Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயாபிறா குடியரசின் தோற்றமும் மறைவும். (1967 -1970)..!

Featured Replies

பயாபிறா குடியரசின் தோற்றமும் மறைவும். (1967 -1970)..!

நைகீரியா நாட்டின் தென் – கிழக்கில் பயாபிறா குடியரசு (Republic of Biafra) 30 மே 1967 தொடக்கம் 15 ஜனவரி 1970 வரை செயற்பட்டது. அதற்கு பயாபிறா என்ற பெயர் ஏற்பட அந்த நாட்டின் தென் புறத்தில் அத்திலாந்திக் மாகடல் ஓரமாக இருக்கும் பயாபிறா விரிகுடா (Bight of Biafra)காரணமாகிறது.

நைகீரியா நாட்டில் இருந்து பிரிந்து சென்ற இக்போ (Igbo) இன மக்கள் தனி நாட்டுப் பிரகடனத்தை 30மே 1967ல் அறிவித்தனர். அன்று உருப்பெற்ற குடியரசுக்கு எதிரான போரை நைகீரியா அரசு தொடங்கியது. நைகீpரியா உள்நாட்டுப் போர் (Nigerian Civil War) என்றும் நைகீரியன் பயாபிறா போர்(Nigerian Biafran War) என்றும் அழைக்கப்படும் போர் யூலை 1967ல் தொடங்கி 15 ஜனவரி 1970ல் முடிவுற்றது. போரில் தோல்வியுற்ற பயாபிறா மறைந்து விட்டது.

இந்தப் போருக்கான அடிப்படைக் காரணம் ஆசிய ஆபிரிக்கக் கண்டங்களில் நுளைந்த ஐரோப்பியக் காலனித்துவ நாடுகள் தமது நிர்வாக மற்றும் பொருளாதார வசதிக்காகப் புதிய நாடுகளைத் தோற்று வித்ததால் ஏற்பட்டது. காலனித்துவ நாடுகள் காலம் காலமாக நிலவிய இன, மத, பண்பாட்டு வேறுபாடுகளை மதியாமல் புதிய நாடுகளை உருவாக்கின. இது இனங்களுக்கு இடையிலான உள் நாட்டு போருக்கு வழிவகுத்தது.

bajabra%20tk%2001.jpg

சென்ற நூற்றாண்டு முற்பகுதியில் மேற்கு ஆபிரிக்காவில் பிரிட்டிஷ் அரசு நூற்றுக் கணக்கான இனங்களின் வாழ்விடங்களைத் தமது ஆயுத பலத்தால் ஒன்றிணைத்து நைகீரியா என்ற புதிய நாட்டை உருவாக்கியது. இந்த இனங்களில் மூன்று மிகவும் முக்கியமானவை.

புதிய நாட்டின் தென் கிழக்கில் வாழ்ந்த மக்களில் 60 தொடக்கம் 70 விழுக்காட்டினரான இக்போ (Igbo) இனத்தவர்கள். வடக்கில் வாழ்ந்தவர்களில் 65 விழுக்காட்டினரான ஹவுசா புலானி (Hausa Fulani) இனத்தவர்கள். தென் மேற்கில் வாழ்ந்த மக்களில் 75 விழுக்காட்டினரான யொறுபா (Yoruba)இனத்தவர்கள். இவை தான் அந்த மூவினங்கள்.

பிரித்தாளும் தந்திரத்தை நடைமுறைப் படுத்திய பிரிட்டிசார் இஸ்லாம் மதம் நிலவிய வடக்கில் சுல்தான் (Sultan) எனும் மன்னர் ஆட்சிக்கு அனுமதி அளித்தனர். கிறிஸ்தவ மத மாற்ற நடவடிக்கைகளை இந்தப் பகுதியில் முற்றாகத் தடை செய்தனர். வடக்கு வாழ் ஹவுசா புலானி இனத்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு கட்டுப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக இயங்கப் பிரிட்டிஷ் ஆட்சி வழிவகுத்தது.

தென் – மேற்கு யொறுபா இனத்தவர்களும் கிட்டத்தட்ட இதே நிலையில் இருந்தனர். அங்கும் மன்னர் ஆட்சி நிலவியது. தென் கிழக்கு இக்போ இனத்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட சமுதாய ஒழுங்குடன் வாழ்ந்தனர். அவர்களிடம் தனி மனிதர் குரலுக்கு மதிப்பளிக்கும் பாரம்பரியம் நிலவியது. அவர்கள் சுய முன்னேற்றத்தில் நாட்டமுள்ளவர்களாகவும் வர்த்தக முயற்;சியில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருந்தனர்.

இக்போ இனத்தவர்கள் மத்தியில் கிறிஸ்தவ மிசனரிகள் வரவேற்கப்பட்டனர். ஐரோப்பிய கலாசாரம் அவர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. வசதி படைத்தோர் தமது பிள்ளைகளை வெளி நாடுகளுக்கு கல்வி கற்க அனுப்பினர். இக்போ இனத்தவர்கள் மிகவும் உயர்ந்த அரசியல் உணர்வு உள்ளவர்களாக இருந்தனர்.

யொறுபா இனத்தவர்கள் தமது பழைய வாழ்வு முறையை உதறிவிட்டு மேற்கு நாட்டு பண்பாடுகளை தழுவத் தொடங்கினர். இக்போ இனத்தவர்களைவிட இந்த மட்டில் அவர்கள் முன்னோடிகள். ஆபிரிக்காவின் முதலாவது அரச நிர்வாக அதிகாரிகள், மேற்கு முறை மருத்துவர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் யொறுபா இனத்தைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் நெருக்கடி காரணமாக இக்போ இனத்தவர்கள் தென் -கிழக்கில் வாழ்வது கடினமாகியது. அவர்களிற் பலர் பாரம்பரிய வாழ் விடங்களை விட்டு விலகி நைகீரியாவின் பல பாகங்களில் தொழில் தேடி இடம் பெயர்ந்தனர். இதுகும் இனங்களுக்கிடையில் புதிய முரண்பாடுகளை உருவாக்கியது.

நைகீரியாவைப் பலமற்ற, இனமுரண்பாடுள்ள. மூன்று பிராந்தியங்களாக ஆட்சி செய்யப்பட்ட நாடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் திட்மிட்டு நடத்தினர். நைகீரியாவில் பெருமளவு எண்ணை வளம் இருந்தது. இன்றும் இருக்கிறது. எண்ணை வளத்தைச் சூறையாடுவது தான் பிரிட்டிஷ் ஆட்சியின் பிரதான இலக்காக இருந்தது.

பிரிட்டிஷ் பெற்ரோலியம் (British Petroleum) என்ற எண்ணை நிறுவனத்திற்கு எண்ணையை தோண்டி எடுத்து ஏற்றுமதி செய்வதற்கு சலுகைகள் வழங்கப்பட்டன. அதே சமயத்தில் பின்தங்கிய வடக்கில் வாழ்ந்த ஹவுசா புலானி மக்களுக்கு ஆதரவு அளிப்பதைத் தமது நிர்வாகக் கொள்கையாகக் கொண்டிருந்தனர்.

வளர்ச்சி அடைந்து வரும் யொறுபா, இக்போ இனங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்தற்காக இந்தக் கொள்கையை வகுத்தனர். நைகீரியாவை அவர்கள் இந்த அடிப்படையில் பிரித்து நிர்வாகம் செய்தனர். வடக்கில் வாழ்ந்த மக்கள் தொகை யொறுபா, இக்போ ஆகியோரின் கூட்டுத் தொகையிலும் பார்க்கக் கூடுதலாக இருக்கும்படி பிரிட்டிஷ் ஆட்சியர்கள் பார்த்துக் கொண்டனர்.

நாட்டில் சுதந்திரக் கோரிக்கை தோற்றுவதைத் தடுப்பதற்காக இந்தத் தந்திரரோபாயம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்த பலன் தரவில்லை.

1940, 1950களில் பிரிட்டிசாரை வெளியேற்றுவதற்கு நடந்த போராட்டங்களுக்கு யொறுபா, இக்போ தலைவர்கள் தலைமை தாங்கினார்கள். ஆனால் வடக்கு வாழ் ஹவுசா புலானிகள் பிரிட்டிசார் வெளியேறக் கூடாது என்று போராடினர்.

வடக்கின் மேலாதிக்கத்தை நீக்குவதற்காக யொறுபா, இக்போத் தலைவர்கள் நைகீரியா இன அடிப்படையில் சிறிய நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்றும் போராடினார்கள். ஆனால் நைகீரியா பிளவு படக் கூடாது பிரிட்டிஷ் ஆட்சி தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வடக்கு உறுதியாக நின்றது.

எதுவிதப்பட்டும் சுதந்திரம் கிடைத்தால் போதும் என்ற நிலையில் யொறுபா, இக்போ இனத் தலைவர்கள் வடக்கின் ஹவுசா புலானி இனக் கோரிக்கைகளுக்கு ஒத்துக் கொண்டனர். ஒரு மித்த குரலில் சுதந்திரக் கோரிக்கை எழுந்ததைத் தட்டிக் கழிக்க முடியாமல் பிரிட்டிஷ் அரசு நைகீரியாவுக்கு 1960ம் ஆண்டு பூரண சுதந்திரம் வழங்கியது.

ஆனால் நாட்டில் அதன் மறைமுக ஆதிக்கம் பிரிட்டிஷ் பெற்ரோலியம் நிறுவனம் ஊடாக நிலவியது. பல சூழ்ச்சித் திட்டங்களை திரை மறைவில் பிரிட்டிஷ் அரசு நடைமுறைப் படுத்தியது. நைகீரியா சுதந்திரம் பெற்றபோது அதன் மக்கள் தொகை 60 மில்லியன். இனக் குழுக்களின் எண்ணிக்கை 300. அமைதியின்மைக்கு இவை போதுமானவையாக இருந்தன.

நைகீரிய உள்நாட்டுப் போரின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உண்டு. பத்திரிகையாளர் அலெக்ஸ் மிற்ச்செல் (Alex Mitchell) தனது வாழ்க்கை நூலில் “உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் பிரிட்டிஷ், டச்சு, பிரெஞ்சு, இத்தாலியன் எண்ணை நிறுவனங்கள் நைகீரியாவின் எண்ணையைப் பங்கு போட நடத்திய போட்டி தான் முக்கிய காரணம்” என்கிறார்.

தீப்பற்றக் காத்திருந்த நைகீரியாவில் முதலாவது இராணுவ அதிரடிப் புரட்சி 15 ஜனவரி 1966ல் நடைபெற்றது. மேஜர் கடுனா நிசியோகுவு (Maj. Kaduna Nzeogwu) இடைநிலை இராணுவ அதிகாரிகளோடு இணைந்து அதை நடத்தினார். ஹவுசா புலானி இன வட பகுதித் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதிலிருந்து இக்போ இன இராணுவ அதிகாரிகள் தான் இந்த புரட்சிக்குத் திட்டமிட்டனர் என்ற சந்தேகம் எழுந்தது. புரட்சி தொடர்ந்த போது இக்போ இனத்தவரான ஜெனரல் ஜோன்சன் அகுஇயி – இரொன்சி (Gen Johnson Aguiyi –Ironsi)  நைகீரியா ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இவர் நைகீரியா ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இது இக்போ இனத்தவர்களின் புரட்சி என்ற சந்தேகம் உண்மையாகியது. நைகீரிய இராணுவத்தில் அந்தக் காலக் கட்டமைப்பு பின்வருமாறு. தலைமைப் பதவிகள் இக்போக்களிடமும், இடைநிலைப் பதவி, அடிமட்டம் என்பன வடபகுதி இனத்திடமும் பிற இனங்களிடமும் இருந்தன.

ஜெனரல் ஜோன்சன் அகுஇயி – இரொன்சியின் இராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர் -புரட்சி 29 யூலை 1966ல் நடைபெற்றது. இதன் பயனாய் ஹவுசா – புலானி இனத்தைச் சேராதவரான பிறிதொரு வடபகுதி இனத்தவரும் கிறிஸ்தவருமான லெப் கேணல் யக்குபு கோவன் (Yakubu Gowan) ஆட்சியைக் கைப்பற்றினார்.

வட பகுதிகளில் வாழ்ந்த இக்போ இனப் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் யக்குபு கோவன் ஆட்சியைப் பிடித்ததும் படுகொலை செய்யப்பட்டனர். இக்போ இனத்தவர் கொல்லப்படும் போது அதை நிறுத்த இராணுவம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

யூலை தொடக்கம் செப்ரம்பர் 1966 வரை நடந்த இக்போ இனப் படுகொலைகள் இந்த இனத்தவரின் தென் கிழக்கு நைகீரியாவில் பெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது. இப்பகுதி இராணுவ ஆளுநரான கேணல் ஒடுமேகுவேவு ஒயுக்வு(Col. Odumegwu Ojukwu) தனது தலைமையில் பயாபிறா என்ற தனி நாட்டை 30 மே 1967ம் நாள் பிரகடனம் செய்தார்.

பயாபிறாவைக் கைப்பற்ற நைகீரிய அரச படைகள் நடத்தவிருக்கும் தாக்குதல்களைச் சமாளிக்க குழந்தைப் பருவத்தில் இருந்த பயாபிறாவிடம் போதுமான ஆயுதங்கள் இருக்கவில்லை. வெல்ல முடியும் என்ற மனவுறுதி மாத்திரம் இருந்தது.

கிறிஸ்வதர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பயாபிறாவுக்கு ஐரோப்பாவில் பரவலான ஆதரவு இருந்தாலும் ஒரு நாடாகிலும் புதிய நாட்டை அங்கீகரிக்க முன்வரவில்லை. நான்கு ஆபிரிக்க நாடுகளான தான்சானியா, கபொன், கோட்டே டி ஐவோயிர் (Cote D’ Ivoire), சம்பியா, என்பனவும் ஒரு கரீபியன் நாடு ஹெயிற்றியும் பயாபிறாவை உத்தியோகப+ர்வமாக அங்கீரித்தன.

ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் ஆகியன நைகீரிய அரசிற்கு இராணுவ உதவிகள் வழங்கின. அமெரிக்கா நடுநிலை காப்பதாகச் சொல்லிக் கொண்டு நைகீரிய அரசிற்கு உதவி வழங்கியது.

உத்தியோக பூர்வமாக அங்கீகரிக்காவிட்டாலும் இஸ்ரேயில், போர்த்துக்கல், தெற்கு ஆபிரிக்கா, வத்திக்கான் ஆகியன பல்வேறு உதவிகளை பயாபிறாவுக்கு வழங்கின. தொண்டு  அமைப்புக்களான கிறிஸ்தவ தேவாலய அமைப்புக்கள், அனைத்துலக கரித்தாஸ், அமெரிக்க கத்தோலிக்க நிவாரண சேவை என்பனவும் பயாபிறாவுக்கு உதவின.

இரு பகுதிக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பல தடைவ பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஒரு கூட்டாச்சியை ஏற்படுத்தும் திட்டத்தை பயாபிறாத் தலைவர் முன்மொழிந்தார். அது நிறைவேறவில்லை. நைகீரிய இராணுவத் தலைவர் யக்குபு கோவன் தனது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டார்.

பயாபிறாத் தரைப் பரப்பைக் கைப்பற்ற நைகீரிய அரசு ஒரு “பொலிஸ் நடவடிக்கையை” (Police Action) ஆரம்பித்தது. அரச படைகளின் முன்னேற்றம் ஆரம்பத்தில் வேகமாக இருந்தது. விரைவில் அது தேக்க நிலை அடைந்தது. பயாபிறாப் படைகள் நடத்திய பதில் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் அரச படைகள் திணறின.

ஆனால் 19மே 1968ல் அரச படைகள் பயாபிறாவின் ஹார் கோர்ட் (Harcourt)துறைமுகத்தை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திக் கைப்பற்றின. இந்தப் போரில் மக்களைப் பட்டினி போட்டுப் படுகொலை செய்த ஜெனோசைற் குற்றம் அரச படைகள் மீது சுமத்தப்படுகிறது.

பயாபிறாவின் நட்பு நாடுகள் பட்டினிச் சாவைத் தணிப்பதற்காக விமானங்கள் மூலம் உணவு வழங்கின. விமானக் குண்டு வீச்சு மூலம் பொது மக்களைக் கொன்று குவிக்கும் நடைமுறையை நைகீரிய அரசு தீவிரப் படுத்தியது. சோவியத் ஒன்றியம் வழங்கிய மிக்17 ரக விமானங்களை ஒட்டுவதற்குக் கூலிக்கு அமர்த்திய எகிப்து ஒட்டிகள் பொது மக்கள் படுகொலையில் சாதனை படைத்தனர்.

பயாபிறாவும் வெளிநாட்டு விமான ஒட்டிகளைக் கூலிக்கு அமர்த்தியது. இவர்கள் அரச படைகள் மீது நடத்திய தாக்குதல்கள் மூலம் 1969ல் பயாபிறா படைகள் பெரும் வெற்றியைப் பெற்றன. ஆனால் இந்த வெற்றி நீடிக்கவில்லை.

ஐக்கிய இராச்சியம் வழங்கிய கூடுதல் இராணுவ உதவிகளுடன் அரச படைகள் 07 ஜனவரி 1970ல் இறுதித் தாக்குதல் நடத்தின. பயாபிறா படைகள் படுதோல்வியைத் தழுவின. பயாபிறாத் தலைவர் கேணல் ஒடுமேகுவேவு ஓயுக்வு 13 ஜனவரி 1970ம் நாள் விமானம் மூலம் வெளி நாட்டிற்குத் தப்பி ஓடினார்.

அவருக்கு இரண்டாம் நிலையில் இருந்த பிலிப் எபியொங் (Phillip Effiong) அரச படைகளின் முதன்மைத் தளபதி யக்குபு கோவன் முன் நிலையில் சரணாகதி ஆவணத்தில் ஒப்பமிட்டார். அத்தோடு  இரண்டரை வருடம் நீடித்த பயாபிறா தனிநாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் மூன்று மில்லியன் பொது மக்கள் கொல்லப்பட்டனர். மதிப்பிட முடியாத சொத்தழிவு ஏற்பட்டது. இக்போ மக்களுக்குச் சொந்தமான வீடுகள், நிலங்கள், வர்த்தக நிறுவனங்களைப் பிற இனத்தவர்கள் கையகப் படுத்தினர். பெரும் எண்ணிக்கையில் இக்போ மக்கள் பிற நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர்.

இக்போ செல்வந்தர்கள் வங்கிகளில் வைப்பிட்ட பணத்தை நைகீரிய அரசு அரசுடமை ஆக்கியுள்ளது. இன ஒற்றுமையை ஏற்படுத்தப் போவதாக நைகீரிய அரசு கூறிக்கொண்டாலும் இக்போ மக்கள் வாழும் பகுதிகளில் புனர் நிர்மானப் பணிகள் ஒன்றும் மேற்கொள்ளப் படவில்லை.

பயாபிறாவின் தலைவர் கேணல் ஒடுமேகுவேவு ஒயுக்வு ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் படித்த பட்டதாரி. அவர் பயாபிறாத் தூதராக நியமித்த சினுவா அச்சேபே (Chinua Achebe) ஆபிரிக்காவின் தலைசிறந்த ஆங்கில மொழி எழுத்தாளர். அவர் 1958ல் எழுதிய எல்லாம் பிரிந்து வீழ்கின்றன (Things Fall Apart) என்ற நூலின் 12 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி விட்டன. 40 ஆண்டுகள் சென்றாலும் பயாபிறா என்ற இலட்சியம் உயிரோடு இருக்கிறது. நைகீரியா உடைவதற்குக் காத்திருக்கும் நாடு. பயாபிறாவைக் கூர்ந்து படியுங்கள், பயன் கிடைக்கும்.

 

www.eelampresse.com

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், யாழ் அன்பு!

 

Biafra இனத்தவருக்கும், தமிழருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன,

 

போராட்டகாலத்தில் உலகவரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத அவலம் இங்கு நிகழ்த்தப்பட்டது. இந்தப் போராட்டகாலத்தில், பிறந்து தப்பிப் பிழைத்த ஒரு குழந்தை, மனிதனாகிய பின்பு, அவருடன் வேலை செய்யும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

 

இறந்த பிணங்களைக் கழுகுகள், கொத்தித் தின்னும் போது, தாயையும் தந்தையையும் இழந்திருந்த இந்தக் , குழந்தை மட்டும், வெளிகளில் வளர்ந்திருந்த யானைப் புற்களுக்கிடையில், மறைந்து மறைந்து, வேர்களை மட்டுமே, உண்டு போர் முடியும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்ததால்,உயிர் பிழைத்தது.

மற்றைய நைஜீரிவர்களை விட உயரம் குறைந்த இவர்கள், கடுமையான உழைப்பாளிகள்.

 

இந்த முற்றுகையை, நடத்தி முடித்தவர், ஆபிரிக்கக் காந்தி, எனப் பலராலும் அழைக்கப் பட்ட, அவலோவா என்னும் ஒரு, அகிம்சாவாதி என்பது தான் ஆச்சரியம்!

ஈழ மண்ணை காப்போம்!

 

இணைப்புக்கு நன்றிகள், யாழ் அன்பு!

மேலதிக தகவல்களுக்கு நன்றிகள், புங்கையூரான்.

  • 3 months later...

பயாபிறாவின் தலைவர் கேணல் ஒடுமேகுவேவு ஒயுக்வு ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் படித்த பட்டதாரி. அவர் பயாபிறாத் தூதராக நியமித்த சினுவா அச்சேபே (Chinua Achebe) ஆபிரிக்காவின் தலைசிறந்த ஆங்கில மொழி எழுத்தாளர். அவர் 1958ல் எழுதிய எல்லாம் பிரிந்து வீழ்கின்றன (Things Fall Apart) என்ற நூலின் 12 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி விட்டன. 40 ஆண்டுகள் சென்றாலும் பயாபிறா என்ற இலட்சியம் உயிரோடு இருக்கிறது. நைகீரியா உடைவதற்குக் காத்திருக்கும் நாடு. பயாபிறாவைக் கூர்ந்து படியுங்கள், பயன் கிடைக்கும்.

 

www.eelampresse.com

 

சினுவா அச்சேபே இன்று இறந்து விட்டார். ஆபிரிக்க நவீன இலக்கியத்தின் பிதா மகனாக போற்றப்படுகின்றரின் இறந்து விட்டார்.

 

இவரின் சிதைவுகள் நாவலை (Things Fall Apart எனும் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு) வாசித்துள்ளேன். வாசிப்பில் அலாதி பிரியம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒரு முறை வாசிக்கவும். 

 

செய்தி:

 

http://www.bbc.co.uk/news/world-africa-21898664

 

சினுவா அச்சேபே:

 

http://www.tamilmagan.in/2009/05/blog-post_15.html

 

சிதைவுகள்:

http://books.google.ca/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html?id=IW_9OwAACAAJ&redir_esc=y

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.