Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு ஒட்டுகழுவினால் கொலைமிரட்டல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

v-kudaththanai-news%20%284%29.jpg

வடமராட்சி கிழக்கு பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. 
வடமராட்சி கிழக்கு குடத்தணை அம்பன் கொட்டாடை போன்ற மக்கள் குடியிருக்கும் கிராமங்களில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஒட்டுக்குழுவின் மகேஸ்வரி நிதியத்தினால் சட்ட விரோதமான முறையில் மணர் அகழ்வு நடைபெற்று வருகின்றது. 
 
கட்டுப்படுத்த முடியாத அளவு மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப்பகுதியில் குளங்களைப் போல் மழை நீர் தேங்கும் அளவு பாரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. 
இதனால் இன்னும்மொரு முறை அப்பகுதியினை சுனாமி போன்ற கடலலை தாக்கினால் மேற்படிக் கிராமம் முழுமையாக அழிவடையும் நிலை உருவாகும். 
இதனால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து குறித்த ஒட்டுக்குழுவின் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் புவி சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் ஆயியோருக்கு மேற்படி போராட்டங்களிற்கான காரணத்தினை விபரித்து ஒரு மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நேற்று சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக ஒரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் பங்குபற்றி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய பொது மக்கள் சிலர் குறித்த ஒட்டுக்குழுவின் மகேஸ்வரி நிதியத்தின் பொறுப்பாளரால் நேரடியாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இவ்விடையம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் முறையிடப்பட்டுள்ளது. 

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17950:2012-12-19-10-17-10&catid=1:aktuelle-nachrichten&Itemid=50



வடமராட்சி அம்பன் பகுதியில் பொதுமக்களால் ஈ.பி.டி.பியினர் சுற்றி வளைக்கப்பட்டனர்

photo.gifவடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் ஈ.பி.டி.பியின் மகேஸ்வரி நிதியத்தைச் சேர்ந்த உழவு இயந்திரங்களும், ஈ.பி.டி.பியினரும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

v-kudaththanai-news%20%282%29.jpg

 

ஜப்பசி கார்திகை மாதத்திற்கான உழவு இயந்திர உரிமையாளர்களுக்கான மணல் ஏற்றிய சுமை கூலி வழங்கப்படாமை,ஒதுக்கப்பட்ட இடத்தில் மணல் ஏற்றக் கோரியும் மகேஸ்வரி நிதியத்தின் உழவு இயந்திரங்கள் உள்ளக மணல் அகழ்வில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தக் கோரியும் இன்று காலை 6.00 மணி முதல் 11.00 மணிவரை அம்பன் மகேஸ்வரி நிதிய வளாகத்தில் அம்பன் ,குடத்தனை, நாகர்கோவில் ,மணற்காடு பகுதி மக்கள்,மற்றும் வடமராட்சி கிழக்கு உழவு இயந்திர உரிமையாளர்களாலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

காலை 10.00 மணியளவில் சம்பவ இடத்திற்க்கு வருகைதந்த மகேஸ்வரி நிதிய பொறுப்பதிகாரி றஜீவ் திரண்டிருந்தவர்களுடன் சமரசம் செய்ய முற்பட்டும் அது சாத்தியப்படவில்லை.தொடர்ந்து தமது 20 உழவு இயந்திரங்களையும் மணல் அகழ்வில் ஈடுபட முற்பட்டபோது திரண்டிருந்த மக்கள் காட்டிய எதிர்ப்பு காரணமாக தடுக்கப்பட்டது.தொடர்ந்து மகேஸ்வரி நிதியத்தைச் சேர்ந்த மணி என்பவர் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரங்களை அகற்ற முற்பட்ட போது ஏற்பட்ட குழப்பங்களை சமாளிக்க முடியாமல் அவர்கள் வெளியேறினர்.   v-kudaththanai-news%20%283%29.jpgv-kudaththanai-news%20%286%29.jpgv-kudaththanai-news.jpgv-kudaththanai-news%20%285%29.jpg

திருந்த மறுக்கும் ஜென்மங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.