Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலை மாணவர்களை உடனே விடுதலை செய்! கிளிநொச்சியில் திரண்ட மக்கள்

Featured Replies

யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை விடுதலை செய்யக் கோரி இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு  முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுது.

 

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய், இராணுவமே வெளியேறு, போன்ற கோசங்கள், பாதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,புதிய மாக்சிஸ் லெனின் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

கவனயீர்ப்பு போராட்டத்தை தமிழ்த் தேசியக மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஆறு கட்சிகள் கூட்டாக இணைந்து இப்போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இப் போராட்டத்திற்கு எதிராக ஒரு குழுவினர் ஓர் ஆப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.



02(45).jpg



01(39).jpg



03(37).jpg



http://onlineuthayan.com/News_More.php?id=858641684210389066

  • தொடங்கியவர்

மனித உரிமை தினமான இன்று கிளிநொச்சியில் எதிரும் புதிருமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒரு பிரிவினரும் அரசாங்கத்திற்கு ஆதாரவான கோஷங்களுடன் மற்றொரு பிரிவினருமே எதிரும் புதிருமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் அரசியல்வாதிகள் உட்பட 150ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக காணமல் போனவர்களின் குடும்ப உறவினர்களும் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

 

"எமது நிலம் எமக்கு வேண்டும்", "கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்",  "பல்கலை விடுதிக்குள் இராணுவமே உனக்கு என்ன வேலை" மற்றும்  "அரச பயங்கரவாதம் எமக்கு வேண்டாம்" போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்கொண்டனர்.

 

இதேவேளை, இந்த ஆர்பாட்டத்திற்கு எதிராக மற்றுமொறு ஆர்ப்பாட்டமொன்றும் அதே இடத்தில் வீதியின் மறுபக்கத்தில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் இவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.


அரசாங்கத்திற்கு ஆதரவான இந்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமானது. இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிரான கோசங்களை  எழுப்பியதுடன் அரசாங்கத்தை ஆதரித்தும் தமிழ் தேசியக்கூட்டமை எதிர்த்தும் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

 

இந்த இரு ஆர்ப்பாட்டங்களும் எதிர்ரும் புதிருமாக இடம்பெற்றமையினால் மேதிக பாதுகாப்பிற்கென பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். (படங்கள்:எஸ்.கே.பிரசாத், நவரத்தினம்)

 



killno9.jpg



killno10.jpg



killno11.jpg



http://tamil.dailymirror.lk/--main/54494-2012-12-10-13-19-24.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.