Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிந்தனை செய் மனமே !!!!!!!!!

Featured Replies

  • தொடங்கியவர்

இதயமும் மூளையும்

 

இந்த உலகம் முழுவதும் அன்பினால் செலுத்தப்படவில்லை. அது தந்திரத்தால் செலுத்தப்படுகிறது. இந்த உலகில் வெற்றி பெற உங்களுக்கு அன்பு தேவையில்லை. உங்களுக்குக் கல்லாகிப் போன ஒரு இதயமும் கூரிய புத்தியும் தான் தேவை. சொல்லப்போனால் உங்களுக்கு இதயமே தேவையில்லை.ஏனெனில் நீங்கள் வளரும் முறை, கலாச்சாரம்,சமுதாயம் ஆகியவை அன்பு செலுத்தும் திறனைக் கொன்று விட்டன. இதயம் உள்ள மனிதர்கள் நசுக்கப்பட்டு சுரண்டப்பட்டு அடக்கியாளப் படுகின்றனர். இந்த உலகம் தந்திரக்காரர்களால் இதயமில்லாத கொடூரமானவர்களால் நடத்திச் செல்லப்படுகிறது. எனவே வளரும் பிள்ளையும் தனது இதயத்தை இழக்கும்படி இந்த சமூகம் செய்கிறது. எனவே அவனது சக்தி முழுவதும் மூளையை நோக்கி செலுத்தப்படுகிறது. இதயம் அலட்சியப்படுத்தப் படுகிறது. இதயம் எப்போதாவது ஏதாவது சொன்னாலும், அது உங்கள் செவியை வந்து அடைவதில்லை. உங்கள் தலையில், மூளையில் ஒலிஅதிகம் இருப்பதால் இதயத்தின் குரல் எழும்பாது. மெல்ல மெல்ல இதயம்,அது அலட்சியப் படுத்தப் படுவதால் சொல்லுவதை நிறுத்தி மௌனமாகி விடுகிறது. சமூகத்தைப் புத்தி நடத்திச் செல்கிறது. அன்பு நடத்திச் சென்றால் நாம், முற்றிலும் மாறுபட்ட, அதிக அன்பு கொண்ட,குறைந்த வெறுப்பு கொண்ட, போர்களற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருப்போம். அழிக்கும் முறைகளை உருவாக்குவதை என்றும் இதயம் ஆதரிக்காது. அது வாழ்விற்காக மட்டுமே உயிர்க்கிறது; துடிக்கிறது.

 

http://jeyarajanm.blogspot.fr/2011/08/blog-post_2359.html

 

 

  • Replies 208
  • Views 21.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இறைவன் ஏன் இதயத்தில் இருக்கிறான் ?

 

ஆண்டவன் இந்த உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். ஆண்டவனை அடையாளம் கண்டு கொண்ட பக்தர்கள, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை காசு கேட்டுத் துரத்தும் உள்ளூர் பிச்சைக்காரர்கள் போல ஆகிவிட்டார்கள் .  "எனக்கு நிறைய நகை கொடு.. பணம் கொடு.." என்று வகைவகையாகக் கேட்டு ஆண்டவனைத் துரத்த ஆரம்பித்ததார்கள் .  இவர்களைச் சமாளிக்க முடியாமல் மண்டபம் சத்திரம், கிராமம், நகரம் என்று எங்கெங்கோ ஓடிப்பார்த்தார் ஆண்டவன் .  ஆனால் அவரால் மனிதர்களின் "அதைக் கொடு.. இதைக் கொடு.." என்ற பிக்கல் பிடுங்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை . அவர் கோயிலை நோக்கி ஓடினாராம்.  அங்கேயும் தட்டு ஏந்தியவாறு எதிர் கொண்டது பிச்சைக் காரர்கள் கூட்டம். ஆண்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .  கடைசியில் அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. "மனிதன்தான் உள்நோக்கிச் சிந்திப்பதே இல்லையே.. சுயமதிப்பீடும் செய்து கொள்வதில்லையே .  தன்னுடைய இதயத்தைத்தான் எந்த மனிதனும் பார்ப்பதில்லையே .  அதனால் அங்கே ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள்" என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்.

"கடவுள் ஏன் நம் இதயத்தில் குடியிருக்கிறhர்..?" என்ற சீரியஸான கேள்விக்கு கிண்டலாகச் சொல்லப் படுகிற கதை இது .

"யாரிடமிருந்து எதை வாங்கலாம்.. பெறலாம்" என்ற மனநிலையிலே நம்மில் பலர் இருந்து வருகிறோம். அதனால் பிறருக்கு என்ன கொடுக்கலாம் என்றே நாம் நினைப்பது இல்லை .

தப்பித் தவறி நாம் கோயிலுக்கு ஒரு டியூப்லைட் வாங்கிக் கொடுத்தால் லைட் வெளிச்சமே வெளியில் வராத சைஸுக்கு அதன் மேல் நம் பெயரைக் கொட்டை எழுத்துக்களில் எழுதிவிடுவோம்.

இந்து சாஸ்திரப்படி ஒரு பொருளைத் தானமாகக் கொடுக்கும்போது "இனிமேல் இது என்னுடையது இல்லை " என்று சொல்லிவிட்டுத்தான் கொடுக்க வேண்டும்.

சமஸ்கிருதத்தில் "நமமா" என்றல், "என்னுடையது இல்லை" என்று அர்த்தம். என்னுடையது இல்லை என்று சொல்லி, ஒரு டியூப்லைட்டைக் கோயிலுக்கு தானமாகக் கொடுத்து விட்டு "இது என்னுடையது *" என்று பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் தர்மம்..?

யோசித்துப் பாருங்கள்.. காலையில் எழுந்தவுடன் பல் விளக்க நாம் பயன்படுத்தும் பற்பசையிலிருந்து இரவு தூங்கும் போது உபயோகப்படுத்தும் கொசுவர்த்திச் சுருள் வரை.. கண்ணுக்குத் தெரியாத யார்யாரோ நமக்காகச் செய்து கொடுத்திருக்கும் பொருட்கள் எத்தனை..? எத்தனை..?

"இந்தச் சமூகத்திடமிருந்து இத்தனை பொருட்களை இன்று பெற்றுக் கொண்ட நான,; அதற்கு பதிலாக இந்த உலகத்துக்கு என்ன கொடுத்தேன்..? என்று யோசித்துப் பார்த்தாலே போதும்.. நாம் இந்த உலகுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கிறேhம் என்பது புரியும் .

அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறர்.  இந்த உலகில் இருக்கும் அத்தனை தலை சிறந்த விஞ்ஞானிகளும் ஒன்று கூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார். நாம் உண்ணும் உணவிலிருந்து உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை,  நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை ? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறேhமே..? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடங்களில் முக்கியமானது "நன்றியோடு இருக்கக் கற்றுக் கொள் என்பதுதான் "நமஹ" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் "போற்றி" என்றhலும் இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும் .

ஆனால், உதட்டளவில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கணக்கிலெடுத்தால், அந்த வரிசையில் முதலில் நிற்பது "நன்றி."

ஒரு முறை, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், பயணிகளே.. பயப்படாதீர்கள்.. விமானத்தில் சின்னக் கோளாறுதான்.. விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்.." என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது,

 

"அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமைமிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும் , விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறி விடப் போகிறது. Any way thank you for flying with our Airlines.. (எங்கள் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி) என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டு விட்டு விமானப் பணிப்பெண் பாராட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிட்டாளாம் .

 

நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் "நன்றி" பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன "நன்றி" மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது.

 

http://amuthamozhi.blogspot.fr/2008/10/blog-post_8909.html

 

  • தொடங்கியவர்

அவநம்பிக்கை

 

ஒரு பெரிய வியாபாரி. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து பெரும் லாபம் சம்பாதிப்பவர் அவர் அவ்வப்போது வெளி நாடுகளுக்குப் பயணம் செய்வதுண்டு. ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார். அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன. கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது.  அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது. அந்த ஆள் பார்ப்பதற்கே படு பயங்கரமாய் அவருக்குத் தெரிந்தார். பெரிய மீசை , தலை வழுக்கையுடன் ஒற்றைக் கண்ணனாய் இருந்தார். ஆள் மிக பலசாலியாகவும் உடலில் ஆங்காங்கே காயம் பட்ட வடுக்களுடனும் இருந்தார். வியாபாரிக்கு அவர் மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அவரை நம்பி அறையில் விலை உயர்ந்த பொருட்களை வைக்க அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.  எனவே கப்பலில் இருந்த பெட்டக அறைக்கு சென்று பொறுப்பாளரிடம்,

 

''இந்த விலை உயர்ந்த என் பொருட்களை இங்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். என்னுடன் இருப்பவர் நம்பிக்கைக்குரியவராகத் தெரியவில்லை.''

 

பெட்டகக் காப்பாளர் சொன்னார்,

 

''பரவாயில்லை,கொடுங்கள். நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்று. உங்கள் அறைக்கு வந்திருப்பவரும் சற்று நேரம் முன்னே இங்கு வந்து நீங்கள் சொன்ன காரணத்தையே சொல்லி அவருடைய பொருட்களை என்னிடம் பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி சென்றுள்ளார்.''


நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம்.நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.ஏற்றுக் கொள்வதுமில்லை.

 

http://jeyarajanm.blogspot.fr/2012/07/blog-post_21.html

  • தொடங்கியவர்

வெற்றுப்படகு

 

ஒருவன் படகின் மேல் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வெற்றுப்படகு அவனுடைய படகை மோதினால் அவன் எவ்வளவு கெட்டகுணம் உள்ள மனிதனாக இருந்தாலும் அவன் கோபப்படமாட்டான். ஆனால் அவன் அந்தப் படகில் யாரேனும் ஒருவர் இருப்பதைப் பார்த்தால் படகை சரியாக செலுத்தும்படி கூச்சலிடுவான். அவன் கூச்சலிடுவது கேட்கப் படாமல் இருந்தால் அவனைத் திட்ட ஆரம்பித்து விடுவான். இவை ஏன் நடக்கிறது என்றால் எதிரே வந்த படகில் யாரோ ஒருவன் இருக்கிறான். ஆனால் அந்தப் படகு வெறுமையாய் இருந்தால் அவன் கூச்சலிடமாட்டான். கோபம் அடைய மாட்டான்.


எப்பொழுதெல்லாம், யாரேனும் உங்கள் மீது கோபப்பட்டால் அல்லது யாராவது உங்கள் மீது மோதினால், நீங்கள் இதற்குப் பொறுப்பு அவர்தான் என்று எண்ணுவீர்கள். இப்படித்தான் அறியாமை முடிவு செய்கிறது. இப்படித்தான் அறியாமை மாற்றிக் கூறுகிறது.அறியாமை எப்போதும் சொல்லும்,

 

''மற்றவர் தான் இதற்குப் பொறுப்பு.காரணம்''ஆனால் விவேகம் சொல்கிறது,''

 

மற்றவர்கள்தான் இதற்குப் பொறுப்பு,காரணம் என்றால் நானும் இதற்குப் பொறுப்பாவேன், காரணமாவேன்.

 

''மோதலைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி,'நான்'அங்கு இல்லாமல் இருப்பதுதான். நான் பொறுப்பு என்று சொன்னால் ஏதோ நீங்கள் செய்து விட்டதாகப் பொருள் அல்ல. நீங்கள் ஏதும் செய்யாதிருக்கலாம். ஆனால் அங்கே நீங்கள் இருப்பது ஒன்றே போதுமானது, அவர்கள் கோபமடைய. நீங்கள் நல்லது செய்கிறீர்களா, கெட்டது செய்கிறீர்களா என்பது கேள்வி அல்ல. நீங்கள் அங்கு இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.

 

''நீ உன்னுடைய படகை வெறுமையாக இருக்கச்செய்ய முடியுமானால் இந்த உலக ஆற்றைக் கடக்கும்போது ஒருவரும் உன்னை எதிர்க்க மாட்டார்கள்.உன்னை ஒருவரும் துன்புறுத்தமாட்டார்கள்.''

 

http://jeyarajanm.blogspot.fr/2011/07/blog-post_50.html

அருமையான கருத்துள்ள இணைப்புக்கள், நன்றி தொடர்ந்து இணையுங்கள்

  • தொடங்கியவர்

திருமணத்துக்கு முன் யோசியுங்கள்

 

அது மனநோயாளிகளின் மருத்துவமணை .  தயாள குணம் படைத்த செல்வந்தர் ஒருவர்,  தன் பிறந்த தினத்தை மருத்துவமணை நோயாளிகளுக்கு உணவளித்துக் கொண்டாடுவதற்காக ஒரு நாள் அங்கு வருகிறார்.

மருத்துவமணையின் ஊழியர்கள் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறhர்கள். வழியில், மின் விசிறியின் மேலிருந்து ஒரு நோயாளி... லைலா, லைலா என்று கத்தியபடி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான் .

ஒன்றும் இல்லை, இவன் லைலா என்ற பெண்ணை உயிருக்குயிராகக் காதலித்தான். அவள் இவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டதால், மனநோயாளியாகி விட்டான் என்று அங்கிருந்த ஊழியர்கள் சொல்கிறார்கள்.

செல்வந்தர் அவனைத் தாண்டிக் கொண்டு வேறு ஓர் அறைக்குப் போகிறார். அங்கேயும் ஒருவன், லைலா, லைலா, என்று அழுதபடி அங்கிருந்த மின் விசிறியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றான்.

இவனுக்கு என்ன?

ஊழியர்கள் சொன்னார்கள் இவன்தான் அந்த லைலாவைக் கல்யாணம் செய்து கொண்டவன் .

நகைச்சுவைக்காகப் புனையப்பட்ட கதைதான் இது என்றாலும் இன்று சிலருடைய காதல் - திருமண வாழ்க்கை ஏன் திருப்தி தரும் வகையில் இருப்பதில்லை என்பது ஆராயப்பட வேண்டிய விஷயமல்லவா?

முக்கியமாகத் திருமண வாழ்க்கை .

இதற்கு மிக மிக அடிப்படையான காரணம் ஒன்று உண்டு . அதாவது திருமணம் செய்து கொண்டால் சந்தோஷம் வரும் என்று நினைக்கிறோம். அது தவறு எப்படி?

விளக்கு என்பது வெளிச்சம் கிடையாது, கட்டடங்கள் எல்லாமே வீடாகி விடாது. அலமாரியில் இருக்கும் புத்தகம் அறிவு என்று ஆகிவிடாது. மருந்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நோய் குணமாகிவிடாது .

குடிவந்தால் அது வீடு... புத்தகத்தை எடுத்துப் படித்தால்தான் அறிவு. மருந்தைக் குடித்தால்தான் நிவாரணம்.

அதுபோல்தான் திருமணம் வாழ்க்கை, பார்த்ததும் பிடிக்கிற ஒரு பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்து, தன் அருகில் வைத்துக் கொண்டுவிட்டாலே சந்தோஷம் வந்து விடுவதில்லை. கணவனும் மனைவியும்வேறு வேறு பாதைகளில், வேறுவேறு விருப்பங்களுடன் இருந்தால், மண வாழ்க்கை வெற்றி பெறாது . ஒருத்தரை ஒருத்தர் தங்கள் வெற்றிக்கு அவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஆனால், திருமணமும் சந்தோஷமும் ஒன்று என்று நினைத்துக் கல்யாணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்தில் சந்தோஷத்தைத் தேடுகிறார்கள். எதிர்பார்த்த சந்தோஷம் அங்கு இல்லாதபோது ஏமாந்து போகிறார்கள் .  திருமணம் என்பதும் விளக்கு மாதிரிதான். கணவனும் மனைவியும் சேர்ந்து அதை ஏற்றினால்தான் சந்தோஷம் என்ற வெளிச்சம் வரும்.

என்னைத்தேடி சில சமயம் காதல் வயப்பட்டவர்களும் வருவார்கள் . சென்ற மாதம் என்னுடைய ஆசிரமத்துக்கு ஓர் இளைஞன் வந்தான் .  அவன் சொன்னான். சுவாமி நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். அவளைக் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் .

ஏன்?- சுருக்கமாகவே கேட்டுவிட்டு அவனைப் பார்த்தேன்.

படிப்பும் இருக்கிறது .  அவளின் அப்பாவும் காரில் போகிற அளவுக்கு வசதியானவர். அவளை நான் கல்யாணம் செய்து கொண்டால் எனக்குச் சுலபமாகச் சந்தோஷம் கிடைக்கும் .

அவன் தன்னுடைய காதலியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து ஆசிரமத்தின் வராந்தாவில் உட்கார வைத்திருந்தான். அவனது காதலியை உள்ளே அழைத்து வரச் சொன்னேன்.

அவளிடம் இதே கேள்வியைக் கேட்டேன்.

நீ ஏன் இவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?

என் காதலர் நாகாரீகமானவர்.. பண்புடையவர்.  நகைச்சுவை உணர்வும் நிறைய இருக்கிறது.  கடுமையான சொந்த உழைப்பால் சீக்கிரத்திலேயே முன்னுக்கு வந்து விடுவார். ஆகமொத்தத்தில் அவரால் எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க முடியும் .

மேலோட்டமாக இந்த ஜோடியை யார் பார்த்தாலும் "Made for each other" பட்டம் கொடுத்து விடுவார்கள் . ஆனால், எனக்கு மட்டும் இவர்கள் இதே மனநிலையில் திருமணம் செய்து கொண்டால், திருமண வாழ்க்கையில் முழுமையாகச் சந்தோஷம் அடைய மாட்டார்கள் என்று பட்டது .  அவர்கள் இருவருக்கும் சொன்ன சில கருத்துக்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்குச் சந்தோஷத்தைப் பிச்சை போடு .  என்று காதலியிடம் கை நீட்டும் காதலனும்.. இல்லை .. நீதான் என்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று காதலனிடம் கை நீட்டும் காதலியும் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும்? சந்தோஷத்தைப் பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரனால், இன்னொரு பிச்சைக்காரனுக்கு எப்படி சந்தோஷத்தை தானமாகக் கொடுக்க முடியும்?

ஆகவே, திருமணப் பந்தலுக்குள் அடியெடுத்து வைக்கும் மணமக்களே.. உங்களைக் கைப்பிடிக்கப் போகிறவர் எப்படி உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பார் என்று யோசிக்காதீர்கள் அவருக்கு நீங்கள் எப்படி சந்தோஷம் கொடுக்கப் போகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

 

சாதாரணமான ஒரு பொருளையே எடுத்துக் கொள்ளுங்கள் .  ஒரு பொருளைப் பரிசாகப் பெறுவதில் நமக்கு ஒரு மடங்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றால், ஒரு பொருளை மற்றவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷம் அதைவிடப் பல மடங்கு இல்லையா?

 

http://amuthamozhi.blogspot.fr/2008/10/blog-post_9280.html

  • தொடங்கியவர்

நிம்மதியும் மகிழ்ச்சியும்

 

காட்டில் முனிவர் ஒருவர் இருந்தார்.அவரது புகழறிந்த மன்னன் காட்டுக்குச் சென்று அங்கு ஒரு குடிசையில் காலணி கூட இல்லாத முனிவரைப் பார்த்து அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இரு காலணிகளைக் கொடுத்தார். முனிவர் சிரித்தார்.


முனிவர்:அரசே,இக்காலணி அழகாக உள்ளது.இதைப் பார்க்கும் யாருக்கும் திருடத் தோன்றும் எனவே இதைப் பாதுகாக்க ஒரு காவலாளி வேண்டுமே.


அரசன்:நான் ஒரு காவலாளியை நியமிக்கிறேன்.


முனிவர்:இந்த அழகான காலணியை அணிந்து கொண்டு நடந்து சென்றால் எல்லோரும் சிரிப்பார்களே! எனவே நான் செல்ல ஒரு குதிரை வேண்டும்.


அரசன்:ஒரு குதிரையையும்,அதைப் பாதுகாக்க ஒருவனையும் நியமிக்கிறேன்.


முனிவர்:இந்தக் குடிசையில் குதிரையையும் பாதுகாவலனையும் தங்க வைக்க முடியாதே!


அரசன்:ஒரு அழகிய பங்களா கட்டித் தருகிறேன்.


முனிவர்:பங்களாவில் வாழ்ந்தால் எனக்குப் பணிவிடை செய்ய ஒரு பெண் வேண்டுமே!


அரசன்:ஒரு பெண்ணையும் நியமிக்கிறேன்.


முனிவர்:பின்னர் எனக்குக் குழந்தைகள் பிறக்குமே!


அரசன்:உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேலையாட்களை நியமிக்கிறேன்.


முனிவர்:குழந்தைகள் பிறந்தால் அவர்கள் மீது அன்பு வைப்பேன்.அவர்களில் யாராவது இறந்தால் யார் அழுவார்கள்?


அரசன்:வேறு யார் அழுவார்கள்?நீங்கள் தான் அழ வேண்டும்.


முனிவர்:அரசே,பார்த்தீர்களா?உங்களிடம் காலணி வாங்கினால் இறுதியில் அழத்தான் வேண்டும் என்பதை நீங்களே இப்போது ஒத்துக் கொண்டீர்கள்.இப்போது இந்தக் காட்டில் நான் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.குழந்தைகளுக்காக அழவோ.பொறுப்புகளைச் சுமக்கவோ நான் தயாராக இல்லை.


அரசனும் புரிந்து கொண்டு அரண்மனை திரும்பினான்.


வாழ்வில் நமக்குப் பல ஆசைகள்.அடுத்தவர் போல வசதியாக இல்லையே என்ற ஏக்கம்.அப்பொருள் நம்மிடம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நினைப்பு.ஆனால் எந்தப் பொருளும் கடைசியில் துன்பத்தையே தரும்.நாம் தேடும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்காது.

 

http://jeyarajanm.blogspot.fr/2012/07/blog-post_5654.html

  • தொடங்கியவர்

பென்சிலும் ரப்பரும்

 

பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.


ரப்பர்: எதற்காக மன்னிப்பு?


பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?


ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். ஆனால் எனக்காக நீ வருத்தப்படுவது எனக்குக் கவலை தருகிறது.

இங்கு ரப்பர் என்பது பெற்றோர். பென்சில் என்பது அவர்களது பிள்ளைகள். பிள்ளைகள் தவறு செய்யும் போதெல்லாம் அதை அவர்கள் சரி செய்கிறார்கள். நாளடைவில் அவர்கள் தேய்ந்து போகிறார்கள். ஆனால் பிள்ளைகளை சரி செய்வதை மகிழ்வுடனே செய்கிறார்கள். தங்களுக்குப் பதிலாக தன் பிள்ளைகளுக்கு கணவனோ மனைவியோ வந்து விடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்காகப் பிள்ளைகள் வருத்தப் படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

 

http://jeyarajanm.blogspot.fr/2012/09/blog-post_5.html

  • தொடங்கியவர்

நகைச்சுவை உணர்வு

 

சிரிப்பு என்பது எல்லாக் காலங்களிலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சமுதாயத்தால் அடக்கப்பட்டு வருகிற விசயமாகும். சமுதாயம் நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போதோ, பெற்றோர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போதோ சிரித்தால்அவமரியாதையாகக் கருதப்படும். தீவிரமாக இருப்பது மரியாதை என்று எண்ணப்படுகிறது. ஆனால் வாழ்க்கை தீவிரமான ஒன்று அல்ல. மரணம் தான் தீவிரமானது.


வாழ்க்கை என்பது அன்பு , சிரிப்பு, ஆடல், பாடல் தான். கடந்த காலம் வாழ்வை முடமாக்கி உள்ளது. அது சிரிப்பைக் காண முடியாத மனிதர்களாக உங்களை ஆக்கி உள்ளது. நீங்கள் எப்போதும் துயரத்துடன் காணப்படுகிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் காட்சி தருகிற அளவுக்கு துயரம் இருப்பதில்லை. துயரமும் தீவிரத்தன்மையும் ஒன்று சேர்ந்து உங்களை மிகவும் துயரத்துடன் இருப்பதாகக் காட்டுகிறது. துயரத்துடன் சற்றே சிரிப்பை சேருங்கள். அப்போது நீங்கள் அத்தனை துயரத்துடன் காணப் பட மாட்டீர்கள். வாழ்வை சற்றே கவனித்து நகைப்புக்குரிய விசயங்களைப் பாருங்கள்.  ஒரு நல்ல மனிதனின் அடிப்படைத் தன்மையாக நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.


தீவிரமாக இருப்பது ஒரு பாவம்.ஒரு வியாதி. சிரிப்பின் மகத்தான அழகு உங்களை லேசாக்கி பறக்க சிறகுகளைத் தரும். பிறர் சிரிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள். மனிதர்களின் குணங்களிலேயே சிரிப்பு தான் மிகவும் போற்றப்படும் குணமாக இருக்க வேண்டும். அதை அடக்குவது மனிதப் பண்பை அழிப்பதாகும்.

 

http://jeyarajanm.blogspot.fr/2011/06/blog-post_2276.html

  • தொடங்கியவர்

சிந்தனைக் கதவுகளை மூடாதீர்

 

மனதில் சோர்வு. தாழ்வு மனப்பான்மை போன்றவை தலைதூக்கும் போதெல்லாம் அதை மறைக்க நான் ஜெயிக்கப் பிறந்தவன் நான் சாதிக்கப் பிறந்தவன் என்று நமக்கு நாமே சொல்லி உற்சாகப் படுத்திக் கொள்வது அப்போதைக்குப் பலன் கொடுக்கலாம். ஆனால் இந்த பாஸிட்டிவ் திங்கிங் அதிக நாளைக்கு உதவாது.

தீய எண்ணஙகள் எழும்போது ராமா... ராமா... என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுஙகள் என்று ஒரு சிலா யோசனை சொல்வாகள். பாஸிட்டிவ் திங்கிங் என்பது ஏறக்குறைய இதே அடிப்படைதான் ! மனதில் சபலம் வரும்போது. அதை அடக்கத் தெய்வத்தின் மீது சிந்தனையைத் திருப்புவது அந்தச் சமயம் பலன் தரும். ஆனால். அதே தீ எண்ணம் அடுத்த நாளோ, அடுத்த வாரமோ மீண்டும் தலைதூக்குமே... அப்போதும் கடவுள் பேரைச் சொல்லித்தான் சபலத்தை அடக்க வேண்டுமா...

வீடு முழுதும் துர்நாற்றம். வீட்டின் ஒரு முலையில் எலி ஒன்று செத்துக் கிடக்கிறது. அது எஙகே என்று தேடிக் கண்டுபிடித்து எடுத்து வெளியே தூக்கிப் போட நமக்குப் பொறுமை இல்லை ! ஆனால் துர்நாற்றத்தை மறைக்கக் கட்டுக்கட்டாக ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறோம். கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமானால் செத்த எலியின் நாற்றத்தை அது மறைத்து விடும். ஆனால்  வத்தி எந்து முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நாற்றம் மீண்டும் குடலைப் பிடுஙகத் துவஙகிவிடும்!

பாஸிட்டிவ் திங்காகும் இது மாதி தான் ! சார்... பாஸிட்டிவ் திங்குக்கு மாற்று இருக்கிறதா... இருக்கிறது அதற்குப் பெயாதான் ரவாநவேஉ வாமேபே

நீஙகள் மிகவும் துன்பத்தில் இருக்கிறீகள் என்று வைத்துக் கொள்ளுஙகள். ஐயையோ நான்படும் துன்பத்தைச் சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே... என்று வெறுப்படைந்து இல்லை! நான் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன் என்று பாஸிட்டிவ் திங்கிங் என்ற சித்தாந்தத்தின் படி மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீஙகள் முயற்சி செய்தால் மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும். அதற்குப் பதிலாக. உஙகளின் சிந்தனையை நீஙகளே சற்றுத் தள்ளி நின்று கவனிக்க ஆரம்பியுஙகள் !

இது கெட்ட சிந்தனை . இது நல்ல சிந்தனை என்பது மாதி சிந்தனைக்கு லேபிள் குத்தாமல். உங்களின் சிந்தனை மீதே வெறுப்புக் காட்டாமல் நடுநிலையோடு கவனியுஙகள் !

துக்கமான சிந்தனையோ சபலமான சிந்தனையோ அல்லது மகிழ்ச்சியான சிந்தனையோ... அதை நீஙகளே விலகி நின்று பாக்கும் போது/ உஙகளுக்குள்ளே புந்து கொள்ளுதல் நடக்கும் !

இது போன்ற மனநிலையை எய்திவிட்டால் துன்பம் மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்றுதான் ! மகிழ்ச்சி எப்படி ஓ அனுபவமோ அதே போல் துயரமும் ஓ அனுபவமே ! ஆனால் மனதிலே அமைதியும் தெளிவும் இல்லாத மனிதாகளுக்கு மகிழ்ச்சிகூடச் சோகமானதாக போய்விடும் !

அவா நடுத்தரப் பிரிவைச் சோந்தவா. அவருக்கு ஆறு பெண்கள் ! எல்லோருமே கல்யாண வயதை அடைந்தவாகள். ஆறு பெண்களுக்கும் எப்படி திருமணம் செய்து வைப்பது  என்று கவலைப்பட்டுக் கவலைப்ட்டே அவருக்கு ஒரு நாள் மாரடைப்பு வந்து விடுகிறது. அவரை மருத்துவமனையில் சோக்கிறாகள். அந்த நேரம் பாத்து. அவா வாஙகி வைத்திருந்த ஒரு பரிசுச் சீட்டுக்குப் பத்து லட்ச ருபாய் விழுகிறது ! இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரிடம் சொன்னால்.  அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்துவிடுமோ...... என்று பயந்த மனைவி. டாக்டரைவிட்டே இந்தச் செய்தியைத் தன் கணவரிடம் பதமாகச் சொல்லச் சொல்கிறாள் !

டாக்டா மனோதத்துவ முறையில் காஷுவலாக அவளது கவணவரிடம் பேச்சை ஆரம்பிக்கிறா.

உஙகளுக்கு லாட்டாயில் ஒரு லட்சம் பாசு விழுந்தால் என்ன செய்வீகள்.....

நான் என் முத்த பெண்ணுக்குத் திருமணம் செய்து விடுவேன்....

சார் இரண்டு லட்சம் விழுந்தால்..

இரண்டாவது பெண்ணுக்கும் கல்யாணம் முடித்து விடுவேன்

சார்... பத்து லட்சம் விழுகிறது என்று வைத்துக் கொள்ளுஙகள் !

எனக்கெல்லாம் எஙகே டாக்டா பத்து லட்சம் விழும் அப்படி ஒரு வேளை விழுந்தால் சத்தியமாக உஙகளுககு இரண்டு லட்சம் தந்து விடுவேன்.

எதி ர்பாராத இந்த இன்ப அதிச்சியில் டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டா!

மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ அதே மாதி துயரமும் ஒரு சுவை இந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வது கஷ்டமாகக்கூட இருக்கலாம் ! நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார். அப்போது கசப்பான ஒரு பொருளை அம்மா எப்படி ரசித்துச் சாப்பிடுகிறா என்று எனக்கு ஒரே குழப்பம்.... ஆனால் மனதுக்குப் பிடித்துவிட்டால் இனிப்பு என்பது எப்படி சுவையோ அதே போல கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணாந்து கொண்டேன் !

சிறுபிள்ளையாக இருக்கும் போது இனிப்பு ஒன்றுதான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை  என்று நமக்கு நாமே முடிவெடுத்துக் கொண்டு சிந்தனையின் கதவுகளை மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் எப்படி மூடிவிடுகிறோமோ அதே மாதிதான் இந்த விஷயமும். மகிழ்ச்சி மட்டும்தான் நல்ல உணாச்சி மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணாச்சிகள் என்று எண்ணி வாழ்க்கையில் நாம் அநேக உணர்ச்சிகளுக்குக் கதவைத் திறப்பபதில்லை!

இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல் தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது மனது தானாகவே அமைதி அடையும். திரைகள் விலகும். உண்மைகள் புரியும். வாழ்க்கை அழகாக. அற்புதமானதாக- ஒரு மலரைப் போல மௌனமாக மென்மையாக வியும்!

 

http://amuthamozhi.blogspot.fr/2008/10/blog-post_22.html

  • தொடங்கியவர்

அடக்கத்தின் மேன்மை

 

ஆகமப் பயிற்சி மிக்க சான்றோர்கள் எல்லாரும் அடக்கம் ஒன்றே மனிதனை நல்ல நிலைக்கு உயர்த்தும் என கூறுகின்றனர். அடக்கமுள்லவன் தான் செயலின் பயனை அடைய முடியும். அடக்கம் உடையவனிடத்தில் தான் எல்லா நற்பண்புகளும் நிலையாகத் தங்கியிருக்கின்றன. மன அடக்கமின்றி எப்போதும் அலைபாயும் நெஞ்சத்தவரால் எந்தச் செயலையும் செய்ய முடியாது. எந்த ஒரு நற்பண்பையும் தொடர்ந்து காப்பாற்ற முடியாது. நல்லொழுக்கம் என்பதே அடக்கத்தின் மீது எழுப்பப்படும் மாளிகைதான். அடக்கம் உடையவனை யாவரும் போற்றுவர்.

 

அடக்கத்தின் மற்றொரு பெயர் தூய்மை.அடக்கம் உள்ளவன் பழி,  பாவங்ககுக்கு அஞ்சி நடப்பான். மன அடக்கம் உடையவனால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க முடியும். சிந்தனைக்குப் பிறகு அவன் செய்யும் செயல்களில் பழுது இராது. பயன் இருக்கும்.எதைனும் நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்வதால் செய்யும் செயலில் முழுமை இருக்கும். வினை முடித்த செம்மல் உள்ளமொடு இரவில் அவனால் நிம்மதியாக உறங்க முடியும். அவன் உற்சாகத்துடன் கண் விழிப்பான்.

 

ஒருவன் காக்க வேண்டிய நற்பண்புகளில் அடக்கமே தலை சிறந்தது ஆகும். அடக்கம் சிதறினால் வேறெந்த நற்பண்புகளையும் ஈட்ட முடியாது. அது மட்டுமன்று..அடக்கம் இல்லாதவனிடத்தில் படிப்படியாக தீய பழக்க வழக்கங்கள் வந்து சேரும். பொறாமை முதலில் மனதில் குடியேறும். அந்தப் பொறாமை ஆசையைத் தோற்றுவிக்கும். அந்த ஆசை நிறைவேறாவிட்டால் மனதில் கோபம் தோன்றும். கோபம் உள்ளவன் கடும் சீற்றத்திற்கு ஆளாவான். அவனிடமிருந்து நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது.

 

மன அடக்கம் இல்லையெனில் நாவடக்கமும் இல்லாமற் போகும்.நாவடக்கம் இல்லையெனில் பகை உருவாகும். நண்பர்கள் நெருங்க மாட்டார்கள். காண்பவர் பேய் என ஒதுங்கிச் செல்வர். மனமும், சொல்லும் அடங்கவில்லை யென்றால் செயலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அடக்கமில்லாதவன் செயலில் நன்மையைக் காண முடியாது.

 

மன அடக்கம் உடையவனிடம் எல்லா நற்பண்புகளும் தேடி வரும். அவன் எப்போதும் அமைதியாக இருப்பான். எதிலும் முயற்சி உடையவனாகத் திகழ்வான். அவனிடம் சினம் இராது. நேர்மை இருக்கும். அடக்கம் உள்ளவன் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பான். சிறிதளவே பேசுவான். அதுவும் சத்திய வாக்காக இருக்கும். அடக்கம் உடையவன் ஒரு போதும் பிறரைக் குறை சொல்ல மாட்டான். பொய் உரைக்க மாட்டான். பிறரின் புகழை மட்டுமே கூறுவான்.

 

அடக்கம் உடையவன் தன்னைப் பிறர் பழித்தாலும், பாராட்டி புகழ்ந்தாலும் இரண்டையும் சமமாகவே கருதுவான். இத்தகைய மனநிலை எளிதில் கிடைப்பதன்று. கிடைத்தால் அவனை யாரும் போற்றி மகிழ்வர். தேவரும் வந்து பணிவர்.

 

பெரிய லாபத்தில் மகிழ்ச்சியும், பெரிய நஷ்டத்தில் வருத்தமும் கொள்ளாமல் இருப்பது அடக்கம் உடையவன் இயல்பாகும். அடக்கம் உடையவனால் எளிதில் சாத்திர ஞானம் பெறமுடியும். ஞானவானிடம் பொறுமை, சத்தியம், கொடைத்தன்மை ஆகியவை வந்து அமையும். மிகு காமம், சினம், தற்புகழ்ச்சி, பொய் ஆகியவை கெட்ட புத்தியுள்ளவரிடம் நிரந்தரமாகக் குடியிருக்கும். அடக்கம் உடையவன் இவற்றைத் தன்னிடம் நெருங்க விடமாட்டான். அடக்கம் உடையவன் பூமிக்கு அணிகலன் ஆவான். அவனிடம் இருந்து எல்லா நற்குணங்களும் ஒளி வீசும்.

 

http://panippulam.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=5&Itemid=385

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அன்பு எது?

 

அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை. அதுதான் அன்பின் அழகு சுதந்திரம். வெறுப்பு ஒரு பந்தம், சிறை.உங்கள் மீது திணிக்கப்படுவது. உலகமே வெறுப்பிலும், அழிவிலும், வன்முறையிலும் போட்டியிலும், பொறாமையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. செயலாலோ, மனதாலோ ஒருவர் மற்றவரைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சொர்க்கமாக இருக்க வேண்டிய இந்த உலகம் நரகமாக இருக்கிறது. அன்பு செய்யுங்கள். இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.


நேற்றுயாராவது உங்களிடம் இனிமையாக நடந்து கொண்டிருப்பார்கள். அல்லது நாளை யாராவது இனிமையாகப் பேச உங்களை அழைத்திருக்கலாம். இது அன்பே அன்று. இது வெறுப்பின் மறுபக்கம். இத்தகைய அன்பு எந்த நேரத்திலும் வெறுப்பாக மாறலாம். ஒருவரை லேசாக சுரண்டிப் பாருங்கள்.  அன்பு மறைந்து வெறுப்பு வெளிப்பட்டுவிடும். அதற்குத் தோலின் ஆழம் கூடக் கிடையாது. உண்மையான் அன்பிற்குப் பின்னணி கிடையாது. 

 

நேற்றோ, நாளையோ கிடையாது. அதைப் பகிர்ந்து கொள்ளக் காரணம் தேவையில்லை. காலை வேளையில் பறவைகள் பாடுகின்றன. ஒரு குயில் அழைக்கிறது. காரணம் இல்லாமல் தான். இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒரு பாடலாக வெடித்துப் பீரிடுகிறது. அப்படிப்பட்ட அன்பின் பரிமாணத்திற்குள் நீங்கள் நுழைய முடியுமானால் அதுவே சொர்க்கம். வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும். அன்பு அன்பையே உருவாக்கும்.

 

http://jeyarajanm.blogspot.fr/2011/04/blog-post_9684.html

 

  • தொடங்கியவர்

டென்ஷன் டென்ஷன்

 

நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்குச் சில நிகழ்ச்சிகள் நம்மை டென்ஷனாக்கி விடுகின்றன. பல சமயத்தில் படபடப்பு உச்சக்கட்டத்துக்குப் போய் கைகால்களெல்லாம் உதற ஆரம்பித்து விடுகின்றன ! இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவனுக்குக் கேட்கும் அளவுக்குக்கூட நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது ! ஏதோ இனம் புரியாத கவலைக் கடலுக்குள் மூழ்குவது போன்ற பீதி நம் நெஞ்சைக் கவ்விக்கொள்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் டென்ஷன் !

பல சமயங்ளில் நாம் டென்ஷன் ஆவதே தேவையில்லாத விஷயஙகளால்தான் ! உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.. .

பேராசிரியர் ஒருவர் மாற்றலாகி வேறு ஊரிலிருக்கும் கல்லுரிக்குப் போகிறார். அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பணிபுரியும் நான்கு பேராசிரியர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட கொஞ்சம் நேரம் இருக்க.. . பேராசிரியர்கள் பிளாட்பாரத்தில் நின்று ஜாலியாகக் பேச ஆரம்பிக்கிறார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் ரயில் நகர ஆரம்பித்துவிட்டதையும் அவர்கள் கவனிக்கவில்லை. சடாரெனப் படபடப்பு வந்துவிடுகிறது. எந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறினாலும் பரவாயில்லை.. . அடுத்த ஸ்டேஷனில் சரியான கம்பார்ட்மெண்ட்டுக்கு வந்துவிடலாம்ஞ என்று நெரிசலில் முட்டிமோதி நான்கு பேராசிரியர்கள் எப்படியோ ரயிலேறி விடுகிறார்கள். ஆனால்  கையில் பெட்டி படுக்கையுடன் இருந்த ஒரு பேராசிரியரால் மட்டும் ரயிலில் ஏற முடியவில்லை ! அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்ட போர்ட்டர் ஒருவர் கவலைப்படாதீர்கள்.. . பத்து நிமிடத்தில் இன்னும் ஒரு ரயில் இருக்கிறது. அதிலே நீஙகள் போய்விடலாம் என்று ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார்.

அதற்கு அந்தப் பேராசிரியர் அடுத்து பத்து நிமிடத்தில் இன்னொரு ரயில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால்  நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் சக பேராசிரியர்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. காரணம்  அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். ஆனால்  இஙகே ஏற்பட்ட அமளி துமளியில் அவர்கள் ரயிலில் ஏறிவிட்டார்கள் ! என்றார். இப்படித்தான் படபடப்பும் டென்ஷனும் சாதாரண விஷயஙகளைக்கூட நம் கண்ணிலிருந்து மறைத்து விடுகின்றன ! நாம் பதட்டத்தில் இருக்கும்போது எத்தனை கஷ்டப்பட்டு ஒரு வேலையைச் செய்தாலும் சரி  அதனால் ஏற்படும் பலன் பெரும்பாலும் பூஜ்யமாகத்தான் இருக்கும் !

ஒரு சமயம் நான்கு குடிகாரர்கள் ஒன்றாக மது அருந்தப் போனார்கள். போதை தலைக்கேறும் மட்டும் குடித்த அவர்கள் வீட்டுக்குத் திரும்புவதற்காகப் புறப்பட்ட நேரத்தில் நன்றாக இருட்டிவிட்டது. ஆற்றைக் கடந்துதான் மறு கரைக்கும் போக வேண்டும் ! எனவே பரிசல்காரனைத் தேடினார்கள். அவனைக் காணவில்லை. ஆனால் பரிசல் மட்டும் இருந்தது. பரிசலைத் தாங்களே ஓட்டிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பரிசலில் ஏறி உட்கார்ந்து துடுப்புப் போட ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் ஆனது.. . இரண்டு மணி நேரமானது.. . மூன்று மணி நேரமும் ஆனது ஆனால் மறுகரை மட்டும் வரவே இல்லை ! அதற்குள் மெள்ளப் பொழுதும் விடிந்து. .. போதையும் மெள்ளத் தெளிய.. . அப்போதுதான் கரையில் இருக்கும் மரத்தில் பரிசல் கட்டப்பட்டிருப்பதை அந்தக் குடிகாரர்கள் கவனித்தார்கள் !

குடிகாரர்கள் கண்களைப் போதையும் இருட்டும் மறைத்தது போல பதட்டம் நம்முடைய கண்களைப் பலசமயம் உண்மையையும் நிதர்சனத்தையும் பார்க்கவிடாமல் மறைத்துவிடுகிறது.

புத்த மதத்தில் ஒரு பிரிவாக விளஙகும் நுசூ இலக்கியத்தில் உள்ள ஒரு கதை இது !

ஒர் அரசர் தன் நாட்டுக்கு முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். சம தகுதிபெற்ற நான்கு பேர் அவரது அமைச்சரவையில் இருந்ததால் ஏதாவது ஒரு பரீட்சை வைத்து அந்த நால்வரில் ஒருவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார். ஒரு நாள் அந்த நால்வரையும் அழைத்து என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞானப் பூட்டைத் திறக்க நாளை காலை உஙகள் நால்வருக்கும் ஒரு வாய்ப்பு வழஙகப்படும். யார் இந்தப் பூட்டைக் குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர் என்று அறிவித்தார்.

முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அன்று இரவு முழுதும் விடிய விடியப் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும் கணிதம் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் அந்த அமைச்சர்கள் தேடினார்கள். எதுவும் கிடைக்கவில்லை. அந்த நால்வரில் ஒருவர் மட்டும்  ஒரு சில ஓலைச்சுவடிகளைப் புரட்டிவிட்டுத் துங்கப் போய்விட்டார்.

மறுநாள் அரசவையில். . . கணிதத் தந்திரத்தால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டை அரசரின் சேவகர்கள் துக்கிக் கொண்டு வந்து நால்வரின் முன்பும் வைத்தார்கள். எதிரே அரசர் வீற்றிருந்தார். பூட்டின் பிரமாண்டம் எல்லோரின் படபடப்பையும் இன்னும் அதிகரித்தது. கையோடு எடுத்து வந்த ஓலைச்சுவடிகளை அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார்கள். ஆனால்  கணிதப் பூட்டைத் திறக்கும் வழி மட்டும் அவர்களுக்குப் புலப்படவில்லை ! தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.

இரவிலே நன்றாகத் துஙகிய அந்த ஓர் அமைச்சர்  கடைசியாக எழுந்து வந்தார். அவர் பூட்டின் அருகில் வந்து பார்த்தார். என்ன ஆச்சரியம் ! பூட்டு பூட்டப்படவே இல்லை. சாவியே இல்லாமல்  சூத்திரமே இல்லாமல் அவர் பூட்டை எளிதாகத் திறக்க அரசர் அவரையே முதலமைச்சர் ஆக்கினார்.


பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால் முதலில் பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனம் பதட்டம் இல்லாமல் சமன் நிலையில் இருக்க வேண்டும்.

 

http://amuthamozhi.blogspot.fr/2008/10/blog-post.html

  • தொடங்கியவர்

அஞ்ஞானம்

 

யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும், உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது. யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால், உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது. இது எதனால்? மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலே ஒரு அகங்காரம் தோன்றுகிறது. ''நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது. யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது, ''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!''எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது. நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா!


ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள். 'இவன் ஒரு பாவி,' என்று யாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று காரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள். அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. நீங்கள் அறிந்ததைவிட அதிகமாகவே வெளிப்படுத்தி விடுகிறீர்கள். யாரும் அதனை ஆட்சேபிப்பதில்லை.


இவர் ஒரு நல்லவர் என்று யாராவது குறிப்பிடப்பட்டால்,நீங்கள் பலவிதக் கேள்விகளால் துளைத்து விடுகிறீர்கள். செய்தி உண்மையானது என்றாலும், ஏதோ எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் கொள்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு உங்களைத்தவிர எல்லோரும் பாவிகள்தான். யாராவது மகானாகத் தென்பட்டாலும் உங்கள் கண்களுக்கு அவரும் பின்னணியிலே ஒரு பாவியாகத்தான் தென்படுவார். அவர் முகமூடி அணிந்திருப்பதாகவும், என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி கிழியப் போகிறது என்றும் சொல்வீர்கள். இத்தகைய உபாயத்தால் தான் உங்களுடைய அகங்காரம் நிலை பெற்றிருக்கும்.எல்லோரையும் சிறுமைப் படுத்துவீர்கள். எல்லோரையும் நிந்திப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனும்போது உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.

 

http://jeyarajanm.blogspot.fr/2011/02/blog-post_04.html

  • தொடங்கியவர்
பதவிக்கு தகுதி வேண்டும்
 
ஒரு சொறிநாயை ஓநாய் கொல்ல வந்தது. அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக தியானத்தில் இருந்த
முனிவரைச் சரணடைந்து தன் நிலையைச் சொன்னது. முனிவர் அதன் மேல் கமண்டல தீர்த்தத்தை
தெளித்து ஓநாயாக்கி விட்டார்.  பலசாலியான அது,  தன்னைக் கொல்ல வந்த ஓநாயை விரட்டி
விட்டது.  ஓநாயைக் கொல்ல ஒரு சிறுத்தை வந்தது.  உடனே,  ஓநாய் முனிவரைச் சரணடைய அவர்
தீர்த்தம் தெளித்து சிறுத்தையாக மாற்றி விட்டார்.  சிறுத்தையை பார்த்த சிறுத்தை இது
நமது இனமாயிற்றே என விட்டுச் சென்றுவிட்டது.  சிறுத்தையைக் கொல்ல ஒரு யானை வந்தது .
சிறுத்தை வழக்கம் போல் முனிவரைச் சரணடைய அவர் அதை யானையாக்கி விட்டார்.  யானையைக்
கொல்ல புலி வந்தது.  யானை முனிவரிடம் ஓட அதை புலியாக்கி விட்டார்.  புலியைக் கொல்ல
சிங்கம் வந்தது.  புலியை சிங்கமாக்கி விட்டார் முனிவர். சிங்க நிலைக்கு உயர்ந்த
சொறிநாய்க்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது.  இனி நாம் சிங்கமாகவே இருக்க வேண்டும்.
ஒருவேளை,  இந்த முனிவர் நம்மை மீண்டும் நாயாக்கி விட்டால், நாம் படாதபாடு
படவேண்டியிருக்கும்.  எனவே, இவரை கொன்று விட வேண்டியது தான்,  என்றெண்ணி பின்னால்
நின்று பாய்ந்தது.  சுதாரித்துக் கொண்ட தண்ணீரைத் தெளித்து போ நாயே!  என விரட்ட, அது
மீண்டும் சொறிநாயாகி அழுதுகொண்டே சென்றது. 
 
ஒருவரது குணமறிந்தே அவரை உயர்ந்த பதவிகளில் வைக்க வேண்டும் என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா!
 
  • தொடங்கியவர்

பிறர் சொல்

 

ஒரு காட்டில் ஒரு காகம் இருந்தது. அதன் அலகு சற்று வளைந்திருந்தது. அதனால் அந்தக் காக்கைக்குத் தான் அழகில்லை என்ற எண்ணம் இருந்தது. பிற காக்கைகள் தன்னைக் கேலியாகப் பேசுவதுபோல அதற்கு தோன்றியது. எந்தக் காக்கையுடனும் அது பழகுவதில்லை. ஒரு நாள் புதிதாக ஒரு காக்கை அப்பகுதிக்கு வந்தது. அதன் அலகும் வளைந்துதான் இருந்தது. ஆனால் அக்காக்கை மிக மகிழ்ச்சியாக பறந்து திரிந்தது. இந்த காக்கை மட்டும் எப்படி இவ்வளவு அசிங்கமாக இருந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்தக் காக்கையிடம் சென்றது. அப்போதுதான் தெரிந்தது அந்தக் காக்கைக்கு காது கேட்காது என்பது.  அப்போது இந்தக் காக்கைக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன்பின் இந்தக் காக்கையிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இப்போது எந்தக் காக்கையைப் பற்றியும் அது கவலைப் படுவதில்லை. எல்லோரிடமும் அது நன்றாகப் பேச ஆரம்பித்தது. சில நாட்களில் அந்தப் பகுதிக்குத் தலைவராகி விட்டது.


ஒரு நாள் அந்த காக்கைக் கூட்டத்தின் பெருந்தலைவரான காக்கையிடம் அது பேச ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது பெருந்தலைவர் கேட்டது,

 

''நான் கேள்விப்பட்டிருக்கிறேன், நீ முன்பெல்லாம் கோழையாய் யாருடனும் பழகாமல் இருந்தாயாமே? இப்போது எப்படி இங்கு புகழ் பெற்றாய்?''

 

இந்த காகம் பதில் சொன்னது,

 

''நான் மற்றவர்கள் பேசும் கேலிக்கு செவிடாய் இருக்கப் பழகிக் கொண்டேன். அடுத்தவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கேலி அவதூறுகளுக்கு நாம் செவி சாய்த்தாலொழிய அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை. பிறர் சொல்லுக்கு பயப்படுவதை உதறித் தள்ளி விட்டேன். இப்போது எனக்கு எப்போதும் உற்சாகம் தான்.''

 

என்றது பெரிய காக்கையும் அதைப் பாராட்டியது. அப்போதுதான் இக்காக்கை கவனித்தது. பெரிய காக்கையின் அலகு தன் அகை விட மோசமாக வளைந்திருந்தது.

 

http://jeyarajanm.blogspot.fr/2012/07/blog-post_16.html

  • தொடங்கியவர்

நச்சு எண்ணங்கள்

 

ஒரு சில நச்சு எண்ணங்களை சுலபமாக அடையாளம் காண முடியாது.அவை எங்கும் பரவிக் கிடக்கும்.மிகச் சாவகாசமாக வேலை செய்யும்.அவற்றுக்கு இரையாகும் மனிதர்கள் அவற்றின் பாதிப்பை உணரும்போது ஏற்கனவே காலம் கடந்து போயிருக்கும்.அவை:


குமுறல்:

 

நாம் சிறுமைப்படுத்தப் பட்டு விட்டதாக எண்ணும் போதும்,நமது உறவு,உடமைகளை ஒருவர் அவமானப் படுத்தியதாக எண்ணும்போதும் நமக்குள் ஏற்படும் எரிச்சல்தான் குமுறல்.குமுறல் நமது உள் மனதில் அடியில் தங்கிப் புற்று நோய் போல வேலை செய்கிறது.அது படிப்படியாக வளர்ந்து மேற்கொண்டு மனம் புண்படுவதைத் தவிர்க்கவும்,மென்மையான உள்ளங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவும்,தன்னிரக்க வடிவெடுத்து நாளாவட்டத்தில் வாழ்க்கையிலிருந்து நம்மை ஒரேயடியாக ஒதுங்கிக் கொள்ளச் செய்யும்.அல்லது படு வேகமாகப் பரவும் குமுறல்,கோபமாகி ,கோபம் தாங்க முடியாத வெறுப்பாகி,வெறுப்பு வன்முறையாகி,சில சமயங்களில் கொலையில் கூட முடியும்.


நழுவல் மனோபாவம்:

 

மனதுக்குப் பிடிக்காத யதார்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று உள் மனதுக்கு ஏற்படும் விருப்பத்தால், குறிக்கோளை அடைய வேண்டும் என்ற உள் மனதில் முக்கியமான பணி திசை திருப்பப்படுகிறது.அதன் விளைவாகத் தப்பியதே குறிக்கோள் என்று ஆகி விடுகிறது.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/03/blog-post_6.html

  • தொடங்கியவர்
நீதிக்குத் தகுதி...
 
நீதிபதியாக இருப்பவருக்கு சட்டஅறிவும், திறமையும் மட்டும் போதுமா! இன்னும் சில
தகுதிகள் வேண்டும் என்கிறது ஆன்மிகம். இதோ! ஒரு அரசனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.
உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் விக்கிரமாதித்த மகாராஜா. இவரது
காலத்தில் நீதிநெறி தழைத்திருந்தது. எந்த வித விருப்பு வெறுப்புக்கும் இடமின்றி
தீர்ப்பளிப்பார் விக்கிரமாதித்தன். அவர் முன்னால் வழக்கு சார்ந்தவர்கள் வந்ததும்,
அவர்களை ஒரு தீர்க்கமான பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள்
தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். விக்கிரமாதித்தன் தீர்ப்பு சொல்லும் போது 25
தேவதை பொம்மைகளால் சுமக்கப்படும் ஒரு பளிங்கு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.
விக்கிரமாதித்தனின் காலம் முடிந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்ததும், அவரது
அரண்மனை, சிம்மாசனம் உள்ளிட்டவை மண்ணில் புதைந்து போனது. அவரை அநேகமாக எல்லாரும்
மறந்து விட்டனர். விக்கிரமாதித்தனின் அரண்மனை இருந்த இடம் ஒரு காலத்தில் மேய்ச்சல்
நிலமானது. ஆடு மேய்க்கும் சிறுவர்கள் அதில் தங்கள் ஆடுகளை மேயவிடுவார்கள். அவர்கள்
பொழுதுபோக்குக்காக ஏதாவது விளையாடுவது வழக்கம். ஒருநாள் ஒரு மேடான இடத்தில் ஒரு
சிறுவன் அமர்ந்தான்.

மற்றவர்களிடம், நான் தான் நீதிபதி. நீங்கள் ஏதாவது
குற்றம் செய்தவர்கள் போல் நடித்து வாருங்கள். நான் தீர்ப்பளிக்கிறேன், என்றான். சக
சிறுவர்களும் ஏதோ குற்றம் செய்தது போல், நீதிபதியிடம் முறையிட, நீதிபதி சிறுவன்
அருமையாக தீர்ப்பு சொல்வான். அவனது வார்த்தைகள் ஆடு மேய்ப்பவனைப் போலவே இல்லை.
ஆணித்தரமாக நடுநிலையோடு இருந்தது. இதுபற்றி, ஊர்மக்கள் கேள்விப்பட்டனர். தங்கள்
சொந்த வழக்குகளை அந்த மேட்டில் அமர்ந்திருந்த சிறுவனிடம் கொண்டு வந்தனர். சிறுவனும்
தரமான தீர்ப்பளிக்கவே வழக்குகள் தேங்குமளவுக்கு கூட்டம் அதிகரித்தது. இந்த தகவல்
அவ்வூர் மன்னரை எட்டியது. அவர் இதுபற்றி மந்திரிகளிடம் கேட்கவே, மகாராஜா!
எங்களுக்கொரு சந்தேகம்! படிப்பறிவில்லாத ஆடு மேய்க்கும் சிறுவன்
அமர்ந்திருக்கும் மேடான இடத்தில், விக்கிரமாதித்த மகாராஜா அமர்ந்திருந்த சிம்மாசனம்
புதைந்திருக்குமோ என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தோண்டிப்பார்க்கலாமா!
என்றனர். ராஜா சம்மதிக்கவே, அவ்விடத்தைத் தோண்டினர். எதிர்பார்த்தபடி சிம்மாசனம்
கிடைத்தது. அதை அரண்மனைக்கு கொண்டு வந்தனர். மன்னர் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து
வழக்கை விசாரிக்க ஆசைப்பட்டு அருகில் சென்றார். அப்போது, சிம்மாசனத்தை தாங்கிய ஒரு
தேவதை, ஏ மன்னா! நீ அடுத்தவர் நாட்டை அபகரித்தவன், அடுத்தவர் சொத்துக்கு
ஆசைப்படுபவன் இதில் அமர தகுதியில்லை என்று சொல்லிவிட்டு மறைந்து
விட்டது.

மன்னனும் தன் தவறை உணர்ந்து மீண்டும் அமரப்போனான். மற்றொரு
தேவதை,நீ அடுத்தவர் நாட்டை மட்டுமல்ல, உன் மக்களுக்கு செலவழிக்க வேண்டிய
செல்வத்தையே ஊழல் செய்து கவர்ந்தவன். உனக்கு இதில் இருக்க தகுதியில்லை, என சொல்லி
விட்டு மறைந்தது. இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தேவதையும் அவனது கெட்ட குணங்களை
சொல்லி மறைந்து விட்டன. ஒரே ஒரு தேவதை மட்டுமே எஞ்சியிருந்தது. எல்லா தீய
குணங்களையும் நான் விட்டுவிட்டேன். இனியாவது எனக்கு அமரும் தகுதி உண்டா? என அவன்
கேட்கவே, நான், எனக்கு என்ற வார்த்தைகளை அழுத்தமாக அகங்காரத்துடன் உச்சரித்த நீ
இதில் அமர முடியாது, என சொல்லியபடியே சிம்மாசனத்துடன் மறைந்து விட்டது. ஆசை, கோபம்,
விருப்பு, வெறுப்பு இவற்றை எவனொருவன் விடுகிறானோ அவனே தீர்ப்பு சொல்ல தகுதியானவன்.
ஆடு மேய்க்கும் சிறுவனிடம் இவை அத்தனையும் இருந்தன. அதனால், அவன் சரியான தீர்ப்பு
சொன்னான். மன்னனுக்கு அத்தகைய தகுதிகள் இல்லாததால், அவனால் தீர்ப்பு சொல்ல
இயலவில்லை.
 
நீதி வழங்கும் ஸ்தானத்தில் உள்ளவர்கள் இந்தக் கதையை மனதில் கொள்ள
வேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்குத் தகுதி...
 
நீதிபதியாக இருப்பவருக்கு சட்டஅறிவும், திறமையும் மட்டும் போதுமா! இன்னும் சில

தகுதிகள் வேண்டும் என்கிறது ஆன்மிகம். இதோ! ஒரு அரசனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.

உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் விக்கிரமாதித்த மகாராஜா. இவரது

காலத்தில் நீதிநெறி தழைத்திருந்தது. எந்த வித விருப்பு வெறுப்புக்கும் இடமின்றி

தீர்ப்பளிப்பார் விக்கிரமாதித்தன். அவர் முன்னால் வழக்கு சார்ந்தவர்கள் வந்ததும்,

அவர்களை ஒரு தீர்க்கமான பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள்

தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். விக்கிரமாதித்தன் தீர்ப்பு சொல்லும் போது 25

தேவதை பொம்மைகளால் சுமக்கப்படும் ஒரு பளிங்கு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

விக்கிரமாதித்தனின் காலம் முடிந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்ததும், அவரது

அரண்மனை, சிம்மாசனம் உள்ளிட்டவை மண்ணில் புதைந்து போனது. அவரை அநேகமாக எல்லாரும்

மறந்து விட்டனர். விக்கிரமாதித்தனின் அரண்மனை இருந்த இடம் ஒரு காலத்தில் மேய்ச்சல்

நிலமானது. ஆடு மேய்க்கும் சிறுவர்கள் அதில் தங்கள் ஆடுகளை மேயவிடுவார்கள். அவர்கள்

பொழுதுபோக்குக்காக ஏதாவது விளையாடுவது வழக்கம். ஒருநாள் ஒரு மேடான இடத்தில் ஒரு

சிறுவன் அமர்ந்தான்.

மற்றவர்களிடம், நான் தான் நீதிபதி. நீங்கள் ஏதாவது

குற்றம் செய்தவர்கள் போல் நடித்து வாருங்கள். நான் தீர்ப்பளிக்கிறேன், என்றான். சக

சிறுவர்களும் ஏதோ குற்றம் செய்தது போல், நீதிபதியிடம் முறையிட, நீதிபதி சிறுவன்

அருமையாக தீர்ப்பு சொல்வான். அவனது வார்த்தைகள் ஆடு மேய்ப்பவனைப் போலவே இல்லை.

ஆணித்தரமாக நடுநிலையோடு இருந்தது. இதுபற்றி, ஊர்மக்கள் கேள்விப்பட்டனர். தங்கள்

சொந்த வழக்குகளை அந்த மேட்டில் அமர்ந்திருந்த சிறுவனிடம் கொண்டு வந்தனர். சிறுவனும்

தரமான தீர்ப்பளிக்கவே வழக்குகள் தேங்குமளவுக்கு கூட்டம் அதிகரித்தது. இந்த தகவல்

அவ்வூர் மன்னரை எட்டியது. அவர் இதுபற்றி மந்திரிகளிடம் கேட்கவே, மகாராஜா!

எங்களுக்கொரு சந்தேகம்! படிப்பறிவில்லாத ஆடு மேய்க்கும் சிறுவன்

அமர்ந்திருக்கும் மேடான இடத்தில், விக்கிரமாதித்த மகாராஜா அமர்ந்திருந்த சிம்மாசனம்

புதைந்திருக்குமோ என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தோண்டிப்பார்க்கலாமா!

என்றனர். ராஜா சம்மதிக்கவே, அவ்விடத்தைத் தோண்டினர். எதிர்பார்த்தபடி சிம்மாசனம்

கிடைத்தது. அதை அரண்மனைக்கு கொண்டு வந்தனர். மன்னர் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து

வழக்கை விசாரிக்க ஆசைப்பட்டு அருகில் சென்றார். அப்போது, சிம்மாசனத்தை தாங்கிய ஒரு

தேவதை, ஏ மன்னா! நீ அடுத்தவர் நாட்டை அபகரித்தவன், அடுத்தவர் சொத்துக்கு

ஆசைப்படுபவன் இதில் அமர தகுதியில்லை என்று சொல்லிவிட்டு மறைந்து

விட்டது.

மன்னனும் தன் தவறை உணர்ந்து மீண்டும் அமரப்போனான். மற்றொரு

தேவதை,நீ அடுத்தவர் நாட்டை மட்டுமல்ல, உன் மக்களுக்கு செலவழிக்க வேண்டிய

செல்வத்தையே ஊழல் செய்து கவர்ந்தவன். உனக்கு இதில் இருக்க தகுதியில்லை, என சொல்லி

விட்டு மறைந்தது. இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தேவதையும் அவனது கெட்ட குணங்களை

சொல்லி மறைந்து விட்டன. ஒரே ஒரு தேவதை மட்டுமே எஞ்சியிருந்தது. எல்லா தீய

குணங்களையும் நான் விட்டுவிட்டேன். இனியாவது எனக்கு அமரும் தகுதி உண்டா? என அவன்

கேட்கவே, நான், எனக்கு என்ற வார்த்தைகளை அழுத்தமாக அகங்காரத்துடன் உச்சரித்த நீ

இதில் அமர முடியாது, என சொல்லியபடியே சிம்மாசனத்துடன் மறைந்து விட்டது. ஆசை, கோபம்,

விருப்பு, வெறுப்பு இவற்றை எவனொருவன் விடுகிறானோ அவனே தீர்ப்பு சொல்ல தகுதியானவன்.

ஆடு மேய்க்கும் சிறுவனிடம் இவை அத்தனையும் இருந்தன. அதனால், அவன் சரியான தீர்ப்பு

சொன்னான். மன்னனுக்கு அத்தகைய தகுதிகள் இல்லாததால், அவனால் தீர்ப்பு சொல்ல

இயலவில்லை.

 
நீதி வழங்கும் ஸ்தானத்தில் உள்ளவர்கள் இந்தக் கதையை மனதில் கொள்ள

வேண்டும்.

 

 

இதை நடுவர்களாகிய உங்களுக்கும்,சுமோவுக்கும் சொல்லவில்லைத் தானே :lol:  :D  :icon_idea:

  • தொடங்கியவர்

இதை நடுவர்களாகிய உங்களுக்கும்,சுமோவுக்கும் சொல்லவில்லைத் தானே :lol:  :D  :icon_idea:

 

நோ .......நோ........... இது நீதிபதியளுக்கு . கனநாளாய் உங்கடை சிந்தனையளை காணேலே தொடருங்கோ  :D  :D  .

 

  • தொடங்கியவர்

விபரமான ஆள்

 

நமக்கு ஏற்கனவேதெரிந்த ஒரு விஷயத்தை ஒருவர் விளக்கப் போகிறார் என்றால் கொஞ்சம் பொறுமை காட்டுங்கள். அவரைப் பேச விடுங்கள். புதிதாகக் கேட்பது போலக் கேட்டுக் கொள்ளுங்கள். இதில் இரு வசதிகள் உண்டு.  முதலாவது, ஒரு விசயத்துக்கு எப்படியெல்லாம், எங்கெங்கெல்லாம் கண், காது ஓட்டலாம் என்பது தெரியவரும். அடுத்து நமக்குத் தெரியாத பல புது கிளைச் செய்திகளும் சேர்ந்தே வரும்.


ஒருவர் ஒரு விஷயத்தை ஆர்வமாகச் சொல்ல முன் வரும்போது எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வது நாகரீகம் அல்ல. அப்படியா என்று ஆர்வமாகக் கேட்டுக் கொள்வதுதான் மனிதாபிமானம்.

மெல்ல அதில் சில சந்தேகங்களைக் கேட்டு அந்த ஆள் வெத்து வெட்டு என்று அவரையே உணர வைக்க நம்மால் முடியும் என்றாலும் அது வேண்டாம்.காரணம், அவர்கள் அதன்பின் நம்மை வெறுக்கத் தொடங்குவர்.


ஒரு விவாதத்தில் இறங்கியிருக்கும் இருவர், ஒருவரை ஒருவர் மட்டம் தட்டவே பார்க்கிறார்கள். தங்கள் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள். இந்த விவாதம் மனக் கசப்பில்தான் முடியும். எதிரியின் வாதம் அபத்தமாக இருந்தால் கூட எள்ளி நகையாட வேண்டாம். 'உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை'என்று பக்குவமாக சொல்லலாம் . அல்லது அவர்கள் வாதங்களிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொண்டு இறுதியாக நம் கருத்துக்கு அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். 'மடக்கி விட்டேன் பார்த்தாயா?'என்று காலரை தூக்கி விட்டுக் கொல்லும் தற்காலிகப் பெருமை நமக்குத் தேவையில்லை.


நாம் நம்மை விபரமான ஆளாகக் காட்டிக் கொள்ளும் சுபாவம் நம்மை இரு விதத்தில் பாதிக்கிறது. ஒன்று,எதிராளி நம்மை அவமானப் படுத்த, பழி வாங்க சந்தர்ப்பம் தேட ஆரம்பித்து விடுவான். இரண்டு, இது மற்றவர்களின் நல்லெண்ணத்தையும், நன் மதிப்பையும் பெறத் தடையாயிருக்கிறது. குரலை உயர்த்திப் பேசுவதும், மிக அதிகமாகப் பேசுவதும், முகத்தில் ஏகமாகப் பிரகாசம் காண்பித்துப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும்.


நம்மை அப்பாவி என்று மற்றவர்கள் எண்ணுவதுதான் நமக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கித்தரும். மற்றவர்களும் நம்மை விரோதப் பார்வை பார்க்க மாட்டார்கள்.


காரியத்தில் கண்ணாயிருந்து இறுதியில் புத்திசாலித்தனத்தைக் காண்பித்து வெற்றி கொள்வதை விட்டுவிட்டு 'நாம் புத்திசாலி'என ஒவ்வொரு கட்டத்திலும் காண்பித்துக் கொள்வது எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கி விடும்.


--லேனா தமிழ்வாணன்.

  • தொடங்கியவர்
பயமுறுத்த பழகிக்கொள்!
 
ஒரு கிராமத்தில் வசித்த 17 வயது இளைஞன் மகாகெட்டவன். வயதுக்கு மீறிய பேச்சு,
நடத்தை... அவனைப் பார்த்தால் இளம்பெண்கள் நடுங்கி ஓடுவார்கள். இருந்தாலும், அவர்களை
விரட்டிச் சென்று துன்புறுத்துவான். ஒருமுறை, ஒரு முனிவர் அவ்வூருக்கு வந்தார்.
இளைஞன் வசித்த தெருவுக்குள் சென்றார். ஊர் மக்கள் அவரை மறித்து, சுவாமி! அங்கே
போகாதீர்கள். அங்கே ஒரு துஷ்டன் வசிக்கிறான். அவனைக் கண்டு பயந்து, அந்தத் தெருவையே
காலி செய்துவிட்டு வேறு தெருக்களில் நாங்கள் குடியிருக்கிறோம். நான் வேறு தெரு
வழியாக சுற்றி செல்வதானால், நேரம் அதிகமாகும். என்னிடம் என்ன இருக்கிறது! இம்சை
செய்ய, நான் அவ்வழியிலேயே போகிறேன், என்று சொல்லிவிட்டு நடந்தார். இளைஞன் அவரை
மறித்தான். யோவ், சாமி! ஊருக்குப்புதுசா! இந்த இடம் எனக்கு மட்டும் சொந்தம். நீர்
சுற்றிச்செல்லும், என்று சொல்லி கையை ஓங்கினான்.

தம்பி! ஒன்றே ஒன்று கேட்பேன். நீ பதிலளித்து விட்டால் நீ சொன்னபடி செய்கிறேன், என்றவர், நான் வழிமாறி சொல்வதால் உனக்கென்ன லாபம்! எனக்கேட்டார். ஒன்றுமில்லை என்றான் அவன். எந்த லாபமும் இல்லாத ஒன்றைச் செய்யாதே. இறைவனை வணங்கு, நல்லதைச் செய்ய முயற்சி செய், என்றார்
முனிவர். இளைஞன் மனதில் எப்படியோ இந்த வார்த்தைகள் ஆழமாகப் பதிய, அன்று முதல்
அவனும் சாந்தமாகி விட்டான். இதைப்பயன்படுத்தி ஊர்மக்கள் அவனைத் துன்புறுத்த
ஆரம்பித்தனர். சிலர் அடிக்கவும் செய்தனர். உடலெங்கும் காயம் ஏற்பட்டாலும் அவன்
அமைதி காத்தான். முனிவர் திரும்ப வந்தார். என்னாச்சு உனக்கு? என்றார். நடந்ததை
விளக்கிய அவனிடம், பிறரை நீ அடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன். உன்னைத் தாக்க
வந்தால் பயமுறுத்த வேண்டாம் என சொல்லவில்லையே! என்றார்.
 
அதன்பின் மீண்டும் அவன் பயமுறுத்தலை துவங்க மக்கள் விலகிச் செல்ல ஆரம்பித்தனர். நல்லவனாய் இருக்கலாம் ஆனால், ஆபத்து வந்தால், அதைத்தடுக்கும் விதத்தில் பயமுறுத்துவதில்
தவறில்லை.
 
  • தொடங்கியவர்

வெற்றிப்படிகள்

 

நம்மால் இயன்ற அனைத்தையும் செய்தோம் என்பது ஒரு வெற்றியே.முடிவு எப்படியிருப்பினும் கடைசி வரை முயற்சிப்பது வெற்றியே. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகக் கவனம் செலுத்துவது ஒரு வகை வெற்றியே.  எதிர் பார்த்த வாய்த்த வாய்ப்புகள் வராதபோதும் கிடைத்த வாய்ப்புகளில்
இ ருந்து கூடிய அளவு அனுபவம் பெற்றுவிடுவதும் வெற்றியே.  மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டி வந்தாலும் தொடர்ந்து முயல்வதும் அதற்கான உறுதியும் ஒரு வெற்றியே.


'இன்று சிலர் செய்யும் தவறுகள் நாமும் நேற்றுத் தெரியாமல் செய்த தவறுகளே'என்பதை உணர்ந்து அவர்களை மன்னிப்பதும் வெற்றியே.' சிறு செயல்களை செய்தாலும் பலருக்கும் பயன்படும் விதமாக செம்மையாக செய்தோம்'என்ற உள்ளக் களிப்பும் வெற்றியே. பெருந்தோல்வி ஒன்று முழுமையாக வீழ்த்தி விட்ட போதிலும் மாபெரும் கடமைகளால் உந்தப்பட்டு மீண்டும் எழும் உள்ளம்வெற்றிக்கு ஒரு வித்து.
'நல்லதை விழையும் முயற்சியில் நமக்குத் தற்போது அவப்பெயர் வந்தாலும் பிறகு புரிந்து கொள்வார்கள்,'என்று பொறுத்துக் காத்திருப்பதும் வெற்றியே.  திட்டங்கள் செயல் முறைக்கு வரும்போது நடைமுறை உண்மைகளை கண்டுணர்ந்து தன் தவறுகளை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையும் ஒரு வெற்றியே.


வெற்றிக்குத் தடையாக இருக்கும் நினைப்புகளை அகற்றுங்கள். யாரோ வேண்டுமென்று உங்கள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்களே, அந்த நினைவை அகற்றுங்கள். நீங்கள் குறுக்கே வந்து விட்டதாக மற்றவர்களும், அவர்கள் குறுக்கே வந்து விட்டதாக நீங்களும் நினைத்துக் கொண்டால் எப்படி?


உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளத் தயங்கும்போதுதான் யாரையேனும் குறை சொல்லி உங்கள் முயற்சியிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கும்போத்தான் குறுக்கு சுவர்கள் எழுகின்றன. நாம் எழுப்பிய சுவர்களை நாம்தான் உடைக்க வேண்டும்.


எல்லாம் தெரியும் என்ற நினைப்பைக் கைவிடுவதும், தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக் கொள்வதும், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் தீமைகளைக் கலைவதும் வெற்றிகளே.
வேண்டா வெறுப்பை விடுத்து கவனத்தோடு செயலாற்றுவது, பிறருடைய இயல்புகளை அறிந்து நளினமாகச் செயல்படுவது, வேண்டாத பின் விளைவுகள் வராத வண்ணம் சிந்தித்துச் செயல் படுவது, இடையில் வரும் அலுப்பை பொருட் படுத்தாது தொடர்ந்து முயல்வது, முதலில் செய்ய வேண்டிய வேலையை முதலில் செய்யும் கட்டுப்பாடு, எடுத்த வேலையைக் கடைசி வரை செய்து முடித்து விடும் ஈடுபாடு யாவும் நல்ல பண்பின் வெற்றிப்படிகள்.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/01/blog-post_24.html

  • தொடங்கியவர்
வாழ்க்கையில் உயர்வு அடைய...
 
ஒரு கூட்டில் அண்ணன், தங்கை என இரண்டு சிட்டுக் குருவிகள் வாழ்ந்து வந்தன. சில
நாட்களாக தங்கைக் குருவி மட்டும் பறக்காமல் கூட்டிலேயே இருந்தது. இதைக் கண்ட அண்ணன்
குருவிக்கு மிகுந்த ஆச்சர்யம். ஏன் தங்கை இப்படி எங்கும் செல்லாமல் இருக்கிறாள்
என்று கவலையுற்று ஒரு நாள் தங்கையிடம் கேட்டே விட்டான். ஏன் இப்படி பறக்காமல்
இருக்கிறாய்? உனக்கு ஏதாவது நோய் பிடித்திருக்கிறதா? ஆமாம் அண்ணா, எனக்கு நோய்
பிடித்துள்ளது. ஆனால் அது என்னுடைய நோய் அல்ல. மனிதர்களின் நோயை நான் தாங்கிக்
கொண்டிருக்கிறேன் என்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று அண்ணன் குருவி கூறியது.

கடவுள் ஒரு நாள் என் முன் தோன்றினார். என்னை மட்டும் சாதாரணக் குட்டிக் குருவியாகப்
படைத்திருக்கிறீர்களே? ஆறறிவு கொண்ட மனிதர்கள் எல்லாம் எவ்வளவு நன்றாக
இருக்கிறார்கள். என்னையும் ஒரு மனிதனாகப் படைக்கக் கூடாதா? என்று வேண்டினேன்.
கடவுள் என்னைப் பார்த்துச் சிரித்தார். முதலில் மனிதர்களின் குணங்களை உனக்குத்
தருகிறேன். அதைக் கொஞ்சம் சுமந்து பார் என்று அவர் சொன்னார். நானும் அப்படியே
செய்தேன். அந்தச் சுமையால்தான் அன்று முதல் என்னால் பறக்க முடியவில்லை.

அப்படியா! மனிதர்களின் அந்தக் குணங்கள் என்னென்ன? என்று
ஆவலுடன் கேட்டது அண்ணன் குருவி. கோபம், பொறாமை, பேராசை, வஞ்சனை, தீய எண்ணம்,
துரோகம், சுயநலம் ஆகிய மனிதர்களின் குணத்தைத்தான் கடவுள் என்னைச் சுமக்கச்
சொன்னார். அண்ணன் குருவி அதிர்ந்து போனது. மனிதர்கள் இப்படியெல்லாமா
இருக்கிறார்கள்? என்று நொந்து போனது. கடைசியில் தன் தங்கையிடம், கடவுள் தந்த
சுமைகளையெல்லாம் நீ ஒவ்வொன்றாகக் கழற்றி தூர எறி, அதன் பின்னர் உன்னால் பறக்க
முடியும் என்று யோசனை சொன்னது. தங்கைக் குருவியும் அண்ணன் சொன்னது போலவே செய்ய, தன்
உடலின் எடை குறைவதைப் போல் அதற்குத் தோன்றியது. அடுத்த விநாடி அதனால் சுலபமாகத்
பறக்கவும் முடிந்தது.
 
வாழ்க்கையில் உயர்வு அடைதல் என்னும் பறக்கும் ஆசை இருந்தால்
மனிதர்களின் ஏழு வகை தீய குணங்களை ஒவ்வொன்றாகத் தூக்கி எறியலாம்.
 
  • தொடங்கியவர்

இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை

 

 

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -

 

"ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?"

 

இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

 

அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப்பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் என்னைக் காப்பாற்று என்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்...

சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.

 

பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க...

 

அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை.

 

சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலையின் வாய்க்குள் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் -

 

முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ?

 

அதற்குப் பறவைகள்,

 

எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான்

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...

நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்றது கழுதை.

 

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது.

 

சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹும் சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல். பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த...

 

முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ஓடிவிடு என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான். முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது -

புரிந்ததா... இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை .

 

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர...

அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..

சிறுவன் பெருமூச்சு விடுகிறான்.

 

"இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை"

என்று சமாதானம் ஆகிறான்.

 

வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது என்று இந்து மத ரிஷிகள்
சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.

 

http://tamilnanbargal.com/tamil-articles/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.