Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உடனடி விடுதலையை கோரி நிற்கும் சிவில் சமூகத்தின் அறிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உடனடி விடுதலையை கோரி நிற்கும் சிவில் சமூகத்தின் அறிக்கை.
சிறீலங்கா | ADMIN | DECEMBER 10, 2012 AT 10:29
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கைதுக்கும், அவர்கள் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டமைக்கும் எதிரான கண்டனத்தை வெளியிட்டு அவர்களது உடனடி விடுதலையை கோரி நிற்கும் அறிக்கை
கீழே கையொப்பமிட்டுள்ள நாம், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வியாழக்கிழமை, 29-11-2012 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் விடுதலை செய்யப்பட்டமையினை வரவேற்கும் அதேவேளை,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்களான சண்முகம் சொலமன் (24), கனகசுந்தரம் ஜெனமஜெந்த், மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சனன் (24) ஆகியோர் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டிக்கிறோம்.
யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறீ தமிழீழ விடுதலைக் கழகக் காரியாலயம் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோப்பாய் பொலீஸாரினால் வியாழக்கிழமை 29-11-2012 அன்று அழைப்பாணை விடுக்கப்பட்ட ஏழு பல்கலைக்கழக மாணவர்களில் இந்த நால்வரும் அடங்குகின்றனர்.  நடைபெற்றதாகக் சொல்லப்படும் தாக்குதல் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக, சிறீ தமிழீழ விடுதலைக் கழகம் தமது காரியாலயம் ஒன்றைத் திருநெல்வேலியில், யாழ்ப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைத்திருந்தனர். இந்த மாணவர்கள் செவ்வாய்க்கிழமை, மாவீரர் தினமாகிய  நவம்பர் 27 ஆம் திகதி   தொடர்பான‌ சுவரொட்டிகளை பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஒட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அழைப்பாணை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வியாழ‌க்கிழமை, நவம்பர் 29 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு  சண்முகம் சொலமன், கனகசுந்தரம் ஜெனமஜெந்த் ஆகிய மாணவர்கள் இரண்டு யாழ்ப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஒரு சட்டத்தரணி சகிதம் கோப்பாய்ப் பொலிஸ் நிலையம் சென்று அங்கு பொலிஸாரிடம் சரணடைந்தனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டபோது பிரசன்னமாக இருந்த விரிவுரையாளர்களுக்கு, வெள்ளிக்கிழமை, நவம்பர் 30 எனத் திகதியிடப்பட்டு  சிங்கள மொழியிலே தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்று (Ref No. OIC/KP/ODB/6067/2012) காட்டப்பட்டுள்ளது. அது கோப்பாய்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் யாழ்ப் பல்கலைக்கழகப் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்கு எழுதப்பட்டது போன்று தோற்றமளித்தது.
யாழ் மாவட்டத்தில் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த சோமசூரியசிங்கம் செந்தூரன் என்பவரிடம் இருந்து நவம்பர் 29ஆம் திகதி அன்று கிடைக்கப்பெற்ற ஒரு முறைப்பாடு தொடர்பாக தமது வாக்குமூலத்தினை வழங்குவதற்கு ஆவணத்திலே குறிப்பிடப்பட்ட 7 மாணவர்களும் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் நவம்பர் 30ஆம் திகதி பிரசன்னமாக இருக்க வேண்டும் என அந்த ஆவணத்திலே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 30ஆம் திகதி சண்முகம் சொலமன், கனகசுந்தரம் ஜெனமஜெந்த் ஆகிய மாணவர்கள் வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் நவம்பர் 30ஆம் திகதி அன்று கையளிக்கப்பட்டனர். பரமலிங்கம் தர்சனன், கணேசமூர்த்தி சுதர்சன் ஆகிய மேலும் இரண்டு மாணவர்கள் கலட்டி மற்றும் உரும்பிராயில் உள்ள அவர்களின் தற்காலிக வதிவிடங்களில் வைத்து நவம்பர் 30ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை, டிசம்பர் 1ஆம் திகதி அன்று வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் கையளிக்கப்பட்டனர்.
ஏனைய மூன்று மாணவர்களும் வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இம்மாணவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றியோ, இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பற்றியோ, இம்மாணவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரையில் எந்த விதமான உத்தியோகபூர்வமான ஆவணங்களும் வழங்கப்படவில்லை.
இந்த மாணவர்கள்  யாழ்ப்பாண  நீதவான் முன்னிலையிலோ அல்லது வவுனியா   நீதவான் முன்னிலையிலோ இதுவரை ஆஜர் படுத்தப்படவில்லை. இந்த வகையிலே, இந்த மாணவர்கள் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளமையின்  சட்டபூர்வத்தன்மை தொடர்பாக நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.
ஒரு மாணவரின் பெற்றோர் குறிப்பிட்ட நான்கு மாணவர்களையும் வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் திங்கட்கிழமை, டிசம்பர் முதலாம் திகதி சந்தித்துள்ளனர். இம்மாணவர்களை வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த பின்னர் விடுவிப்பதாக வவுனியா பொலிஸார் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் உறுதி அளித்துள்ளனர். பெற்றோர்களும், மாணவர்களும் டிசம்பர் 3ஆம் திகதி முற்பகல் 8 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை, வவுனியா   நீதவான் கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு வருவதற்காக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் காத்திருந்தனர். எனினும், மாணவர்கள் இதுவரை  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவில்லை. டிசம்பர் 2ஆம் திகதி அன்று   இம்மாணவர்களைத் தடுப்பில் வைப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளமை பற்றி வட மாகாண பொலிஸ் பரிசோதகரால் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டமை குறித்து எமக்குக் கிடைத்துள்ள‌ ஆதாரங்கள் தொடர்பாக நாம் மிகவும் அக்கறையாக உள்ளோம். இன்று வரை இம்மாணவர்களின் பெற்றோருக்கு தடுப்பு உத்தரவு பற்றிய ஆவணத்தின் பிரதிகள் வழங்கப்படவில்லை.
நவம்பர் 30 திகதியிடப்பட்ட ஆவணத்திலே பொலிஸார் முன்னிலையில் பிரசன்னமாகும்படி கேட்கப்பட்ட ஏனைய மூன்று மாணவர்களில் இருவர் ஏற்கனவே யாழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று பட்டதாரிகளுக்கான அரச உத்தியோகம் வழங்கும் திட்டத்தின் கீழ்  வவுனியா மாவட்டத்திலுள்ள நெடுங்கேணியில் தற்போதுபணிபுரிந்து வருகின்றனர். நவம்பர் 30 திகதியிடப்பட்ட கடிதத்திலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு மாணவர்களில் ஆறு பேர், போருக்குப் பிந்தைய காலத்தில், யாழ்ப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் துடிப்பாக செயற்பட்டு, தமது கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்திவந்துள்ளனர். வடக்கிலே இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பிரசாரங்களை இவர்கள் ஏற்பாடுசெய்தும், அவற்றில் பங்குபற்றியும் உள்ளனர். நவம்பர் 28ஆம் திகதி அன்று, அன்றைய தினத்துக்கு முதல் நாள் இலங்கை இராணுவத்தினரால் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், அவர்களுக்கு எதிராக விடப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பவற்றினைக் கண்டிப்பதற்காக இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தினை ஒழுங்கு செய்வதில் இம்மாணவர்கள் ஈடுபட்டனர். இம்மாணவர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பாக எந்த விதமான ஆதாரங்களோ அல்லது குற்றச்சாட்டுக்களோ இதுவரை முன்வைக்கப்படவில்லை.
நவம்பர் 30ஆம் திகதி அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களின் வீடுகளை பொலிஸார் திடீரெனத் துருவிச் சோதனையிட்டுள்ளனர்.  நவம்பர் 30 எனத் திகதியிடப்பட்ட கடிதத்தில் இந்த மாணவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை. இந்த திடீர் சோதனையினை பொலிஸாரும், சிவில் உடையில் வந்த தமது அடையாளத்தை வெளியிடாத ஒரு சிலரும் மேற்கொண்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாணவர் இவர்களால் விசாரிக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் உள்ளார். மற்றைய மாணவரின் வீடு நவம்பர் முப்பதாம் திகதி காலையிலும், டிசம்பர் முதலாம் திகதி அதிகாலையிலுமாக இரு தடவைகள் துருவிச் சோதனையிடப்பட்டுள்ளது. இந்த இரு தடவைகளின் போதும் குறித்த மாணவன் வீட்டில் இருந்திராமையினால், மாணவன் உடனடியாக பருத்தித்துறைப் பொலிஸில் சரணடைய வேண்டுமென அவரது பெற்றோரிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், இம்மாணவர்களின் கைதுகள் ஆதாரம் எதுவும் இன்றி மேற்கொள்ளப்பட்டவை எனவும், அரசியல் உள் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இம்மாணவர்கள் பிரசாரங்கள், போராட்டங்களை முன்னெடுத்தமைக்காக அவர்களைப் பழிவாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டவை எனவும் நாம் கரிசனை கொள்கிறோம். இந்தக் கைதுகளுக்கு எதிராகவும், இலங்கை இராணுவத்தினால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது எதிர்ப்பு போராட்ட நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்துள்ளதுடன், மேலும் கைதுகளும், தாக்குதல்களும் இடம்பெறலாம் என்ற அச்சங் காரணமாகப் பல்கலைக்கழக விடுதிகளில் இருந்தும் வெளியேறியுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழகத்தின் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இச்செயல்கள் பல்கலைக்கழகத்தை முழுவதுமாக ஸ்தம்பிதம் அடையச் செய்துள்ளமை குறித்தும், பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை அவை தீவிரமாகப் பாதித்துள்ளமை குறித்தும், பல்கலைக்கழகத்தின் உள்ளே மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் நாம் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்.
யாழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு எழுதப்பட்டுள்ள திறந்த கடிதத்திலே முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களான தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதனை உறுதிப்படுத்துதல், பல்கலைக்கழகத்தினுள்ளே பாதுகாப்பானதும், கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளிற்கு உகந்த சூழலினை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தினைப் பெற்றுக்கொடுத்தல், பாதுகாப்புப் படையினரால் மேலும் மாணவர்கள் கைது செய்யப்படுவதனை இல்லாது செய்தல், நவம்பர் 27ஆம் திகதியிலிருந்து பல்கலைக்கழக சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள காவலரண்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பிரசன்னத்தை இல்லாது செய்தல், பல்கலைக்கழக அதிகாரிகளின் முன்கூட்டிய அனுமதி இன்றி பல்கலைக்கழகத்தினுள் எந்தவொரு வெளி நபரும், குறிப்பாக இராணுவமோ, பொலிஸாரோ, பிரவேசிக்காது இருப்பதனை உறுதிப்படுத்துதல் என்பவற்றை நாம் மீள் வலியுறுத்துகிறோம்.
அத்துடன் பின்வரும் விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு  நாம் இலங்கை அரசாங்கத்திடம் கோருகிறோம்
மாணவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுடன் மாணவர்களைத் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்தல்
மாணவர்கள் சட்டரீதியிலான உதவிகளைப் பெறவும், பெற்றோர் அவர்களை கிரமமாக சந்திக்கவும் அனுமதித்தல்
தற்போது தடுப்பில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் உடல் மற்றும் உள நலனையும் உறுதி செய்தல்
பொலிஸாரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும்யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்தல், அவர்களை அச்சுறுத்துதல், அவர்களைத் துன்புறுத்தல், அவர்களைப் பழிவாங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதனை உடன் முடிவுக்குக் கொண்டுவரல்
யாழ். பல்கலைக்கழகத்தினதும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினதும் உள்ளக‌ நிருவாக நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினராலும், சட்டத்தினை அமுல்படுத்தும் அதிகாரிகளினாலும் ஏற்படுத்தப்படும் எல்லா விதமான தலையீடுகளையும் நிறுத்துதல்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எல்லா வன்முறைச் சம்பவங்களையும் (வன்முறையினை இழைத்தவ‌ர்கள் யார் என்று தெரியவராத சம்பவங்கள் உள்ளடங்கலாக) விசாரித்தல்
7-12-2012பிற்பகல் 12:30 மணிவரையில்பல்கலைக்கழகத்தில்நிலவியசூழல்தொடர்பானகுறிப்பு:
வெளியிட முடியாத குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக விசாரிப்பதற்காக தம்மிடம் கையளிக்கப்பட‌ வேண்டும் எனத் தெரிவித்து பத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று கோப்பாய் பொலிஸாரினால் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு டிசம்பர் 6ஆம் திகதி காலையில் கையளிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் யாழ்  பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களின் பெயர்களும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம், மற்றும் முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியம் என்பவற்றின் தலைவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் மருத்துவ பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டு நேற்று மாலையளவில் வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் விசாரணைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் அழைப்பாணை விடுக்கப்பட்ட மாணவர்களை  பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு எல்லா  பீடங்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் யாழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு சம்மதித்த பெற்றோர்கள், தமது பிள்ளைகளுடன் சேர்ந்து பல்கலைக்கழக அதிகாரிகளும் பொலிஸாரிடம் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
விஞ்ஞான பீடத்தினைச் சேர்ந்த மூன்று மாணவர்களும், முகாமைத்துவ பீடத்தினைச் சேர்ந்த ஒரு மாணவரும் தமக்கு எதிராக, முறைப்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் வரை பொ லிஸில் சரணடைய மறுப்புத் தெரிவித்துள்ளனர். மூன்று விஞ்ஞான பீடத்தினைச் சேர்ந்த மாணவர்களும் துணிச்சலாக‌த் தமது கருத்துகளைத் தெரிவிக்கும் செயற்பாட்டாளர்கள் எனத் தெரிய வருகிறது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், குறிப்பாக முன்னாள் மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள், இந்தக் கைது நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பயத்தினாலும், பீதியினாலும் தலைமறைவாக உள்ளனர். இன்று ஒன்பதாவது நாளாக மாணவர்களின் வகுப்பு பகிஷ்கரிப்பு தொடர்கின்ற நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பதற்ற நிலையும், கொந்தளிப்பான சூழலும் தொடர்ந்தவாறு உள்ளது.
Signed by:
CLERGY
Most Rev. Dr. Rayappu Joseph – Bishop of the Diocese of Mannar
Most Rev. Dr. Thomas Savundranayagam – Bishop of the Diocese of Jaffna
Most Rev. Dr. Norbert Andradi OMI – Bishop of the Diocese of Anuradhapura
Most Rev. Dr. Raymond Wickramasinghe – Bishop of the Diocese of Galle
Most Rev. Dr. Harold Anthony Perera – Bishop of the Diocese of Kurunegala
Ven. Buddhiyagama Chandra Rathna Thero
Rt. Rev. Duleep de Chickera – Bishop Emeritus of Colombo, Anglican Church
Rt. Rev. Kumara Illangasinghe – Bishop Emeritus of Kurunagala, Anglican Church
Fr. Arulanandam
Fr. B. Regno
Fr. C. Jeyakumar – Parish Priest, Kayts
Fr. Jeyabalan Croos
Fr. R. Augustine
Fr. Sarath Iddamalgoda
Fr. Terence Fernando
Fr. Yoges
Rev. Jason J. Selvaraja – Assembly of God Church, Chavakachcheri
Rev. Fr. Lawrence Gnanathicam
Rev. Fr. M. Sathivel – Christian Solidarity Movement
Rev. Fr. S. Mahesan
Rev. Reid Fernando – Chaplain of YCW/CWM Archdiocese of Colombo
Sr. Angela Fernando
Sr. Helen Fernando
Sr. Immaculate
Sr. Marie Angela Cooray
Sr. Mary Christine
Sr. Milburga Fernando
ORGANIZATIONS
Ainslie Joseph – Christian Alliance for Social Action (CASA)
Balasingham Skanthakumar – Law & Society Trust, Colombo
Brito Fernando – Families of the Disappeared
Dr. Paikiasothy Saravanamuttu – Executive Director, Centre for Policy Alternatives (CPA)
Herman Kumara – National Fisheries Solidarity Movement (NAFSO)
J.C. Weliamuna – Convener, Lawyers for Democracy
N.A. Sampath Pushpakumara – Rights Now Collective for Democracy
Nadeeshani Bahabandara – Women’s Political Academy
Nimalka Fernando – Executive Director, International Movement Against All Forms of Discrimination and Racism (IMADR) Asia
Padmini Weerasooriya – Mothers and Daughters of Lanka
Philip Dissanayaka – Right to Life Human Rights Centre
Rosanna Flamer-Caldera – Executive Director, EQUAL GROUND
Sanjendra Vignaraja – Project Manager, American Center for International Labor
Saroja Sivachandran – Centre for Women and Development, Jaffna
Sepali Kottegoda – Women & Media Collective
Sriya Ahangama – Women’s Centre
Sudarshana Gunawardana – Rights Now Collective for Democracy
Sunil Jayasekara – Free Media Movement (FMM)
Sunila Abeysekera – Executive Director, INFORM Human Rights Documentation Centre
Thiruni Kelegama – Institute for Defence Studies and Analyses, New Delhi
Udaya Kalupathirana – INFORM Human Rights Documentation Centre
Visaka Dharmadasa – Association of War Affected Women (AWAW)
Activist for Human Rights (AHR)
Human Rights Defenders Network, Sri Lanka
Networking for Rights in Sri Lanka
Women’s Action Network
INDIVIDUALS
Amal De Chickera
Ananda Jayasekera
Anushaya Collure
Ayeshea Perera
Bhavani Fonseka – Attorney-at-law
Chandraguptha Thenuwara
Chulani Kodikara
Deanne Uyangoda
Dharisha Bastians
Dilshy Banu
Dinidu de Alwis – Freelance Journalist
Divya Martyn
Dr. Leonie Solomons
Dushiyanthini Kanagasabapathipillai
Dylan Perera
Ermiza Tegal – Attorney-at-Law
Francis Solomantine
Hans Billimoria
Harean Hettiarachchi
I.D. Geethika Dharmasinghe
Iromi Perera
Jagath Liyanarachchi – Attorney-at-law
Jake Oorloff
Jay Gunewardena
Jayanthi Kuru-Utumpala
Jehanki Anandha
Jovita Arulanantham
Juanita Arulanantham – Attorney-at-Law
Juliana Arulanantham
K.S. Ratnavale – Attorney-at-law
Krishan Rajapakshe
Kshama Ranawana
Kushlani Perera
Kusum Weeratunge
Luwie Ganeshathasan
M.M. Jihad Al Shajhan
Mahendran Thiruvarangan
Maria Emmanuel
Marisa de Silva
Mathuri Thamilmaran – Attorney-at-Law
Megara Tegal
Melisha Yapa
Mirak Raheem
Mohamed Hisham
Nalini Sivathasan
Nicola Perera
100. Nigel V. Nugawela
101. Nihal de Silva
102. Niran Anketell
103. Nirmanusan Balasundaram – Independent Journalist / Human Rights Advocate
104. Nishan de Mel
105. P.N. Singham
106. Paba Deshapriya
107. Prabu Deepan
108. Priya Thangarajah
109. Priyanthie de Silva
110. Punitharani Markpillai
111. Ruki Fernando
112. S.C. Asoka Obeyesekere
113. Sankha Ranadheera Vithana
114. Scholastica Perera
115. Selyna Peiris
116. Shehan de Alwis
117. Shreen Abdul Saroor
118. Suchetha Wijenayake
119. Sumith Chaminda Leelarathne
120. Sunanda Deshapriya
121. Thiagi Piyadasa
122. Thushari Madahapola
123. Vaidehi Perera
124. Velayutham Jayachitra
125. Vinoth Ramachandra
126. W.A. Upul Wickramasinghe – Chemist
127. Zainab Ibrahim


http://thaaitamil.com/?p=40418

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.