Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழத் தேசியக் கூட்டமைப்பில் ஒருவர் திலீபனாக மாற வேண்டும்

Featured Replies

' காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது' என்பது தமிழ் மொழியில் உள்ள ஒரு கருத்து மிக்க பழமொழியாகும். இன்னொன்று இருக்கின்றது ' சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது' என்பது. இந்த இரு தமிழ்ப் பழமொழிகள் பற்றி தற்போது ஐயம் நிலவுகின்றது.


தற்போது  ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஏராளமான குருத்தோலைகள் விழுந்து விட்டன. தற்போது அந்தக் குருத்தோலைகளின் உக்கிய உரத்திலே காவோலைகளாக விழ வேண்டியவர்கள் புத்துணர்வு பெற்றுள்ளார்கள்.
 

வருகின்ற 21ம் திகதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரதம் ஒன்றை தந்தை செல்வா தூபிக்கு அருகில் ஆரம்பிக்க இருக்கின்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் பல கோரிக்கைகளை முன் வைத்து நடாத்தப்பட இருக்கின்றது. இந்தக் கோரிக்கைகள் அரச தரப்பால் நிறைவேற்றப்படுகின்றதோ இல்லையோ ஆனால் உண்ணாவிரதம் இருப்பது நிறைவேற்றப்படும்.
 

காலை 7 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை உண்ணாவிரதம் இருப்பது  பெரிய வேலையா???? இவற்றைப் பார்க்கின்ற அரசாங்கத் தரப்பும் உலகநாடுகளும் கேலிக்குரியதாக எமது கோரிக்கைகளை மாற்றியமைத்துவிடுவார்கள். தமிழத்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் ஏராளமானோர் வயதானவர்கள். இவர்கள் வழமையாகவே சாப்பாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துச் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டம் அவர்களுக்கு மாத்திரமே நோய் தீர்க்கும் மருந்தாக அமைந்துவிடப் போகின்றது.
 

தமிழீழ விடுதலைப் புலிகள் உலகத்தின் கவனத்தை தம்பால் திருப்பி ஏராளமான விடயங்களைச் செய்து முடித்திருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்திலும் சரி, உண்ணாவிரதப் போராட்டத்திலும் சரி உலகநாடுகளின் கண்களை  தம் மீது பதிய வைத்தார்கள். உலக வரலாற்றில் உண்ணாவிரதம் இருந்து இறந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர வேறொருவரும் இல்லை. திலீபன், பூபதி என இருவர் உண்ணாவிரதத்தில் உயிர் நீர்த்தார்கள்.  இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த எத்தனையோ பேர் சாகாது கோரிக்கைகளும் நிறைவேறாது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர்.
 

உண்ணாவிரதம் இருந்து பெரும் நகைச்சுவை செய்தவர் எங்களது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருனாநிதி ஆவார். இவர் இலங்கையில் யுத்தநிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தது ஒரு சில மணித்தியாலங்களே ஆகும்.
 

விடுதலைப் புலிகள் 2009ம் ஆண்டு மறைந்த பின் முதல் முதலாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப் பாராளுமன்றத் தேர்தலில் பல தமிழத் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டார்கள்.
 

இதற்கு முன்னர் விடுலைப் புலிகள் ஆட்சி செய்த காலத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் அதி கூடிய விருப்பு வாக்குப் பெற்று பாராளுமன்றம் சென்றவர் செல்வராசா கஜேந்திரனாவார். இவர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராகவும் இருந்தவர். அத்துடன் விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் கூட்டமைப்பில் போட்டியிட்டு வென்ற பத்மினி சிதம்பரநாதன், சூ.சிறில், போன்றவர்களை விடுதலைப் புலிகள் இல்லாதபின் கூட்டமைப்பினர் ஒதுக்கி வைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார்கள். இவர்களை ஒதுக்காது இவர்களுக்கும் கூட்டமைப்பில் இடம் கொடு;ங்கள் என கூறியும் கூட்டமைப்பில் இடம் கொடாது விட்ட காரணத்தால் அக் கூட்டமைப்பில் இருந்து விலகிய கயேந்திரகுமார் பொன்னம்பலம். இவ்வாறு கூட்டமைப்பினரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் ஆரம்பித்த கட்சி தமிழத் தேசிய மக்கள் முன்னியாகும். இது பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது.
 

இலங்கைத் தமிழரசுக் கட்சி விடுதலைப் புலிகள் ஆரம்பமாவதற்கு முன்னரே தமிழர்களால் வளர்க்கப்பட்டு தமிழர்களின் மனங்களில் ஆள வேரூன்றி நின்ற ஒரு கட்சியாகும். தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கும் இந்தக் கட்சியே ஆணி வேராகத் திகழ்ந்தது. போராட்டம் முடிந்த பின்னர் இந்தக் கட்சி புலிகளின் ஆதரவாளர்கள் பலரை ஒதுக்கியது பற்றியும் சிந்திக்காது மக்கள் அள்ளி வாக்குப் போட்டார்கள்.
 

கூட்டமைப்பால் ஒதுக்கி வைக்கப்பட்ட தமிழத் தேசிய மக்கள் முன்னனிக்கு வாக்கைப் போடுங்கள் என சில பல்கலைக்கழக மாணவர்கள் குடாநாட்டில் உள்ள பல இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்துக் கேட்ட போது ' ஏன் தம்பி... எல்லாரையும் அநியாயமாகச் சாக்காட்டிப் போட்டிங்கள்... திருப்பவும் எஞ்சியவர்களை சாக்காட்டப் போறீங்களோ' என வயதான பழுத்த அனுபவம் உள்ளவர்கள் தெரிவித்ததாக சென்ற மாணவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  பாராளுமன்றத்தில் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்கள் எங்கள் முதியவர்களே....  யுத்தத்தின் பின் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில்  தமிழ் இளைஞர்கள் அக்கறை செலுத்தவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். வாக்குச் சாவடிகளை நிறப்பியவர்கள் வயோதிபர்களே.....
 

ஈ.பி.டி.பி யினருக்கும் ஏனைய அரசசார்பு கட்சியினருக்கும் வாக்குப் போட்ட தமிழர்களில் பெரும்பாண்மையானவர்கள் இளவயதினரும் குடிமக்களும்.. இதற்குக் காரணம் வேலை வாய்ப்பும் சாராயமும். யுhழ்ப்பாண இளவயதினரில் 5 வீதத்திற்கும் குறைவானவர்களே அரசசார்பு கட்சிக்கு வாக்குப் போட்டவர்கள்.
 

தற்போது படித்த புத்திசாதூரியம் மிக்க இளைஞர்களால் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வு ரீதியான ஒரு செயற்பாடு நடைபெற்றது. அதுதான் மாவீரர் தீபமேற்றல். இதனை எமது வயோதிபர்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பு சார்பாக எடுத்து மக்கள் முன் கொண்டு வந்து போராட்டங்கள் நடாத்துகின்றது. சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்து நன்றாக மென்று கொண்டு இருக்கின்றது தமிழத்தேசியக் கூட்டமைப்பு.
 

தமிழத் தேசியக் கூட்டமைப்பின்  தேசியத் தலைவர் சம்மந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்த சில கருத்துக்கள் தமிழ் உணர்வாளர்கள் பலரிடத்தில் வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது. அதில் முக்கியமானது வடக்கில் இருந்து இராணுவம் வெளியேறத் தேவையில்லை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்து, மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையாகும்......
இவ்வாறான கோரிக்கைகளை  அரசாங்கத்திடம் கேட்பதற்கு சம்மந்தன் தேவையில்லை.... எங்களின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அரசசார்பு தமிழத் தலைவர்கள் காணும்.... இதனை கூட்டமைப்புச் சம்மந்தன் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இளைஞர்களைப் பலிக்கடாக்களாக்கி அவர்களால் அரசியல் நடாத்திக் கொண்டிருப்பது இனியும் நடைபெறக் கூடாது. தமிழ் இளைஞர்கள் செய்யும் உணர்வு பூர்வமான செயல்களை நிறுத்தச் செய்து அவர்களுக்கு இராஜதந்திரங்களைக் கற்றுக் கொடுக்கவும் அவர்களுக்கு அரசியல் தந்திரங்களை கற்றுக் கொடுக்கவும் கூட்டமைப்பு முன்வரவேண்டும். அதை விடுத்து அவர்கள் செய்த செயல்களை வைத்து தாம் வளரக் கூடாது.
 

தமிழத் தேசியக் கூட்டமைப்பானது ஒன்றில் ஆம்பிளை போல் இருக்க வேண்டும். அல்லது பெண் போல குணங்களுடன் இருக்க வேண்டும். தமிழர்களுக்கு நாம் ஆண்கள் எனக் காட்டிக்  கொண்டு ஜனாதிபதி மகிந்தவுக்கு  மனைவிபோல் அனைத்தையும் திறந்து காட்டுவதற்கு கூட்டமைப்பை பாராளுமன்றம் அனுப்பவில்லை தமிழர்கள்.

 

சிறுபிள்ளை வேளாண்மை என விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கதைத்த பெரியவர்களுக்கு சொல்ல வேண்டியவை நிறைய இருக்கின்றது.


உலக நாடுகள் பல தற்போது தமிழர்களைப் பற்றிக் கருத்துக் கொண்டிருப்பதற்கு சிறுபிள்ளைகள் செய்த வேளாண்மையே காரணமாகும். தற்போது சிறு பிள்ளைகள் வேளாமை செய்வதை நிறுத்தி விட்டார்கள். இனியும் நீங்கள் செய்யப் போவது என்ன??
 

கூட்டமைப்பின் சார்பில் தும்புத்தடி போட்டியிட்டாலும் அதற்கு நீங்கள் வாக்குப் போடுவீர்களா???
இன்று கூட்டமைப்பில் நின்று போட்டியிட்டு பாராளுமன்றம் போனவர்களும், பிரதேசசபைகளில் நின்று வென்றவர்களும் என்னென்ன செயல்கள் செய்கின்றார்கள் என கேட்கின்றீர்களா???

 

தற்போது உலகநாடுகள் பல கூட்டமைப்பினை தமிழர்களின் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டதாக அவர்களே தெரிவித்துக் கொள்கின்றார்கள். அப்படியாயின் உலகநாடுகள் இன்னும் ஏன் எமக்கு சார்பாக தொழிற்படாது நிற்கின்றார்கள்??

 

இனி ஒரு தமிழ் உரிமைப் போராட்டம் நடைபெற்றால் இளைஞர்களைப் பங்கு பற்ற விடாது கூட்டமைப்புக்கு வாக்குப் போட்ட முதியவர்கள் பங்கு பற்ற வேண்டும்.
 

கூட்டமைப்பின் சார்பில் உரிமைப் போராட்டத்திற்காக ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து எமது உரிமைப் போராட்டத்தினை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
 

கூட்டமைப்பில் தற்போத பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களி;ல் பலர் தமிழர்களுக்கா இல்லாமல் தங்களின் நலனுக்காக பாராளுமன்றம் போனவர்கள் என கருதப்படுகின்றார்கள்
தமிழர்களின் நலனுக்காக கதைத்தோ அல்லது போராடியோ அரசாங்கத்தால் அடி கொடுக்கப்பட்டவர்களும் சிறை சென்றவர்களும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள்.

 

அவர்கள் யார் என இனங்கண்டு அவர்களை விடுத்து ஏனையோரை, இதில் முக்கியமாக சுரேஸ்பிரேமச் சந்திரன் அந்தக் காலத்தில் தமிழர்களை அழித்த குழுவில் முக்கியமான குழுவான மண்டையன் குழுவின் தலைவர். அடுத்தது உதயன் பத்திரிகை முதலாளி மற்றும் பலர் அரசாங்கத்தின் எந்தவித துண்புறுத்தல்களுக்கும் ஆளாகாது நோகாமல் நொக்கு குடித்தவர்கள் ஆவர்.;; (இவர்களது உறுப்பினர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டார்கள்.... அத்துடன் இவர்களது வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டது உண்iமாதன்) இவர்களில் ஒருவர் 'தமிழர் நலன்களை முன்னிறுத்தி வரும் 21ம் திகதி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அதற்கு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

 

இவர்களுக்கு ஆதராவாக தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போட்ட வயோதிபர்களும் அவர்களுக்குப் பக்க பலமாக இருந்தவர்களும் பாடுபட வேண்டும்.
 

இவ்வாறு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து அதற்கு எமது பெரியவர்களும் பூரண ஆதரவு வழங்கி அவர்களுடன் சேர்ந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல செயல் தமிழர்களுக்கு நடக்கும். அரச படைகள் இந்த உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த முயன்றாலும்  அடி வாங்கப் போவது வாழ்ந்து அனுபவித்த பெரியவர்களே... அந்தப் பெரியவர்களுக்கு கொடுக்கும் அடி ஊடகங்களில் வருவதால் உலகநாடுகளில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு கடும் கண்டனங்களும் எங்களுக்குச் சார்பான போக்கும் நிச்சயம் ஏற்படும்.
 

தமிழத்தேசியக் கூட்டமைப்புக்காரர்களிலிடம் ஒரு பகீரங்க சவால்
 

இயலுமென்றால் உங்களில் ஒருவர் தமிழர்களுக்காக திலீபனாக மாறத் தயாரா?
 

- ஆக்கம்: நையாண்டிப் புலவர்

 

மூலம்: யாழ் செய்திகள் - மார்கழி 13, 2012
பிரசுரித்த நாள்: Dec 13, 2012 16:01:39 GMT

 

 

http://tamilcanadian.com/article/tamil/1481

 

நல்ல விடயம்.

 

இதை அங்குள்ளவர்கள் செய்வார்கள் என்று காத்திருக்காமல், இதனை எழுதியவர் வயோதிபராக இருந்தால் அவர் போய் அல்லது தன் தாய், தந்தை, அப்பு களில் ஒருவரை கனடாவில் இருந்து அல்லது புலம்பெயர் நாட்டில் இருந்து அனுப்பி அடிகள் வாங்கி உண்ணாவிரதம் இருப்பார் / இருக்க வைப்பார் என்று நாம் நம்பலாம். :rolleyes:

  • தொடங்கியவர்

 கூட்டமைப்பின் சார்பில் உரிமைப் போராட்டத்திற்காக ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து எமது உரிமைப் போராட்டத்தினை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
 

 

இதில் உண்மை இருக்கின்றது.

 

யாரவது ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் 'சாகும் வரை உண்ணாவிரதம்" என அறிவித்து சில நாட்கள் இருந்தாலே அது சர்வதேச கவனத்திற்கு உதவும்.



சில மணித்தியாலங்கள் இருப்பது எந்தப்பலனையும் தரமாட்டாது.

சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இளையோருக்கு தான் துடிப்பு அதிகம் உள்ளது. அவர்கள் என்றால் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனாலும் நிழலி அண்ணாவின் கருத்தே எனதும். வெளிநாட்டில் இருந்து கொண்டு அங்குள்ளவர்களை உண்ணாவிரதம் இருக்க சொல்லி கேட்பது முறையல்ல.

 

அகூதா அண்ணா சொல்வது போல் சில நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டாலும் அதற்குள் அடிதடி வந்தால் ஆரம்பத்திலேயே அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும் சந்தர்ப்பமே உள்ளது.

 

தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டது. சர்வதேசத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது என்பது உண்மை. இனிவரும் காலங்களில் திறமையுள்ள இளையவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினுள் உள்ளேடுக்கப்பட வேண்டும். இளையவர்கள் தான் அரசாங்கத்திற்கு வளைந்து கொடுக்காமல் எதிர்த்து நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இளையோருக்கு தான் துடிப்பு அதிகம் உள்ளது. அவர்கள் என்றால் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனாலும் நிழலி அண்ணாவின் கருத்தே எனதும். வெளிநாட்டில் இருந்து கொண்டு அங்குள்ளவர்களை உண்ணாவிரதம் இருக்க சொல்லி கேட்பது முறையல்ல.

 

அகூதா அண்ணா சொல்வது போல் சில நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டாலும் அதற்குள் அடிதடி வந்தால் ஆரம்பத்திலேயே அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும் சந்தர்ப்பமே உள்ளது.

 

தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டது. சர்வதேசத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது என்பது உண்மை. இனிவரும் காலங்களில் திறமையுள்ள இளையவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினுள் உள்ளேடுக்கப்பட வேண்டும். இளையவர்கள் தான் அரசாங்கத்திற்கு வளைந்து கொடுக்காமல் எதிர்த்து நிற்பார்கள்.

 

நல்ல கருத்துக்கள். 

இராணுவத்தால் கைது செய்யப்படும் ஆபத்து உள்ள இளைஞர்கள்/யுவதிகள்  ஒரு அரசியல் கட்சியில் அங்கத்தவர்களாக  இருந்தால் அவர்கள் அப்படி கைது செயப்படும் பொழுது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை / ஜனநாயகத்தை சிங்கள அரசு நசுக்குகிறது என்று நாம் கூப்பாடு போடுவதற்கு வசதியாக இருக்கும் அல்லவா?  மேற்குலக நாடுகளில் இலங்கை ஜனநாயக நாடு இல்லை என்று இலகுவாக நிருபிக்க முடியும்.  இதில்  தமிழ் தேசிய கட்சியும் கூட்டமைப்பு / நாடு கடந்த அரசும் தனித்தனியாக ஆனால் தத்தமக்குரிய பங்குகளை செய்வார்களா?

முக்கியமாக முன்னால் இயக்க உறுப்பினர்கள் அரசியல் கட்சி அங்கத்தவர்களாக ஆனால் அவர்களை ஆயுத பாதையை கைவிட்டு அரசியல் பாதையை தெரிவு செய்தவர்களாக காட்ட முடியும். பயங்கரவாதி பயங்கரவாதி  என கூச்சலிடும் சிங்கள அரசை வெளி நாடுகளில் நாம் ஜனநாயகத்திற்கு எதிரான அரசு என்று போர்க்கொடி தூக்கி அதற்கு அந்தந்த நாடுகளின்  ஆதரவை இழக்க செய்ய முடியும்.  ஜனநாயகத்திற்கு எதிரான எந்த ஒரு நாட்டையும் மேற்குலக நாடுகள் வெளிப்படையாக ஆதரிக்க மாட்டா.

எல்லாவற்ருக்கும் மேல் மறுபடியும் கைது செய்யப்படும் போராளிகளிற்கு ஆதரவாக உள்ளூரில் எதுவும் செய்ய முடியாமல் உள்ளது.  இது ஒரு வழி சமைத்து கொடுக்கலாம்.

சம்பந்தபட்டவர்கள் கவனம் எடுப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா கேள்வி இது?4.30 மணிக்கு வீட்டை போய் சீமைச் சாரயப் போத்திலையும் அடிச்சு ஆட்டுக்குடலை ஒரு கை பார்க்கலாம் என்றால் சாகும் வரை உண்ணா விரதம் இருக்கச் சொல்லுறியள்.கலைஞர் 3மணித்தியாலம் இருந்தார் நாங்கள் 6 மணித்தியாலம் இருக்கப் போறம். அவ்வளவுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.