Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் உற்பத்திசெய்து கனடாவில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எதிரான கனடியத் தமிழர்களின் புறக்கணிப்புப் போராட்டம்:

Featured Replies

வியபாரிகளின் வணிக நலன்களை குறிவைத்து உலகெங்கிலும் நடத்தப்பட்ட போராட்டங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன.

 

காரணம் வியாபாரிகள் தங்களின் வணிக நலன்களை இழக்க விரும்புவதில்லை. கிட்டதட்ட ஐ.பி.எல் விசயத்தில் தற்பொழுது நடந்திருப்பதும் இது தான். சிறீலங்காவின் கிரிக்கெட் வீரர்களை முன்வைத்து கிடைக்கும் லாபத்தை விட சென்னையில் கிரிக்கெட் போட்டி நடக்காவிட்டால் ஏற்படும் இழப்பு அதிகம். அதனால் ஐபிஎல் முதலாளிகள் தமிழர்களின் கோரிக்கைக்கு பணிந்து இருக்கிறார்கள்.

அது போல ஜெயலலிதா என்னவோ தமிழ் மக்களுக்கு ஏதோ சாதித்து காட்டியிருப்பது போல இதனை பேசுவதும் நகைச்சுவைக்குரியது. 2011, 2012ம் ஆண்டுகளின் நடந்த ஐ.பி.எல் போட்டிகள் குறித்து தமிழ் அமைப்புகள் முன்வைத்த இது போன்ற கோரிக்கைகளை ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. மாணவர்களின் போராட்டம் எப்படி கருணாநிதியை பணிய வைத்ததோ, அது போல ஜெயலலிதாவையும் பணிய வைத்துள்ளது. அது தான் மாணவர்களின் சக்தி. இன்னமும் கருணாநிதி குடும்பத்தை சார்ந்த கலாநிதி மாறனின் ஐதராபாத் கிரிக்கெட் அணியில் சிங்கள கிரிக்கெட் ஆட்டக்காரர் குமார் சங்கக்காரா ஒரு வீரராக மட்டுமில்லாமல் கேப்டனாகவும் இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

 

ஐபில் தடை : மாணவர்கள் போராட்டத்தின் வெற்றி !!

 

தமிழர்கள் ஐபிஎல் விசயத்தில் நிச்சயம் சிக்சர் அடித்துள்ளோம். இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் பார்ப்பது கிரிக்கெட் விளையாட்டை தான் என்ற வகையில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் தமிழர்களின் பிரச்சனையை இந்தியாவெங்கும், கிரிக்கெட் விளையாடும் நாடுகள் எங்கும் கொண்டு சென்றிருக்கிறோம். ஒரு போராட்டத்தின் வெற்றி என்பது நம்முடைய பிரச்சனைகளை எந்தளவுக்கு பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்பதை சார்ந்தே இருக்கிறது. அதே நேரத்தில் இந்திய மக்களிடம் குறிப்பாக நடுத்தர வர்க்க இந்திய மக்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. காரணம் அவர்களுக்கு செய்திகளை வழங்கும் ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளையே தொடர்ந்து வழங்கி வருகின்றன. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேயான அரசியல் போட்டியாகவே இதனை வட இந்திய ஊடகங்கள் பரப்பி வருகின்றன. அதைத் தவிர வேறு எந்த நியாயங்களும் தமிழர்களின் போராட்டங்களுக்கு இல்லை என்பதே அவர்களின் பரப்புரையாக உள்ளது. எனவே பிற மாநில இந்திய மக்களிடம் இருந்து எந்த ஆதரவும் நமக்கு கிடைக்க போவதில்லை.

 

என்றாலும் தமிழர்களின் தொடர்ச்சியான இத்தகைய கவன ஈர்ப்புகளால் மட்டுமே தமிழர் பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல முடியும். இன்று பல உலக ஊடகங்களில் சிறீலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு சென்னையில் விதிக்கப்பட்ட தடையும் அதற்கு காரணமாக சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களும் செய்தியாகி உள்ளது. இது மிக முக்கியமானது.

 

விளையாட்டில் அரசியல் கூடாது என ஆதிக்க சக்திகள் கூறுவதும், விளையாட்டு மூலமாக அரசியலை ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னெடுப்பதும் புதிது அல்ல.

 

பாலஸ்தீன பிரச்சனையை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வர முனீச் ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேல் வீரர்களை பாலஸ்தீன விடுதலை போராளிகள் பிணைக்கைதிகளாக பிடித்தனர். அது மிகப் பெரிய வன்முறையில் முடிந்தாலும் பாலஸ்தீன பிரச்சனை உலக அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தென்னாப்ரிக்கா நாட்டின் இனவெறி அரசாங்கத்துடனான விளையாட்டு உறவுகளை இந்தியா உட்பட பல நாடுகள் முறித்து கொண்டன. ஆனால் தமிழர்கள் பிரச்சனை என்னும் பொழுது மட்டும் விளையாட்டையும், அரசியலையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்ற அறிவுரை நமக்கு வழங்கப்படுகிறது. அப்படி அறிவுரை கூறும் இந்தியா பாக்கிஸ்தான் உடன் பிரச்சனை ஏற்படும் பொழுதெல்லாம் முதலில் கிரிக்கெட் உறவுகளையே வெட்டி எறிந்திருக்கிறது. இன்றைக்கும் பாக்கிஸ்தானின் ஒரு வீரர் கூட ஐபில் போட்டிகளில் விளையாட அனுமதிக்கபடுவதில்லை.

 

குறுகிய காலத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்து வரும் வெற்றிகள் மகிழ்ச்சியை தருகின்றது. இது மாணவர்கள் அடித்த சிக்சர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இது ஒரு சிக்சர் மட்டுமே. இன்னும் எதிர்கொள்ள வேண்டிய பந்துகள் நிறைய இருக்கின்றன.

2009க்கு பின் எல்லாம் முடிந்தது என இருந்த உலகத்தமிழர்களை தமிழக மாணவர்கள் தட்டி எழுப்பி உள்ளார்கள். மாணவர்களுக்கு உலகத்தமிழர்கள் நிச்சயமாக நன்றி கடன்பட்டிருக்கிறார்கள்.

 

 

சசி (முகநூல்)

Edited by akootha

  • Replies 181
  • Views 10.8k
  • Created
  • Last Reply

இலங்கைக்கு உலக வங்கி கடனுதவி

 

இலங்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் முகமாக இலங்கை அரசிற்கு உலக வங்கி சலுகை அடிப்படையில் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

 

உலக வங்கியானது  200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது.


புற்றுநோய், உடற் பருமண் அதிகரித்தல், நீரிழிவு, இருதய நோய், இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த இந்த கடனுதவி பயன்படுத்தப்பட உள்ளது.

 

இதன் மூலம் 21 மில்லியன் மக்கள் நன்மை அடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3738

Exports Down By 12% In Two Months

 

There has been a 12% drop in exports in two months alone, causing a significant roadblock to achieving targets set out in the Mahinda Chinthana, the Export Development Board (EDB) confirmed, Executive Director EDB, Dr Yousuf Marikkar said. The drop, which he said was ‘a little bit alarming,’ was due to various factors, many of which were out of the EDB’s control.


The international market was going through a period of recession all over the world, with the European Union being particularly hit due to a period of recession. This was a major reason for the dramatic drop in exports in Sri Lanka, Marikkar said. In fact, he added, Sri Lanka was not as badly hit as other regions in terms of being adversely affected economically.
 

Stiff competition was another factor, Marikkar said adding, that the effects of losing the GSP Plus trade concession still did have an impact on exports last year, and had made an impact on 2011 export figures as well.

 

http://www.thesundayleader.lk/2013/03/31/exports-down-by-12-in-two-months/

தமிழகத்தின் எழுச்சி: சிங்களத்தின் பொருளாதாரத்தை வீழ்த்தும் சாத்தியம்
[Wednesday, April 3, 2013 10:43 AM]

 

 

சிறிலங்காவுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டித்து தென்னிந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொழும்பு துறைமுக வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரைக் கண்டித்து பதாதைகளும் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப் போவதாகவும், துறைமுக தொழிலாளர் சங்க நிர்வாகி மகேஷ் சமரவிக்ரமா மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

 

http://www.eelamboys.net/archives/29020

தோழர்களே !

 

நாளை ஞாயிறு (7 Apr 2013) மாலை 4.00 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் (கண்ணகி சிலை அருகே) இலங்கை உற்பத்தி பொருட்களை புறக்கணிப்போம் என்ற கையெழுத்து பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தமிழகமெங்கும் இலங்கை பொருட்கள் இந்திய அரசின் உதவியோடு விற்பனைக்கு வந்துள்ளது . இது குறித்து பொது மக்களுக்கு நாம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டியுள்ளது.

 

 

இலங்கையின் பொருளாதாரத்தை முடக்குவதும் நாம் தொடுக்கும் ஒரு வகையான போர் என்பதை உணர்ந்து இலங்கைக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுவோம். விருப்பமுள்ள தோழர்கள் இந்த பரப்புரையில் பங்கேற்க வாருங்கள் . தொடர்புக்கு 9566224027

(Via Rajkumar Palaniswamy)

இலங்கை ஆடைகளை  புறக்கணிப்புப் போராட்டம்.

 

 

இலங்கையில் உற்பத்தியாகிக் கனடிய அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் ஆடைகள் புறக்கணிப்புப் போராட்டம். எதிர்வரும் ஞாயிற்றக்கிழமை ஏப்பிரல் 14. 2013 மதியம் 2:00 மணி தொடக்கம் மாலை 4:00 மணிவரை கனடியத் தமிழர் தேசிய அவையால் டண்டாஸ் சதுர்க்கத்தில் (Dundas Square) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் இலங்கைக்குப் பாரிய பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவதுடன் இன்னல் இழைக்கப்படும் ஓர் இனத்தைக் காத்ததாகவும் மனிதவுரிமை மீறல்களிற்குத் துணைபோகாமலும் மனித நேயமுள்ளவர்களாகவும் வாழமுடியும். இலங்கையில் சித்திரவதைகள் பாலியல் வல்லுறவுகள் கைதுகள் காணாமற் போதல் நில அபகரிப்பு என்பன தொடர்ந்து கொண்டேபோகும் இந்நிலையில் இலங்கைக்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி எம்முறவுகளைக் காத்திடுவோம் வாரீர்.

 

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை

 

தொலைபேசி :416.830.703
மின்னஞ்சல் : info@ncctcanada.ca
இணையத்தளம் : www.ncctcanada.ca

  • 2 weeks later...

558025_332486503520393_897413518_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.