Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் 'கண்ணில்லாத' புதிய கெளுத்தி மீன் கண்டுபிடிப்பு

Featured Replies

121211123338_blind_catfish_abdulkalami_3

ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி

இந்தியாவின் கண்களே இல்லாத புதிய வகை கெளுத்தி மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் உயிரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் இரிஞ்சாலக்குடாப் பகுதியிலுள்ள ஒரு ஆழ் கிணற்றிலேயே கண்ணில்லாத இந்த கெளுத்தி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அதன் கட்டமைப்பில், கண்களே இல்லாத கெளுத்தி மீன்களை காண்பது அரிது.

 

இவ்வகையான உயிரினங்கள் பெரும்பாலும் நிலத்தின் அடியில் சேறும் சகதியும் இருக்கும் பகுதியில் வசிப்பவை.

 

 

அப்துல் கலாமின் பெயர்

 

இந்த புதிய வகை மீனினத்துக்கு, இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை உள்ளடக்கி ஹொராக்லனிஸ் அப்துல்கலாமி என்று பெயரிடப்பட்டுள்ளது.

அறிவியல்துறைக்கு அவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயர் இந்த மீனினத்துக்கு சூட்டப்பட்டதாக இதில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆழமான கிணறுகள், ஆழ் நீர் நிலைகளில் இருக்கும் சுரங்கங்கள் போன்ற இடங்களில் வாழும், கண்கள் இல்லாத இந்த வகையான கெளுத்தி மீன்கள் குறித்த கண்டுபிடிப்பும், அது தொடர்பிலான ஆய்வுகளும் மிகவும் ஆச்சரியம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்த குழுவில் இருந்த கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் கடல்சார் உயிரியல்துறையில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பிஜாய் நந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

“மீனினம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த விஷயங்களை மட்டும் இவ்வகையான அரிய மீன்களின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துவதில்லை. அதற்கு அப்பாற்பட்டு, பல உயிரினங்கள் எப்படித் தோன்றின, எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது என்பது போன்ற நுண்ணிய விஷயங்களை அறிந்து கொள்ளவும் இவ்வகையான கண்டுபிடிப்புகள் உதவுகின்றன” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

 

 

மிகச் சிறியது

மிகவும் சிக்கலான சுற்றுச்சூழலில் வாழும், ரத்த மீன்கள் என்றழைக்கப்படும் இந்த அரிய வகை மீனினங்கள், ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் சுமார் 3.78 சென்டி மீட்டர் நீளம் உள்ளவை.

இந்தப் புதிய மீனினத்தின் புறத்தோற்றம் குறித்த அடிப்படை ஆய்வுகள் முடிந்து விட்டதாகவும், அதனுடைய மூலக் கூறுகள், அது தோன்றிய விதம் குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் டாக்டர் பிஜாய் நந்தன் கூறுகிறார்.

 

அந்த ஆய்வுகள் மூலம் அவை எங்கிருந்து தோன்றின, எந்த உயிரினத்திலிருந்து இவை உருப்பெற்றன, மற்ற உயிரினங்களுக்கும் இவற்றுக்குமான தொடர்புகள் போன்றவை தெரியவரக்கூடும் எனவும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

http://www.bbc.co.uk/tamil/science/2012/12/121211_blindcatfish.shtml

H+Krishnai,+H+alikunhii+and+h+abddulkala

New enigmatic blind cat fish species named after missile man of India

The lesser known subterranean world of blind catfishes in the Western Ghats now has some connection with the missile man of India, as a newly identified species of blind cat fish was named after A P J Abdul Kalam, former India President and well-known aerospace engineer who was instrumental in developing India’s ballistic missiles and launch vehicle technology. Collected from a dugout well of Irinjalakkuda in the South Indian state of Kerala, the new cat fish species has been christened as Horaglanis abdulkalami.

http://indianbiodiversitytalk.blogspot.ca/2012/12/horaglanis-abdulkalami-new-blind-cat-fish-species-named-after-apj-abdul-kalam-missile-man-of-india.html

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்கன், என்று பேர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்! :D 

 

நன்றிகள், அகூதா! 

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்கன், என்று பேர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்! :D 

 

நன்றிகள், அகூதா! 

உங்கள் கோரிக்கை, கவனத்தில்... எடுக்கப் படுகிறது. அடுத்த முறை, காது இல்லாத... மீன் கண்டுபிடித்தால், மன்மோகன் சிங்கனின் பெயர் வைக்கப்படும்.smiley-laughing002.gif

  • தொடங்கியவர்

catfish.jpg

கெளுத்தி மீன்

உயிரியல் வகைப்பாடு

திணை:(இராச்சியம்)     விலங்குலகம்

தொகுதி:முதுகுநாணி

வகுப்பு:Actinopterygii

பெருவரிசை:Ostariophysi

வரிசை:Siluriformes

 

கெளுத்தி மீன் அல்லது பூனை மீன் (cat fish) கதிர் துடுப்புடைய மீனினத்தைச் சேர்ந்தவை. இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை மேனாட்டில் பூனை மீன்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றின் வடிவம் மற்றும் அளவு பலவாறாய் வேறுபட்டது.

பெரும்பாலான கெளுத்தி மீன்கள் அடியில் வாழ்பவை. அவற்றின் கனமான தலை எலும்பும் இதற்கொரு காரணமாகும். இவற்றின் தட்டையான தலை பரப்பைத் தோண்ட உதவுகிறது.

 

பெரும்பாலான நாடுகளில் இவை உணவாக உண்ணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 1987 ஆம் ஆண்டு முதல் சூன் 25 ஆம் நாள் கெளுத்தி மீன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செதில்கள் இல்லாத காரணத்தால் யூதர்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் இவற்றை உண்பதில்லை.

http://www.santhan.com/index.php/seaanimals1173

  • கருத்துக்கள உறவுகள்

நண்டுக்கும், இறாலுக்கும், கணவாய்க்கும் செதில் இல்லைத்தானே... அப்போ... முஸ்லீம்களும், யூதர்களும் அவற்றை உண்பதில்லையா? நல்லதாய்ப் போச்சுது, அவற்றை அவர்களும் சாப்பிட வெளிக்கிட்டால்... சந்தையிலை நண்டு, இறால் பவுண் விலை விற்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.