியானால் எனது முந்திய பிறப்பின் திகதி என்ன ? இதே திதியில் தான் அடியேன் அன்றும் அவதரித்தேனா? நான் இறந்து பிறந்திருந்தால் இறந்தது எப்போ? மீண்டும் பிறக்க முன் எப்படி இருந்தேன்.

அந்த இடைக் காலத்தில் எனக்கு உடல் ஏதாவது இருந்ததா? இப்படி எல்லாம் சிந்திக்கிற போது தான் உயிர் அல்லது ஆன்மா என்று ஒன்றின் இருக்கை சாத்தியமானதாக , தவிர்க்க முடியாததாக தோன்றுகிறது. அது உடலின்றியும் சாத்தியமாகிறது. அதாவது உயிரின்றி உடல் நிலைக்க இயலாது ஆனால் உடலின்றி உயிரால் தொடரந்து இருக்க முடியும் என்பது புலனாகிறது. இதனை பகுத்திறவு வாதி என்ற ஐம்புலனில் மட்டும் தங்கியிருக்கும் அறிவாளிகள் மறுதலிப்பர். இநத ஞானக் குருடர்கள் ஐம்புலன்களின் வீச்சம் பற்றி பகுத்தறிவதில்லை.

இந்த பிரபஞ்ச வெளியில் உள்ள அனைத்தையும் நமது கண்களால் காண இயலாது என்பதையும் , இந்த அண்ட வெளியில் அதிரும் மிக நுண்ணிய ஒலி அதிர்வுகளையும் அதீத அதிர்வுகளையும் நமது செவிப்பறை கேட்பதில்லை அல்லது அது அதனால் முடியாது என்ற விபரம் அவனிற்குத் தெரியாது. இதனை சில உயிரினங்கள் கேட்டுணர்நத 'சுணாமி' காலச் செய்திகள் கூட இவனிற்கு இதைப் புகட்டவில்லை. மட்டக்களப்பில் மீன்களும் , காடுகளில் யாணைகளும் இதை அறிந்த சங்கதிகள் இவனிற்கு மூட நம்பிக்கைகளா? நல்ல காலம் பசி என்று ஒன்று இல்லை இருந்தாற் காட்டு என்று அவன் கேட்காத அளவில் திருப்தி.

எனவே இந்த நான் என்பது அவனிற்கு இந்த உடல் மட்டுமே. இந்த நான் என்கிற இந்த உடம்பு நானல்ல. என் உயிரே அந்த நானாக முடியும். ஆனால் அந்த நான் என்ற ஜீவன் அல்லது சிவன் குடியிருக்கும் இடமே , அதாவது என் உடலே அதன் கோயில். நமது ஆலயங்களின் அமைப்பும் மேற்கே அல்லது தெற்கே தலை வைத்து கிழக்கே அல்லது வடக்கே கால் நீட்டும் ஒரு மனித உடல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து உயிரே கடவுள் என்றும் அந்தச் ஜீவனே சிவனாக பிறள்வடைந்தததோ என்று ஐயுறத் தோன்றுகிறது. அதாவது தலை மூலஸ்தானமாக அப்படியே கோயிலும் அகன்று செல்கிறது. உள்ளம் பெரும் கோயில் ஊண் உடம்பு ஆலையமா?

இந்தச் ஜீவனிடம் இருப்பதே அறிவு. அறிவின் விளைவு சலனம். சலனத்தின் விளைவு செயல் அல்லது இயக்கம். இந்த இயக்கத்திற்கு வேண்டிய சக்தியும் சிவமாகிய ஜீவனிற்கு கிடைத்தாயிற்று. இந்தச் ஜீவனிடம் இருந்து உயிர் நீங்கினால் எஞ்சுவது சவமா? சவத்திற்கு உயிராகிய விசிறியைப் போட்டால் மீண்டும் சிவமா? ஆகா! அப்படியானல் நான் என்ற எனது உயிர் தான்..... ஆன்மா தான் கடவுளா? அதாவது ஜீவாத்மா என்பது நானே. ஆத்மாக்களின் அதி உயர் நிலை தான் பரமாத்மாவா?

ஏற்கனவே ஆத்மாவிடம் அறிவு உண்டென்றோம். அந்த அறிவு வெறும் ஐம்புலன்களிற்கு உட்பட்ட அறிவாக அல்லாமல் ஞானமாக விரிந்து மேலும் பரி பூரணம் அடைந்தால் அது தான் பரமார்த்த நிலையா? இதைத் தான் நீயே அது நீயே கடவுள் என்ற அத்வைத கோட்பாடும் சுட்டுகிறதா? கடவுளை இனங் காண்பது இவ்வளவு இலகுவானதா? ஆனால் நான் தான் கடவுளடா என்பதில் உள்ள அந்த நான் என்பது யார்? அது உடலும் அல்ல அதனோடு இணைந்த உயிரே. ஆனால் அந்த உயிர் என்ற கடவுள் வாழ உடல் என்ற ஆலயம் தேவை. அதை சுத்தமாகவும் புனிதமாகவும் பேண வேண்டும். காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்பதன் பொருள் உடல் அல்ல உயிரே கடவுள் என்பதை வலியுறுத்த எழுந்த முது மொழியே ஒழிய அதன்தேவை பயன்பாட்டை குறைத்து மதிப்பிட அல்ல.

உடல் உயிரற்றதாயின் பலனற்றது அழியக் கூடியது என்ற நிலைமையை அதாவது உயிரின்றி உடலிருக்க இயலாது என்பதைக் காட்டவே ஒழிய வேறில்லை. அப்படியானால் கடவுளைத் தேடுவது என்பது ஜீவனை அதாவது சிவனை உயிரைத் தேடுவதேயாகும். அந்த உயிர் நமது உடலிற்குள் இருக்கும் போது நாம் கடவுளை வெளியே தேடுவது மடமை அல்லவா? கடந்து உள்ளே உள்ளவனே கடவுள். வேற்று உயிர்கள் உள்ளவா என்று மதியையும் கடந்து செவ்வாயிலும் தேடலாம். ஆனால் கடவுளைத் தேட வேண்டுமாயின் நாம் நமது பார்வைகளை உள் நோக்கி நமது அகத்தை நோக்கி திருப்ப வேண்டும். இது தான் இந்த 55 வயது உணர்த்தும் உண்மையாகிறது.

மேலே நாம் நமது உடலை சுத்தமாகவும் புனிதமாகவும் பேண வேண்டும் எனக் கண்டோம். இங்கு சுத்தமாக இருக்க வேண்டியது உடல் என்றால் புனிதமாக இருக்க வேண்டியது உள்ளம். உள்ளத்தை புனித மாக வைத்திருப்பது என்பது எண்ணங்களைக் கூட தர்மத்திற்கு இசைவாக நியாயத்தின் நியமத்தில் வைத்துக் கொள்வதேயாகும். இதனையே அநேகமாக எல்லா மதங்களும் போதிக்க முயல்கின்றன. உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. இதனையே உடலும் உள்ளமும் நலந்தானா என்ற கண்ணதாசன் வரிகள் காட்டுகின்றன. இந்த உள்ளம்அல்லது மனம் வேறு சித்தம் வேறு புத்தி வேறு.

இவற்றின் சுருதி யுக்தி அனுபவம்எல்லாவற்றையும் விஞ்சியது ஞானம். இது காலங் கடந்தது. முக் கால் வாசி முக் காலங்களையும் கடந்த முழுமையே ஞானம். நடக்க இருந்த போரின் முடிவை பார்த்தனிற்கு கண்ணன் காட்டியது எதிர்கால த்தை காட்டியதே. எதிர் காலம் காண்பதற்கும் உரியது கணிப்பிற்கும் கட்டுப்படக் கூடியது. இதைத் தான் அயின்ஸ்ரனும் 'ரைம்' எனப்படும் காலக் கணிப்புக் கூட தொடர்புக் கொள்கைக்கு உட்பட்டது என்ற ரீதியில்புரிய வைக்க முயன்றார். உயரம் வேகம் பாரம் தூரம் எல்லாமே ஏதாவது ஒன்றை நியமமாக தொடர்பாகக் கொண்டவை. இதனையே ஆதி சங்கரர் பார்ப்பவன் இல்லையேல் ஆகாயம் ஏது என்கிறார். பார்ப்பவன் இந்த வெளியில் எங்கிருக்கிறான். அவன் மலையில் இருந்தால் மரம் குட்டையாகவும் வாகம் உயர்ந்து பரந்ததாகவும் இருக்கும்.

அவனே மரத்தன் கீழ் நின்றால் மரம் உயரமானதாக தோன்றியிருக்கும். நீ இருக்குமிடத்தைப்பொறுத்ததே உயரமும் கட்டையும் அழகும் அறிவும்...... தோன்றலும் தோன்றாமையும். நீ உயர்ந்தால் எதிர்காலம் கூடத் தோன்றலாம். இவற்றை புரிய ஏழாம் அறிவு எட்டாம் அறிவுகள் எல்லாம்தேவையோ என்னமோ? ஆனால் ஆறாம் அறிவுடனேயே அயின்ஸ்ரன் இதனை உணர்ந்தார் என்றால் அவரிற்கு நிட்சயம் ஆறு அறிவாவது நூறு வீத விணைத் திறன் எடையதாகவே அல்லது ஏமாவது அறிவைப் பெறும் ஞானம் கிட்டியிருக்க வேண்டும்.

இந்த பிரபஞ்ச வெளியில் தோன்றாத மிகாந்த அலை ரூப உலகம் ஒன்றும் இருப்பதாகத் தோன்றுகிறது. எண்ண அலைகளும் சக்தி அலைகளும் ஒரு ஒழுங்கில் சுழல்கின்றதையே இங்கு குறிப்பிடுகிறேன். அறிவு ஞானத்தை மட்டுமல்ல சலனத்தையும் கொடுக்கும. இதைத் தான் ஏவாள் ஆதாமிற்கு கொடுத்த பழக் கதை காட்டுகிறது. இது ஞானப்பழக்கதையல்ல. சட நிலையிலிருந்து மன நிலைக்கு மானிட மனம் பரிணாமம் அடைந்த கதையாக இருக்க வேண்டும். அறிவு ஒன்றென்றால் சலனம் இரண்டென்றால் இயங்கிக்கொண்டேயிருக்கும் சக்தி மூன்றாவதாக முக்கோணமாக வர வேண்டும். ஆக , அறிவு ஆரோக்கியமானதாக மட்டுமல்ல அல்லோலத்திற்கும் அடி கோலும். ஆதியிலே வார்த்தை என்ற அதிர்வு இருந்தது. அது தேவனாக சப்தப் பிரமமாக பரம் பொருளாக இருந்தது. பிரணவமாக இருந்தது.

ஓய்விற்குரிய சனிக் கிழைமைக்கு மறு நாளான ஞாயிறு அன்றே உலகம் சிருஷ்டியானதாம். அன்றே இயேசுவும் உயிர்த்தெழுந்தார். கிருஷ்னரிற்கு உரியதும் ஞாயிறே. இந்த ஓய்விற்கு முதல் நானான வெள்ளியில் இயேசு மரித்தார் ஓய்வெடுக்க... மறு அவதாரம் பூண.... முன்பெல்லாம் கடவுள் மனிதர்களுடன் வாழ்ந்ததாக பேசியதாகவே நம் புராணங்களும் உரைக்கின்றன. அறிவு ஞானம் போனறவை மட்டுமல்ல உண்மையை உணர வல்ல அல்லது காண தளராத உறுதி இயலுமை உள்ள அருச்சுனனிற்கே பரந்தாமன் கீதையை போதித்தான் விஸ்வ ரூபத்தை காட்டினான். தர்மத்தின் வடிவான தர்மரிற்கோ , ஞானப் பேழையான சகா தேவனிற்கோ கிடைக்காத பேறு பார்த்தனிற்கு கிடைத்தது இதனாற் தான். ஏனென்றால் அவன் தான் பார்க்க வல்லவனாக இருந்தான்.

இப்போதெல்லாம் இந்த இயற்கைக்கும் மானிடரிற்குமான இடைவெளி அதிகமாகிவிட்டது. தூர திருஷ்டி எல்லாம் எட்டாப் பழமாகி புளித்து இல்லாமலோ போய் விட்டது. அதிக இடைவெளி இருந்தால் உரையாட இயலாது. கேட்காது என்பதைவிட பரியாது என்பதே முதலாவது பாரிய தொடர்பாடல் தடையாகும். அறிஞர்களும் ஞானிகளும் பாமரருடன் சம்பாஜிக்காமைக்கு காரணம் உண்டு. அபபடியானல் தன்னையே காணாத பகுத்தறிவு வாதியுடன் கடவுள் எப்படிப் பேச இயலும்? ஆனால் பைபிளின் பிரகாரம் ஆண்டவர் ஏப்ரஹாம், மோஸஸ் , எலி , ஜா ஆகியோருடன் பேசினார் என்று வாசிக்கிறோம்.

சாலமனிற்கு இயற்கை இரகசியங்களை இறைவன் போதித்தார் என்பது கீதை உரைக்கப்பட்டதைப் போல் உள்ளது. புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பெண்ணாகி ஆணாகிய நாம் மீண்டும் ஆதாம் ஏவாளாக மரத்தடிக்கு போகாது இறைவன் திருவடிக்கு போக வேண்டும். மறுபடி பிறந்தால் தேவராக இல்லாவிடினும் தெய்வீக அம்சம் நிறைந்தவர்களாக இந்த அரிய மானிடப் பிறவியை உபயோகித்துக் கொள்ள வேண்டிய வழி வகைகளை தேட வேண்டும். நமது மதங்கள் புலன்களை அடக்கு என்றால் , கவனம் என்றால் ஆமையை; போல் ஒரே அடியாக எல்லாவற்றையும் உள்ளே இழுத்துக் கொண்டு கல் போல் இருக்க வேண்டியதில்லை. ஐம்புலன்களை அடக்கி ஒழுங்குபடுத்துவது வேறு ஒரே அடியாக ஒளிந்து கொள்வது வேறு.

கவனமாகச் செயற்படு என்ற எச்சரிக்கை வேறு ஒரே அடியாக ஒடுங்கிப் போதல் வேறு. 'உனக்கு மலையில் காண்பிக்கப்பட்ட மாதிரியில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பது யூத போதனையாகும். யூதருடைய பன்னிரெண்டு இனங்கள் , 12 கற்கள் போன்ற கதைகள் 2012 இல் 12 வது மாதத்தில் உலகம் அழியும் என்று கூறுவதாகத் தோன்றவில்லை. அப்படி அழிந்தாலும் உயிர்கள் அழியவா போகின்றன? பிரபஞ்ச வெளியில் இயங்கிக் கொண்டேயிருக்கும் மின் காந்த அலைகளோ , சக்தியோ செயலிழக்கவா போகின்றன.

இந்த ஏழு , பதின்ரெண்டு எல்லாம் காலச் சக்கரத்தின் நியமங்களே ஒழிய மாற்றங்களிற்கான புள்ளிகளே ஒழிய வேறில்லை. ஏழு தினங்களுடன் வாரம் ஒழிந்து போவதில்லை. 12 மாதங்களுடன் காலம் நிறைவுறுவதும் இல்லை. மாதங்களில் நான் மாரகழி என்ற கிருஷ்னன் காத்தற் கடவுள் அழித்தற் பரமாரத்தா அல்ல. வேண்டுமென்றால் ஒரு மெஹா போரிற்கான மாறுதலாக 21 12 2012 ஐப் பார்ப்போமாக! ஏனென்றால் தமிழராகிய எங்களிற்கு ஒரு போரினால்த் தான் விமோசனமோ என்னமோ?

 

 

நன்றி - செய்தியிணையம்

 

http://seithy.com/breifNews.php?newsID

 

  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.