Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவை சமாளிக்கவே கூட்டமைப்புடன் பேச்சு

Featured Replies

தமிழ் மக்களின் சாதாரண பிரச்சினைகள் கூட இன்னும் அரசினால் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் அரசுடன் தொடர்ந்து பேசி என்னபயன் கிடைக்கப் போகிறது?

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் ஐ.நாவைச் சமாளிப்பதற் காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சை ஆரம்பிக்க அவசரப்படுகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

கூட்டமைப்புடன் பேச்சை ஆரம்பித்துள்ளோம் என்று கூறி ஜெனிவாவில் தப்பிக்க வழிதேடுகிறது இலங்கை அரசு. இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி.

யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் ஐ.நா. சபையையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரையும் சமாளிப்பதற்காகவே கூட்ட மைப்புடனான பேச்சை ஆரம்பிப்பதற்கு அவசரப்படுகிறது இலங்கை அரசு.

ஜெனிவாவில் தனக்கு ஏற்படவுள்ள அழுத்தத்தை குறைத்துக் கொள்ள எண்ணுகிறது அரசு. அதற்காகத்தான் கூட்டமைப்புடனான இந்தப் பேச்சு நாடகம். அவசர அவசரமாக ஜனாதிபதி எம்மை பேச்சுக்கு அழைப்பதன் முக்கிய நோக்கம் இதுதான்.

வடக்கு, கிழக்கில் தற்போது நிலவும் இராணுவ ஆட்சி நீக்கப்பட்டு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

வலி.வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களில் 28 ஆயிரம் பேர்வரை தற்காலிக முகாம்களிலேயே வசித்து வருகிறார்கள். அவர்களின் சொந்த இடங்கள் இராணுவத்தினர் வசம் உள்ளன. அதனை அவர்கள் விரைவில் விடுக்க வேண்டும்.

அங்கு மீளக்குடியமர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமைக்கு இராணுவத்தினரே காரணம். ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு இடமுண்டு. அதனை அடக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

 

தமிழ் மக்களின் சாதாரண பிரச்சினைகள் கூட இன்னும் அரசினால் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் அரசுடன் தொடர்ந்து பேசி என்னபலன் கிடைக்கப் போகிறது. என்றார் விநாயகமூர்த்தி.

 

http://onlineuthayan.com/News_More.php?id=146511700416649192

  • தொடங்கியவர்

ஐ.நா. உள்ளக அறிக்கையை உதாசீனம் செய்தது சிங்களம்
Government Snubs UN announcement
 
The government has snubbed the latest announcement by the United Nations (UN) that a working group will be appointed to consider the recommendations set out in the Internal Review Panel report on UN actions in Sri Lanka.


Secretary to the Ministry of Foreign Affairs Karunatilaka Amunugama told The Sunday Leader that the UN had yet to contact the government following UN Secretary General Ban Ki Moon’s statement on action to be taken following the release of the Review Panel Report.
 

UN spokesman Martin Nesirky said last week that UN Secretary-General Ban ki-moon had asked the UN Deputy Secretary-General to convene the working group and report to him.
 

The working group is expected to complete its deliberations sometime in the second quarter of next year, with options for action and implementation.

 

http://www.thesundayleader.lk/2012/12/16/government-snubs-un-announcement/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.