Jump to content

ரிஷான நபீக்கின் மரண தண்டனை குழந்தையின் பெற்றோர் மனோநிலையில் மாற்றம் இல்லை


Recommended Posts

குழந்தை ஒன்று உயிரிழந்தமை சம்பந்தமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த ரிஷான நபீக், இறந்த குழந்தையின் குடும்பத்தினரின் தீர்மானத்திற்கு அமைய, அவர் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படலாம் என சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து திரும்பிய இலங்கை சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

 

ரிஷானவை விடுதலை செய்யும் முனைப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், அங்கு சென்ற சட்டமா அதிபர், அந்த நாட்டின் சட்டமா அதிபர், ஆளுநர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த விஜயத்தின் போது, இறந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாகவும் இந்த விஷயத்தில் வெளியார் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை எனவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

 

தனது விஜயத்தின் போது, ரிஷான நபிக்கை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள சட்டமா அதிபர், மனித உரிமை அமைப்புகளுக்கு தெரியாமல் அவர் தூக்கிலிடப்படும் சந்தர்ப்பம் இருப்பதாக தான் உணர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அடுத்த சில தினங்கள் மிகவும் தீர்மானகரமானது என கூறியுள்ள சட்டமா அதிபர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய சவூதி மன்னர் இந்த பிரச்சினையில் தனிப்பட்ட ரீதியில் தலையிட்ட போதிலும், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தமது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதால், மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயமாக இருக்கும் தான் உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 
Link to comment
Share on other sites

இவரது (ரிஷானா) வழக்குக்கும் நான் யாழில் இணைந்ததுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காலம் சென்ற வசம்பு அவர்கள் இவரது மரண தண்டனையை எதிர்த்து எழுதியதைக் கண்ட பின் அதுக்கு எதிராக இவர் மீதான தண்டனையை நியாயப்படுத்தி எழுதியது தான் நான் யாழில் கலந்து கொண்ட முதலாவது விவாதம் என்று நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

இவரது (ரிஷானா) வழக்குக்கும் நான் யாழில் இணைந்ததுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காலம் சென்ற வசம்பு அவர்கள் இவரது மரண தண்டனையை எதிர்த்து எழுதியதைக் கண்ட பின் அதுக்கு எதிராக இவர் மீதான தண்டனையை நியாயப்படுத்தி எழுதியது தான் நான் யாழில் கலந்து கொண்ட முதலாவது விவாதம் என்று நினைக்கின்றேன்.

 

உண்மையில்  அந்த குழந்தையின் இறப்புக்கு  இந்த பெண்தான் காரணமா?

Link to comment
Share on other sites

உண்மையில்  அந்த குழந்தையின் இறப்புக்கு  இந்த பெண்தான் காரணமா?

 

சசி...கீழே உள்ள திரியில் இது பற்றி என் கருத்தை சில வருடங்களின் முன்பே வைத்து உள்ளேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=25942&page=13&p=392062#entry392062

 

பார்க்கவும்.

Link to comment
Share on other sites

ம்ம் நன்றி.

 

இப்பவும் நான் அந்த பெண்ணின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு அதில் மாற்றமில்லை.

Link to comment
Share on other sites

2007இல் இந்தத் திரியில் இலங்கை முஸ்லீம்கள் பற்றிக் எழுதியிருந்த கருத்தையே 2012இலும் எழுதியிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.