Jump to content

விண்வெளி நோக்கியும் அமெரிக்க போர் வடிவங்கள் விரியப் போகின்றனவா..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சோவியத் யூனியனுடனான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத்தும் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளிப் பயணங்களைச் செய்தன. யார் விண்வெளியில் அதிக காலம் தங்குவது.. புதிய கிரகங்களில் ஆய்வுகளைச் செய்வது.. விண்கலங்களை, மனிதனை வேற்றுக் கிரகங்களுக்கு அனுப்பி வைப்பது மற்றும் விண்வெளியின் ஆழப்பகுதிக்குப் போவது என்ற போட்டிகள் கூட இருந்தன.

 

இந்தப் போட்டிக் காலத்தில்.. சோவியத் யூனியன் அமெரிக்காவை விட கொஞ்சம் முன்னோடியாகி.. விண்வெளிக்கு முதல் விண்கலத்தை அனுப்பியது  மட்டுமன்றி.. புவி உயிரினம்... மற்றும் மனிதன் என்று பல புவி மேற்ப் பொருட்களை உயிரிகளை விண்ணிற்கு அனுப்பி இருந்ததுடன்.. மிர் என்ற விண் ஆய்வு கூடத்தைக் கட்டி விண்வெளியில் இருந்து கொண்டே ஆய்வுகளையும் செய்து வந்தது.

 

அன்றைய காலத்தில் அமெரிக்கா இவற்றில் கொஞ்சம் பிந்தங்கி இருந்தாலும்.. சோவியத்துக்குப் போட்டியாக.. தானும் விண்வெளியில் சிறந்தவன் என்று காட்ட நிலாவிற்கு  மனிதப் பயணங்களை மேற்கொண்டது. அதன் பின்னர் அமெரிக்கா விண்ணோட உற்பத்தியில் கவனம் செலுத்தி முன்னேறிக் கொண்டது.

 

ஆனால் 1990 களில் சோவியத் யூனியன் ரஷ்சியாவாக சிதைந்து போன போது... ரஷ்சியாவின் பொருண்மிய நெருக்கடி அதன் அமெரிக்காவுடனான விண்வெளிப்போட்டியில் அதனைப் பிந்தங்கச் செய்தது. இதனால் சோவியத்தோடு தேவை ஏற்பட்டால் விண் போர் செய்ய அமெரிக்க போட்டிருந்த நட்சத்திரப் போர்த்திட்டம் (star wars) கைவிடப்படும் நிலைக்குப் போனது. இருந்தாலும் ரஷ்சியாவின் விண்வெளி ஆதிக்கம் என்பது சீரானதாகவே இருந்து வருகிறது. அமெரிக்கா போல் விண்வெளியிலும் தானே மேலாதிக்க சக்தி என்ற போட்டியில்  ரஷ்சியா இன்று வெளிப்படையாக இல்லை. அதில் இருந்தும் விலகி விண்வெளியை வைத்து எப்படி காசு பார்ப்பது என்பதிலே தான் ரஷ்சியாவின் கவனம் திரும்பி உள்ளது.

 

ஆனால் உலகில் போல் விண்வெளியிலும் தானே தனிப்பெரும் மேலாதிக்க சக்தியாக விளங்க வேண்டும்.. என்ற அமெரிக்காவுக்கோ சோதனை என்பது தொடர்ச்சியானது. அந்த வகையில் சீனாவின் அதீத பொருண்மிய வளர்ச்சி என்பது சீனா விண்வெளியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அதனை உந்தித்தள்ளியது. அதனடிப்படையில் சீனா கடந்த சில தசாப்தங்களில் விண்வெளி ஆராய்ச்சியிலும் பயணங்களிலும் பல வெற்றிகளை குறுகிய காலத்தில் ஈட்டிக் கொண்டுள்ளது. தொடர்ந்தும் பல வெற்றிகளை நோக்கி அது பயணிக்கும் நிலையில் உள்ளது. சீனாவுக்குப் போட்டியாக விண்வெளியிலும் களமிறங்கிய இந்தியாவால் சீனாவோடு போட்டி போட முடியவில்லை.

 

இந்த நிலையில்.. அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளை நோக்கி சீன விண்வெளித் தொழில்நுட்பம் விரியலடைய ஆரம்பித்துள்ளது. அண்மையில் ஈரானும்.. வடகொரியாவும் தாங்களாகவே விண்வெளியில் தமது செய்மதிகளை ஏவி இருந்தனர். இவர்களின் தொழில்நுட்பத்தின் பின்னால் சீனாவின் பங்கு இருந்துள்ளது என்பது வெள்ளிடை மலை ஆகும்.

 

இந்த இக்கட்டான நிலையில்.. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடும் நிதி நெருக்கடிக்குள் வீழ்ந்து கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருண்மிய நெருக்கடி நாசாவையும் அதன் எதிர்காலத்திட்டங்களையும் பாதிக்கச் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

 

Military%20Space%20Plane_Pata.jpg

 

சும்மா அமைதியாகக் கிடந்த விண்வெளியில் ஒரு மேலாதிக்க போட்டிக்கான போர் பதட்டத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி விண்வெளிக் குப்பைகளால் விண்வெளியையே மாசாக்கி விட்டுள்ள அமெரிக்க - சோவியத் விண்வெளி மேலாதிக்கப் போட்டி.. அமெரிக்காவிற்கோ அன்று ஆரம்பித்த அந்தப் போட்டியைக் கைவிட்டு இறங்கிவர முடியாத நிலையையும் தோற்றுவித்துள்ளது .

 

அமெரிக்கா விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன.. விண்வெளியில் அதன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் இன்று அதற்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்.. அண்மையில் அமெரிக்கா நாசா நிறுவனம்.. விண்வெளிப் பயணங்கள் தொடர்பில் அமெரிக்க தனியார் துறையை சார ஆரம்பித்துள்ளது. அதனால் அமெரிக்க விண்வெளி ஆய்வுகளின் தொழில்நுட்பங்களின் ரகசியத்தன்மை என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் அமெரிக்க இராணுவம் திடீர் என்று நாசாவின் உதவியுடன் ஆளில்லாத விண்வெளி விமானம் (space plane) ஒன்றை ஏவிப் பரிசோதனை செய்துள்ளது. இதனை அமெரிக்கா ரகசியமாகவே செய்து முடித்துள்ளது.

 

அமெரிக்க தனியார் துறை ரஷ்சியாவின் "விண்வெளியை வைத்து காசு பார்க்கும்" பொறிமுறைக்கு போட்டியாக இருக்க.. அமெரிக்க இராணுவம் நாசாவோடு கைகோர்த்து விண்வெளியில் சீனாவை கணக்குப் பண்ண ஆரம்பித்துள்ளதன் அறிகுறியாகவே அமெரிக்காவின் தற்போதைய விண்வெளித் திட்ட நகர்வுகள் கட்டியம் கூறி நிற்கின்றன.

 

அமெரிக்காவின் இந்த விண்வெளி விமானம்.. பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 800 கிலோமீற்றர்கள் வரை விண்வெளியில் ஊடுருவி பயணிக்க மற்றும் செயற்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செய்மதிகளுடனான எதிர்காலப் போர் உக்திகளில் இந்த விமானம் பங்கெடுக்கப் போகிறதா அல்லது சோவியத்துடனான நட்சத்திரப் போர்த்திட்டம் சீனாவுக்கு எதிராக மீள் எழுச்சி பெற்றுள்ளதன் அடையாளமாக இப்பரிசோதனை அமைந்துள்ளதா என்ற கேள்விக்குறிகள் எழுந்துள்ள இன்றைய நிலையில்.. எதிர்காலத்தில் சீனாவும் அமெரிக்காவும் விண்வெளியில் விண்வெளித் தொழில்நுட்பங்களோடு மோதிக்கொள்ளும் நிலை விரைந்து வளர்ந்து வருவதையே இது இனங்காட்டி நிற்கிறது. இதனால் இயற்கையாக உள்ள விண்பொருட்களுக்கு மேலதிகமாக மனிதனின் விண்ணாதிக்கப் போட்டியாலும் பூமி ஆபத்துக்களைச் சந்திக்கும் நிலை பெருக ஆரம்பித்துள்ளது.

 

தொகுப்பு நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி ஆக்கத்துடன் தொடர்புபட்ட செய்தி..

 

_64693253_64693252.jpg

 

X-37B US military space plane launches for third flight
 
A famously mysterious military space plane operated by the US Air Force has launched from Florida, the third flight in a secretive test programme.

The reusable, unmanned craft is designed to operate in Earth orbit for extended periods. Its prior missions in 2010 and 2011 lasted 224 and 469 days.

The US government kept the timing of Tuesday's launch secret and has not said how long the mission will last.

That has prompted fevered speculation as to the craft's ultimate purpose.

 

_57697669_sef10-03278-004_x-37b.jpg
    
X-37B - American military spaceplane

    Mission: Described as a re-usable testbed for new sensors and other space technologies
    Length: 9m Wingspan: 4.5m Height: 3m Mass: 5,000kg
    Origins: Started as a Nasa project in 1999 before being handed to the military in 2006
    Operating altitude: 180 - 800 km
    Cost: The budget line for the X-37B programme continues to be classified information

Tuesday's launch had been pushed back from October, delayed by two satellite launches. Patrick Air Force Base in Florida gave notice of a hazard from a launch in a window between 15:45 and 22:15 GMT (10:45 to 17:15 local time).

The X-37B craft, designed by aerospace giant Boeing, shares more than just a passing similarity to the now-retired space shuttle.

It is just a quarter the size of the shuttle, but is launched on a rocket - the Atlas V. It is coated in thermal tiles to withstand the heat of re-entry, after which it lands on its own gear autonomously.

The stated mission of the craft, according to the US Air Force, is an "experimental test program to demonstrate technologies for a reliable, reusable, unmanned space test platform".

But the latest mission in particular sparked speculation that the craft was spying on the Chinese space lab Tiangong-1 - an idea that has since been largely discredited.

When it returned from its second mission in June, programme manager Lt Col Tom McIntyre said: "We knew from post-flight assessments from the first mission that OTV-1 could have stayed in orbit longer. So one of the goals of this mission was to see how much farther we could push the on-orbit duration."

But any official mission objectives seem set once again to remain secret.

 

http://www.bbc.co.uk/news/science-environment-20680253

 

http://kuruvikal.blogspot.co.uk/

Link to comment
Share on other sites

சீனா அமெரிக்கா முரண்பாடுகள் இரண்டாவது பனிப் போரை உருவாக்கலாம்..! செண்பகத்தார்

senpagathaar6.jpg

 

அமெரிக்க அதிபர் ஒபாமா ஆரோக்கியமான இரு நாட்டு உறவுகளைப் பேணுவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் பல அமெரிக்கர்கள் மனதில் சீனா ஒரு வருங்கால எதிரியாகப் பார்க்கப்படுகிறது. சீனாவால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் அமெரிக்காவின் இராணுவ மேம்பாட்டிற்கும் விரிவாக்கத்திற்கும் சீனாவின் வளர்ச்சியைக் காரணம் காட்டுகிறார்கள்.

 

உண்மையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தான் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்குச் சீனாவைக் குறை கூறமுடியாது. ஆனால் அமெரிக்கர்கள் அதைத் தான் செய்கிறார்கள். பொருளாதார பலம் பெற்ற சீனா தன்னை இராணுவ ரீதியாக வளர்த்துக் கொள்கிறது. இது தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.

 

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மிகப் பெரிய முரண்பாடு தென் கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் தொடர்பானது. தலைநகர் பீஜிங்கில் இருந்து 400 கி.மீ தொலைவில் அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் முகாமிட்டுள்ளன. அமெரிக்காவும் தென் கொரியாவும் போர் ஒத்திகையில் ஈடுபடும் போது சீனா பதற்றம் அடைகிறது.

 

தாய்வானுக்கு அமெரிக்கா 2010ம் ஆண்டு 6.7 பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை விற்பனை செய்ய ஒத்துக் கொண்டது. இரண்டு கடல் கண்ணிகளை வேட்டையாடும் ஒஸ்பிறே (Osprey) ரகக் கப்பல்கள், 60 பிளாக் ஹோக் (Black Hawk) இராணுவ உலங்கு வானூர்திகள், தரையிலிருந்து விண்ணுக்கு ஏவும் (Surface To Air Missiles) ஏவுகணைகள் இதிலடங்கும்.

 

தாய்வானைத் தனக்குரிய சொத்தாகச் சீனா பார்க்கிறது. அதனுடைய வெளியுறவுக் கொள்கையில் “ஒரே சீனா” (One China) அதாவது சீனாவும் தாய்வானும் பிரிக்க முடியாத ஒரே பகுதி என்ற அம்சம் முக்கியமானது. அமெரிக்க உதவியோடு தாய்வான் விடுதலைப் போர் நடத்தலாம் என்ற அச்சம் சீனாவுக்கு நிரந்தரமாக உண்டு.

 

தாய்வானுக்கு ஆயுத விற்பனையைத் தொடர்ந்து திபெத்தின் முன்னாள் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அரசு கவுரவ விருந்தினராக அமைத்துள்ளது. அதிபர் ஒபாமாவின் இந்த அழைப்பைச் சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது. 1950ம் ஆண்டு தொடக்கம் திபெத்தைத் தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் சீனா மாற்று உரிமைக் கோரிக்கைகளை ஏற்கத் தயாரில்லை.

 

திபெத்தில் சீன எதிர்ப்பை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ஊக்குவிப்பதாக சீனா அஞ்சுகிறது. திபெத்தியர்களின் நாடு கடந்த அரசை அமைப்பதற்கு  இந்தியா அளித்த அனுமதி இந்த இரு நாடுகளின் நல்லுறவைப் பாதிக்கின்றது. மனித உரிமைப் பேணுகை என்று காரணங் காட்டித் தனது உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும் சீனா ஆதங்கப்படுகிறது.

 

தென் பசுபிக், இந்து மாகடல் பிராந்தியங்களில் அமெரிக்கா –சீனா போட்டா போட்டி நடப்பது உண்மையே. 2011 டிசம்பர் 12ம் நாள் மேற்கு இந்துமா கடல் தீவு செய்செலசில் (Seychelles) தனது கடற் படைத் தளத்தை அமைப்பதாக சீனப் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டது. செய்செலஸ் பிரிட்டிஷ் கொலனியாக இருந்து 1976ம் ஆண்டு விடுதலை பெற்றது.

 

செய்செலஸ் 115 தீவுகளைக் கொண்டது. ஆபிரிக்காவின் கிழக்கு கரையில் இருந்து 1500 கி.மீ (932மைல்) தொலைவில் மாலைதீவுகளுக்குச் சமாந்திரமாக அமெரிக்கக் கடற்படை விமானப்படை தளம் டீகோ கார்சியாவுக்குக் (Diego Garcia) கிழக்குத் திசையில் செய்செலஸ் தீவுக் கூட்டம் அமைந்துள்ளது.

செய்செலஸ் தீவுகளின் வெளிவிவகார அமைச்சர் சீனாவைத் தமது தீவில் கடற்படைத் தளம் அமைப்பதற்காகத் தமது அரசு அழைத்ததாக அறிவித்தார். சோமாலி நாட்டுக் கடற் கொள்ளையர்களின் தாக்குதல்களில் இருந்து தனது நாட்டைக் காப்பாற்றுவதற்குச் சீனாவை அழைத்தாகவும் அவர் சொன்னார்.

தமிழ் பேசும் 3500 குடிமக்கள் இந்தத் தீவுகளில் வாழ்கிறார்கள். ஆசிரியர் தொழில் பார்த்த ஒரு யாழ்ப்பாணத் தமிழரின் முயற்சியால் நவசக்தி விநாயகர் என்ற கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழ் மொழி.இந்து மத விழிப்பு இப்போது செய்செலசில் உச்சம் அடைந்துள்ளது. செய்சலசில் தமிழர்களை மல்பா (Malba) என்று அழைப்பார்கள். மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் கூட்டாக இந்தப் பெயர் வழங்கப்படுகிறது.

பாக்கிஸ்தான் கடற்கரையில் சீனா அமைத்துள்ள குவதார் (Gwadar) ஆழ் கடல் துறைமுகத்தோடு செய்சலஸ் கடற்படைத் தளத்தை இணைத்துப் பார்க்கும் போது இந்து மாகடலில் சீனா வலுவாகக் காலூன்றியதை அவதானிக்க முடிகிறது. இந்தியா ஆதிக்கம் செலுத்தும் மாலைதீவில் சீனா தனது தூதரகத்தைத் திறந்துள்ளது.

 

இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம், வங்கதேசத்தின் சித்தாகொங் துறைமுகம், மியன்மாரின் கொக்கொஸ் தீவுத் துறைமுகம் என்பன சீனாவின் இந்து மாகடல் பிரசன்னத்தை மேலும் உறுதி செய்கின்றன. நிதி நெருக்கடிகள் அமெரிக்காவின் ஆசிய–பசுபிக் பிரசன்னத்திற்குத் தடங்கலாக இருக்கமாட்டாது என்று அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

சீனாவின் கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி அமெரிக்க இராணுவத்திற்கும் கடற்படைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. கடற்கலங்களுக்கு எதிரான சீன ஏவுகணைகள் (Anti Ship Missiles) அமெரிக்க விமானம் தாங்கிகளுக்கும் பிற போர்க் கப்பல்களுக்கும் ஆசிய –பசுபிக் கடல்களில் சஞ்சரிக்கும் சுதந்திரத்தை மட்டுப்படுத்தப் போவதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எதிர்காலத்தில் போர்முறை உத்திகளும் ஆயுதப் பாவனையும் கணினி அடிப்படையில் இயங்கவிருப்பதால் பிற நாடுகளின் கணினித் தொகுதிகளுக்குள் புகுந்து அழிவுகளையும் திசை திருப்பல்களையும் சீனா திறமையாகச் செய்யலாம் என்ற அச்சம் இராணுவ வல்லுநர்கள் மத்தியில் நிலவுகிறது. சீனாவின் கணினி நிபுணர்கள் (Computer Hackers) அமெரிக்க அரச அதிகாரிகள், இராணுவத் தளபதிகளின் தளங்களை அழித்துள்ளதாகக் குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது.

 

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா செலவுகளைப் பொருட்படுத்தாது விரிவடையத் தொடங்கியுள்ளது. இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இராணுவ ரீதியாக இணைந்து செயற்பட அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு Interoperability என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் பயன்படுத்தும் இராணுவ உபகரணங்கள் தேவைப்படும் போது மூன்று நாட்டு வீரர்களாலும் அமெரிக்கர்களாலும் இயக்க கூடியதாக இருக்கும் என்பது மேற்கூறிய ஆங்கிலச் சொல்லின் அர்த்தம. அமெரிக்கப் பாதுகாப்பு ஒழுங்குகளில் இந்தோனேசியா முக்கிய பங்கு எடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்தோனேசிய வான்பரப்பை பாதுகாப்பதற்கு வேண்டிய ஆயுத தளபாட, ஏவுகணை, மற்றும் விமானங்களை வழங்க அமெரிக்க இராணுவத் தலைமையகம் பென்ரகன் முன்வந்துள்ளது. நவம்பர் 2011ல் அதிபர் ஓபாமா ஆசியா –பசுபிக் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அப்போது இந்தோனேசிய அதிபரிடம் வான்படை, கடற்படைக்குரிய அமெரிக்கப் படைக்கலங்களை வழங்கும் உறுதியை ஒபாமா வழங்கினார்.

பசுபிக் கடற் தீவு குவாமில் (Guam) கேந்திர இராணுவ மையத்திற்குரிய மையத்தை அமைப்பதில் அமெரிக்கா ஈடுபடுகிறது. கடற்கரைப் பாதுகாப்புக் கப்பல்கள் (Littoral Combat Ships) இங்கு நிறுத்தப்படவுள்ளன. இந்தக் கப்பல்கள் சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கும் உதவுமெனத் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயத்தில் சில பசுபிக் தீவுகளுக்கு, குறிப்பாக பிஜீ தீவுகளுக்கு சீனா பெருமளவு நிதி உதவியை வழங்கி வருகிறது.

தென் கிழக்கு ஆசியாவில் சீனாவுக்குப் போட்டியாக அமெரிக்கா தனது பிரசன்னத்தை விரிவுபடுத்துகிறது. தெற்கு ஆசியா நாடு இந்தியாவின் பாதுகாப்பையும் அமெரிக்கா உறுதி செய்யவுள்ளது. இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் இலங்கையில் சீனா இராணுவ, கடற் தளங்களை அமைப்பதைத் தடுப்பதற்கும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

 

கிழக்கு மேற்கு கடற்பாதை தென் சீனக் கடலூடாகச் செல்வதால் இந்தக் கடல் இந்து மாகடல் போல் பொதுப் பாவனைக்குத் திறந்து விடவேண்டும் என்று அமெரிக்கா அழுத்திக் கூறுகிறது. தென்சீனக் கடல் முழுவதற்கும் ஏகபோக உரிமை கோரும் சீனாவுக்குப் பதிலடியாக அமெரிக்காவின் இந்தக் கோரிக்கை இடம்பெறுகிறது.

 

பல நாடுகள் சொந்தம் பாராட்டும் தென் சீனக் கடலின் பரசல் தீவுகளில் (Paracel Islands) புதியதொரு இராணுவ முகாமை ஆகஸ்து 2012 சீனா நிறுவியுள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஆனால் சீன வெளிவிவகார அமைச்சகம் அதை ஏற்க மறுத்துள்ளது.

 

பசுபிக் மாகடலில் அமெரிக்க இராணுவ மற்றும் கடற்படைப் பிரசன்னத்தை அமெரிக்காவின் நீண்ட நாள் நட்பு நாடான அவுஸ்திரேலியா வரவேற்றுள்ளது. வடக்கு அவுஸ்திரேலியாவின் டார்வின் (Darwin) நகருக்கு அருகாமையில் 2,500 அமெரிக்க வீரர்கள் அடங்கிய இராணுவ முகாம் அமைக்க அவுஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆசியா –பசுபிக் பிராந்தியத்தில் தன்னை வலுப்படுத்த அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் சீனாவைக் குறிவைத்து நடத்தப்படுகிறது. சீனாவுடன் பெருமளவு வர்த்தக உறவை அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் வைத்திருக்கின்றன.

 

அமெரிக்காவும் சீனாவும் பொருளியல் துறையில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல் அமைந்துள்ளன. அமெரிக்கச் சந்தையும் முதலீடும் சீனாவுக்குத் தேவைப்படுகின்றன. அதே சமயம் சீனாவின் நிதிப் பங்களிப்பு அமெரிக்க நிதி நிலவரத்தை ஸ்திரமாக வைத்திருக்கிறது. அமெரிக்காவின் வைப்பகம் (America’s Banker) என்று சீனாவை அழைப்பதில் தவறில்லை.

 

இரண்டாவது பனிப்போர் தொடங்கிவிட்டதாக எண்ணும் ஆய்வாளர்கள் ஒரு முக்கிய விடயத்தை மறந்து விட்டனர். சோவியத் ஒன்றியம் அணு ஆயுதம் தொடக்கம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினாலும் சீனாவைப் போன்று அதனிடம் பெருந்தொகை நிதி ஆதாரம் இருக்கவில்லை.

 

பொருளாதார ரீதியாக அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பின்னிப்பிணைந்து இருக்கவில்லை. ஆனால் சீன அமெரிக்க உறவில் இது தான் முக்கிய அம்சம். வரலாற்றில் வல்லரசுகள் நேரடியாக மோதும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் அது நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

 

சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் நேரடியாக மோதியதில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக சோவியத் ஒன்றியம் 1991ல் தானாகவே உடைந்து விட்டது. சீனாவும் அமெரிக்காவும் ஒன்றோடு ஒன்று மோதாமல் ஒன்று மாத்திரம் உடையும் வாய்ப்பு இருக்கிறது. அது எதுவாக இருக்கும் என்பது தான் கேள்வி.

 senpagam@hotmail.com

http://eelampresse.com/?p=10689

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா. போகிற போக்கில... முன்னர் கியூபன் - மெக்சிகோ வளைகுடா கண்ட அதே பனிப்போர் அணு அயுத யுத்த அச்ச நிலை ஆசியாவில் வரும் போலத்தான் இருக்குது. இதுக்குள்ள நாங்கள் ஏதேனும் எங்கட மண்ணிற்கு இலாபம் ஈட்டச் செயற்பட முடியுமோன்னும் பார்க்கனும்.

 

தலைவர் 2008 மாவீரர் தின உரையில் சொன்னது போல.. எனி ஆசியாவை மையமாக வைத்துத்தான் உலகம் என்ன விண்வெளியே இயங்கப் போகிறது. :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.